காந்திஜிக்குப் பிடித்த சர்ப்பகந்தி மூலிகை (Post.14,359)

Written by London Swaminathan

Post No. 14,359

Date uploaded in London –  7 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

ஆங்கிலத்தில் பாம்புக்கு இரண்டு சொற்கள் உண்டு; ஸர்பண்ட், ஸ்னேக்    ; இரண்டு  சொற்களும் சர்ப்ப, (ஸ்) நாக என்ற  ஸம்ஸ்க்ருதச் சொற்களின்  மருவு. இது இதைக் காட்டுகிறது? உலகிலேயே பாம்பு பற்றி அதிகம் அறிந்தவர்கள் இந்துக்களே. சர்ப்ப கந்தி என்ற மூலிகையின் பெயரில் இந்த சர்ப்பம் வருவதால் இதை எழுதுகிறேன் .

மூலிகை மஹிமை

இந்த ரவுல்பியா செர்பென்டினா மூலிகையை இந்துக்கள் 2500ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திவருகிறார்கள்; காந்திஜியும் தினமும் இதை பயன்படுத்திவந்தார் .

இதன் தாவரவியல் பெயர் – Rauwolfia Serpentina  ரவுல்பியா செர்பென்டினா ; இதிலுள்ள ரசாயனப் பொருட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது; மனக்கவலையைக் குறைத்து நல்ல தூக்கத்தையும் அளிக்கிறது.

இந்த மூலிகையின் ஸம்ஸ்க்ருதப் பெயருடன் ரவுல்பியா எப்படி ஒட்டிக்கொண்டது ?

லியனார்ட் ராவுல்ப் LEONARD RAWOLF என்ற ஜெர்மானியர் இதை சரக சம்ஹிதையில் கண்டார். இதன் அபூர்வ குணங்களை அறிந்து மேலை உலகத்துக்கு  1558-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் . அதனால் இந்தப் பெயர் ஏற்பட்டது .

இதன் தமிழ்ப் பெயர் என்ன ?

பாம்புக்களா

சர்ப்பம் என்னும் பாம்புக்கும் இந்த மூலிகைக்கும் என்ன சம்பந்தம் ?

பாம்புக்கடியைப் போக்கும் மூலிகையாக சரகர் இதைக்கு றிப்பிட்டுள்ளார்

சர்ப்பகந்தி இந்தியா எங்கும் வளர்கிறது இதே வகையைச் சேர்ந்த மேலும் நூறு மூலிகைகளையும் தற்காலத்தில் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர்  இதை அமெரிக்கர்களும் பயன்படுத்தத் துவங்கினர் 

காந்திஜி ஏன் பயன்படுத்தினார் ?

இது மன அமைதியை உண்டாக்கி வேதாந்த சிந்தனையில் ஈடுபட உதவியதால் சர்ப்பகந்தி கஷாயத்தை அவர் அருந்தினார்.

இந்த மூலிகையில் ரெஸெர்பின் என்னும் ரசாயன உப்பு Reserpine  அல்கலாய்ட்ஸ் இருக்கிறது; இது நரம்பு மண்டலத்தின் பணியை சமணப்படுத்தி இருதயத் துடிப்பைக் குறைக்கிறது ; முதலில் இதைஎடுத்துக் கொள்வோருக்கு தலைவலி,  தவறான இருதயத்  துடிப்பு வரும். ஆனால் போகப் போக சரியாகிவிடுகிறது

Rauwolfia serpentina (L.)  is also known as Indian snakeroot belongs to the Apocynaceae family.

இதற்கு இந்திய ஸ்னேக்ரூட் என்ற பெயரும் உண்டு. இது தாவரவியலில் அபோசயநேசி குடும்பத்தைச் சேர்ந்தது.

இதில் முப்பது வகையான ரசாயனப் பொருட்கள் உள.

இந்தியாவில் இதற்குப் பல பெயர்கள் உண்டு; அவையாவன

India    Arpa, avulpori, badgo, chandra, covannamilpori, dhan-barua, korengdabai, paathal garda, patalgaruda,saneggara, sarpa jhar, sarpangandh, vado

இதை ஹோமியோபதி மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள் .

ஏற்றுமதி

சென்ற ஆண்டு ஏற்றுமதி புள்ளிவிவரத்தின்படி இந்தியாதான் இதை அதிகம்  ஏற்றுமதி செய்துள்ளது. இதை அதிகம் வாங்கிய நாடுகள் – ஜெர்மனி, பாகிஸ்தான், இலங்கை ஆகும்

இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஏற்றுமதியில் நிற்பது ருமேனியா  இந்தியா 202  கப்பல்களில் அனுப்பியது ருமேனியா 13 கப்பல்களில்தான் ஏற்றுமதி செய்தது

இது இந்தியா முழுதும் பயிரிடப்பட்டாலும் இமயமலை அடிவாரத்தில்தான் அதிகம் வளர்க்கப்படுகிறது தென்னாட்டிலும் மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் இதை வளர்க்கிறார்கள்.

இதைக் கடையில் வாங்கி சாப்பிடலாமா?

நிறைய கடைகளில் இது கிடைத்தாலும் டாக்டர்களின் ஆலோசனையில்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது; ஒருவரின்  இருதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவற்றை முறையாக அளந்து ,அறிந்து , பின்னர் அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள் .

–subham—

Tags- காந்திஜி,  பிடித்த,  சர்ப்பகந்தி மூலிகை , பாம்புக்கடிக்கு, ரத்த அழுத்தம், மன அமைதிக்கு, ரவுல்பியா செர்பென்டினா,

Leave a comment

Leave a comment