Post No. 14,300
Date uploaded in London – 23 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மலேஷியா நாட்டின் தலை நகரம் கோலாலம்பூர்; அங்கு 2025 மார்ச் மாதம் பதிமூன்றாம் தேதி (13-3-2025) தங்கியதற்கு இரண்டு காரணங்கள். 1.பத்துமலை முருகனைத் (BATU CAVES SHRINE) தரிசிக்கவேண்டும் ; 2.உலகின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தில் (PETRONAS TWIN TOWERS) ஏறி நகரம் முழுவதையும் பார்க்கவேண்டும் என்பதே; இரண்டு ஆசைகளும் இனிதே நிறைவேறின .
ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம்; பத்துமலை முருகனைத் தரிசிக்க டிக்கெட் கிடையாது; இரட்டைக் கோபுரத்தைத் தரிசிக்க கட்டணம் உண்டு நானும் என் மனைவியும் சீனியர் சிட்டிசன் என்பதால் (கிழவன்-கிழவி என்பதால் ) ஆளுக்கு ஐம்பது வெள்ளி (மலேசியன் ரிங்கட் Malaysian ringgit- RM) கட்டணம். ஏனையோருக்கு இரு மடங்கு கட்டணம்.
கட்டிடத்தில் ஏறிச் செல்ல லிப்ட் உள்ளது. ஆயினும் அணி அணியாகவே செல்ல முடியும்; இரட்டைக் கோபுரங்களையும் இணைக்கும் பாலத்தில் உலவ பத்து நிமிடம் கொடுக்கிறார்கள் . இரு பக்கங்களிலும் உள்ள கண்ணாடி வழியாக மலேஷியத் தலை நகரைக் கண்டு களிக்கலாம். பின்னர் உயரமான 84-ஆவது மாடிக்கு அழைத்துச் செல்வார்கள்; அங்கு மேலும் பல கட்டிடங்களை நான்கு திசைகளிலும் கண்டு களிக்கலாம் . அங்கே ஒரு பத்து நிமிடம் நிற்கலாம். பின்னர் ஷாப்பிங் ஏரியாவில் இறக்கிவிடுவார்கள்; பை கனமாக இருந்தால் பரிசுப் பொருட்களையும் வாங்கலாம். உள்ளே நுழையும் போதே உங்களை தனித் தனியாகவோ, கணவன் மனைவி ஜோடியாகவோ ,காதலன்- காதலி ஜோடியாகவோ போட்டோ எடுத்து விடுவார்கள்; நீங்கள் வெளியே செல்லுகையில் அது தயாராக இருக்கும்; விருப்பப்பட்டால் காசு கொடுத்து அதையும் வாங்கலாம். எங்களை காரில் சுற்றிக் காட்டிய இளைஞனைக் கேட்டேன்; அவன் மேலே ஏறியது இல்லை என்றான்; சுற்றுலாப்பயணிகளுக்கு அது வினோதம்; உள்ளுர்க்காரர்களுக்கோ அது காசினைக் கொள்ளை அடிக்கும் இடம் என்பது புரிந்தது!
கோபுரக் கட்டிடம் மிகப்பெரிய SHOPPING MALL ஷாப்பிங் மால்- உடன் இணைந்தது அதில் ஏராளமான கடைகள். நாங்கள் சென்றபோது கூட்டம் அதிகம் இல்லை.
வெளியே வந்தவுடன் பொங்கும் நீறுற்றுடன் பூங்கா உள்ளது அதில் கொஞ்ச தூரம் சென்றால் கட்டிடத்துடன் செல்பி எடுக்கலாம்.
****
கட்டிடம் பற்றிய புள்ளி விவரங்கள்
இரட்டைக் கோபுரங்களின் உயரம் –1483 அடி!
மொத்தமுள்ள மாடிகள் — 88
கட்டிடத்தில் உள்ள பகுதிகள் – கடைகள்; பெட்ரோலியம் மியூசியம்
இரண்டு கோபுரங்களையும் இணைக்கும் Skybridge பாலம் – 44– ஆவது மாடி
- Location: Kuala Lumpur, Malaysia.
- Architect: Cesar Pelli.
- Completion: 1998.
- Height: 451.9 meters (1,483 feet).
- Floors: 88 floors per tower.
- Purpose: The towers house offices for Malaysia’s national oil company, Petronas, a large mall, a concert hall (home to the Malaysian Philharmonic Orchestra), and a petroleum museum.
ஏன் பெட்ரோனாஸ் என்ற பெயர்?
இதைக் கட்டியவர்கள் பெட்ரோனாஸ் பெட்ரோலியக் கம்பெனிக்காரர்கள் அந்தக் கம்பெனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது .
நாங்கள் விமான நிலையத்திலிருந்து, தங்கும் இண்டிகோ ஹோட்டலுக்குச் சென்றபோது நகரம் இருள்மயமாக காட்சி அளித்தது. இது ஒரு கிராமமோ என்ற நினைப்பு ஏற்பட்டது. ஆனால் கட்டிட உச்சியிலிருந்து நகரத்தைக் காண்கையில் நியூயார்க்குக்கு வந்து விட்டோமா என்ற பிரமிப்பு ஏற்பட்டது அவ்வளவு உயரமான கட்டிடங்கள்! வண்ண வண்ண கட்டிடங்கள்; விதவிதமான வடிவங்களில்!.
கட்டிடம் எங்கே இருக்கிறது?
கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியில் ஹோட்டல் ரூம் வாடகை எடுத்தால் நடந்தே செல்லலாம். அல்லது உள்ளூர் பஸ், ரயிலிலும் எளிதில் அடையலாம்
யார் இதை வடிவமைத்தார் ? – சீசர் பெல்லி
எப்போது கட்டப்பட்டது ? 1998
இதன் சிறப்பு என்ன? இதைவிட உயரமான கோபுரங்கள் இருந்தபோதிலும் இரட்டைக் கோபுரம் என்ற வகையில் இதுதான் உலகிலேயே உயரமான கட்டிடம் !
கட்டிடத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் மடபமும் மண் உளது
உள்ளூர்க்காரருடன் சென்றிருந்தால் எது, என்ன என்று சொல்லியிருப்பார்கள் காசு இருந்தால் போங்கள்; இல்லாவிடில் உள்ளூர்க்காரர்கள் மூலம் வேறு உயரமான கட்டிடத்தில் ஏறி காசு இல்லாமலேயே நகரினைக் காணலாம்
ஆனால் நான் நியூயார்க் சென்றபோதும் இப்படி காசு கொடுத்து உயரமான கட்டிடத்தைப் பார்த்தேன் .
–SUBHAM—
TAGS- மலேஷியா , கோலாலம்பூர், இரட்டைக் கோபுரம், பெட்ரோனாஸ் டவர், நான் கண்ட கோபுரம், லண்டன் சுவாமிநாதன்