சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்- 2 (Post.14,370)

Written by London Swaminathan

Post No. 14,370

Date uploaded in London –  10 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART TWO (LAST PART)

காளிதாசன் செய்த அற்புதம் 

சங்ககாலத்துக்கு முன்னர் வாழ்ந்த புலவன் காளிதாசன் என்று ஜி யு போப், டில்லி பல்கலைக்கழக சந்திரா ராஜன் முதலியோர் கூறியுள்ளனர் ; சங்கத் தமிழ் உவமைகளை எடுத்துக்காட்டி அவை காளிதாசனின் மொழிபெயர்ப்பு என்பதை நானும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் காட்டியுள்ளேன்.

அந்தக் காளிதாசன் எழுதிய ஏழு நூல்களை படிக்காதோர் தங்களை இந்தியன் என்று சொல்லிக்கொள்ள முடியாது; இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆயிரத்து ஐநூறு உவமைகளை அள்ளித் தெளித்துள்ளான். அவனது சாகுந்தல நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவுடன் ஷேக்ஸ்பியருக்கும் தாத்தா ஒருவர் உள்ளார் என்பதை உலகம் அறிந்தது. சகுந்தலா என்றால் பறவைப்பெண்; இதைப் பார்த்துதான் ஷேக்ஸ்பியரே டெம்ப்ஸ்ட் நாடகத்தில் (Miranda in The Tempest) மிராண்டாவைப் படைத்தாரோ என்று எண்ணத் தோன்றும்; காளிதாசனின் ஏனைய மாளவிகா அக்நிமித்ரம், விக்ரம ஊர்வசீயம் , உள்பட சம்ஸ்க்ருதத்தில் 600-க்கும் மேல் நாடகங்கள் உள்ளன காளிதாஸருக்கும் முந்திய பாஷா எழுதிய ஸ்வப்னவாசவதத்தமும் சிறப்பானது .

  இவைதவிர சூத்ரகரின் மிருச்ச கடிகம், சாணக்கியர் பற்றிய நாடகங்கள் சுவையானவை .

காளிதாசனின் மேகாதூதம் உலகத்தின் முதல் பயண நூல்; அதுமட்டுமல்ல பருவக்காற்றின் போக்கினைக் காட்டும் பூகோள நூல். குமார சம்பவத்தில் முதல் பத்துப்பாடல்களில் உள்ள இமயமலை வருணனையை சங்கப்புலவர்க்ள அப்படியே பாடியுள்ளனர் . கபிலரின் குறிஞ்சிப்பாட்டு காளிதாசனின் தழுவல் என்கிறார் ஜி யு போப்.

ரகுவம்சம், ருது சம்ஹாரம் ஆகிய ஒவ்வொன்றும் நவரத்தின மாலைக்குச் சமம் .

நாட்டியம்

இந்தியாவிலுள்ள நாடகங்களுக்கு மூலம் ரிக்வேதத்திலுள்ள இருபது டயலாக் கவிதைகள் (Dialogue Poems in the Rig Veda)  ஆகும் ஆனால் அவற்றில் முழு வசனமும் இல்லை. பரத முனி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய இரண்டாயிரம் ஆண்டுப்பழமையான பரதம்தான் நாடக நாட்டிய இலக்கணத்தைக் கூறும் உலகின் முதல் நூல்.

நாடகம் எழுதுவதில் ஸம்ஸ்க்ருதத்தை மிஞ்சிய கிரேக்கர்களும் கூட நாடக இலக்கணத்தை அறிவியல் முறையில் எழுதவில்லை.

என்சைக்கிளோபீடியா

வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் சம்ஸ்க்ருதத்தில் தோன்றிய அருமையான ஜோதிட நூல். பிருஹத் சம்ஹிதா அருமையான என்சைக்ளோபீடியா. நவரத்ன  மகிமை முதல் காக்கா ஜோதிடம் வரை பல அபூர்வ விஷயங்கள் உள.

மருத்துவ அதிசயங்கள்

சரகரும் சுஸ்ருதரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய மருத்துவ நூல்களுக்கு  நிகரான நூல்கள் உலகில் வேறு எந்த பழைய மொழியிலும் இல்லை

தமிழ் மொழிக்கும் முன்னதாக இலக்கியம் படைத்த மொழிகள் கிரேக்கம், பாரசீகம், லத்தீன், எபிரேயம் சீனம் ஆகிய ஐந்துதான் ; இவை எல்லாம் தமிழ் மொழிக்கும் முன்னதாக நிறைய நூல்களை நமக்கு அளித்துள்ளன.ஆயினும் இவைகளுக்கு எல்லாம் மூத்த மொழியான ஸம்ஸ்க்ருதத்துக்குப் பக்கத்தில் கூட இந்த ஐந்து மொழிகளும் வர முடியாது !

