WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,350
Date uploaded in London – –6 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹிந்து ராஷ்ட்ரம் ஒன்றே குழப்பங்கள் தீர ஒரே தீர்வு – மகான்களின் தீர்மானம்!
ச. நாகராஜன்
மஹா கும்ப மேளா ஆரம்பத்ததிலிருந்து ஏராளமான மகான்கள், துறவிகள் ஹிந்து ராஷ்ட்ரம் உடனே வேண்டும்; அனைத்து விதமான குழப்பங்களுக்கும் அது ஒன்றே தீர்வு என்று சொல்லி வந்துள்ளனர்.
இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஹிந்து ராஷ்ட்ர மாநாடு மஹா கும்பமேளாவை ஒட்டி நடந்தது.
ஹிந்து ராஷ்ட்ரத்தை அமைக்கத் தங்களால் ஆன அனைத்தையும் செய்ய மகான்கள் உறுதி பூண்டு அதை பகிரங்கமாகத் தெரிவித்தும் உள்ளனர்.
அனைத்து ஹிந்துக்களும் ஹிந்து ராஷ்ட்ரம் அமைய எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
ஜனவரி 31, 2025 அன்று அகில் பாரதீய தர்மசங் மற்றும் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி (HJS) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தின.
நாம் இந்தியாவை பெரிதாக ஆக்குவோம்; இதை ஹிந்து ராஷ்ட்ரமாக ஆக்குவோம், ஜெய் ஶ்ரீ ராம் , ஹர ஹர மஹாதேவ் என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன.
ஹிந்து ராஷ்ட்ரம் அமையவிருப்பதை எண்ணி அனைவரும் உற்சாகம் மேலிட தங்கள் மகிழ்ச்சியை உரைகளில் காட்டினர். ஓரிழையில் இணைந்து அனைவரும் பாடுபடுவோம் என்று முழங்கினர்.
மாநாடு சங்கொலியுடன் ஆரம்பித்தது.
ஶ்ரீ ஸ்வாமி கர்பத்ரி வேத சாஸ்த்ர அனுசந்தான் கேந்திரத்தின் சார்பில் ஆசுதோஷ் ஜா மற்றும் அனுபம் குமார் த்ரிவேதி வேத ஸ்லோகங்களை முழக்கினர்.
நீலேஷ் குல்கர்னி (சனாதன் ப்ரபாத் தினசரியின் உதவி ஆசிரியர்) சனாதன் ப்ரபாத் பத்திரிகையின் பணியை விரிவாக எடுத்துரைத்தார்.
சத்குரு டாக்டர் சாருதத்தா பிங்களே (National Guide of Hindu janajagruthi Samithi – HJS மற்றும் சத்குரு நிலேஷ் சிங்பால் ஜனஜாக்ருதி சமிதி (Dharma Pracharak of HJS) மகான்களுக்கு மலர் மாலை மற்றும் ருத்ராட்ச மாலைகளைச் சூட்டி கௌரவித்தனர்.
பங்க்ளாதேஷில் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி அனைவரும் கவலை தெரிவித்தனர். காசி, மதுரா, மற்றும் இதர ஆலயங்கள் ஆகியவற்றை விடுவிக்க சட்டபூர்வமான போராட்டம் நடத்தப்படும் என்பதை அனைவரும் ஒருமனதாக ஏற்று தீர்மானித்தனர்.
ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்க ஒரு நடைமுறை இயக்கம் வேண்டும்.
இந்தியா “ஹிந்து ராஷ்டிரம்” என்று சட்டபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூடியிருந்த அனைத்து மகான்களும் தங்கள் உரைகளில் வலியுறுத்தினர்.
ஆதாரம், நன்றி: Sanathan Prabhat 28-2-25 இதழ்
***