மனைவி வாழ்க! புரந்தரதாசர் புகழ் மாலை!! (Post.14259)

Written by London Swaminathan

Post No. 14,259

Date uploaded in Sydney, Australia –  2 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(புரந்தரதாசர் பற்றிய ஐந்தாவது கட்டுரை இது)

ஒவ்வொரு வெற்றித் திருமகனுக்குப் பின்னரும் ஒரு பெண் மணி “Behind every great man is a great woman” இருக்கிறாள் என்று சொல்லுவார்கள் ;

இது சில ஆண்மகன்களின் வாழ்க்கையில் உண்மையே; பல பெண்கள் தாடகைகளாக , பூதகிகளாக, நீலாம்பரிகளாக இருப்பதையும் மறுக்க முடியாது ; மனைவியைப் புகழ்ந்து எழுதிய பலரை நாம் அறிவோம்; ஆனால் மனைவியைப் புகழ்ந்து பாட்டுப் பாடியவர்கள் ஒரு சிலரே ! அப்படிப் புகழ்  ந்துபாடிய ஒருவர் புரந்தரதாசர் !

பாரதியாரை எடுத்துக்கொண்டால் அவர்தான் உலகிலேயே பெண்களை அதிகம் புகழ்ந்து பாடிய புகழ்மிகு கவிஞர் ; கண்ணம்மா என்ற பெயரில் அவர் புகழ்  ந்து பாடிய பாடல்கள் அவர் மனைவியையும் குறித்து, நினைத்துப் பாடி இருக்கலாம் .

காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்

காதலை யெண்ணிக் களிக்கின்றேன்- அமு

தூற்றினை யொத்த இதழ்களும் – நில

வூறித் ததும்பும் விழிகளும் -பத்து

மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்- இந்த

வையகத்தில் யானுள்ள மட்டிலும் – எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே!-இந்த(காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன்- துயர்

போயின,போயின துன்பங்கள் நினைப்

பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்

வாயினி லேயமு தூறுதே – கண்ணம்

மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே- உயிர்த்

தீயினி லேவளர் சோதியே-என்றன்

சிந்தனையே,என்றன் சித்தமே! – இந்த(காற்று)– பாரதியார்

*****

பாயு மொளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,

தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு, புது வரிம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ

மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;

பான மடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு;

ஞான வொளி வீசுதடி, நங்கை நின் றன் சோதிமுகம்,

ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;

பண்ணு சுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை

நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே!

கட்டியமுதே!கண்ணம்மா!–பாரதியார்

இந்தப் பாடல்களில் ஆன்மீக விஷயங்கள், செய்திகள் இல்லை;

ஆனால் புரந்தரதாசர் வாழ்வில் அவர் மனைவி செய்த ஒரு செயல் அவர் வாழ்க்கையையே நல்ல வழியில் திருப்பிவிட்டது. அதாவது தெய்வீகப் பாதையில் திருப்பிவிட்டது இதனால் அவர் மனைவியைப் பாராட்டி ஒரு கீர்த்தனையையே இயற்றிவிட்டார்!

இதன் பின்னால் ஒரு சம்பவம் உளது

கர்நாடக மாநிலத்தில் பணக்கார குடும்பத்தில்  சீனிவாசக நாயக்க (புரந்தரதாசர்) பிறந்தார். நவரத்ன தங்க நகை வியாபாரியாக வாழ்ந்தார் ; காசேதான் கடவுளடா என்று எண்ணி பேராசையுடன் பணம் ஈட்டினார் . ஒரு பிராமணன், அவரது கடைக்குச் சென்று  தனது மகனின்  பூணூல் கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்று அவரிடம் கேட்டார். அந்த பிராமணனை அவர் நாளை வா, நாளை வா என்று மாதக் கணக்கில் அலைக்கழித்தார். ஒருநாள் செல்லாக்காஸைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார் . மனம்  நொந்துபோன அந்தப் பிராமணன் நேராகப் புரந்தரதாசர் வீட்டுக்குப் போய் அவருடைய மனைவியிடம் விஷயத்தைச்  சொன்னார் . உடனே புரந்தரதாசர் மனைவி தனது விலையுயர்ந்த மூக்குத்தியைக் கழட்டிக்கொடுத்து அதை விற்றுக் கிடைக்கும் பணத்தில் பூணூல் வைபவத்தை நடத்தச் ந்து சொன்னார்.

