
Written by London Swaminathan
Post No. 14,288
Date uploaded in Sydney, Australia – 10 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கணவனே கண்கண்ட தெய்வம்: குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 2
சைவ வேளாளர் குலத்தில் பிறந்த குருபாததாசர் இயற்றிய குமரேச சாதகத்தில் பெண்களுக்கு, கணவனே தெய்வம், சூத்திரர்களுக்கு பிராமணனே தெய்வம் குடிமக்களுக்கு அரசனே தெய்வம் என்ற பழங்காலக் கருத்துக்கள் உள்ளன பழங்காலத்தில் எகிப்தியர்களும் இந்துக்களும் அரசனை தெய்வம் என்று வணங்கினார்கள்; கோ என்றால் அரசன் அவன் இருக்கும் இல்லம் கோயில்; தேவன் என்றால் அரசன், கடவுள்; தேவி என்றால் இறைவி, மஹாராணி . இந்த சொற் பிரயோகம் பழங்காலத்தில் அரசனைத் தெய்வம் என்று நம்பியதைக் காட்டுகின்றன.
உலகில் கணவனை தெய்வம் என்று கருதியது இந்தியாவில் மட்டுமே. இதைத் திருவள்ளுவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். கணவனைத் தோலும் பத்தினிகள் மழையைக்கூட உண்டாக்க முடியும் என்கிறார்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.–குறள் 55
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.
*****
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் . – கொன்றைவேந்தன்
*****
குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் – அறவோர்க் ( கு )
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலை மு:கப் பைம்பூண் இறை . – நீதிநெறி விளக்கம் 27

****
இன்னொரு பாடலில் சத்தியத்தின் பெருமையைக் கூறுகிறார். இதுவும் இந்துக்களின் பண்பாட்டினில் மட்டுமே உளது. மாதா பிதா குரு தெய்வம், சத்தியமேவ ஜெயதே என்பன இந்துமத வேதத்தில் உள்ளன இவைகளைத் தமிழ்ப்புலவர்களும் அப்படியே பாடியுள்ளனர்.
கணவன் தெய்வம், ஒரே கணவன் மறுமையிலும் கணவனாக வரவேண்டும் என்ற கருத்துக்களை சங்கத் தமிழ் பாடல்களிலும் காளிதாசனின் பாடல்களிலும் காணலாம்.
ரகுவம்சம்- 14-17; 14-66
குறுந்தொகை- 49, 199
சிலப்பதிகாரம் (23) மணிமேகலை (22) காப்பியங்களிலும் காண்கிறோம்
****
குருபாத தாசர் இயற்றிய குமரேச சதகம்
7. ஒன்றை ஒன்று பற்றியிருப்பவை
சத்தியம் தவறா திருப்பவ ரிடத்தினிற்
சார்ந்துதிரு மாதிருக்கும்;
சந்ததம் திருமாதிருக்கும் இடந்தனில்
தனதுபாக் கியம்இருக்கும்;
மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
விண்டுவின் களையிருக்கும்;
விண்டுவின் களைபூண் டிருக்கும் இடந்தனில்
மிக்கான தயையிருக்கும்;
பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடந்தனிற்
பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடந்தனிற் சத்துரு
பலாயனத் திறல்இருக்கும்;
வைத்திசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
மன்னுயில் சிறக்கும் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே! .—குமரேச சதகம்
சதகப் பாடல்களின் பொருளைக் காண்போம்
சத்தியத்தைக் கடைப்பிடிப்போரிடம் லெட்சுமி இருப்பாள்; அவர்களிடத்தில் செல்வம் கொழிக்கும் அவர்களிடத்தில் விஷ்ணுவின் அம்சமும் இருக்கும்; முகத்தில் களை/ தேஜஸ் ஒளிவீசும் ; அவர்கள் மற்றவர்களிடத்தில் அருளைப் பொழிவார்கள் ; அதாவது கருணையுடன் இருப்பார்கள்
