நால்வர் பாடிய நாதன் திருநாமார்ச்சனை: தில்லை எஸ். கார்த்திகேயசிவம்


Thilllai Sri Karthikeya Sivam  

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,355

Date uploaded in London – –7 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

நூல் அறிமுகம் : இரு நூல்கள்

கந்தபுராணம் அற்புதத் திருப்பாடல்கள்

நால்வர் பாடிய நாதன் திருநாமார்ச்சனை

தொகுப்பாசிரியர் திரு தில்லை எஸ். கார்த்திகேயசிவம் 

ச. நாகராஜன் 

தினசரி பாராயணத்திற்கும் அனைத்துத் தல வழிபாட்டிற்கும் உகந்ததாக கந்தபுராணம் அற்புதத் திருப்பாடல்கள்நால்வர் பாடிய நாதன் திருநாமார்ச்சனை ஆகிய சிறந்த இரு நூல்களைத் தொகுத்து அளித்துள்ளார் சிவஶ்ரீ திரு தில்லை எஸ். கார்த்திகேயசிவம் அவர்கள்.

 கந்தபுராணம் அற்புதத் திருப்பாடல்கள் 

இந்த நூலில் 123 கந்தபுராணப் பாடல்கள் தினசரி பாராயணத்திற்காகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 

கந்தபுராண பாராயணம் கை மேல் பலன் தர வல்லது. 

இருபதினாயிரம் பேர்கள் கவலைகளைப்  போக்கும் கந்தபுராண பாடல்களை பாராயணம் செய்து வருவதாகவும் குறிப்பிட்ட பாடல்களைப் பாடி ஆறு பேர்கள் புத்திரபாக்கியம் பெற்றதாகவும் இந்தத் தொகுப்பு நூலாசிரியர் தெரிவிக்கும் போது மகிழ்ச்சியே ஏற்படுகிறது.

 சிவபெருமான் துதி, விநாயகர் துதியில் ஆரம்பித்து அறுபடி வீடு முருகப் பெருமானைப் போற்றுதல் காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், கந்தன் என்ற திருநாமம் பெற்றது உள்ளிட்ட பல தலைப்புகளில் பாடல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 

நூலுக்கு ஶ்ரீலஶ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள், வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார். 

பக்கங்கள் 24 நூலின் விலை ரூ 50/

கிடைக்குமிடம் கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி, 606 213


 நால்வர் பாடிய நாதன் திருநாமார்ச்சனை 

இந்த நூல் சிவத்தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவி மற்றும் இறைவன் நாமங்களைத் தொகுத்து வழிபடக் கூடிய விதத்தில் நாமாவளியாக அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி வடகரைத் தலங்கள்                                63

காவிரி தென்கரைத் தலங்கள்                              127

ஈழ நாட்டுத் தலங்கள்                                     2

பாண்டிய நாட்டுத் தலங்கள்                                14

மலை நாட்டு தலம்                                        1

கொங்கு நாட்டு தலங்கள்                                  7

நடுநாட்டு தலங்கள்                                        22

தொண்டை நாட்டு தலங்கள்                               32

துளுவ நாட்டு தலம்                                       1

வடநாட்டு தலங்கள்                                       5

கல்வெட்டில் தேவாரம் கண்டெடுக்கப்பட்ட தலங்கள்         2

திருவாசக தலங்கள்                                       2

திருவிசைப்பா தலங்கள்                                   8

வைப்புத் திருத்தலங்கள்                                   12

வாரணாசி காசி தலம்                                      1

ஆன்மார்த்த மூர்த்தி                                       1

ஆக மொத்தம்                                             300

ஆக இப்படி 300 தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவி மற்றும் இறைவனின் திருநாமங்கள் தொகுக்கப்பட்டு திரிசதி நாமார்ச்சனை செய்ய உகந்ததாக இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எடுத்துக்காட்டாக இரு தலங்களின் நாமார்ச்சனையை இங்கு காண்போம்:

தில்லை சிதம்பரம்

சிவகாமசுந்தரி ஸமேத சிதம்பரேஸ்வர சிவாய நம:

திருவேட்களம்

ஓம் சற்குணாம்பாள் ஸமேத பாசுபதேஸ்வர சிவாய நம: 

இந்த நூலுக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சிவஶ்ரீ ஏ.வி. ஸ்வாமிநாத சிவாசாரியார், மயிலாடுதுறை ஆகியோர் வாழ்த்துரை அளித்துச் சிறப்பித்துள்ளனர். 

பக்கங்கள் 28 நூலின் விலை ரூ 50/

கிடைக்குமிடம் கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி, 606 213

 மெய்யன்பர்கள் பலவிதத்திலும் மேன்மையுறவும் இகபர சௌபாக்கியம் பெறவும் உதவக்கூடிய விதத்தில் அற்புதமாக இந்த நூல்களைத் தொகுத்த சிவஶ்ரீ திரு தில்லை எஸ். கார்த்திகேயசிவம் அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் என்பதில் ஐயமில்லை.

வாழ்க அவர்தம் சிவத்தொண்டு!

**

Leave a comment

Leave a comment