Post No. 14,331
Date uploaded in London – 31 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. மேலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே வாய்மொழி மூலமே அது பரப்பப்பட்டு வருவதை இன்றும் நாடு முழுதுமுள்ள வேத பாடசாலைகளில் காண்கிறோம் . மனிதர்களுக்கு வேதம் நிர்ணயித்த ஆயுட்காலம் நூறு ஆண்டுகள்தான். நம்மில் பலரும் அரிதாகவே நூறு ஆண்டுகளுக்கு வாழ்கிறோம். அதற்குள் நாடி நரம்புகள் தளர்ந்து தோல் சுருங்கி முகம் வாடி விடுகிறது பிராமணர்கள் தினமும் மதிய வேளையில் நூறாண்டுக் காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வாழ்க என்ற மந்திரத்தைச் சொல்லி, சூரியனை விரல் இடுக்குகளின் வழியே பார்க்கிறார்கள் . இவை எல்லாம் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகின்றன .
இப்பொழுது உலகெங்கிலும் வைட்டமின்-டி VITAMIN- D பற்றி விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது; அது இருந்தால் நோய் நொடிகள் மனிதனை அண்டாது ; இதனால் இந்து மதத்திலும் இந்து ஜோதிடத்திலும் சூரியனை ஆரோக்கியத்துக்கான அதிபதி என்று சொன்னார்கள் ; இந்துக்கள் சூரிய நமஸ்காரத்தை பொழுது விடியும் முன்பாகச் செய்வதும், பிராமணர்கள் சூரியனின் போக்கினை வைத்து மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வதும் இதனால்தான் .
ரிக் வேதத்தில் 1-34-6
வேத கால இந்துக்கள் அஸ்வினி தேவர்கள் என்ற இரட்டையர்களை ஆரயோக்கியத்துக்கான தெய்வங்களாக வணங்கினார்கள் ; இந்துக்கள் முப்பத்து முக்கோடி தேவர்களும் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்; அதையே ஆண்டாள் முப்பத்து மூவர் என்று திருப்பாவையில் பாடுகிறார். அந்த முப்பத்து மூவரில் இந்த இரட்டையர் அடக்கம்; இந்த இரட்டையரை வேண்டும் துதி, ரிக் வேதத்தில் 1-34-6 வருகிறது.
இன்னும் ஒரு ரிக் வேதத் துதி 6-74-2 சோம ருத்ரா என்ற மூலிகையைக் குறிக்கிறது .
பில்லி- சூனியம், மாய மந்திரம் முதலியவற்றால் வரும் நோய்களை மூலிகைகள் அகற்றி விடும் என்று அதர்வ வேத துதிகளும் பாடுகின்றன 4-9-9; 19-39-1
அந்தக் காலத்தில், நோய் நொடிகளை பூதங்களும் பிசாசுகளும் உண்டாக்குவதாகவும் பில்லி சூனியம் போன்றவற்றால் பிறர் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்க முடியும் என்றும் நம்பினார்கள் ; சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த நம்பிக்கை மேலை நாடுகளில் பரவலாக இருந்தது; யாருக்காவது அல்லது ஒரு ஊருக்காவது கெடுதி வந்தால் அங்கு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாதவர்களை சூனியக்காரிகள் என்று சொல்லி உயிருடன் எரித்தனர். இவ்வாறு எரிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல் என்று நூல்கள் விளம்புகின்றன.
இந்து மத வைத்தியர்கள் பாக்டீரியாக்களையும் வைரஸ் கிருமிகளையும், இப்படி பேய் பிசாசுகள், பூதங்கள் என்று பாமர மக்களுக்குச் சொன்னார்கள் ; கிரகணம் என்பதை சந்திரன், பூமியின் நிழல்கள் என்று அறிந்து துல்லியமாகக் கணக்கிட்டு சொன்ன பின்னரும் சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவதாக பாமர மக்களுக்குச் சொன்னதை இதற்கு எடுத்துக்காட்டகச் சொல்லலாம் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இந்த பாம்பு விழுங்கும் நிகழ்ச்சிகளை சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர்.
இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் மூலிகைகளை நோய் தீர்க்கப் பயன்படுத்தினர் என்பதாகும் . மூலிகைகளின் சக்தி பற்றி மேலும் ஒரு ரிக் வேதத் துதி தெளிவாகவே பேசுகிறது 10-97-1/ 23
****
புதிய செய்தி என்னவென்றால் வேத கால மூலிகைகளைப் பிற்கால நூல்களும் குறிப்பிட்டுள்ளன. இதைக் கருத்திற்கொண்டால் உலகிலேயே மிகப் பழமையான மருத்துவம் ஆயுர்வத மருத்துவம் என்பது உறுதியாகிறது
அதர்வண வேதம் சொல்லும் மூலிகைகள் சரக சம்ஹிதையிலும் உளது; சரகரும் சுஸ்ருதரும் சொன்ன மருந்துகளை இன்று வரை நாம் பயன்படுத்திவருகிறோம். மேலை நாடுகளின் மருத்துவ அணுகுமுறைக்கும் இந்திய சித்த, ஆயுர்வேத மருத்துவ அணுகுமுறைக்கும் உள்ள முக்கிய வேறுபாட்டினை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
நோயே வராமல் வாழ வைப்பது ஆயுர்வேதம்; சித்த மருத்துவம்.
நோய் வந்த பின்னர்– அதாவது நோய்களை உடலில் உருவாக்கித் தீர்ப்பது மேலை நாட்டு மருத்துவம்.
பார்மசி கம்பெனிகள் நாள்தோறும் கோடிக்கணக்கான மருந்துகளை விற்கின்றன ; இதே அளவுக்கு மூலிகைகளை விற்றால் உலகில் நோய் நொடி இல்லாமல் அனைவரும் சித்தர்களாகவே வாழமுடியும் அதனால்தான் சித்த மருத்துவம் ஆயுளை வளர்க்கும் வேதம் என்று நமது மருத்துவ முறைகளுக்குப் பெயர் சூட்டினார்கள்.
கீழேயுள்ள பட்டியலில் எந்த எந்த மூலிகை வேதத்திலும் பிற்கால நூல்களிலும் உளது என்பதைக் காணலாம் .
இந்திர வாருணி – அதர்வ வேதம்1-23-1 – சுஸ்ருத சம்ஹிதை 6-11-15
பிரிஷ்ணி பர்ணி -அதர்வ வேதம் 2-25-1 – சரக சம்ஹிதை6-9-43
குஷ்ட மூலிகை – -அதர்வ வேதம் 5-4-6 – சரக சம்ஹிதை 1-3-9
சங்க புஷ்பி – கெளசிக சூத்ரா 10-16 – சுஸ்ருத சம்ஹிதை 6-52-43
பிப்பாலிகா -அதர்வ வேதம் 6-109-3- சரக சம்ஹிதை 6-11-47; சுஸ்ருத சம்ஹிதை 6-52-25
ஹரித்ரா – -அதர்வ வேதம் 1-23-1 – சரக சம்ஹிதை 1-3-13; சுஸ்ருத சம்ஹிதை 6-52-19
லாஃஸா -அதர்வ வேதம் 5-5-2 – சரக சம்ஹிதை 6-9-67; சுஸ்ருத சம்ஹிதை 4-9-10
பலாச -அதர்வ வேதம் 6-15-1 – சரக சம்ஹிதை 6-12-63
ஷாமி- -அதர்வ வேதம் 6-27-2 – சரக சம்ஹிதை 1-27-157
குக்குலு -அதர்வ வேதம் 19-38-1 – சரக சம்ஹிதை 6-17-79
சங்க புஷ்பி = சங்கு புஷ்பம்; பிப்பாலிகா = திப்பிலி; ஹரித்ரா =மஞ்சள்; குக்குலு =குங்கிலியம் பிசின்; லாக்ச = அரக்கு; பலாச= புரசு; ஷாமி= வன்னி; இந்திர வாருணி= பேய்த் தும்மட்டி;
பிரிஷ்ணி பர்ணி = சித்திரப்பலாடை (Sittirappaladai) ;கொலாபொன்ன (Kolaponna)
REFERENCE BOOK – MEDICINES OF EARLY INDIA, BY KANJIV LOCHAN, VARANASI, YEAR 2003
—SUBHAM—
TAGS- வேத கால, மூலிகை மருத்துவம் , புதிய தகவல்கள்