கடவுளுக்குக் கடிதம் ! (Post.14,340)

Written by London Swaminathan

Post No. 14,340

Date uploaded in London –  3 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

பிரான்சில் ‘டெட் லெட்டர் ஆபிஸ்’ Dead Letter Office (முகவரி சரியில்லாமல் வரும் கடிதங்களைப் பரிசீலனை செய்யும் அலுவலகம்) குமாஸ்தா ஒருவர் பல கடிதங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சொர்க்கத்திலிருக்கும் கடவுள் பெயருக்கு ஒரு உருக்கமான கடிதம் வந்திருந்தது  அதில் ” கருணையுள்ள கடவுளே! எனக்கு விரைவில் ஐந்து பவுன்கள் பணம் அனுப்பி வையுங்கள்; இல்லாவிட்டால் என்னை வீட்டைவிட்டு வெளியே விரட்டி விடுவார்கள்” என்று ஒரு கிழட்டு அம்மாள் எழுதியிருந்தார்.

குமாஸ்தாவுக்கு இரக்கம் மேலிட்டது; நண்பர்களிடம் காட்டினான்; கிழவிக்கு உதவி செய்ய பணம் வசூலித்தான்.   பணம் சேர்ந்தது; அதை அப்படியே பாரீஸ் நகர கிறிஸ்தவ சர்ச் மூலம் கிழவியின்  முகவரியைக் கண்டுபிடித்து அனுப்பிவைத்தான்.

கொஞ்ச நாள் கழித்து சொர்க்கத்திலுள்ள கடவுளுக்கு என்ற பெயரில் அதே கிழவியிடமிருந்து இன்னும் ஒரு கடிதம் வந்தது ; குமாஸ்தா ஆவலோடு கடிதத்தைப்  பிரித்துப் பார்த்தான்

அதில், “கருணையுள்ள கடவுளே ! நீங்கள் எனக்கு அனுப்பிய பணம் வந்து சேர்ந்தது; மிக்க நன்றி. ஆனால் ஒரு கோரிக்கை; இனிமேல் அனுப்பும் பணத்தை ‘சர்ச்’ மூலமாக அனுப்ப வேண்டாம். அவர்கள் கொஞ்சம்  கமிஷன் எடுத்துக் கொண்டு மிச்ச பணத்தை மட்டுமே அனுப்பி இருந்தார்கள் !

****

ஜோமோ கென்யாட்டா

கென்யாவின் தலைவரானா ஜோமோ கென்யாட்டா ஒரு முறை இப்படிக் கூறினார் : “ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்கள் வந்த போது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது. எங்களிடம் நிலம் இருந்தது. சீக்கிரமே இது தலைகீழாக மாறிவிட்டது. எங்கள் கைகளில் பைபிளும் அவர்கள் கைகளில் எங்கள் நிலங்களும் உள்ளன.”

(Kenyan leader Jomo Kenyatta had ruefully observed, “When the Europeans landed in Africa they had Bible in their hands and we had our lands. Soon it got reversed and now we have the bible and they have our lands.”)

—Subham—

Tags – கடவுளுக்குக் கடிதம் ! ஜோமோ கென்யாட்டா

Leave a comment

Leave a comment