வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் -1 (Post No.14,397)

Written by London Swaminathan

Post No. 14,397

Date uploaded in London –  16 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

சைக்காலஜி PSYCHOLOGY (GREEK) என்ற ஆங்கிலச் சொல்லை உள வியல், மன இயல்,  மனோதத்துவ சாஸ்திரம்  என்று சொல்லலாம்.

இந்து மதத்தின் ஆணிவேரான நான்கு வேதங்களில் எவ்வளவோ அறிவியல் தகவல்கள், செய்திகள் இருப்பதை பல ஆராய்ச்சியாளர்களும் சுட்டிக்காட்டி  வருகின்றனர் , 

இதற்கு முன்னர், அரவிந்தர், ஆர்ய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்தக் கோணத்தில் சில வேத மந்திரங்களுக்கு விளக்கம் கூறியுள்ளனர்.

இங்கு மனம் தொடர்பான விஷயங்களைக் காண்போம்; மனஸ் என்பது தூய ஸம்ஸ்க்ருதச் சொல்; வள்ளுவர் முதல் இன்று வரை எல்லோரும் பயன்படுத்தும் சொல் ; இதிலிருந்து மைண்ட்MIND என்ற ஆங்கிலச் சொல் உருவானது ; இதற்கு நிகரான கிரேக்க சொல் சைக் என்பதாகும்;  லோகோஸ் என்ற கிரேக்க சொல்லின் பொருள் – படிப்பு, விவரித்தல் STUDY,  DISCOURSE  என்பதாகும். அதிலிருந்து பிறந்த சொல்லே சைக்காலஜி PSYCHOLOGY (GREEK)  (பி/ P என்பது சைலன்ட்; உச்சரிப்பு கிடையாது ).

வேத மந்திரங்களைக் கண்டுபிடித்து நமக்குச் சொன்ன ரிஷி, முனிவர்கள் ரகசிய விஷயங்களை இரு பொருள்பட பேசினார்கள், பாடினார்கள். மேம்போக்காகப் பார்த்தால் சடங்குகளை விவரிப்பதாகத் தோன்றும் ; உட்கருத்தோ பெரிய தத்துவங்களாக இருக்கும்.

வெள்ளைக்காரர்களும் அர்த்தம் புரியாமல் காற்று/ வாயுஅக்கினி/ தீ , வருணன்/ மழை, இந்திரன்/ இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளைக் கண்டு பயந்து ஆரியர்கள் பாடிய பாடல்கள் என்று முதலில் உளறினார்கள். பின்னர் உபநிஷத மந்திரங்களைப் பார்த்தவுடன்  அவற்றுக்கு மூலமான வேத மந்திரங்களும் ஆழ்ந்த கருத்துள்ளவை என்பதை அறிந்தார்கள்.

ஈலா, சரஸ்வதி போன்ற சொற்கள் வெறும் தேவிகள் அல்ல ; அவை அறிவு, ஊற்றுணர்ச்சி முதலிய  அறிவு விஷயங்கள்  என்பதை அரவிந்தர் சுட்டிக்காட்டினார்.

தி DHI -அறிவு, மதி-எண்ணம், மனீஷா– புத்தி, ருதம் – உண்மை, ஒழுங்குமுறை , கவி– முக்காலம் உணர்ந்த புலவர்,  விப்ர, விபஸ்ச்சித் – ஞானிகள் என்பதை எடுத்துக் காட்டினார் .

எல்லோரும் பின்பற்றும் சாயன பாஷ்யத்தில் கூட ‘தி’ என்ற சொல்லை எண்ணம், பிரார்த்தனை, செயல், உணவு என்று பலவகையாக உரை செய்தார் . ஆனால் உண்மையில் இது எண்ணம் புரிதல் என்ற பொருள் மட்டுமே உடைத்து .

அஸ்வ -குதிரை, க்ருதம்- நெய் பசு –  மிருகம் என்பனவற்றை வெள்ளைக்காரர்களும் அப்படியே பொருள் கொண்டனர் ; ஆனால் இவை விசை , தூய்மை என்ற பல பொருளில் வருகின்றன.

இன்றும் கூட  ஹார்ஸ் பவர் HORSE POWER என்ற சொல்லை விசைக்குப் பயன்படுத்துகிறோம்

திருமூலர் கூட பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு என்று பாடுகையில் யாரும் பசு மாட்டினை நினைப்பதில்லை. அது போல வேதத்திலும் பசு/ மிருகம், அஸ்வ/கு திரை என்பன மனோதத்துவ சொற்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன அரவிந்தர்தான் முதலில் இவ்வகையில் பொருள் கூறினார்.

உபநிஷத மந்திரங்கள் மனது,  உள்ளம் , ஆத்மா ஆகியவற்றை ஆழமாக ஆராய்கின்றன பதஞ்சலி போன்றோர் யோக சாஸ்திரத்தில் மனஸ்சித்தம், புத்தி, அஹம்காரம் EGO என்ற சொற்களை பயன்படுத்துகையில் ஆழமான பொருள் தெரிகிறது.

