காங்கோ படுகை (CONGO BASIN) (Post No.14,314)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,314

Date uploaded in London – –27 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

7-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

உலகின் அதிசய இடங்கள்! 

காங்கோ படுகை (CONGO BASIN) 

ச. நாகராஜன்

இருண்ட கண்டம் என்று ஆப்பிரிக்கா அழைக்கப்படக் காரணம் அதன் நடுப்பகுதியை பத்தொன்பதாம் நூற்றாண்டு யாத்ரீகர்கள் பார்த்து பயந்ததால் தான்! 

அந்த நடுப்பகுதியில் இருந்தது உள்ளே நுழைய முடியாத அடர்ந்த காடு – அதில் உள்ளே உலவும் பயங்கரமான மிருகங்கள்! அதை விட அதி பயங்கரமானவர்கள் – மனிதர்களைத் தின்னும் காட்டுமிராண்டிகள் – அங்கு உள்ளே இருந்தார்கள்.

 அதற்குள் போக யாருக்குத் தான் துணிவு வரும்?

இது தவிர பிரம்மாண்டமான காங்கோ நதியானது தனது கிளை நதிகளுடன் அங்கு பாய்ந்து கொண்டிருந்தது.

 ஆனால் ஹென்றி ஸ்டான்லி (1841-1904) என்ற எதற்கும் அஞ்சாத வெள்ளைக்காரர் துணிந்து காட்டிற்குள்ளே சென்று ஆராயலானார்.

 ஜோஸப் கான்ராட் (1857-1924) என்ற போலந்து தேச எழுத்தாளர் இந்த காங்கோ காடுகளின் மர்மத்தை வியந்து கொண்டாடி தனது நாவலான  ‘ஹார்ட் ஆஃப் டார்க்னெஸ்’ (Heart Of Darkness) என்ற நாவலைப் படைத்தார்.

நீளமான பாம்பு போல வளைந்து வளைந்து ஓடும் இந்த காங்கோ நதியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!

ஜாம்பியாவின் வடமேற்கில் சம்பேஸி ஆறாகத் தோன்றும் இந்த நெடிய பாம்பு வடக்கே ஓடி பின் மேற்குப் பக்கமாகத் திரும்புகிறது.

2900 மைல் ஓடி உலகின் ஆறாவது பெரிய ஆறாகப் பரிமளிக்கிறது இது!

 அமேஸான் நதிக்கு அடுத்தபடியாக சுமார் 14,60,000 கன அடி நீரை இது அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் கொண்டு தள்ளுகிறது.

காங்கோ படுகையின் பரப்பு  மட்டும் பதிமுன்று லட்சத்து முப்பத்தைந்தாயிரம் சதுர மைல் பரப்பாகும். இதில் பெரும்பகுதி ஜைரே நாட்டில் சுற்றிலும் மலைகள் சூழ இருக்கிறது.

எழுத்தாளரான ஜோஸப் கான்ராட் இதற்குள் சென்று பார்த்து விட்டு உலகில் ஆதி காலத்தில்  முதன் முதலில் தோன்றிய பகுதிக்குச் செல்வது போல இருந்தது என்றார்.

 பெரிய குரங்குகளளும், கொரில்லாக்களும் இங்கு ஒரு புறம் கொட்டம் அடிக்கும்: இன்னொரு புறம் இருக்கும் ஆப்பிரிக்க கிளிகள் அழகிய பட்டாம்பூச்சிகள் இன்னும் இன்ன பிற அழகிய பறவைகளின் கூட்டத்தை வர்ணிக்கவே முடியாது; அப்படி ஒரு அழகு!

சூரிய ஒளி புக முடியாதபடி அடர்ந்திருக்கும் மரங்களின் கீழே பிரம்மாண்டமான கட்டு விரியன்களும் ராஜ நாகங்ளும் நெளிந்து கொண்டிருக்கின்றன!

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் இங்குள்ள மூன்று விஷேசமான மிருகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 ஒகாபி என்று ஒரு அதிசய மிருகம் அங்கு இருந்தது. அடுத்து அட்டி என்று அழைக்கப்பட்ட ஒரு கழுதை, இலைகளை மட்டும் தின்று வாழ்வது ஒரு அதிசயம்! மூன்றாவது, குதிரை போன்று இருக்கும் ஒரு வரிக்குதிரை இரவில் மட்டும் உலவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

1899ம் ஆண்டு உகாண்டாவில் இருந்த பிரிட்டிஷ் கவர்னரான சர் ஹென்றி ஜான்ஸன் என்பவர்  ஒகாபியைப் பற்றி நன்கு ஆராய்ந்து அது ஒருவிதமான ஒட்டகசிவிங்கி என்பதைக் கண்டுபிடித்தார்.

காங்கோவில் உள்ள மயில் உலகில் வேறெங்கும் காண முடியாத ஒரு மயில் வகையாகும். ஆனால் இதைக் காண்பது மிக மிக அரிய விஷயமாகும்.

 ஆப்பிரிக்க மழைக்காடுகளோ ஆறு அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு விதமான தாவர வகைகள் உண்டு.

இந்த மழைக்காடுகள் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் உள்ள ஜைரே நாட்டில் உள்ளன.

 உலகின் அதிசய இடங்களில் முக்கியமான ஒரு இடம் இந்த காங்கோ தான்!

 இருண்ட கண்டத்தின் இதயமான காடு என்று காங்கோ படுகை அழைக்கப்படுவது சரிதானே!

***

Leave a comment

Leave a comment