ரிக் வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார்? (Post No.14,388)

Written by London Swaminathan

Post No. 14,388

Date uploaded in London –  14 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரிக்  வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார்? என்று கேட்டால் பலருக்கும் சரியான விடை தெரியாது.

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்? என்றால் மஹாத்மா காந்தி என்று பலரும் உளறுவது போல மாக்ஸ்முல்லர் என்று பதில் சொல்லி தங்கள் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்பு போட்டுக் காட்டிக்கொள்வார்கள் அறியாத பேர்வழிகள் ; ; ஆயிரம் ஆயிரம் தேச பக்தர்கள் குண்டு அடி பட்டும், தூக்கில் தொங்கியும், சிறை சென்றும் வாங்கிக்கொடுத்தது நமது சுதந்திரம் !

ரிக்  வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார் என்றால் பேராசிரியர் எச் எச் வில்சன் Horace Hayman Wilson  ஆவார்

திருக்குறளுக்கு இன்றும் கூட பல திராவிட சுள்ளான்கள் உரை எழுதும் அவலத்தைத் தமிழுக்கு வந்த சாபக்கேட்டினைப் பார்க்கிறோம். பரிமேல் அழகர் சொன்ன உரையை வைத்துக்கொண்டு பல இடங்களில் திரித்து எழுதுவது திராவிடங்களின் வேலை; அது போல பேராசிரியர் வில்சன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்துக்கொண்டு மாற்றி எழுதியவர் வில்ஸனிடம் வேலை பார்த்த மாக்ஸ்முல்லர்!

இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ; வில்சன் இந்தியாவில் வேலை பார்த்துக்கொண்டு சம்ஸ்க்ருத, வேத பண்டிதர்களிடம் கற்றவர் ; மாக்ஸ்முல்லருக்கு இந்தியாவும் தெரியாது; வேத பண்டிதர் என்றால் என்ன என்றும் தெரியாது. இந்தியாவுக்கு வந்தால் தன்னை சம்ஸ்க்ருத பண்டிதர்கள் நார் நாராகக் கிழித்துவிடுவார்கள் என்று அஞ்சி இந்தியாவுக்கு வந்ததே இல்லை; ஒரு வேளை, அவர் சந்தித்த ஒரே இந்து விவேகானந்தர் தான் போலும் ; ஸ்வாமி விவேகானந்தர் வேதம் கற்றவர் அல்ல; வேத பண்டிதரும் அல்ல. மாக்ஸ்முல்லருக்கு சம்ஸ்க்ருதம் பேசத் தெரியாது என்பதால் அவரைக் கண்டவர்கள் ஆங்கிலத்திலேயே உரையாடியதையும் எழுதிவைத்துள்ளனர்.

மாக்ஸ்முல்லர் , யாரிடம் வேலை பார்த்தரோ அவரது புகழினைக் காண்போம். 

****

யார் இந்த வில்சன்?

Horace Hayman Wilson (26 September 1786 – 8 May 1860)

பேராசிரியர் எச் எச் வில்சன் கிழக்கிந்தியக் கம்பெனியின் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் ஒரு சாதாரண உதவியாளராக 1808- ஆம் ஆண்டில் கல்கத்தாவுக்கு வந்தார். அவருக்கு ரசாயன பாடத்தில்   தேர்ச்சி இருந்ததால் கல்கத்தா நாணயசாலையில் தரம் பிரிக்கும் பரிசோதகராக இருந்தார். ; இந்துக்களின் குணாதிசயங்களைக் கண்டு அதிசயித்துப்போன அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஸம்ஸ்க்ருதத்தைக் கற்றார். பின்னர் வேத பண்டிதர்களின் உதவியுடன் சாயன பாஷ்யத்தை அடிப்படையாக வைத்து ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் .

அவர் கால் நூற்றாண்டுக் காலத்துக்கு இந்தியாவில் இருந்து இந்து மதத்தை அறிந்தார்; நேரில் எல்லாவற்றையும் கண்டார். இந்தியாவுக்கே வராத, வேத பண்டிதர்களையே காணாத, வேதத்தையே காதில் முறையாகக் கேட்டறியாத  மாக்ஸ்முல்லரை ஒப்பிட இது உதவும்.

