
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are raedily available in Pustaka.co.in
Enjoy reading them.
Here is one of my latest books
ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்
பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு book title
பொருளடக்கம்
1. பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல்
2. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் 155 பெண்கள்
3. பெண்கள் மீது அவ்வையார், அம்பலவாணர் தாக்குதல்
4.ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பேய்கள்
5.ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – Part 1
6. வராஹமிஹிரர் சொல்லும் அண்டங்காக்கை ஜோதிடம்
7. ஷேக்ஸ்பியர், தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் கிரகணங்கள்
8.ஷேக்ஸ்பியர், தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் சகுனங்கள்
9.தமிழ், சம்ஸ்க்ருத, ஷேக்ஸ்பியர் நூல்களில் ஜோதிடம்- ஒரு ஒப்பீடு-1
10. தமிழ், சம்ஸ்க்ருத, ஷேக்ஸ்பியர் நூல்களில் ஜோதிடம்- ஒரு ஒப்பீடு-2
11.மேலும் சுவையான ஜோதிடச் செய்திகள்; ஷேக்ஸ்பியர் வசனங்கள்
12.தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-1
13.தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும் -2
14.ஆசிரியரை நிந்தித்தால் நீ கழுதையாகப் பிறப்பாய் — மனு
15.தமிழ் பன்றிகளும் ஆங்கிலப் பன்றிகளும்
16. தமிழ் சம்ஸ்க்ருத, ஷேக்ஸ்பியர் நூல்களில் பணம்
17.தமிழ் நாய்களும் ஷேக்ஸ்பியர் நாய்களும் பட்டபாடு!
18.கருமிகள் பற்றி ஷேக்ஸ்பியரும் ரிக் வேதமும் தமிழ் வேதமும் செப்புவது என்ன?
19.தமிழ், சம்ஸ்க்ருத ஷேக்ஸ்பியர் நூல்களில் கோபம், சினம்
20.தமிழ், சம்ஸ்க்ருத, ஷேக்ஸ்பியர் நூல்களில் தேச பக்தி
21.தமிழ், சம்ஸ்க்ருத ஷேக்ஸ்பியர் நூல்களில் பொறாமை
22.தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- குடிபோதை
**********
புஸ்தக அட்டையில் ஷேக்ஸ்பியர் படம்

ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்
பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு book title
முன்னுரை
பெரியோர்கள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் Great Men Think Alike என்பது ஆன்றோர் வாக்கு. 38 நாடகங்களையும், 154 கவிதைகளையும் புனைந்த ஷேக்ஸ்பியர் ஒரு பெரிய சிந்தனையாளர், நாடக நடிகர் , நாடகம் படைத்தவர், மஹா மேதை என்பதை உலகம் அறியும். அவருடைய நாடக கதா பாத்திரங்களை சம்ஸ்க்ருத நாடகங்களுடனும் படைப்புகளுடனும் ஒப்பிட்டு பல நூல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் தலைப்பு வாரியாக அவரது படைப்புகளை ஒப்பிட்டு தமிழ் நூல்கள் வெளியாகவில்லை; ஒரு வேளை, அந்தக் காலத்தில் யாரேனும் முயற்சி செய்து இருக்கலாம்.. சொல்லப்போனால் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அப்படியே சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி யாரும் தமிழில் மொழிபெயர்க்கவும் இல்லை. கதைகளைத் தழுவிய நூல்களும், நாடகக் கதை சுருக்கங்களும் மட்டுமே வெளியாகின. காரணம் என்னவெனில் அவரது ஆங்கிலம் 600 ஆண்டுகளுக்கு முந்திய ஆங்கிலம்; அவரே ஆயிரத்துக்கும் மேலான புதிய சொற்களை உருவாக்கியுள்ளார். அவர் உபயோகித்த ஆங்கிலச் சொற்களின் பொருள் இப்போது அடியோடு மாறிவிட்டது. ஆங்கிலப் பாடம் பயில்வோர் கூட அவரது ஆங்கிலத்தை மொழிபெயர்த்தே படிக்கவேண்டியுள்ளது அதாவது நமது கால ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தே படிக்கவேண்டியுள்ளது; நானும் கூட அதிக நேரம் செலவிட்டு தமிழ், ஸம்ஸ்க்ருதப் பாக்களுடன் ஒப்பிட்டேன்.
ஷேக்ஸ்பியர் நாடகங்களை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க ஆங்கில அறிவும், தமிழ் அறிவும், நாடகம் அல்லது கதைகளை எழுதும் புலமையும் தேவை. லண்டனில் பி பி சி தமிழோசையில் சங்கர் அண்ணா மொழிபெயர்த்த நாடகங்களில் நானும் நடித்து இருக்கிறேன். அவரும் கூட அதை புஸ்தகமாகப் போடுவதற்கும் வெளியிடுவதற்கும் மறுத்துவிட்டார். காரணம் அவை கதைத் தழுவல்கள்தான்; சில நேரங்களில் தமிழ்ச் சுவைக்காக ஒரிஜினல் வரிகளை மாற்ற வேண்டியிருந்தது.
என்னுடைய இந்த நூலில் பணம், பெண்கள் , பேய்கள், சகுனங்கள், மூட நம்பிக்கைகள், ஜோதிடம், தேசபக்தி, பொறாமை போன்ற 22 தலைப்புகளில் ஷேக்ஸ்பியரது கருத்துக்களை ஒப்பிவிட்டு எழுதியுள்ளேன். நான் முன்னர் எழுதிய கட்டுரைகளை அல்லது அவற்றின் பகுதிகளை எடுத்து ஒப்பிட்டதால் முன்னர் எழுதிய விஷயங்கள் மீண்டும், மீண்டும் வரும். அவை இல்லாமல் ஒப்பிட முடியாது. ஒவ்வொன்றுக்கும் சில எடுத்துக்காட்டுகளை மட்டுமே தமிழில் கொடுத்தேன். அல்லது புத்தகம் பெருத்துவிடும்; சுவையும் குன்றிவிடும்.
படித்து மகிழுங்கள்; இதைப் படித்த பின்னர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முழுக்கப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழும் என்று நம்புகிறேன்.
லண்டன் சுவாமிநாதன்
நவம்பர் 2024
Swami_48 @ yahoo.com
swaminathan. santanam @gmail.com
ABOUT THE BOOK AND THE AUTHOR

Title ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்
பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – November 2024
Subject – Literature
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 8500 articles in English and Tamil and 137+2 Tamil and English Books
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, Malaysia and Greece
*****
IF YOU WANT TO SEE ALL THE 137 BOOKS, PLEASE GO TO PUSTAKA.COO.IN
HOW TO READ OR DOWNLOAD OR GET PRINTED BOOKS?
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—