கணிதம்- வான சாத்திரம்

ஆரிய பட்டர், பாஸ்கரர் போன்றா அறிஞர்களும் சமணமத அறிஞர்களும் எழுதிய நூல்கள் அல்ஜீப்ரா, டிரிக்னோமேற்றி போன்றவை இந்துக்களின் கண்டுபிடிப்பு என்பதைக் காட்டுகின்றனன. வேதகாலத்திலேயே யாக குண்டங்களை நிர்மாணிக்க அற்புதக் கணக்குகள் உள்ளன.

சட்டப் புஸ்தகம்

ஸ்ம்ருதி என்பன சட்டப் புஸ்தகங்கள்; மனுவின் பெயரில் பிருகு முனிவர் எழுதிய மனு தர்மசாஸ்திரம் ஹமுராபிக்கும் முந்திய நூல். ஏனெனில் இது சரஸ்வதி நதி பற்றிப் பேசுகிறது இதில் மனு பிராஸ்தாபித்த விஷயங்களின் வீச்சைக் கண்டு உலக அறிஞர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்[ லண்டனில் செயின்ட் பால் கதீட்ரலில் இந்த நூலைக் கையில் தாங்கிய வில்லியம் ஜோன்ஸ் சிலை உள்ளது அங்குதான் சார்ஸ்-டயானா கல்யாணம் நடந்தது இதுபோல இருபது ஸ்ம்ருதி நூல்கள் உள்ளன

பூகோளமும் வரலாறும்

18 புராணங்களிலும் இரண்டு இதிகாசங்களிலும் பூகோளமும் வரலாறும் உள்ளன. வெள்ளைக்கார்கள் அவற்றை  ஒதுக்கிவிட்டு அலெக்ஸ்சாண்டர் காலம் முதல் நம் வரலாறு துவங்குவதாக எழுதிவிட்டனர்[  சிந்து சரஸ்வதி நதி தீர கரீகம் காண்டுபிடிக்கப்பட்ட வுடன் இந்தியர்களுக்கு இடைப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளில் வரலாறே இல்லை என்றும் வாதிக்கினறனர் உண்மையில் புராணங்கள் கூறும் அரசர்கள் சிந்துவெளி காலத்திலிருந்து வரும் தொடர்ச்சியைக் காட்டுகினறன . இந்தக் கோணத்தில் ஆராய வேண்டும்.

துருக்கியில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட தசரதன் பெயர், எகிப்தில் தசரதன் கடிதங்கள் இருப்பதால் வெள்ளைக்கார்கள் பேசா மடந்தை ஆகிவிட்டனர் இந்த தசரதன் ராமாயண தசரதன் இல்லை

கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணிதான் முதல் சரித்திர நூல் என்று சொன்ன வெள்ளைக்காரர்கள் அதில் முதல் நாலு அத்தியாயங்களில் கண்டது சரித்திரம் அல்ல என்கின்றனர் அதில் இராவணன் பெயர்கூட உள்ளது.

இறுதியாக நமக்கு கிடைத்த சம்ஸ்க்ருதம் நூல்களை விட அழிந்த சம்ஸ்க்ருத நூல்களே அதிகம். நாலந்தவைத் தீ  வைத்தழித்த முஸ்லீம்கள் அழித்த நூல்களின் கணக்கை எவரும் அறியார்  சீனாவில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் பல்லாயிரமென்று நீலகண்ட சாஸ்திரி போன்ற மாபெரும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்

சம்ஸ்க்ருதத்தில் உள்ள இருபதாயிரம் சுபாஷித ஸ்லோகங்களும் பல்லாயிரம் கல்வெட்டுகளும் தொகுதி தொகுதிகளாக நூலகங்களை அலங்கரிக்கினறன.

இவைகளில் உள்ள உண்மைகளை அறியவாவது நாம் சம்ஸ்க்ருதம் கற்கவேண்டும்; வேதங்களில் உள்ள உண்மைகளை விளக்க மீண்டும் ஒரு ஆதி சங்காரரையும் வியாஸரையும் நாம் உருவாக்க வேண்டும். ஆதி சங்கரர் போல உரைகளை எழுதியோர் உலகில் எப்பகுதியிலும் இல்லை. அவர் எழுதிய பாஷ்யங்களை- உரைகளை தொகுத்தாலேயே நூற்றுக்கணக்கான தொகுதிகள் வரும்; வேதாந்த தேசிகர் போன்றோர் எழுதிய ஸ்லோகங்கள் பல்லாயிரம் உள்ளன!

இது ஒரு குட்டி சர்வேதான்!

–SUBAHAM—

TAGS- சம்ஸ்க்ருத மொழி, உலகிற்கு அளித்த, நன்கொடை, ஒரு சின்ன ‘சர்வே’, PART 2

Leave a comment

Leave a comment