அடுத்தபடியாக பக்தி;
இறைவனிடத்தில் பக்தி செலுத்துவோரிடத்தில் கருணை, மற்றும் நூல்களில் கண்ட தருமம்/ அறம் விளங்கும். இதனால் அவர்களைக் கண்டு பகைவர்கள் நடுங்குவார்கள் சத்ரு பயம் இல்லாத இடத்தில் உயிரினங்கள் செழித்தோங்கும் புல் வயல் என்னும் ஊரில் உறையும் மயில் மீதமர்ந்த குமரேசனை வணங்கிப் போற்றுவோம்
*****
8. இவர்க்கு இவர் தெய்வம்

BRAHMINS ARE GODS- KUMARESA SATAKAM
ஆதுலர்க் கன்னம் கொடுத்தவர்க ளேதெய்வம்;
அன்பான மாணாக்கருக்
கரியகுரு வேதெய்வம் அஞ்சினோர்க் காபத்து
அகற்றினோ னேதெய்வமாம்;
காதல்உறு கற்புடைய மங்கையர் தமக்கெலாம்
கணவனே மிக்கதெய்வம்
காசினியில் மன்னுயிர் தமக்கெலாம் குடிமரபு
காக்கும்மன் னவர்தெய்வமாம்
ஓதரியபிள்ளைகட் கன்னை தந்தையர் தெய்வம்
உயர்சாதி மாந்தர்யார்க்கும்
உறவின்முறை யார்தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்
குற்றசிவ பக்தர்தெய்வம்
மா தயையி னாற்சூர் தடிந்தருள் புரிந்ததால்
வானவர்க் குத்தெய்வம் நீ
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.—குமரேச சதகம்
துன்பம் அடைந்தோருக்கு சோறு படைத்தவர் தெய்வம்;
மாணவர்களுக்கு ஆசிரியரே தெய்வம்;
பயத்தால் பீதியோருக்கு அபயம் கொடுத்தோர் தெய்வம்;
மங்கையர்க்கு கணவனே தெய்வம்;
குடிமக்களுக்கு அரசனே தெய்வம்;
பிள்ளளைகளுக்கு தந்தையே தெய்வம்;
உயர்சாதி மக்களுக்கு உறவினர் தெய்வம்;
நம்பிக்கையுடையோர்க்கு சிவபக்தர் தெய்வம்;
சூரபத்மனை வென்ற முருகன், வானவர்க்குத் தெய்வம்;
சூத்திரர்களுக்கு பிராமணர் தெய்வம்;
கடைசி வரிகளை இப்பொழுது திராவிடர்கள் திருத்தி விட்டனர் பழைய பதிப்புகளில்
மாதையையினார் சூத்திரற்கு மறையியற்றியோர் தெய்வம் என்று உளது .
உயர்சாதி பற்றிக்கூறிய குருபாத தாசர் அடுத்தபடியாக சூத்திரர் பற்றிக் கூறியதே சரி என்பதைக் கற்றோர் அறிவர் ; இது போல பல பல நூல்களில் சூத்திரர் பற்றி வரும் வரிகளை இப்பொழுது திராவிடர்கள் திருத்தி வருகின்றனர் ஆகையால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பதிப்புகளை நோக்குவது நலம். வரலாற்றினை மாற்ற முயலும் திராவிடர்களை நம்பாமல் இணைய தளத்திலுள்ள 1928–ஆம் ஆண்டுப் பதிப்பினைப் பின்பற்ற வேண்டும்.
****
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः ।
गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः ॥
gururbrahmā gururviṣṇuḥ gururdevo maheśvaraḥ .
guruḥ sākṣāt parabrahma tasmai śrī gurave namaḥ
.
குருர் பிரம்மா குருர் விஷ்ணுர் குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாஃஷாத் பரம்பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
(நிறைய இணைய தளங்களில் சம்ஸ்க்ருதம் அறியாதோர், இந்த மந்திரத்தைத் தவறாக அச்சிட்டுள்ளனர் ) இங்கே வெளியிட்டுள்ள ஸ்லோகத்தைப் பின்பற்ற வேண்டுகிறேன்.
—subham—-
Tags- கணவனே கண்கண்ட தெய்வம் குமரேச சதகம், ஆராய்ச்சிக் கட்டுரை 2, சூத்திரர், பிராமணர் தெய்வம்