வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் – PART 2 (Post No.14,400)

Written by London Swaminathan

Post No. 14,400

Date uploaded in London –  17 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரிக் வேதத்தில் வரும் ஶ்ரத்தா FAITH சூக்தமும் யஜுர்வேத வாஜசநேயி சம்ஹிதையில் வரும் சிவ சங்கல்ப சூக்தமும் வாழ்க்கையில் நம்பிக்கை FAITH என்பது எவ்வளவு முக்கியம் என்று காட்டுகின்றன.

நமக்கு நாமே மனதில் AUTO SUGGESTION/  ஆட்டோசஜ்ஜஷன் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டால், அது வெற்றியைத் தரும்

என் தலை முடி விழுந்துகொண்டே இருக்கிறதே ! ஐயோ நான் என்ன செய்வேன்? என்று பெண்கள் சொல்லக்கூடாது

அட! என் அழகான தலை முடி இதை விட நீண்டு அழகாக வளரும்  என்று சொல்லிக்கொண்டே தலையில் தைலத்ததைத் தடவினால் அது நீண்டு வளரும்! இதை தனக்குத்தானே போதித்தல் AUTO SUGGESTION  /ஆட்டோசஜ்ஜஷன் என்று மன இயல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிராமண சிறுவர்கள், கல்யாணம் ஆவதற்கு முன்னர் தினமும் சமிதாதானம் என்று சொல்லி தீயில் அரசங்குச்சியைப் போட்டு சொல்லும் மந்திரங்களில் இது வருகிறது ; நீ ஓஜஸ், தேஜஸ் வர்சஸ்  உள்ளவன்; மேதாவி எனக்கும் அதைத்  தருவாயாக  என்று தினமும் சொல்லுவார்கள் சந்தியா வந்தனத்திலும் காயத்ரீ தேவியை இப்படிப் புகழ்ந்து இருதயத்துக்குள் ஆவாஹனம் செய்வார்கள் இதனால் அவர்களுக்கு முகத்தில் ஒளி /பிரகாசம்/ தேஜஸ் பெருகும்.

மருத்துவர்களிடையே மிகவும் பிரபலமானது பிளாசிபோ எபெக்ட் . PLACEBO EFFECT அதாவது போலி மாத்திரைகளையும் உண்மை மாத்திரைகளையும் நோயாளிகளுக்கு கொடுத்து அதன் பலனை அறிவார்கள்; யாருக்கு எதைக்கொடுத்தனர் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் தெரியாத வகையில் இதைச் செய்வார்கள்; பல ஆராய்ச்சிகளில் போலி மாத்திரை சாப்பிட்ட நோயாளிகளும் குணம் அடைந்துள்ளனர்; இதற்கு நம்பிக்கையே காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நம்பிக்கை விஷயத்தை நமது மருத்துவ நூல்களும் வேத இதிகாசங்களும் மீண்டும் மீண்டும் சொல்கின்றன . சுருங்கச் சொன்னால் மேலை நாட்டு மனோ தத்துவ நிபுணர்கள் புதுப்புது  சொற்களை பயன்படுத்துகின்றனர் இவை எல்லாம் குரு குல வாச மந்திரங்களில் மாணவர்களுக்கே தெரிந்த விஷயங்கள்தான் !

CHILD PSYCHOLOGY, EDUCATIONAL PSYCHOLOGY,  NEURO PSYCHOLOGY, CRIMINAL PSYCHOLOGY,   PARA PSYCHOLOGY,  ORGANISATIONAL PSYCHOLOGY,  COMMERCIAL PSYCHOLOGY, சைல்ட் சைக்காலஜி எஜூ கேஷனல், ஆர்கனைசேஷனல், கமர்ஷியல், நியூரோ, பாரா, க்ரீமினல் சைக்காலஜி என்றெல்லாம் மன இயல் துறை கிளைவிட்டுப் போய்விட்டது!  அவர்கள் INSIGHT THERAPY, இன்சைட் தெரபி, ஸெல்ப் பியூல்பில்லிங் பிராப்பசி SELF FULFILLING PROPHESIES

