
Post No. 14,382
Date uploaded in London – 13 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

J.J. Goodwin 1870 – 1898
சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளை நமக்கு ஆங்கிலத்தில் அளித்த ஜே. ஜே. குட்வின் என்பவரைப் பற்றி பலருக்கும் தெரியாது. அவர்தான் சுவாமிஜியின் ஆங்கில உரைகளை சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டுவந்து நமக்கு நூலாகத் தந்தார் அவரை சுவாமிஜியே தன்னுடைய பொன்னான வார்த்தைகளால் பாராட்டியுள்ளார் .
இதுபற்றி அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியான செய்தியைப் பின்னர் மஞ்சரி மாத இதழ் வெளியிட்டது ; அத்தோடு ஆங்கில வெப்சைட்டுகளில் கண்ட விஷயங்களின் தொகுப்பு இது.
ஜே. ஜே. குட்வின் கடைசியில் தமிழ்நாட்டில்தான் இறந்தார். அவருடைய கல்லறை உதகமண்டலத்தில் இருக்கிறது . அங்கு ராம கிருஷ்ண மிஷன் இயக்கம் ஒரு சமாதியையும் எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தியது ;அதை சுவாமி ரெங்கநா தானந்தா திறந்துவைத்தார் .
விவேகானந்தர் ஆங்கிலத்தில் மிகவும் வேகாமாகப் பேசுவார்; மேலும் அவருடைய பெரும்பாலான உரைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிகழ்ந்தன.அவைகளை குட்வின் சுருக்கழுத்தில் எழுதிக்கொண்டுவந்து பின்னர் முழு நீள சொற்பொழிவுகளாக நமக்குத் தந்தார் .
சுவாமிஜி தனது உரைகளை எழுதிவைத்துப் படிப்பவர் அல்ல; மேலும் ஒவ்வொரு உரையிலும் புதிய கருத்துக்களைக் கூறி வந்தார். அவரது உரைகளை நகல் எடுக்க சில சுருக்கெழுத்தாளர்களை மேலை நாட்டு நண்பர்கள் நியமித்தனர்; ஆனால் அவர்களுடைய பணி திருப்தி தரவில்லை.
இறைவன் புண்ணியத்தில் ஜோஷியா குட்வின் 1895-ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார் .அவர் இங்கிலாந்திலிருந்து வேலை தேடி அமெரிக்காவுக்குச் சென்றவர். இது தவிர அவர் பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை.
சாதாரண ஒரு மனிதராகத் தோன்றிய அவர் முதலில் சுவாமிஜியின் நண்பராகி, பின்னர் சீடராகி அவருடைய ஆருயிர் நண்பராகவும் மாறினார்; நல்ல திறமையும் ஒருமுகப்பட்ட மனமும் இருந்ததால் சுவாமிஜியின் பிரசங்கங்களை அதே வேகத்தில் நமக்கு எழுதித்தந்தார் அமெரிக்காவில் சுவாமிஜியின் உரைகளைக் கேட்ட குட்வின் , சுவாமிஜியைப் பின்தொடர்ந்து இங்கிலாந்துக்கு வந்தார். பின்னர் இந்தியாவுக்கும் வந்து அதே பணியைச் செய்தார்
கொழும்பிலிருந்து அல்மோரா வரை என்ற சுவாமி விவேகானந்தரின் சொபொழிவு நூல் அவரால் உருவாக்கப்பட்டதே
இந்தியாவுக்கு வந்த சிறிது காலத்துக்குப் பின்னர் மெட்றாஸ் மெயில் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர். பொறுப்பினை குட்வின் ஏற்றார்.
ஆயினும் சுவாமிஜி உயிர்வாழ்ந்த காலத்திலேயே குட்வின் உயிர் பிரிந்தது; 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2-ஆம் தேதி டைபாய்டு ஜுரம் கண்டு உதகமண்டலத்தில் இறந்தார். குட்வின் இறந்த செய்தியைக் கேட்டு சுவாமிஜி மிகவும் வருந்தினார்.
சுவாமி விவேகானந்தர் சொற்களில் குட்வினின் புகழை அறிவோம்

குட்வின்னுக்கு நான் பட்டுள்ள நன்றிக்கு கடன் என்னால் எக்காலத்திலும் திருப்பித் தரவொண்ணாதது. என் கருத்துக்களில் எதுவேனும் பயன்தரக்கூடியதாக எவரேனும் நினைப்பார்களானால் அந்தக் கருத்துக்களின் ஒவ்வொரு சொல்லும் குட்வினின் தன்னலமற்ற சலியாத உழைப்பினால் வெளிப்பட்டவை என்று அறிந்து கொள்ளவேண்டும். அவருடைய மறைவினால் எக்கைப் போன்ற உறுதிபடைத்த நண்பரையும் தவறாத பக்தியுடைய சிஷ்யரையும் களைப்பு இன்னதென்றே அறியாத தொண்டை ரையும் நான் இழந்துவிட்டேன். பிறருக்காக வாழவதற்கென்ற பிறந்த மனிதருள் ஒருவரை இன்று உலகம் இழந்துவிட்டது
Vivekananda – on the death of Mr J. J. Goodwin May 1898, wrote to Goodwin’s mother.
With infinite sorrow I learn the sad news of Mr. Goodwin’s departure from this life, the more so as it was terribly sudden and therefore prevented all possibilities of my being at his side at the time of death. The debt of gratitude I owe him can never be repaid, and those who think they have been helped by any thought of mine ought to know that almost every word of it was published through the untiring and most unselfish exertions of Mr. Goodwin. In him I have lost a friend true as steel, a disciple of never — failing devotion, a worker who knew not what tiring was, and the world is less rich by one of those few who are born, as it were, to live only for others.
இத்தோடு சுவாமிஜி நிற்கவில்லை குட்வினின் தாயாருக்கு கவிதை வடிவில் இரங்கல் செய்தியையும் அனுப்பினார்.

இத்தகைய ஒரு பெரியாரின் உடலை உதகையில் எங்கு அடக்கம் செய்தார்கள் என்பதை மிகவும் சிரமப்பட்டு ராமகிருஷ்ணா மடத்தினர் கண்டுபிடித்து அவருக்கு ஒரு சமாதியையும் கட்டி நன்றிக்கடனைச் செலுத்தினார்கள் அந்த சமாதியை 23-4-1967 அன்று ராமகிருஷ்ண மடத்தின் காரியதரிசி சுவாமி ரெங்கநாதானந்தா தலைமை ஏற்று திறந்துவைத்தார் குட்வின் நினைவினை போற்றும் வகையில் அவர்கள் செய்த பணியால்தான் நாம் இன்று ஒரு பெரியாரை நினைவு கூறமுடிகிறது.
Most of the important lectures delivered by the Swami in America, and in England, and all those given in India from Colombo to Almora, were taken down by Mr. Goodwin’s hand. And when he suddenly passed away from an attack of enteric fever in Ootacamond, the Swami, who chanced to be at the time in distant Almora, was visibly affected. When the sad news reached him he wrote a poem, “Requiescat in Pace“, that for its tenderness, its beauty and depth of feeling makes a sweet and touching appeal.
.jpg)
–SUBHAM—
TAGS- விவேகானந்தர் உரை, ஜே. ஜே. குட்வின் , உதகையில் சமாதி