ரிக் வேதத்தின் பகுதியாக வரும் மன ஆவர்த்தன சூக்தம், ஸ்ரத்தா சூக்தம், யஜுர் வேத பகுதியான சிவ சங்கல்ப சூக்தம் ஆகியவற்றில் மனோ தத்துவ விஷயங்களைக் காணலாம்.

தற்கொலையைத் தடுக்கும் மந்திரம்

மனம் அலைபாய்வது குறித்தும் அந்த மனத்தினை மீண்டும் இழுத்து குவிய வைப்பது குறித்தும் ரிக் வேத 10-58 மந்திரத்தில் காணலாம்.

நான் மனத்தினை இழுத்து வந்து கட்டுக்குள் வைக்கிறேன் என்று ஒவ்வொரு துதியும் முடிகிறது

பன்னிரெண்டு மந்திரங்களும் மனத்தை வசப்படுத்தும் மந்திரம் ஆகும்; அது மட்டுமல்ல சென்ற காலத்துக்கும் வருங்காலத்துக்கும் சென்ற மனத்தினை மீண்டும் வர செய்கிறோம் என்று ஒரு மந்திரம் முடிகிறது ; நாம் அனைவரும் கடந்த கால நிகழ்சசிகளை எண்ணியோ வருங்காலத்தை எண்ணிக் கவலைப்பட்டோ வாழ்க்கையை செலவிடுகிறோம் இதை அழகாக இந்த மந்திரம்  உரத்த குரலில் சொல்லி ,கூவி மனதை ஒருமுகப்படுத்த வைக்கிறது.

இதையே பாரதியாரும் பாடியுள்ளார்

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

– மகாகவி பாரதியார்.

இது ரிக் வேத மனஸ் (10-58-11) பற்றிய கவிதையின் எதிரொலி ஆகும்.

யத்தே யமம் வைவஸ்வதம் மனோ ஜகாம தூரகம்

தத்த  ஆ வர்த்த யாமஸீஹ  க்ஷயாய ஜீவஸே

यत्ते॑ य॒मं वै॑वस्व॒तं मनो॑ ज॒गाम॑ दूर॒कम् । तत्त॒ आ व॑र्तयामसी॒ह क्षया॑य जी॒वसे॑ ॥
यत्ते यमं वैवस्वतं मनो जगाम दूरकम् । तत्त आ वर्तयामसीह क्षयाय जीवसे ॥
yat te yamaṃ vaivasvatam mano jagāma dūrakam | tat ta ā vartayāmasīha kṣayāya jīvase ||

Ṛṣi (sage/seer): bandhvādayo gaupāyanā [bandhvādaya gaupāyanā];
Devatā (deity/subject-matter): mana āvarttanam ;
Chandas (meter): nicdanuṣup;
Svara (tone/note): Swar;

குறிப்பாக முதல் மந்திரம் தற்கொலையைத் தடுக்கும் மந்திரம் என்று தெரிகிறது; யமனிடம் சென்றுள்ள மனதை — அதாவது தற்கொலை செய்ய முயன்றவரின் — மனதை திருப்பி இழுக்கும் மந்திரம் ஆகும்.

வாழ்க்கைப் போராட்டத்தினை எதிர்கொள்ள வேண்டும்; எதற்கும் அஞ்சக்கூடாது ; மனக்கோட்டைகளையும் கட்டவேண்டாம்; எதிர்காலம் பற்றி அஞ்சவும் வேண்டாம் என்பதை 12 மந்திரங்களும் மீண்டும் மீண்டும் கூறுகின்றன.

தற்காலத்தில் அதி பயங்கர சம்பளத்துடன் மேலை நாடுகள் சைக்கோதெரபிஸ்ட் PSYCHOTHERAPIST  என்னும் மருத்துவர்களை நியமிக்கின்றன . தற்கொலை செய்யப்போவதை பார்த்த உறவினர்களோ நண்பர்களோ அவர்களை டாக்டரிடம்  கூட்டிச் சென்றவுடன் அவர் உடனே சைக்கோதெரப்பிஸ்ட் திடம் அனுப்புவார்; அவர் தற்கொலை நோயாளியுடன் ஒரு மணி நேரம் பேசி மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்பார். அவருக்கு வருட சம்பளம் ஐம்பதாயிரம் பவுன்கள்!  ரிக் வேத மந்திரத்தை இலவசமாகவே கேட்கலாம் ; படிக்கலாம் .

****

அடுத்தாற் போல ரிக் வேதத்தில் உள்ள நம்பிக்கை / ச்ரத்தா சூக்தத்தைக் காண்போம் .

தொடரும் ……..

–சுபம்–

Tags- தற்கொலை , மனம், அலைபாயும், வேதம் , சைக்காலஜி, மன , உள இயல் , மனோதத்துவ ,சாஸ்திரம் , பகுதி 1

Leave a comment

Leave a comment