பேராசிரியர் எச் எச் வில்சன், ரிக்வேதம் மட்டுமின்றி விஷ்ணுபுராணம் , காளிதாசனின் மேகதூதம், சம்ஸ்க்ருத இலக்கணம் ஆகிய நூல்களையும் எழுதி இருக்கிறார். இவை தவிர ரசாயன நூல்களையும் எழுதியுள்ளார்.

அவர் கல்கத்தா சம்ஸ்க்ருத கல்லூரியிலும் பொறுப்புவகித்தார் இதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் உருவாக்கிய ஸம்ஸ்க்ருதத் துறையின் முதல் பேராசிரியர் பதவியில் 1832- ஆம் ஆண்டில் பேராசிரியர் எச் எச் வில்சன் அமர்த்தப்பட்டார். 

****

மத வெறிபிடித்தவன் துறை

ஆனால் வில்ஸனும் அவரைத் தொடர்ந்து மாக்ஸ்முல்லரும் பதவிவகித்த இந்த போடன் பேராசிரியர் பதவி இந்து மத விரோதியால் உருவாக்கப்பட்டதுஇந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்ற இந்தத் துறையை நிறுவுவதாக போடன் என்பவன் அறிவித்தான் .

The position of Boden Professor of Sanskrit at the University of Oxford was established in 1832 with money bequeathed to the university by Lieutenant Colonel Joseph Boden, a retired soldier in the service of the East India Company.

He wished the university to establish a Sanskrit professorship to assist in the conversion of the people of British India to Christianity, and his bequest was also used to fund scholarships in Sanskrit at Oxford.

.இப்படி ஒரு ஒரு அயோக்கியத் துறைக்குத் தலைமைப் பதவி வகித்தாலும் இந்துக்களைப் புகழந்தே வில்சன் பேசியுள்ளார் .

இங்கிலாந்துக்குத் திரும்பியவுடன் அவர் இந்துக்களைப் பற்றிச் சொன்னது பின்வருமாறு :

“கல்கத்தாவில் நாணயசாலையின் தொழிலாளர்களுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது ;அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள் தமது பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்; அந்த மகிழ்ச்சி பொங்கும் அறிவு பொழிந்த முகங்களை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அவர்கள் மது வகை எதையும் குடிப்பதில்லை. ஒழுங்கு முறையை மிகவும் அனுசரிக்கிறார்கள்; சொன்னதைச் செய்கிறார்கள்; அவர்களிடம் சூதுவாது கிடையாது; மற்ற நாடுகளில் காவல், பாதுகாப்பு ஆகிய எச்சரிக்கை நடவடிகைகள் தேவை ; காலத்தாவில் இது இல்லை ; இவர்களிடம் அடிமைப் புத்தி துளியும் இல்லை”.

(இதை பாஹியான், யுவாங் சுவாங் ஆகியோர் புகழுரையுடன் ஒப்பிடலாம் வீட்டுக்குப் பூட்டுப் போடாத ஆட்சி நடந்த நாடு இது ; ஆனால் ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி என்று பாரதியார் குறிப்பிட்டார்; அந்த ஆயிரம் ஆண்டுக்குப்பின்னர் இந்துக்களின் தரம் தாழ்ந்ததையும் நாம் அறிவோம் ;புதுச்சேரியில் பணிபுரிந்த ஆனந்தரங்கப்பிள்ளை எழுதிய  துபாஷி டயரி- நாட்குறிப்பில் இந்த வீழ்ச்சியைக் காணலாம்)

“  பண்புகளையும்  நேர்மையையும்  சொல்லிலும்  செயலிலும்  காட்டுகிறார்கள் ; இவர்களுக்கு உரிமைகளை அளித்து நட்பு பாராட்டினால் மிக்க தரமான நகைச்சுவையையும் அனுபவிக்க முடிகிறது  நம்மை உயர்தரமாகக் கிண்டல் செய்து நம்மை மகிழ்விக்கிறார்கள்”.

சம்ஸ்க்ருத பண்டிதர்கள் பற்றியும் பேராசிரியர் வில்சன் கூறுகிறார்:

“எனக்கு ஓய்வு கிடைத்த நேரங்களில் சம்ஸ்க்ருதம் படிக்கத் துவங்கினேன். பல வித்வான்கள் அறிமுகம் ஆனார்கள்; இவர்களிடம் பரி பூரண ஞானத்தையும், மதி நுட்பத்தையும் செயல்முனைப்பையும் , சத்தியம் பேசுவதையும், சுவையாக உரையாடுவதையும் காண முடிந்தது. இவர்களுடைய பேச்சில் இனிமையும் பெருமிதமும் துளிர்த்தது ; ஹிந்து வித்வான்களிடம் அதிசயத்தக்க எளிமை இருக்கிறது. தன்னடக்கம் இவர்களிடையே இயல்பாகவே இருக்கிறது ; ஆனால் ஐரோப்பியர்களின் தொடர்பால் சிலரிடம் ஆடம்பரம் குடிகொண்டு வருகிறது.