, ஹ்யுமன்ஸ்டிக் ட்ரீட்மெண்ட் HUMANISTIC TREATMENT , பிளாசிபோ எபெக்ட், ஆட்டோசஜ்ஜஷன்  எம்பதி, சிம்பதி EMPATHY SYMPATHY என்றெல்லாம் புதுப்புது சொற்களை சொல்லி நமது மந்திரங்களில் சொல்லும் விஷயத்தையே சொல்கின்றனர்; அவர்கள் புதிதாக எதைச் சொன்னாலும் அவை இந்துக்களின் அன்றாட  செயல்களில் வேண்டுதல்களில் இருப்பதைக் காணலாம்; வாழ்க்கை எனது சகடம்/ சக்கரம் பன்றது; வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் என்று சம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் தமிழ்ப் பாடல்களும் மீண்டும் மீண்டும் கூறுகின்றன. ஆனால் தோல்வியைக் கண்டு துவள்பவர்கள் வாழ்க்கையின் இறுதிக்கே செல்வதை பத்திரிக்கையில் படிக்கிறோம். தற்கால சைக்காலஜி பத்திரிகைகளில் இது ஒரு முக்கிய விஷயமாக அலசப்படுகிறது. ஆனால் மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிக்வேதம் இந்தத் தலைப்பினை எடுத்துக்கொண்டு நம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவும் என்று காட்டுகிறது.நம்பிக்கை என்று சொல்லும்போது கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல; தன் மீது தனக்கு நம்பிக்கை வேண்டும்; செய்யும் தொழிலில், பணியில் நம்பிக்கை வேண்டும்

இதை பாரதியார் ஒரே வரியில் சொல்லிவிட்டார் — நம்பினர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு என்று; பகவத் கீதையில் கிருஷ்ணனும் ஸ்ரத்தாவான் லபதே ஞானம் என்கிறார் .श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः।
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति ॥–  B.G.4-39

எவரொருவர் ஆழமான நம்பிக்கையுடன் தங்கள் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்த பழகுகிறார்களோ அவர்கள் தெய்வீக அறிவை அடைகிறார்கள். இத்தகைய ஆழ்நிலை அறிவின் மூலம், அவர்கள் விரைவில் நிரந்தரமான உயர்ந்த அமைதியை அடைகிறார்கள்.

ஶ்ரத்தாவான் லபதே ஞானம் தத்பரஹ ஸந்யதேந்த்ரியஹ |

ஞானம் லப்த்வா பராம் ஶான்திமசிரேணாதகச்சதி ||4-39||

****

ச்ரத்தா ஸூக்தம் – ரிக் வேதம் 10.151

இப்போது ரிக் வேத சூக்தத்தைக் காண்போம் :

சிரத்தை என்றால் நம்பிக்கை. அது நம்மிடம் வருமாறு பிரார்த்திக்கிறது இந்த ஸூக்தம்.

ஓம்
ச்த்தயாக்னி ஸமித்யதே ச்த்தயா ஹூயதே ஹவி:
ச்த்தாம் பகஸ்ய மூர்னி வசஸா வேயாமஸி                       1

ப்ரியம் ச்த்தே ததத: ப்ரியம் ச்த்தே திதாஸத:
ப்ரியம் போஜேஷு யஜ்வஸ்விம் ம உதிதம் க்ருதி                   2

யதா தேவா அஸுரேஷு ச்த்தாமுக்ரேஷு சக்ரிரே
ஏவம் போஜேஷு யஜ்வஸ்வஸ்மாகமுதிதம் க்ருதி                      3

ச்த்தாம் தேவா யஜமானா வாயுகோபா உபாஸதே
ச்த்தாம் ஹ்ருய்ய யாகூத்யா ச்த்தயா விந்தே வஸு      4

ச்த்தாம் ப்ராதர் ஹவாமஹே ச்த்தாம் மத்யந்தினம் பரி
ச்த்தாம் ஸூர்யஸ்ய நிம்னுசி ச்த்தே ச்த்தாபயேஹ ந:     5

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

வேள்வித்தீ சிரத்தையால் வளர்க்கப்படுகிறது. ஆஹுதி சிரத்தையால் அளிக்கப்படுகிறது. இறைவனின் தலையில் இருக்கின்ற சிரத்தையைப் பாடல்களால் போற்றுகிறோம்.                     1

ஓ சிரத்தையேகொடுப்பவரின் விருப்பத்தை நிறைவேற்று. கொடுக்க நினைப்பவரின் விருப்பத்தை நிறைவேற்று. வேள்வி செய்பவர்களின் விருப்பங்களை நான் சொன்னதுபோல் செய்து நிறைவேற்று.      2

பயங்கரமான அசுரர்களுடன் நடந்த போரில் தேவர்கள் எப்படி சிரத்தையைக் கைக்கொண்டு போரிட்டார்களோ அதுபோல், வேள்வி செய்பவர்களின் ஆசைகளை எங்களிடம் தோன்றுகின்ற எண்ணங்கள் போல் 3 நிறைவேற்றுவாய்.                                                                                              

தேவர்கள், மனிதர்கள், வாயுகோபர்கள் (வாயுவால் காப்பாற்றப்படுபவர்கள்) எல்லாரும்
சிரத்தையை வழிபடுகிறார்கள். இதய தாகத்தின் வாயிலாகவே சிரத்தை அடையப்படுகிறது. சிரத்தையால் செல்வம் பெறப்படுகிறது.                4

சிரத்தையைக் காலையில் வழிபடுவோம்.  நண்பகலில் வழிபடுவோம். சூரியன் கீழே இறங்கி மறையும்போது வழிபடுவோம். சிரத்தையே எங்களுக்கு சிரத்தையைத் தருவாய்.                       5

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

பதஞ்சலி யோக சூத்திரமும் இதை வலியுறுத்துகிறது ,

ஷ்ரத்தா வீர்ய ஸ்ம்ரிதி சமாதி ப்ரக்ஞா  பூர்வக இதரேஸம் 1-20

பொருள்:- ஏனையோருக்கு சமாதி என்னும் உயர்நிலை நம்பிக்கை சக்தி, நினைவாற்றல், மனதைக் குவியவைக்கும் / ஒருமுகப்படுத்தும் திறமை, விவேகம் ஆகியவற்றால் கிடைக்கிறது .

இதிலும் நம்பிக்கையே முதலிடம் பெறுகிறது .

***

சங்கல்ப ஸூக்தம்  – சுக்லயஜுர்வேதம் வாஜஸனேயி ஸம்ஹிதை 34.1-6

இந்துக்கள் எந்த ஒரு சடங்கினையும் செய்வதற்கு முன்பாக இட து  கையின் மேல் வலது கையை வைத்துக்கொண்டு சங்கல்பம் செய்வார்கள் ; இதன் பொருள் இப்பொழுது நான் இந்த நோக்கத்துக்காக இந்தச் சடங்கினைச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளேன் என்று சொல்லிவிட்டு கைகளைக் கூப்பிக்கொண்டு பணியைத் துவங்குவார்கள் இது பல்லாயிரம் ஆண்டுகளாக நடை முறையில் உள்ளது; பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் இன்றும் இதை நாள்தோறும் செய்கின்றனர் ஆகவே எந்த ஒரு பணியையும் மேற்கொள்வதற்கு முன்னர் குறிக்கோள் என்ன என்பதை அறிந்து நம்பிக்கையுனும் திட உறுதியுடனும் செய்ய வேண்டும் அப்படி சங்கல்பம் செய்கையில் மோதிர விரலில் தர்ப்பைப் புல்லால் ஆன பவித்ரம் என்னும் மோதிரத்தை அணிந்து கொள்ளுவார்கள் ஒரு பணி, பல மணி நேரம் நடந்தாலும் கூட அது மோதிரவிரலில் இருக்கும்; பணி முடிந்தவுடன் அதை அவிழ்த்துப் போடுவார்கள்; இது மனதை ஒரே பணியில் ஒருமுகப்படுத்தும் சைக்காலஜி தந்திரம் ஆகும்.

****

மந்திரமும் மொழிபெயர்ப்பும் ராமகிருஷ்ண மடத்தின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது; ஆங்கிலத்தில் படித்தால் சிலருக்கு நன்றாக விளங்கும் என்பதால் இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளையும்   வேறு வேறு வெப்சைட்டுகளிலிருந்து கொடுக்கிறேன்.

to be continued…………………………………..

—-SUBHAM—-

TAGS- வேதத்தில் சைக்காலஜி,  மனோதத்துவ சாஸ்திரம் – PART 2 , ச்ரத்தா சூக்தம், சிவ சங்கல்ப சூக்தம்

Leave a comment

Leave a comment