அவர் புரந்தரதாஸ என்னும் சீனிவாச நாயக்க கடைக்குச் சென்று அதை அடகு வைத்தார் ; மூக்குத்தியைப் பார்த்தவுடன் அது தனது மனைவி லட்சுமியினுடையது  என்று அடையாளம் கண் டார் ; பெட்டியில் பூட்டிவைத்துவிட்டு வீட்டுக்கு விரைந்தார் மனைவியிடம் மூக்குத்தியைக் கொண்டு வா என்றார் ; நடு நடுங்கிப் போன அந்தப் பெண்மணி சமையலறைக்குள் விரைந்து சென்று நாராயணா என்னைக் காப்பாற்று என்று வேண்டினார்.

காரைக்கால் அம்மையார் வேன்டியது போது  கணவனை அடக்க எப்படி சிவ பெருமான் மாம்பழத்தைக் கொடுத்தாரோ அதே போல இந்தப்பெண் மணிக்கு நாராயணன் தெய்வீக மூக்குத்தியை அளித்தார். அது புரந்தரர் கைக்கு வந்தது; கடைக்கு ஓடினார்; பூட்டிய பெட்டியைத் திறந்தார் ;  அங்கே அவர் வைத்துப் பூட்டிய மூக்குத்தி இல்லை!

உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது. அது அவரது சம்சாரம் அனுப்பிய தெய்வீக  மின்சாரம். பணத்தைத் துறந்தார்; வீட்டைத் துறந்தார் ; தம்புராவைக் கையில் எடுத்தார் ; விட்டலனின் நாமத்தைப் பாடத்துவங்கினார் ; ஊர் ஊராகச் சென்று பெருமாளைப் பாடினார் ; நவகோடி நாராயணன் என்று மக்களால்  பாராட்டப்பட்ட சீனிவாச நாயக்க புரந்தரதாசர் ஆனார்; கர்நாடக சங்கேதத்தின் பிதா மஹர் ஆனார். ஆயிரக் கணக்கில் கீர்த்தனைகளை இயற்றினார் ; அதில் ஒன்று தனது கண்களைத் திறந்த மனைவியைப் புகழ்ந்து பாடிய பாடல்.

இதோ அந்த கீர்த்தனை

ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து நம்ம

ஸ்ரீதரன சேவே மாடலு சாதன சம்பத்தாயித்து (ஆதத்தெல்லா)

நடந்தவையெல்லாம் நல்லதாகவே ஆயிற்று நம்

ஸ்ரீதரனின் சேவையைச் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது (ஆதத்தெல்லா)

தண்டிகே பெட்டா ஹிடியுவுதக்கே

மண்டே பாகி நாசுதலித்தே

ஹெண்டத்தி சந்ததி சாவிரவாகலி

தண்டிகே பெட்டா ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

தம்புரா & கைத்தடி (இந்த இரண்டையும்) பிடிப்பதற்கு

தலை குனிந்து வெட்கப்பட்டேன்

என் மனைவியின் குலம் ஆயிரம் ஆகட்டும் (செழிக்கட்டும்)

தம்புரா & கைத்தடியை (என்னை) பிடிக்கவைத்தாளே (ஆதத்தெல்லா)

கோபாள புட்டி ஹிடியுவுதக்கே

பூபதி எந்து கர்விசுதித்தே

ஆ பத்னீ குல சாவிரவாகலி

கோபாள புட்டி ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

பிட்சைத் தட்டு பிடிப்பதற்கு

(நான் ஒரு) பணக்காரன் என்று எண்ணி கர்வத்தோடு இருந்தேன்

அந்த (என்) மனைவியின் குலம் ஆயிரம் ஆகட்டும் (செழிக்கட்டும்)

பிட்சைத் தட்டை (என்னை) பிடிக்கவைத்தாளே (ஆதத்தெல்லா)

துளசிமாலே ஹாகுவதக்கே

அரசனெந்து திருகுதலித்தே

சரசிஜாக்‌ஷ புரந்தரவிட்டலனு

துளசிமாலே ஹாகிதனய்யா (ஆதத்தெல்லா)

துளசிமாலையை அணிந்துகொள்வதற்கு

(நான் ஒரு) அரசன் என்று நினைத்து திரிந்து கொண்டிருந்தேன்

அந்த தாமரைக் கண்ணனான புரந்தரவிட்டலன்

(என் கழுத்தில்) துளசிமாலையை அணிவித்தானே (ஆதத்தெல்லா)

பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி உரித்தாகுக

****

நவ கோடி நாராயணன் பெயரை விட்டு புரந்தரர், தெருக்கோடி நாராயணன் ஆனார் .

அவர் மாறுவதற்கு மனைவி உதவினார்; நாம் மாறுவதற்கு அவருடைய கீர்த்தனைகளே போதும் !

சுபம்—

Tags- மனைவி வாழ்க, புரந்தரதாசர், சீனிவாச நாயக்க, நவகோடி நாராயணன் , மூக்குத்தி,  பிராமணன்,  மனைவி, கீர்த்தனை , பாரதியார், ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து நம்ம

Leave a comment

Leave a comment