கடவுள் இருக்கும் இடம் பாஸ்போர்ட் பை ! (Post No.14,295)

London Swaminathan in Batu Caves, Malaysia 

Written by London Swaminathan

Post No. 14,295

Date uploaded –  21 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஒரு சுவையான சம்பவத்துடன் மீண்டும் பிளாக் படைப்புகளைத் துவங்குகிறேன்.

கடவுள் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்துவிட்டேன் . அவர் நம்முடைய  பாஸ்போர்ட் வைக்குமிடத்தில் இருக்கிறார்! மார்ச் 12- ஆம் தேதி ஆஸ்திரேலியாயாவில் மூன்று மாத சுக வாசத்தை முடித்துக்கொண்டு சிட்னியிலிருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் மலேசியாவின் தலை நகர் கோலாலம்பூரில் தங்கினேன். அப்போது நானும் என் மனைவியும் பத்துமலை என்று அழைக்கப்படும் பாட்டு கேவ்ஸ்  BATU CAVES குகைக்கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தோம்  . நான் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் என் மனைவி தங்க வர்ண முருகப்பெருமான் உருவம் படைத்த எட்டு கீ செயின்களை KEY CHAINS வாங்கினாள் . அதற்குப்பின்னர் காரடையான் நோன்பினை அனுஷ்டிக்க இந்தியாவுக்குச்   சென்று எங்கள் அண்ணன் வீட்டில் தங்கினோம். மறுநாள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள குலதெய்வம் வைத்தீச்வரனைத் தரிசித்து விட்டு அங்கு அக்ஷர்தாம் விடுதியில் தங்கினோம்.

சென்ற முறை குலதெய்வ தரிசனத்துக்குச் சென்ற போது என் மனைவியை எச்சரித்து இருந்தேன்; பை  த்தியம் போல சாமி படங்களை வாங்காதே; வீட்டில் உள்ள சாமி படங்களே போதும் என்று. அர்ச்சனைகள் முடிந்து குருக்களுக்குத் தட்சிணை கொடுக்கும்போது அவர் சொன்ன வாக்கியம் — நீங்கள் வேண்டாம் என்று சொல்லாமல் இதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று வைத்திய நாதசுவாமி படத்தைக் கொடுத்தார் . என் உடலில் புல்லரிப்பு ஏற்பட அதை வாங்கிக் கொண்டேன் . இதைத்தான் அசரீரி என்று சொல்லுகிறோம்.  இந்த முறை  சென்றபோது பட்டருக்குத் தட்சிணை கொடுக்கும்போது கோவில் செக்யூரிட்டி என் சட்டைப் பையில் வைத்தியநாத சுவாமி படத்துடன் உள்ள விபூதி குங்குமப் பொட்டலத்தைச் சொருகினார் . இதைத் தான் கும்பிடப்போனத் தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்லுகிறோம்.

****

சுவாமி மலை சுவாமிநாதனும் லண்டன் சுவாமிநாதனும்

 எனக்கு என் அப்பாவும் அம்மாவும் சுவாமிநாதன் என்று பெயர்வைத்ததற்குக் காரணம் சுவாமிமலை கோவில் உறை கடவுள்தான் . வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் ஸ்ரீவத்சம் விடுதியில் தங்கி அங்கிருந்த நண்பர் சீனிவாசனையும் காரில் ஏற்றிக்கொண்டு சுவாமிமலை, கும்பகோணம் ராமசுவாமிகோவில், கும்பேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். அப்போது பாஸ்போர்ட் பையில் மலேசியா பத்துமலை  முருகன் கோவில் தங்க வர்ண கீ செயின் இரண்டினை நண்பர்களுக்கு கொடுக்க வைத்திருந்தேன். கும்பேஸ்வரர்  கோவிலில் சிவன் மற்றும் அம்பாள்  சந்நிதிகளில் மஹா தீவாராதனை நடந்து கொண்டிருந்தது . அப்போது என் பாஸ்போர்ட் பையை யாரோ பிக் பாக்கெட் அடித்துவிட்டனர். அது  எனக்குத் தெரியாது  நாங்கள் எங்கு போனாலும் விடுதியில் தங்கவும்   வெளிநாட்டுப் பணம் மாற்றவும் பாஸ்போர்ட்டு தேவை . ஆகையால் நான் எடுத்துச் செல்வேன்.