****

பேராசிரியர் வில்சன் வகித்த பதவிகள்

1811- 1833 வங்காள ஏசியாட்டிக் சொசைட்டியின் செயலாளர்;

1833- ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர்;

1836- லண்டன் இந்தியா ஹவுஸ் நூல், நிலைய தலைவர்

1837- ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் டைரக்டர்.

****

வில்சன் எழுதிய நூல்கள்

1813 The Mēgha Dūta; or, Cloud messenger by Kālidāsa (Revised Second Edition, 1843)

1819 A Dictionary, Sanscrit and English (Revised Second Edition, 1832)

1827 Select Specimens of the Theatre of the Hindus Volume 1, Volume 2 (Revised Second Edition, 1835 Volume 1, Volume 2)

1827 Documents Illustrative of the Burmese War

1828 Mackenzie Collection: A Descriptive Catalogue of the Oriental Manuscripts, co-authored with Colin Mackenzie

1828 Sketch of the Religious Sects of the Hindus, in Asiatic Researches, Volume XVI, Calcutta. (Expanded edition, 1846)

1840 The Vishnu Purána: a system of Hindu mythology and tradition

1841 Travels in the Himalyayan Provinces of Hindustan and the Panjab… Volume 1, Volume 2

1841 Ariana Antiqua: A descriptive account of the antiquities and coins of Afghanistan

1841 An Introduction to the Grammar of Sanskrit Language for the Use of Early Students

1845–48 The history of British India from 1805–1835 Volume 1, Volume 2, Volume 3

1850–88 Rig-veda Sanhitá : a collection of ancient Hindu hymns Volume 1, Volume 2, Volume 3, Volume 4, Volume 5, Volume 6

1852 Narrative of the Burmese war, in 1824–25

1855 A glossary of judicial and revenue terms and of useful words occurring in official documents relating to the administration of the government of British India

1860 The Hindu History of Kashmir

1862–71 Posthumous Collected Edition: Works by the Late Horace Hayman Wilson Volume 1: Religion of the Hindus Vol 1, Volume 2: Religion of the Hindus Vol 2, Volume 3: Essays on Sanskrit Literature Vol 1, Volume 4: Essays on Sanskrit Literature Vol 2, Volume 5: Essays on Sanskrit Literature Vol 3, Volume 6: The Vishnu Purana Vol 1, Volume 7: The Vishnu Purana Vol 2, Volume 8: The Vishnu Purana Vol 3, Volume 9: The Vishnu Purana Vol 4, Volume 10: The Vishnu Purana Vol 5, Volume 11: Theatre of the Hindus Vol 1, Volume 12: Theatre of the Hindus Vol 2

Principles of Hindu and Mohammedan Law

Metaphysics of Puranas

எச்சரிக்கை

மாக்ஸ்முல்லர் ஆகட்டும் வில்சன் ஆகட்டும் ; இவர்கள் எல்லாம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புகிறேன் என்று கையெழுத்துப் போட்டு Boden Professor of Sanskrit போடன் பேராசிரியர் பதவியை ஏற்றவர்கள் இதை நிர்வகித்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமோ இன்று வரை ஐயோ பறையா  போன்ற சொற்களை தமிழ்ச் சொற்ளாக அகராதியில் சேர்த்து தமிழன் அசிங்கமானவன் என்று காட்டி வருகின்றன. பறையாஐயோ சொற்களை நீக்குக என்று குரல் கொடுப்பவன் நான் ஒருவன்தான் ! ஆகையால் இந்து விரோத துறைகளை இனம் கண்டு உலகிற்கு அறிவிப்பது நம் கடமை. இப்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகம் இதைவிட அதி  திகமான விஷமங்களில் ஈடுபட்டு வருகிறது .

— சுபம்—

Tags- மாக்ஸ்முல்லர் , பேராசிரியர் வில்சன், ரிக்  வேதம்  ,மொழிபெயர்த்தவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

Leave a comment

Leave a comment