சரக சம்ஹிதை நூலில் 149 நோய்கள்- Part 3 (Post No.14,408)

Written by London Swaminathan

Post No. 14,408

Date uploaded in London –  19 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART THREE 

இதோ நோய்களின் பட்டியல், அவை நூலில் காணப்படும் அத்தியாயம், ஸ்லோகங்களின் எண் முதலியன :–

தமிழ்சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்

41.கர்ப்பிணிரோக – கர்ப்பிணிகளுக்கு வரும் நோய்கள் DISEASES OF PREGNANCY 4-8-26

42.க்ராபந்திதோஷ – நான்கு வகை வயிற்றுப்போக்கு DIARRHOEA 6-15-51

43.கிரந்தி – கால்வீக்கம் GLANDULAR SWELLING/VARICOCELE 6-12-81

44.க்ருத் பிராசி – கால் நரம்பு இழுத்துப் பிடித்தல்/ சியாட்டிகா SCIATICA 1-20-11

45.குத பிராம்ச – ஆசனவாய் தொங்குவது PROLAPSED ANUS 1-20-11

46.குத பாக- பெருங்குடலின் கடைசி பகுதி வீக்கம் PROCTITIS OF ANUS 1-20-14

47.குல்மா- மண்ணீரல் வீக்கம் – ஆறு வகை உண்டு HARDENING AND SWELLING OF THE SPLEEN  6-5-48

48.ஹ்ரித் த்ரவ – இருதயத்துடிப்பு அதிகரித்தல் TACHYCARDIA 1-20-11

49.ஹ்ரித் ரோக – இருதய நோய்கள் – ஐந்து வகை HEART DISEASE 1-17-6

50.ஹ்ரிம் மோஹ – சீரற்ற இருதயத்துடிப்பு CARDIAC IRREGULARITY OR HEART BLOCK 1-20-11

ஹ்ருத் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லிலிருந்து ஹார்ட் HEART என்ற ஆங்கிலச் சொல் வந்ததை அறிந்தால் இந்த நோய்களின் பெயர்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் . உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதச் சொல்லையே பயன்படுத்துவதால் இந்துக்கள்தான் மருத்துவத்தின் தந்தை என்பதையும் அறியலாம் .

51.இக்ஷுவாளிகரசமேக -கிளைகோசூரியா என்பது சிறுநீரில் அதிக அளவு சர்க்கரை இருப்பதாகும். GLYCOSURIA 2-4-10

52.ஜலககர்தப- கிருமிகளால் சீழ்பிடித்து ஏற்படும் ஜுரம் FEVER DUE TO SUPPURATION 6-12-99 

53.ஜானுபேத – கால் வளைவு, சின்னி நாய்- BOW LEGS 1-20-11  

54.ஜானு விஸ்ப்லேஷ-  உள்நோக்கி வளைந்த கால்கள்- KNOCK KNEES 1-20-11   

55.ஜடராக்கினிவிகார – ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற உணர்வு – இதில் நான்கு வகைகளை சரகர் பட்டியல் இடுகிறார் MORBID APPETITE 3-6-12 

56.ஜ்வர – காய்ச்சல் – இதில் எட்டு வகைகளை சரகர் பட்டியல் இடுகிறார் FEVER 6-3

57.கக்ஷ – அக்கி- 3 HERPES 1-20-14

58.கண்டு – உடலில் ஏற்படும் அரிப்பு PRURITUS 6-29-17

59.கர்ண ரோக – காது நோய்கள் DISEASES OF THE EAR 6-26-127 

கர்ண என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு காது என்பது பொருள்; இதை கர்ணன் கதை மூலம் எல்லோரும் அறிவார்கள். காதில் கவச குண்டலங்களுடன் பிறந்தவன் அவன் . அதாவது குந்தி தேவி  அவனை குழந்தையாக ஆற்றில் ஒரு கூடையில்  மிதக்கவிட்டபோது காதில் குண்டலங்களைப் போட்டு அவனை அனுப்பினாள்; யார் குழந்தையை எடுத்தாலும் அவர்கள் அந்தக் குழந்தையை பராமரிக்க பணம் தேவை அல்லவா ? அவள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஏழைத் தேரோட்டியின் கையில் அந்தக் கூடை குழந்தையுடன் அகப்பட்டது .

A – பதிர்யா  – செவிட்டுத்தனமை DEAFNESS 6-26-128  

B – கர்ண ஸ்போட்டை- காதுக்குள் வீக்கம்/ புண் INFLAMMATORY SWELLING INSIDE THE EAR 6-29-127

C- கர்ண ச்ரவ –  காதுக்குள் சீழ் வடிதல் PUS DISCHARGE FROM THE EAR 6-26-127 

D – புதிஸ்ரவண- உட்காதில் வீக்கம் – இதில் எட்டு வகைகள் உள்ளன SUPPURATION OF THE INNER EAR  6-26-127

60.காச – நிற்காத இருமல் – இதில் ஐந்து வகைகள் உள்ளன CHRONIC COUGH 6-18

தொடரும்…………

Tags- சரக சம்ஹிதை நூல்,  149 நோய்கள், பட்டியல் -3

Leave a comment

Leave a comment