தைவான் நாட்டுப் பழமொழிக் கதைகள் (Post.14,412)

Written by London Swaminathan

Post No. 14,412

Date uploaded in London –  20 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Written by London Swaminathan

Post No. 14,412

Date uploaded in London –  20 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கம்யூனிஸ்ட் சீனாவுக்கு அருகில் ஒரு தீவாக உள்ள நாடு REPUBLIC OF CHINA/ TAIWAN   தைவான் என்று அழைக்கப்படுகிறது ; அந்த நாடு சீனப் பழமொழிகள் சொல்லும் கதைகளை அடிக்கடி தபால்தலைகளாக வெளியிடுகிறது .

வீட்டையும் நேசி காகத்தையும் நேசி  love house and crow,”  என்பது சீனப் பழமொழி ; இதன் பொருள் ஒருவரை  விரும்பும்போது அவர்களிடத்தில் உள்ள குறைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும் காதலன், காதலிகளுக்கு இது ஒரு முக்கிய பாடம் ; கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதை இது வலியுறுத்துகிறது ஆங்கிலத்தில் என்னையும் விரும்புஎன் நாயையும் விரும்பு என்று சொல்லுவார்கள் .

****

பச்சை கல்லுக்கு ஒளியூட்ட செங்கலை கொடுத்தானாம்offering bricks to elicit jade,”  என்பது ஒரு சீனப்பமொழி.

இது தங்கத்தைக் கொடுத்து பித்தளை வாங்குவதற்குச் சமம் ; இதன் பின்னால் ஒரு சீனக்கதை உளது ஒரு பிரபல கவிஞர் இன்னும் ஒரு பெரியவர் கோவிலுக்கு வருவதை அறிந்து இரண்டு வரி கவிதையை சுவற்றில் எழுதினாராம்; அவர் எதிர்ப்பார்த்தது மீதி இரண்டு வரிகள் தன்னுடையதையும் மிஞ்சுவதாக இருக்கும் என்று . ஆனால் அவ்ருக்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது; அந்தப் பெரியவர் எழுதியது சோடை போனது  அவர் பாரதி அல்லது காளிதாசனைப் போன்ற்வர் அல்ல. பாரதி சின்னப்பயல் என்று கவிதை எழுத்ச் சொன்ன காந்திமதி நாதனை பாரதி மட்டம் தட்டினார்; எப்படி? காந்தி மதி நாதனைப் பார் அதி (பாரதி) சின்னப்பயல் என்று!

அதேபோல  கோபித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிய  காளிதாசனைக் கண்டுபிடிக்க போஜ ராஜன் இரண்டு வரி கவிதை  எழுதி இதை பூர்த்தி செய்வோருக்குப் பரிசு என்றவுடன் காளிதாசன் அதை அற்புதமாகப் பூர்த்தி செய்தான்; உடனே காளிதாசன் இருக்குமிடத்தைப் போஜராஜன் கண்டு பிடித்தான் அப்படியெல்லாம் இல்லாமல் சொத்தைக் கவிதையை  எழுதியதால் செங்கலை வைத்து பச்சைக் கல்லுக்கு மெருகு ஊட்டியது போல என்ற சீனப் பழமொழி எழுந்தது !

When the Tang dynasty poet Chang Jian learned that Zhao Gu was going to the Lingyan Temple in Suzhou, he wrote on the temple wall: “At this old temple beside the Guanwa Palace / The clouds over the watery expanses are many, and the visitors few.” His expectation was that Zhao would add the final two lines to the poem. Zhao did indeed add: “Upon hearing of spring’s arrival, my melancholy doubles / Amid hundreds of blooms, a monk returns.” Later generations felt that Chang Jian had “offered bricks to elicit jade”—and the expression came to describe the act of offering clumsy lines of poetry or unpolished efforts in the hope of eliciting outstanding work from another person.

****

நான்கு தபால் தலைகளை வெளியிட்ட தைவான் நாடு, நாலாவது அஞ்சல் தலைக்கான சீனக்கதையையும் வெளியிட்டது ; உண்மையைப் போலவே  “true to life”என்பது அந்தப் பழமொழி.  ஒரு சிந்தனையாளர் நன்றாக உறங்கினார்; அப்போது அவர் பட்டுப்பூச்சி பறப்பது போலக் கனவு கண்டார்; விழித்து எழுந்தவுடன் அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. நான் பட்டுபூச்சியிலிருந்து வந்தவனா அல்லது  நான் நான்தானா  என்று; ஏனெனில் அவரது கனவு அவ்வளவு தத்ரூபமானது; ஆகையால் ஏதெனும் ஒன்று உணமையைப் போலவே தோன்றினால் இந்தப் பழமொழியை சீனர்கள் சொல்லுவார்கள்  .