மறுநாள் முரளீதர சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு ஸ்ரீபெரும்புதூர் செல்லும்  வழியிலுள்ள மஹாரண்யம் சென்று அவரைத் தரிசித்து சீடரிடம் நன்கொடையும் கொடுத்தேன். அப்போது அவர் சீடர் உங்கள் முக வரியைக்  கொடுங்கள் ரசீதும் அனுப்புகிறோம் என்றார் . பையில் பாஸ்போர்ட் பையில் எப்போதும் என் முகவரி ஸ்டிக்கர்கள் இருக்கும் அதைத்தேடினேன். பாஸ்போர்ட் பை இல்லை.பகீர் என்றது .காரில் சிட்டாக பறந்து சென்னைக்கு வந்து என்னுடைய மூன்று பெட்டிகளையும் மும்மூன்றுமுறை புரட்டி எடுத்தேன் பாஸ்போர்ட் இல்லை.

சரி; மறுநாள் ப்லைட்டில்  FLIGHT என் மனைவியை மட்டும் லண்டனுக்கு அனுப்பிவிட்டு சென்னையில் பிரிட்டிஷ் ஹைகமிஷனுக்குக் காவடி எடுத்து புதிய பிரிட்டிஷ் பாஸ்போர்ட் அல்லது டிராவல் பேப்பர்ஸ் TRAVEL DOCUMENTS வாங்குவோம் என்ற பதற்றத்துடன் இருந்தேன்  . அப்போது என் ஐ போனில் பிளாஷ் மெஸேஜ் மின்னியது !என் அண்ணன் நாகராஜன் உன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதா ? என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார் . உடனே பெங்களூருக்கு மெஸேஜ்கள் பறந்தன. என்னுடை 135 புஸ்தகங்களை வெளியிட்ட புஸ்தக . காம் அதிபர் திரு ராஜேஷ் தேவதாஸ்  என் அண்ணனைக் கூப்பிவிட்டு உங்கள் தம்பி பாஸ்போர்ட் கும்பகோணம் கோவில் குருக்களிடம் இருக்கிறது என்று சொன்னார் .அவரைத் தொடர்புகொண்டு கும்பகோணம்  குருக்களின் முகவரியை வாங்கினேன் . அவரைத் தொடர்புகொண்டேன்.

நான் கோவிலுக்குச் சென்ற நாளில் இரவில் அவர் அம்பாள் சந்நிதியில் பூஜை செய்திருக்கிறார்,  இரவில் பூக்களை எல்லாம் அகற்றிச் சுத்தம் செய்கையில் பாஸ்போர்ட் பை கிடைத்துள்ளது அதை எடுத்த பிக்பாக்கெட் பேர்வழி அதில் பணம் இல்லை ஆனால் பட்டு கேவ்ஸ் முருகன் கீ செயின்களும் பாஸ்போர்ட் , ஓ சி ஐ ஆகியன  மட்டும் இருக்கக்கண்டு அதைச் சந்நிதி பூக்குவியலில் போட்டுச் சென்றுவிட்டான்!

Batu Caves Murugan on Key Chain

அதிலுள்ள முருகன் படம் அவனுக்குப் பயத்தை    உண்டாக்கி  க்கியிருக்கவேண்டும். ஏனெனில் அதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் சுவாமிமலை  முருகனையும் அதற்குச் சில நாட்களுக்கு முன்னர் மலேசியாவில் பத்துமலை முருகனையும் தரிசித்துள்ளேன்.

