சென்னை நங்கநல்லூர் கோவில்கள் (Post.14,318)

Nanganallur Sri Anjaneyar Temple; roadsise bypaaser worshipping from the road.

Written by London Swaminathan

Post No. 14,318

Date uploaded in London –  28 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சென்னைப் பு ற    நகரப் பகுதியான  நங்க நல்லூரில் உள்ள ஆஞ்சனேயர் கோவில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும்..

இப்போது அந்த வட்டாரத்தில் ராஜ ராஜேஸ்வரி கோவில், பெருமாள் கோவில், குருவாயூரப்பன் கோவில் ஆகியனவும் பக்தர்களை ஈர்த்து வருகின்றன .

நாங்கள் 2025 மார்ச் 18-ஆம் தேதி அனுமார் கோவிலுக்கும் ராஜேஸ்வரி கோவிலுக்கும் சென்றோம்.

ஊரின் பெயரைச் சொன்னவுடன் ஆஞ்சனேயர் தோற்றம்தான் மனக் கண்களில் தோன்றும். இங்கு 32 அடிக்கு பிரம்மாண்டமாக உள்ள கம்பீரமான ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் கோவிலால் இவ்வூர் மிகவும் புகழடைந்தது.

சோழர்காலத்தில் இவ்வூர் தன்மீச்சுரம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  சோழர்காலத்திய தர்மலிங்கேசுவரர் (தன்மீச்வரர்) என்ற சிவன் கோவிலும், பல்லவர் காலத்திய லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோவிலும் இவ்வூரின் பழமைக்கு சான்று பகர்கின்றன.

இவை தவிர உத்திர குருவாயூரப்பன் கோவில், ஐயப்பன் கோவில், இராஜராஜேசுவரி கோவில், இராகவேந்திர கோவில் சத்ய நாராயணன் கோவில், தேவி கருமாரியம்மன் கோவில், முத்து மாரியம்மன் கோவில் ஏழூரம்மன் கோவில், ஹயவதன பெருமாள் கோவில், அர்த்த நாரீசுவரர் கோவில், லட்சுமி நாராயணன் கோவில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில், ஸர்வ மங்கள நரசிம்மர் கோவில், சித்தி விநாயகர் கோவில் உட்பட பல கோவில்கள்

இருக்கின்றன . காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால், இவ்வூருக்கு நங்கைநல்லூர் (திருமகள் வாழும் ஊர்) எனப் பெயரிடப்பட்டது .

ஆஞ்சனேயரை ரோட்டிலிருந்தே தரிசிக்கலாம்.  போகும் வரும் பக்தர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நிறுத்தி ஒரு கும்பிடு போடுகினறனர். நாங்கள் வாங்கிச் சென்ற துளசி மாலையை கர்ப்பக்கிரகத்தில் சார்த்தாமல் பிரகாராத்தில் உள்ள அனுமார் படத்துக்குப் போடச் சொன்னார் பட்டர். ஏன் என்று புரியவில்லை.

இப்போதெல்லாம் பகதர்கள் கூட்டம் பெருகிவிட்டதால் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றனர் போலும் ; வடக்கில் நாங்கள் திரயம்பகேஸ்வரர் கோவிலுக்குச் சென்ற போதும் சந்நிதிக்குள் நுழையும் போதே பூக்களை வாங்கி வைத்துக்கொண்டார்கள் எல்லாப்   பூக்களையும் போட்டால் சாமி மறைந்துவிடுவார்!  இதற்கு மாற்றுவழி காண்பது நல்லது.

கேரளத்திலுள்ள குருவாயூர்க் கோவிலைப் போலவே நங்க நல்லூர் கோவிலும் இருப்பதாக , அங்கு சென்றவர்கள் சொன்னார்கள்.

Sri Lakshmi Sathyanarayana Perumal Temple, Next to Rajarajeswari Temple

Sri Rajarajeswari Temple, Nanganallur

Nanganallur Anjaneya Temple

ராஜ ராஜேச்வரி கோவில்

இது ஒரு குறுகிய சந்தில் உளது ஆண்கள் மேல்ச்  சட்டையைக் கழற்றிவிட்டே செல்லலாம். பதினெட்டாம் படி போல படிகளில் ஏறி நல்ல லட்சணமான ராஜேஸ்வரியைத் தரிசிக்கலாம்  பிரகாரத்தை   வலம் வந்த பின்னர் அதே படிகளில் இறங்கி வெளியேறவேண்டும்.

அருகிலுள்ள சந்நிதியில் திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் பூஜித்த சிவலிங்கமும் , அவருடைய தண்டமும் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோவிலில் பிற சந்நிதிகளும் இருக்கின்றன. சிறிய கோவில் ஆனாலும் சுவற்றில் அழகான படங்கள் மாட்டப்பட்டுள்ளன.

பெரும்பாலான கோவில்கள் புதிதாகத் தோன்றியவை; ஆயினும் பக்தர்களின் கூட்டத்துக்குக் குறைவில்லை .

—SUBHAM—

TAGS- சென்னை ,நங்கநல்லூர் ,கோவில்கள் , ராஜராஜேஸ்வரி, ஆஞ்சனேயர்

Leave a comment

Leave a comment