சரக சம்ஹிதை நூலில் 149  நோய்கள்-1 (Post No.14,401)

Written by London Swaminathan

Post No. 14,401

Date uploaded in London –  17 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சரக சம்ஹிதை என்னும் மருத்துவ நூலில் காணப்படும் நோய்களையும்  அவற்றின் தமிழ்ப்  பெயர்களையும்  கீழே கொடுத்துள்ளேன் ; இந்தியாவில் வானவியல் துவங்கி பிராணியியல்வரை ASTRONOMY TO ZOOLOGY ;A TO Z  எல்லாம் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன ; அந்த மொழியின் நுணுக்கங்களை, நெளிவு சுளிவுகளை அறிந்தோர் எழுதிய நூல்களையும் ஸம்ஸ்க்ருதத்தையும் கற்பது மிகவும் அவசியம் ; மேலும் இந்தியாவின் பெரும்பகுதிகளில் அதே ஸம்ஸ்க்ருதச் சொற்களோ அல்லது அதைத் தழுவிய சொற்களோ புழக்கத்தில் உள்ளன ; ஸம்ஸ்க்ருதத்தை அறிந்தால் அவர்களுடனும் பேச, பழக முடியும்.

எடுத்துக்காட்டாக நேத்ரம், நயனம் என்றால் கண் , சிரஸ் என்றால் தலை, ரோக, வியாதி என்றால் நோய்  என்ற சொற்களை நாம் அறிவோம் ; இவைகளைத் தெரிந்து கொண்டால் பல சம்ஸ்க்ருத சொற்களை அறியலாம் .

இதோ நோய்களின் பட்டியல், அவை நூலில் காணப்படும் அத்தியாயம், ஸ்லோகங்களின் எண் முதலியன :–

தமிழ்சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்

1.அதி ஜிஹ்வா 6-12-77 – ABCESS UNDER THE TONGUE, நாக்கின் கீழ் புண், ரத்தம் கசியும் கொப்புளம்.

2.அக்நிமந்த்யா 1-20-17- DYSPEPSIA அஜீரணம் , வயிற்றில் எரிச்சல்

3.அஜதோதக 6-13-58 – DEHYDRATION OF THE STOMACH வயிற்றில் வறட்சி, நீர் இழப்பு

4.அக்ஷி பேத 1-20-1 –  SQUINT EYE மாறு கண், ஒற்றைக்கண்

காமாட்சி, மீனாட்சி விசாலாட்சி, நீலாயதாட்சி போன்ற அம்மன் பெயர்களில் அக்ஷி என்பது கண் என்பது பெரும்பாலோருக்குத் தெரியும் . இங்கு அக்ஷியில் பேதம்/ வேறுபாடு இருப்பதைக் காட்டுகிறது.

5.அக்ஷிரோக 6-26-130- OPTHALMITIS கண் நோய்கள்

96 வகை கண் நோய்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன!

6.அக்ஷிபாக 1-20-14- EYE AFFECTION கண் அழற்சி

7.அலஜி 6-12-88 – WHITLOW நகச்சுற்றி  , விரல் நுனியில் புண்

8.அமதோஷ 3-2-10 – DISORDERS OF CHYME FORMATION ஜீரணக் கோளாறு ; புளிப்பு ; கையமைவு

9.அம்லபித்த 6-15-47- ADID DYSPEPSIA வயிற்றில் அமிலத்தால்/புளிப்பால்  ஏற்படும் அஜீரணம் , புளிச்ச ஏப்பம்

10.அனப 6-28-29 – ACUTE CONSTIPATION கடும் மலச்சிக்கல்

11.அனித்ரா 6-28-21- INSOMNIA நித்திரையின்மை, தூக்கம் வராமை

12.அந்த்ரம்யா 6-28-45 – STIFF NECK  கழுத்துப் பிடிப்பு

13.அந்த்ராபனவிடஹா 1-24-14  – INTESTINAL INFLAMMATION குடலில் புண் , அழற்சி

14.அந்த்ரவிருத்தி -6-12-94  HERNIA  ஹெர்னியா , குடலிறக்கம்

15.அபஸ்மார 6-10-3- EPILEPSY கால் கை வலிப்பு 

சரகர் ஐந்து வகை வலிப்புகளை விவரிக்கிறார்

16.அபதாஸ்திரக – ரணஜன்னி 8-9-12 CONVUSIONS WITH BODY BENT LIKE A  BOW/ TETANUS

17. அற்புத – வீக்கம் 6-12-87  NON-SUPPURATING SWELLING

18. அர்த்தவப்பேத – தலையில் ஒரு பக்கத்தில் வலி 8-9-74 HEMICRANIA

19.அர்த்தித – முகத்தில் வாதம் 1-20-11 FACIAL PARALYSIS

20. அரோசக – சாப்பிடாமை ; தேவையற்ற பயத்தால் உணவினைக் குறைத்தல் – இதில் ஆறு வகை உண்டு 6-26-124 ANOREXIA  – SIX TYPES

To be continued………………………………………

Tags- சரக சம்ஹிதை,   149  நோய்கள், பகுதி -௧, பட்டியல் , தமிழ், சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்

Leave a comment

Leave a comment