Post No. 14,347
Date uploaded in London – 5 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இருதய நோயுள்ளவர்களுக்கு பொருத்தப்படும் பேஸ்மேக்கர் PACEMAKER பற்றிப் பலரும் அறிவார்கள் . ஒருவரின் உடலுக்குள் இருதயத்துக்கு அருகில் பொருத்தப்படும் இக்கருவி இருதயத் துடிப்பைக் கண்காணிக்கிறது அந்த துடிப்பு தாறுமாறாகப் போனால் அதை மின்சக்தி மூலம் தூண்டிவிட்டு சரியாக்குகிறது. நீண்டகாலம் செயல்படும் பேட்டரி இதற்கான மின் சக்தியை அளிக்கிறது .
நீல் ஆர்ம்ஸ்ட்ராங் எப்படி இறந்தார் ?
இதன் முக்கியத்தை உணர நிலவில் முதலில் காலடிவைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் NEIL ARMSTRONG பிற்காலத்தில் எப்படி மரணம் அடைந்தார் என்பதை அறிய வேண்டும் . அவரது உடலில் பொருத்தப்பட்ட பேஸ்மேக்கர் கருவியை அகற்றியபோது ரத்தம் கசிந்ததால் மரணம் சம்பவித்தது.
இப்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிசிக்கும் GRAIN OF RICE சிறிய அளவுள்ள கருவி TINY PACEMAKER குழந்தைகளுக்கானது. நூறில் ஒரு குழந்தை தாறுமாறான இருதாயத் துடிப்புடன் HEART DEFECTS, பிறக்கின்றது. ஆனால் அது ஒரு வாரத்துக்குள் தானாகவே சரியாகிவிடுகிறது ஆயினும் அந்த ஒருவாரம் கவலை தரும் வாரமாக அமைகிறது . அந்தத் தருணங்களில் செயற்கை இருதயக் கருவியைப் பொருத்துவது சிக்கலானது; இப்போதைய அமெரிக்கக் கண்டுபிடிப்பு இந்த சிக்கலை நீக்கிவிடுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது?
அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக டாக்டர் ரோஜர்ஸ் PROF.JOHN ROGERS, NORTHWESTERN UNIVERSITY, ILLINOIS, USA இது செயல்படும் முறையை விளக்கினார்.
இந்த மிகச் சிறிய பேஸ் மேக்கர் கருவி 3.5 மில்லிமீட்டர் நீளமும் ஒரு மில்லிமீட்டர் தடிமனும் உடையது; உடலில் குத்த பயன்படும் சிரிஞ்ச் ஊசி முனையில் இதை வைத்துவிடலாம். இதைக் குழந்தையின் உடலுக்குள் செலுத்தியவுடன் அது இருதயத் துடிப்பை அளந்து தகவல் கொடுக்கும். ஒரு வாரத்துக்குப் பின்னர் அது உடலில் கரைந்துவிடும்.
குழந்தையின் உடலின் மேல் சிறிய, மென்மையான , மின்சார கம்பி இணைப்பு இல்லாத, ஒரு கருவியும் இருக்கும்; இருதயத் துடிப்பு சரியாக இல்லாவிட்டால் அதில் மின்சக்தி உண்டாகி உடலுக்குள் செலுத்தப்பட்ட தற்காலிக பேஸ்மேக்கரை செயல்படவைக்கும்.
இது தற்காலிக உபயோகத்துக்கு மட்டுமே உதவும். பின்னர் உடலில் செலுத்தகப்பட்ட பேஸ்மேக்கர் கரைந்துவிடும்.
குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்தாலும் கூட தற்காலிக பேஸ்மேக்கர்தான் தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சி உதவியாளர் பேராசிரியர் இகோர் எப்பமோவ் PROF.IGOR EFIMOV, கூறுகிறார்.
இந்தக் கண்டுபிடிப்பு வேறு சில சிகிச்சைகளுக்கு வழிவகுக்கிறது பயோ எலெக்ட்ரானிக் மெடிசின் BIO ELECTRONIC MEDICINES என்பது உடலுக்குள் கரைந்துவிடும் மருந்துகளாகும். நரம்புகள், எலும்புகள் , உடலுக்குள் உள்ள புண்கள் முதலியவற்றைக் குணப்படுத்தவும் இதே உத்தியைக் கையாளலாம் என்று பேராசிரியர் ஜான் ரோஜர்ஸ் சொல்கிறார். உடலுக்குள் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும் இந்த பயோ எலெக்ட்ரானிக் மருந்துகள் உதவும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற முதுமொழியை மெய்ப்பிக்கும் இந்தக் குட்டிக் கருவிகள் எதிர்காலத்தில் மருத்துவப் புரட்சியைத் தோற்றுவிக்கும் .
PACEMAKER: An electronic device that is implanted in the body to monitor heart rate and rhythm. It gives the heart electrical stimulation when it does not beat normally. It runs on batteries and has long, thin wires that connect it to the heart.
–SUBHAM—
TAGS- குழந்தைகள் , அரிசி அளவிலான அதிசய கருவி,
இருதய நோய் , பேஸ்மேக்கர் PACEMAKER , அறிவார்கள் . இருதயத் துடிப்பு,நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ,