கந்தபுராணக் கட்டுரைகள் – பகுதி 1 (Post No.14,425)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,425

Date uploaded in London – –23 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

நூல் அறிமுகம்

கந்தபுராணக் கட்டுரைகள் – பகுதி 1 – பதிப்பாசிரியர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம்

.நாகராஜன்

கந்தபுராண ஞானஸபை,, கள்ளக்குறிச்சியின் வெளியீடாக வந்துள்ள நூல் கந்தபுராணக் கட்டுரைகள் – பகுதி 1

பத்து அறிஞர்களின் கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்த நூலின் பதிப்பாசிரியர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள்.

சைவ சமயத்தின் மூன்று பெரும் புராணங்களில் ஒன்றாக அமைவது கந்தபுராணம்.

“எந்தப் பொருளும் கந்தபுராணத்தில்” என்பது தமிழ்ப் பழமொழி.

ஞான உபதேசங்கள், தத்துவ ரகசியங்கள், வரலாறுகள், ஆன்மீக உண்மைகள், பக்தியின் மகிமை உள்ளிட்டவற்றைக் கந்தபுராணம் தருகிறது.

இது அனைவரிடமும் சென்று சேரவேண்டும் என்று பாடுபட்டு வருகிறது கந்தபுராண ஞானஸபை

அதில் ஒரு முயற்சியாக அறிஞர்களிடமிருந்து  கந்தபுராண ஞானஸபை கந்தபுராணம் சம்பந்தமான கட்டுரைகளை வரவேற்று அதில் தேர்ந்தவற்றைப் முதலாம் பகுதியாக இப்போது வெளியிட்டுள்ளது.

இதில் உள்ள பத்து கட்டுரைகள் பின் வருமாறு:

முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம்

  திருமதி V. இந்திரா

கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள்

ச.பாலமணிகண்டன்

கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்

மு. கிருஷ்ணசாமி

கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள்

பனசை மு. சுவாமிநாதன்

முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம்

S. மணிமேகலை

கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்

அ. ராதா

கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள்

ர. அருணாதேவி

கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்

ஈசான சிவ ஆனந்தமீனாக்ஷி

கந்தபுராணத்தில் சிவஸ்தலங்களின் மகிமை

திரு தி. மீனாட்சிசுந்தரம்

கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்

சிவ. கோமதி திருநாவுக்கரசு

திருமதி V. இந்திராவின்  முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் கட்டுரையில் பெருமானின் திருவடியிலிருந்து திருமுடி வரை அமைந்துள்ள உபநிடதங்கள், கலைகள், தேவர்கள் உள்ளிட்ட விஷயங்களைக் கண்டு வியக்கலாம்.

ச.பாலமணிகண்டனின் கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள்

கட்டுரையில் கந்தபுராணத்தில் உள்ல அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பேறுகள் மற்றும், காப்பிய வருணனைகள் உள்ளிட்டவற்றைப் படித்து மகிழலாம்.

மு. கிருஷ்ணசாமியின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம் கட்டுரையில் சூரனின் அகந்தையும் அவனது ஆணவ மறைப்பும் பற்றிப் படிப்பதோடு  தைப்பூச சிறப்புகள் பற்றிக் காணலாம்.

பனசை மு. சுவாமிநாதனின் கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள் கட்டுரையில் கந்தபுராண உவமைகள் நயம் பற்றிப் படித்து மகிழலாம்.

S. மணிமேகலையின் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் கட்டுரையில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் மற்றும் தேவர்களுக்குக் காட்டும் பேருருவக் காட்சி பற்றிய அரும் செய்திகள் தரப்படுகின்றன.

 அ.ராதாவின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம் கட்டுரையில் சிவபெருமானின் மேன்மை, சிவபெருமானின் கருணை,  சிவபிரானை வழிபடும் முறைமை உள்ளிட்டவை தரப்படுகின்றன.

ர. அருணாதேவியின் கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள் கட்டுரையில் கந்தபுராணம் தோன்றிய வரலாறு, சுவாமிகள் வரலாறு, காவிய நயங்கள் உள்ளிட்ட விவரங்களைப் படித்து மகிழலாம்.

ஈசான சிவ ஆனந்தமீனாக்ஷியின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்

கட்டுரையில் பார்வதியின் தோற்றம், பராசக்தியின் வடிவம், அருள் சக்தி, முருகன் வேல் பெறுதல் உள்ளிட்ட அரும் செய்திகள் தரப்படுகின்றன.

திரு தி. மீனாட்சிசுந்தரத்தின் கந்தபுராணத்தில் சிவஸ்தலங்களின் மகிமை கட்டுரையில் கேதார்நாத், காசி, ஶ்ரீ சைலம், ஶ்ரீ காளஹஸ்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவெண்ணைநல்லூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட தலங்களின் பெருமையும் அருமையும் விவரிக்கப்படுகின்றன.

 இறுதியாக உள்ள சிவ. கோமதி திருநாவுக்கரசின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம் கட்டுரையானது மாயையைப் பற்றி நிற்கும் உயிர்கள் அடையும் தடுமாற்றமும் ஆணவமலத்தின் உருவான சூரபன்மனின் ஆணவக் கொட்டம் அடக்கப்பட்ட விதத்தையும் சித்தரிக்கிறது.

 அனைத்துக் கட்டுரைகளும் ஆய்வின் அடிப்படையில் அமைந்திருப்பதால் கந்தபுராணத்தின் சீரிய சிறப்பும் அதில் உள்ள உள்ளார்ந்த ரகசியங்களும் முருகப் பெருமானின் வழிபாட்டின் மேன்மையையும் அது அருளும் பலன்களையும் கண்டு வியக்கிறோம்;பிரமிக்கிறோம்.

 கட்டுரை ஆசிரியர்கள் அனைவரும் நமது பாராட்டுக்கு உரியவர்கள்; இதைத் தொகுத்து அரும்பணி ஆற்றியுள்ள பதிப்பாசிரியர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

நூலின் விலை ரூ 150 பக்கங்கள் 124

கிடைக்குமிடம்: கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி, 606213

தொலைபேசி எண்: 97518 48933

**

Leave a comment

Leave a comment