Post No. 14,257
Date uploaded in Sydney, Australia – 1 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பெரியோர்கள் சிந்தனை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் GREAT MEN THINK ALIKE என்பது ஆன்றோர் வாக்கு . இதை மெய்ப்பிக்கும் வகையில் புரந்தர தாசரும் தேசீய புலவர் பாரதியாரும் அச்சம்/ பயம் பற்றி ஒரே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
அச்சம் அறுத்தவன் என்று சிவ பெருமானை மாணிக்கவாசகரும் திருமூலரும் பாடுகின்றனர்.
அனுமனை கும்பிட்டால் பயமெல்லாம் (நிர்பயத்வம்) போய்விடும் என்று சின்னக்குழந்தைகளுக்கு ஸ்லோகமும் சொல்லித் தருகிறோம்
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்
बुद्धिर्बलं यशोधैर्य निर्भयत्वमरोगता ।
अजाढ्यं वाक्पटुःत्वंच हनुमत् स्मरणाद्भवेत् ॥
buddhirbalaṃ yaśodhairya nirbhayatvamarogatā .
ajāḍhyaṃ vākpaṭuḥtvaṃca hanumat smaraṇādbhavet ..
ஆஞ்சனேயரை பக்தியுடன் நினைத்தால் அறிவு, பலம், புகழ், வீரம், அச்சமின்மை, ஆரோக்கியம், சோம்பலின்மை , நாவன்மை, ஆகியன எல்லாம் கிடைக்கும்.
பாரதியார் எதற்கும் அஞ்சாத வீரர் ; அவர் அச்சம் என்பதை பேய் என்று வருணிக்கிறார் ; அதை ஞானம் என்னும் வாளால் அறுத்துத் தள்ளலாம் என்றும் நமக்குத் புகாட்டுகிறார் .
பயம்தான் பேய்
“பயம் எனும் பேய்தனை அடித்தோம்—பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்;
வியன் உலகனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்”
****
“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சமும் உண்டோடா?—மனமே!
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!”
*****
“பொய்,கயமை, சினம், சோம்பர்,கவலை, மயல்,
வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,
ஐயமெனும் பேயையெல்லாம் ஞானம் என்னும்
வாளாலே அறுத்துத் தள்ளி”
*****
மேலும் பல இடங்களிலும் அச்சத்தை, பயத்தைச் சாடுகிறார்
“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்”
****
நிலவைப் பற்றிப் பாடும் பாடலில் கூட
“அச்சப் பேயைக் கொல்லும் படையாம்
வித்தைத் தேனில் விளயும் களியாய்
வாராய், நிலவே, வா” – என்று பாரதி பாடுகிறார்.
****
“அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ—கிளியே
ஊமைச் சனங்களடி!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றும் இல்லா
மாக்களுக்கோர் கணமும்—கிளியே!
வாழத் தகுதி உண்டோ?”
****
“அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்” (புதிய ஆத்திச்சூடி)
****
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வான் இடிந்து வீழுகின்றபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”
****
இப்போது புரந்தரதாசர் பாடலைக் காண்போம்.
அஞ்சிகென்யாதகய்யா சஜ்ஜனரிகே
பயவு இன்யாதகய்யா
சஞ்சீவி ராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)
அச்சம் எதுக்கய்யா நல்லவர்களுக்கு
பயமும் எதுக்கய்யா
ஹனுமனை நினைப்பவர்களுக்கு அதற்குப்பின் (அஞ்சிகெ)
கனசல்லி மனசல்லி களவளவாதரெ
ஹனுமன நெனெதெரே ஹாரிஹோகுதே பீதி (அஞ்சிகெ)
கனவிலும் நினைவிலும் இறுக்கம் (இருந்தால்)
ஹனுமனை நினைத்தால் ஓடிப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)
ரோம ரோமக்கே கோடி லிங்கவுதுரிசித
பீமன நெனெதெரே பிட்டுஹோகுதே பீதி (அஞ்சிகெ)
(தன் உடம்பில் உள்ள) ஒவ்வொரு முடிக்கும் கோடி சிவலிங்கங்களை நிர்மாணித்த
பீமனை நினைத்தால் விட்டுப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)
புரந்தர விட்டலன பூஜெய மாடுவ
குரு மத்வராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)
புரந்தர விட்டலனை பூஜை செய்யும்
குரு மத்வாச்சாரியரை நினைத்த பிறகு (அஞ்சிகெ)
(thanks for the translation; https://dasar-songs.blogspot.com)
****
திருமந்திரத்தில் அச்சம்
வைச்சன வாறாறு மாற்றி யெனைவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே.
பொருள்
திருவடியுணர்வாகிய ஞேயத்தால் எனக்குள்ள பிறப்பு இறப்பாகிய அச்சத்தைக் கெடுத்தனன். கெடுத்து என்னையும் ஆண்டு கொண்டனன். அவனே நந்தியாகிய சிவபெருமான்..
****
திருவாசகத்தில் அச்சம்
விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின்
மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி
அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி
ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற
செச்சை மலர் புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே. 33
*****
மொத்தக் கருத்து
ஆண்டவனை நினைத்தால் பயம் நீங்கும்
–Subham—
Tags- புரந்தரதாசர், பாரதியார், அச்சம், பயம், அனுமன் ஸ்லோகம், ஆஞ்சனேயர்,