இந்திரன் நரியாக மாறியது ஏன்? நாஸ்தீகர்களுக்கு எச்சரிக்கை! (Post.14,341)

Written by London Swaminathan

Post No. 14,341

Date uploaded in London –  3 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் ஒரு சம்பவம் வருகிறது. இது நாஸ்தீகவாதிகளுக்கும் சமயச் சடங்குகளைக் கிண்டல் செய்வோருக்கும் நல்ல எச்சரிக்கை ஆகும்.

வேதங்களை முதல் மூன்று வருணத்தினர் மட்டுமே கற்கவேண்டும் என்பது பழங்கால விதி; (இது பற்றி யாரும் கவலைப் படவேண்டாம்; இப்போது பிராமணர்களும் கற்பதில்லை!)

நான்கு  வேதங்களை வகையாகத் தொகுத்து நான்கு சீடர்களிடம் பரப்புரை செய்யும் பொறுப்பினை வழங்கிய வியாசரை வேத வியாசர் என்கிறோம். அதே வியாசர்தான் மஹாபாரதம் என்னும் உலகத்தின் மிக நீண்ட நூலை எழுதினார். அந்த மஹாபாரதத்துக்கு ஐந்தாவது வேதம் என்று பெயர் .

பிராமணர்களே ஆனாலும் கடுமையான விரத, ஒழுக்க விதிகளை பின்பற்றுவோர் மட்டுமே  சுமார் இருபது ஆண்டுகளுக்கு வேதங்களைப் பயில முடியும். ஆ னால் மஹாபாரதம் என்னும் ஐந்தாவது வேதத்தை யாரும் எப்போதும் படிக்கலாம்; கற்கலாம். அதில் பதினெட்டு பருவங்களில் ஒன்றான சாந்தி  பர்வம் சொல்லும் செய்தி இதோ:

கடவுளையும் வேதங்களையும் நம்பாதவர்களை நாஸ்தீகர் என்கிறோம். ந + அஸ்தி= இருப்பது உண்மை இல்லை என்று அவர்கள் சொல்லுவார்கள் ; அதாவது க டவுள் இருப்பது உண்மை இல்லை என்பது அவர்களின் வாதம். அவர்களுக்கு வாய்ச்சாலம் அதிகம்; இதனால்தான் மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் நாஸ்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் என்று விளாசுகிறார் 

ஆறு கோடி மாயா சக்திகள்

வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்

சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்

விரதமே பரம் ஆக வேதியரும் “–

என்பது மாணிக்கவாசகர் பாடிய திருவாசகப் பாடல் ஆகும்

வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், ஆறாம் சர்கத்தில் அயோத்தி என்னும் நகரின் பெருமையினைச் சொல்லும் வால்மீகி முனிவர் அங்கு பொய்யர்களும் நாத்தீகர்களும் இல்லை என்கிறார்.

ந நாஸ்திகோ நாந்ருதகோ ந கஸ்சித பஹுஸ்ருத:

நாஸ்தீகன் இல்லை—கொஞ்சமாவது பொய் பேசும் வகை கூட இல்லை- படிக்காதவன் இல்லை- பொறாமை உள்ளவன், முட்டாள்கள் கிடையாது.

மஹாபாரத காலத்தில் நாஸ்தீகர்களுக்கு கடும் தண்டனையையும் கொடுத்தனர். அவர்கள் கைகளைக் கட்டி காட்டுக்கு அனுப்பினர்.

இதுபற்றி பீஷ்மர் சொல்லும் தகவல் முக்கியமானது; வேத நிந்தனை செய்த இந்திரன் ஒரு பிறப்பில் நரியாகப் பிறந்தான் என்கிறார். அவன் வேதங்களை குறைகூறியதோடு பிராமணர்களிடமும் எதிர்வாதம் புரிந்தான் என்று மஹாபாரதம் செப்பும்.

இதோ அந்த ஸ்லோகங்கள்:

அஹமாஸம்  பண்டிதகோ ஹைதுகோ  வேத நிந்தகஹ

ஆன்வீக்ஷிகீம்   தர்க்க வித்யாமனுரக்தோ நிரர்த்தகான்

நாஸ்தீகஹ சர்வசங்கீ  ச மூர்க்கஹ  பண்டித மாநிகஹ

தஸ்யேயம் பலநிர் விருத்திஹி ச்ருகாலத்தவம் மம த்விஜஹ 

  • शृगाल (śṛgāla): This is a common and widely used Sanskrit word for “fox”.

மேலும் சொல்கிறார் –

Fox in 10 Downing Street, P M House in London.

வேதங்களை நிந்திப்பதால் எவருக்கும் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை ; ஆகையால் சாஸ்திரங்கள் சொல்லும் விதிகளை மீறுவோர் தமக்குத் தாமே அழிவினைத் தேடிக்கொள்கிறார்கள் .

அப்ராமண்யம் ச வேதானாம் சாஸ்த்ராணாம் வாபிலங்கனம்

அவ்யவஸ்தா ச ஸர்வத்ர தத் வை நாசமாத்மனஹ  

****

வேதத்தின் முக்கியத்தை உணர்த்த வந்த வியாசர், சப்த ரிஷிகளும் மனுவும் வேதம் கறறார்கள் என்று மஹாபாரத சாந்தி பர்வத்தில் விளம்புகிறார் :

இந்த ஏழு ரிஷிகளையும் பிரம்மா படைத்தார் ; அவர்களை சித்ரசிகண்டீ என்றும் சாந்தி பர்வம் அழைக்கிறது

மரீசி, அங்கீரஸ், அத்ரி, புலஸ்திய, புலஹ, க்ரது, வசிஷ்ட என்ற ஏழு ரிஷிகள் ஆவர் வேறு ஒரு ஸ்லோகத்தில் மனுவினையும் சேர்த்து இந்த எட்டுப் பேர்கள் தான் பிரபஞ்சத்தை உருவாக்கினர் என்கிறது

இன்னும் ஒரு இடத்தில் அசித்த, தேவல, நாரத, பர்வத, ஆக்ஷன், பரசுராம, வசிஷ்ட ஜமதக்கினி, விச்வாமித்ர, பரத்வாஜ, ஹரிசமசுரு, குந்ததார   ஆகிய முனிவர்களும் வேதங்களைக் கறறார்கள் என்று தெரிவிக்கிறது .

Source : Avenues in Sanskrit Literature Edite by  R K Panda; Delhi; Year 2007

— SUBHAM—

Tags- இந்திரன் நரி, மாறியது, ஏன்? , நாஸ்தீகர்,  எச்சரிக்கை

Leave a comment

Leave a comment