QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334)

Written by London Swaminathan

Post No. 14,334

Date uploaded in London –  1 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்கரதேவ் 1449–1568

1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?

சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர்  சிரோமணி  பூயன் ;

தாயின் பெய- சத்தியசந்த்யா

****

2.அவருடைய மனைவி பெயர் என்ன ?

அவர்  ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

****

3.அவர் போதித்த கொள்கை என்ன?

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொரு ள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.

****

4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?

சத்ரியா – நடனக்கலை

சங்கீதம் – போர் கீத்

நாடகம் – அங்கியா நாட், பவோனா 

****

5.அவர் என்ன நூல்களை எழுதினார்

பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.

சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;

அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –

ருக்மிணி ஹரணம்

ராம விஜயம்

கேலி கோபாலன்

காளீய தமனம்

அஜாமிள உபாக்கியானம்

கஜேந்திர பக்திப் ப்ரதீபம்

****

6.வர கீதம் என்பது என்ன?

அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர  கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.

7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?

குரு– மஹேந்திர கண்டலி.

வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;

ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;

படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;

புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.

****

8.சங்கர தேவரின் சீடர் யார் ?

மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.

****

9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?

ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப்  பாடினார்.

****

10.அவர் எப்போது இறந்தார் ?

அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.

–SUBHAM—

TAGS- சங்கர தேவ், அஸ்ஸாம், வரகீதம், சத்ரியா நடனம், கிருஷ்ணர், ஏக சரணம், , மாதவ தேவர்

Leave a comment

Leave a comment