****

கல்வி என்பது ஆசிரியருக்கும் மாணவருக்கும் பயன்தருகிறது “Education benefits both students and teachers,”

என்பது ஒரு சீனப் பழமொழி

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து ஒரு பாடலில் இதே கருத்து உள்ளது

हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदा‌உप्य्

अर्थिभ्यः प्रतिपाद्यमानम् अनिशं प्राप्नोति वृद्धिं पराम् ।

कल्पान्तेष्वपि न प्रयाति निधनं विद्याख्यम् अन्तर्धनं

येषां तान्प्रति मानम् उज्झत नृपाः कस्तैः सह स्पर्धते ॥ 1.16 ॥

ஹர்துயாதி ந கோசரம் கிம் அபி சம் புஷ்ணாதியத் ஸர்வதாப்ய

அர்த்திப்யஹ   ப்ரதிபாதயமானம் ஐசம் ப்ராப்னோதி வ்ருத்திம் பராம்

கல்பாந்தேஷ்வ்பி ந ப்ரயாதி நிதனம் வித்யாக்யம் அந்தர் தனம்

யேஷாம் தான்ப்ரதி மானம் உஜ்ஜத் ந்ருபாஹா கஸ்தைஹை சஹ  ஸ்பர்ததே

திருடர்களால் காணமுடியாதது;

எப்போதும் பேரின்பம் நல்குவது;

கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும்;

யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.

மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.

அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?

****

தமிழ்ப்பாடலிலும் இதே கருத்து உள்ளது

வெள்ளதால்  போகாது வெந்தணலால் வேகாது

வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது

கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது

கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது

கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க

உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதென்னே

ஓம் சஹ நாவவது

சஹ நவ் புனக்து

சஹ வீர்யம் கரவாவஹை

தேஜஸ்வி நாவதீ-தமஸ்து

மா வித் விஷா வஹை

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

 ॐ सह नाववतु ।

सह नौ भुनक्तु ।

सह वीर्यं करवावहै ।

तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।

ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

என்ற உபநிஷத் மந்த்ரத்தை குருகுலத்தில் ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து சொல்லுவார்கள் ; இதிலும் இருவர் முன்னேற்றமும் வலியுறுத்தப்படுகிறது

பொருள்

நான் கற்கும் விஷயத்தில் இருவரும் ஒன்றாக முன்னேறுவோமாக;

இருவரும் அதை விருப்பத்தோடு படிப்போமாக;

இருவரும் முழு ஈடுபாட்டுடன் முழு சக்தியுடன் கற்போமாக;

இதன் மூலம் இருவரும் ஒளிமிக்க அறிவினை அடைவோமாக ;

வெறுப்பு என்பதே தோன்றாமலிருக்கட்டும் ;

எங்கும் அமைதி, எதிலும் அமைதி, எல்லோரிடத்திலும் அமைதி நிலவட்டும்!

****

இது போல இந்தியாவும் பழமொழித் தபால்தலைகளை வெளியிடலாம். பெரும்பாலான  பழமொழிகள் தமிழ், இந்தி, சம்ஸ்க்ருதத்தில் ஒரே பொருளைத் தருகிறது.

பகவத் கீதை வரிகள், ராமாயண வரிகள், வந்தே மாதரம் வரிகளை இந்தியா தபால் தலைகளாக வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, அந்த நாட்டு ஜனாதிபதிகள் சொன்னதை- பொன்மொழிகளை — அஞ்சல்தலைகளாக வெளியிட்டுள்ளது; நாமும் ஆயிரக் கணக்கான சாது சந்யாசிகளின் பாடல் வரிகளை– பொன்மொழிகளை தபால் தலைகளாக வெளியிடலாமே! 

4. True to Life (NT$8): Chuangzi was a thinker of the Warring States era. He once dreamt that he was a butterfly, flitting hither and thither. He completely forgot he was a person. Yet when he awoke, he found that he was still Chuangzi. The vividness of the butterfly made Chuangzi remark upon how true to life his dream was. He wondered: Am I a person who has awoken from a dream that I was a butterfly, or a butterfly dreaming that I am a person? Chuangzi’s phrase is now commonly used to describe something that is extremely vivid and lifelike.

—subham—

Tags-தைவான், சீன , பழமொழிக்கதைகள் , தபால்தலைகள் 

Leave a comment

Leave a comment