மறுபிறப்பு உண்மையே! எட்கர் கேய்ஸ் ஆராய்ச்சியில் தெரிந்தது ! (Post.14,378)

Written by London Swaminathan

Post No. 14,378

Date uploaded in London –  12 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

EDGAR CAYCE, THE MIRACLE MAN OF VIRGINIA  BEACH

புத்தர் , மஹாவீரர் அகியோருக்கெல்லாம் மிகவும் முன்னாள் தோன்றியவை உபநிஷத்துக்கள்  குறிப்பாக சின்னப்ப பையன் நசிகேதனுக்கு யமன் அளித்த பதில் கடோபநிஷதத்தில் உள்ளது ; இறந்த பின்னர் ஆத்மா அழிவதில்லை; மறுபிறப்பு உண்டு என்று யமன் விளக்குகிறான் . எல்லா உபநிஷத்துக்களையும் ஜூஸ் பிழிந்து கொடுக்கும் பகவத் கீதை 2-22; 2-27  இன்னும் தெளிவாகவே கூறுகிறது.

எட்கர் கேய்ஸ்  என்பவர் 1877- ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எழுத்தறிவில்லாத குடியானவர் குடும்பத்தில் பிறந்தார் அவர்க்கு பிறவியிலேயே சில அபூர்வ சக்திகள் இருந்தன வருங்காலத்தை உரைத்தல், ஒருவரின் நோய் நொடியைக் கண்டுபிடித்தல், அந்த நோயினைத் தீர்த்தல் CLAIRVOYANCE முதலியன சில. அவர்க்கு இந்துமதம் பற்றியோ மறுபிறப்பு பற்றியோ ஒன்றும் தெரியாது. மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் ஆயினும் ஒருவரின் உடல் நிலை பற்றி ஆராய்கையில் தன்னை அறியாமலேயே அந்த நோயாளியின் பூர்வ ஜன்மத்தைப் பற்றிப் பேசாத தொடங்கினார் . இவை எல்லாம் பதிவாகி அக்கால பத்திரிக்கைகளிலும் வெளியாகின .

அக்கால பிரபல டாக்டர்களிடம் போயும் வியாதி தீராத நோயாளிகள் பலர் இருந்தனர்; அவர்கள் எட்கர்ட்டிடம் வந்தனர் ; அவர் நோயை சரியாகக் கண்டுபிடித்ததோடு அதற்கு கரணம் பூர்வ ஜென்மத்தில் செய்த வினைகள் என்று பேசத தொடங்கினார்.  முதலில் அவர் மல்லாந்து படுத்துக்கொண்டு ஆழ்ந்த மயக்க நிலைக்குச் HYPNOTIC TRANCE சென்றுவிடுவார்; பின்னர் நோயாளி பற்றிப் பேசுவார் இவரது அபூர்வசக்தியை அறிந்த ஆர்தர் லாமரஸ் Arthur Lammers, என்பவர் இவர் மோளம் ஜாதகங்களையும் அச்சத்தை கொடுக்காத துவங்கினார் . எட்கர் , மயக்க நிலையிலிருந்து திரும்பியவுடன் தான் சொன்ன மறு பிறப்பு பற்றிய விஷயங்களைக் கண்டு வியந்தார்.

நோயாளியின் பூர்வ ஜென்ம தொழில் என்ன, அவருடைய பூர்வ ஜென்ம பெயர் என்ன அப்போது அவர் செய்த வினை எப்படி நோயாக இந்த ஜென்மத்தில் வந்தது என்ற விவரங்களை அளித்தார். அவருக்கு இந்துமத மறுபிறப்பு விஷயங்கள் பற்றி ஒன்றுமே தெரியாததால் அவரால் அதற்குமேல் விளக்கமும் சொல்ல முடியவில்லை

அவர் 1923 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரையுள்ள 22 ஆண்டுகளில் பார்த்த நோயாளிகளின் எண்ணிக்கை 30,000; இதில் மறுபிறப்பு பற்றி சொன்ன நோயாளிகளின் எண்ணிக்கை-2500. எட்கர் 67வயதில் 1945 ஆம் ஆண்டில் இறந்தார்

அவரை வர்ஜீனியா பீச் –சின் அற்புத மனிதர் THE MIRACLE MAN OF VIRGINIA  BEACH என்று மக்கள் அழைத்தனர். இப்போதும் வர்ஜீனியா பீச் என்னுமிடத்தில் அவரால் உண்டாக்கப்பட்ட காகித ஏடுகள் மற்றும் விஷயங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன .

****

மறுபிறப்பு பற்றிய பகவத் கீதை மேற்கோள்கள்

वासांसि जीर्णानि यथा विहाय

नवानि गृह्णाति नरोऽपराणि |

तथा शरीराणि विहाय जीर्णा

न्यन्यानि संयाति नवानि देही || 2-22||

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ‌பராணி |

ததா ஶரீராணி விஹாய ஜீர்ணான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ ||2-22||

ஒருவன் கந்தல் கீறலாய்ப்போன ஆடைகளை அகற்றிவிட்டு, புதிய ஆடைகளை அணிவது போல, மரணத்தின் போது, ​​ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது.

****

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च।

तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|

தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி ||2-27||

பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் தவிர்க்க முடியாதது. இதற்காக நீ வருந்துதல் தகாது. 2-27

–SUBHAM—

TAGS- மறுபிறப்பு , உண்மை, எட்கர் கேய்ஸ்,  ஆராய்ச்சி, வர்ஜீனியா பீச், அற்புத மனிதர்

Leave a comment

Leave a comment