குருக்களின் மனைவி மிகவும் புத்திசாலி . அவர் நான் மதுரைக்காரன் என்று  ஓ சி ஐ யில் இருப்பதைப்பார்த்து மதுரையிலுள்ள நபர்களை கேட்டிருக்கிறார்[  அவருக்கு துப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றவுடன் கூகுள் செய்த்தபோது நான் எழுதிய புஸ்தகங்கள் அனைத்தும் பளிச்சிட்டன  ; உடனே அதை வெளியிட்ட புஸ்தக. காம் அதிபர் திரு ராஜேஷ் தேவதாஸை த்  தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார் ; அவர் உடனே என் அண்ணனிடம் விஷயத்தைச் சொல்லவே முன்னர் சொன்ன  மெஸேஜ் வந்தது

மறுநாள் லண்டனுக்கு பயணம் செய்ய இருக்கும் தருணத்தில் இது எல்லாம் நடந்தது; ராஜேஷ் தேவதாசுக்குப் பல முறை நன்றி சொல்லிவிட்டு உடனே குருக்களுக்குப் போன் செய்து இரவு பதினோரு மணிக்கு முன்னதாக தக்க ஐ.டி. யுடன் வந்து பாஸ்போர்ட்டுகளைப் பெற்றுக்கொள்கிறேன் என்று    சொல்லி விட்டு  மாலை ஐந்து மணிக்கு  நானும் என்னனுடைய அண்ணன் மகன் சங்கரனும் சென்னையில் டாக்சியில் ஏறினோம். இரவு 11 மணிக்கு பாஸ்போர்ட்டினைப் பெற்றுக்கொண்டு பனத்தை அன்புப்பரிஸாகக் கொடுத்தோம் ;பணத்தை தொடக்கூட குருக்களும் அவரது மனைவியும் மறுத்துவிட்டனர். காப்பி முதலியவற்றைக் கொடுக்க தயாரானபோது நாங்கள்   இரவில்  தொந்தரவு செய்யக்கூடாது என்று  வேண்டாம் என்றோம்] நாங்கள் ஏதாவது செய்ய விரும்பினால் கோவில் கும்பிபாபிஷேகத்துக்கு பணம் அனுப்புங்கள் அதுவும் இப்போது வேண்டாம் ; பத்திரிக்கைவரும்போது கும்பேஸ்வரர்  கோவிலுக்குச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் .

நல்ல மனிதர்கள் உலகெங்கிலும் உள்ளனர் ; வாழ்க அவரது குடும்பம் 

மறுநாள் காலை ஐந்து மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தோம்; இரவில் ட்ரைவர் தூங்கிவிடக்கூடாதே என்ற பயத்தில் அலற அலற  சினிமாப்பாட்டுக்களை வைக்கச் சொல்லி ஆங்காங்கே அவரை TEA  டி சாப்பிடச் சொல்லி மறுநாள் காலை 5 மணிக்கு சென்னைக்கு வந்தோம் 12 மணி நேர இடைவிடாப்பயணம். அது பாஸ்போர்ட் பயணம்!

****

இன்னும் ஒரு அதிசயம்

பிரிட்டிஷ் பாஸ்போர்ட் பையில் இருந்த பத்துமலை முருகன் படம் என்னைக் காப்பாற்றியது ஒருபுறம் இருக்க, நாங்கள் வந்து இறங்கிய மறுநாளைக்கு ஹீத்ரோ விமான நிலைய தீ விபத்து காரணமாக ஆயிரக்கணக்காக FLIGHTகள்/ விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன, ரத்தாகின; நாங்கள் முதல்  நாளே லண்டனுக்கு வந்ததால் தப்பித்தோம்..

சுவாமி மலை முருகனுக்கு அரோஹரா

பத்துமலை முருகனுக்கு அரோஹரா

–சுபம்—

Tags-  பாஸ்போர்ட், முருகன் கீ செயின், பிக் பாக்கெட், சுவாமி மலை, பத்துமலை

Leave a comment

Leave a comment