கலிதோஷம் போக்கும் கந்தபுராணம் (பாராயண நூல்) (Post No.14323)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,323

Date uploaded in London – –29 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கலிதோஷம் போக்கும் கந்தபுராணம் (பாராயண நூல்)

ச. நாகராஜன்

கள்ளக்குறிச்சி கந்தபுராண ஞானஸபையின் வெளியீடாக கலிதோஷம் போக்கும் கந்தபுராணம் என்ற நூல் வெளி வந்துள்ளது.

நூலைத் தொகுத்தவர் சிவஶ்ரீ தில்லை எஸ். கார்த்திகேய சிவம் அவர்கள்.

பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்கள் அடங்கிய கந்தபுராண நூலை முழுவதுமாகப் பாராயணம் செய்வது பழங்காலத்தில் வழக்கமாக இருந்தது.

அதிவேக நவீன யுகத்தில் இப்படி முழுவதுமாகப் பாராயணம் செய்வது குறைந்து வருகிறது.

கந்தபுராண பாராயணத்தை ஊக்குவிக்கும் விதமாக ஆறு காண்டங்களிலிருந்து 378 பாடல்களைத் தேர்ந்தெடுத்து இந்த நூலில் அளித்துள்ளார் நூலாசிரியர்.

‘ஸ்கந்தஸ்ய கீர்த்திமதுலாம் கலிகல்மஷ நாசினீம்’ என்ற ஸ்கந்த புராண வாக்கியத்தைச் சுட்டிக் காட்டி கலியின் கல்மஷத்தைப் போக்க கந்தபுராண பாராயணமே சிறந்தது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் தில்லை கார்த்திகேய சிவம்.

இந்த நூலுக்கு ஆசியுரையை கூனம்பட்டி ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களும், அருளுரையை தருமை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ நட்சத்திர குருமணிகள் அவர்களும், ஆசியுரையை  மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை குரு முதல்வர் திரு ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் அவர்களும் வழங்கியுள்ளனர்.

நூலின் விலை ரூ100/ பக்கங்கள் 74

கிடைக்கும் இடம் : கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி, 606202

நூலைப் பெற விரும்புவோர் திரு தில்லை கார்த்திகேயசிவம், சன்னதித் தெரு, பொரசக்குறிச்சி – 606203 என்ற முகவரிக்குத் தொடர்புக் கொள்ளலாம்.

கவலைகள் போக்கும் கந்தபுராணம் (பிரார்த்தனை நூல்)

இலவச வெளியீடு

சிவஶ்ரீ தில்லை எஸ். கார்த்திகேய சிவம்

கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி சார்பில் பிரார்த்தனை நூலாக கவலைகள் போக்கும் கந்தபுராணம் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

 கந்தபுராணம் படித்தால் கைமேல் பலன் என்பது அனுபவ வாக்கு.

 61 பாடல்கள் அடங்கியுள்ள இந்த நூல் பக்தர்களுக்கு ஒரு வரபிரசாதமாகும்.

குழந்தைகள் கல்வியில் முன்னேற

புத்திரபாக்கியம் பெற்றிட

பதவி கிடைத்திட

பயம் நீங்க

நோய்நொடிகள் நீங்க

அரசு பயம் நீங்க

சத்ரு பயம் நீங்க

பூமி மனை அடைய

மரண பயம் நீங்க

பெண்கள் மனதில் இடம் பெற

காவல் தெய்வம் துணை நிற்க

அச்சம் நீங்கிட

எதிரிகள் நீங்கிட

திருமண பாக்கியம் பெற்றிட

சிவப்பரம்பொருளைச் சரணடைய

தொழில் லாபம் ஏற்பட

கர்வம் நீங்க

சிவபரத்துவம் உணர்

வெற்றி புகழ் அடைந்திட

செல்வ வளம் பெற

மன அமைதி பெற

ஆகிய தலைப்புகளில் துதிக்க வேண்டிய பாடல்கள் தரப்பட்டுள்ளன. 

இத்துடன் கிருத்திகை விரத முறையும் அதன் பலனும், ஸ்கந்த சஷ்டி விரத முறையும் அதன் பலனும், கந்தபுராண பாராயண பலன் ஆகியவையும் நூலில் தரப்பட்டுள்ளன. 

இந்த நூலைத் தொகுத்து வழங்குபவர் சிவஶ்ரீ தில்லை எஸ். கார்த்திகேய சிவம் அவர்கள்.

 நூல் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

 நூலை கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி 606202 என்ற முகவரிக்கு எழுதிப் பெறலாம்.

 இரு நூல்களையும் அழகுறத் தொகுத்து வழங்கியுள்ள சிவஶ்ரீ தில்லை எஸ். கார்த்திகேய சிவம் அவர்களை அனைவரும் பாராட்டலாம்!

***

Leave a comment

Leave a comment