Post No. 14,426
Date uploaded in London – 23 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாம் தமிழர்களாகப் பிறப்பதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ; காரணம் என்னவெனில் உலகத்தின் இரண்டு பெரிய மொழிகளில் உள்ள இலக்கியங்களை அவர்கள் சொந்த மொழியிலும் மொழிபெயர்ப்பிலும் படிக்க முடிகிறது திருவள்ளுவரையோ, புறநாநூற்றையோ, சிலப்பதிகாரத்தையோ பாரதி பாடல்களையோ ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ மொழிபெயர்த்தால் தமிழ்ச் சுவை இராது ; சம்ஸ்க்ருத்தில் உள்ள காளிதாசன் காவியங்களையும், வேதாந்த தேசிகர் ,முத்துசுவாமி தீட்சிதர் வரையுமுள்ள பேரறிஞர்கள் எழுதிய சம்ஸ்க்ருதப் பாடல்களையும் நாம் அப்படியே தமிழிலும் படிக்க முடிகிறது. குறிப்பாக லிப்கோ வெளியிட் ட காளிதாசனின் நூல்கள் , மற்றும் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் மொழிபெயர்த்த மிருச்சகடிகம் ( மண்ணியல் சிறுதேர் ) நூல் முதலியவற்றைப் படிப்போர் கொடுத்து வைத்தவர்களே ; பெரும் பாக்கியசாலிகள் .
ஷேக்ஸ்பியர் எழுதியதை ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் ; அது போல சம்ஸ்க்ருத நூல்களையும் அந்த மொழியில் படிக்கவேண்டும் ; அது முடியாதவர்கள் அறுபது பெரியோர்களின் பெயர்களையாவது படிக்கலாம். அவர்களுடைய நூல்களை அடுக்குவதற்கு வீட்டில் ஒரு லைப்ரரியே தேவைப்படும் .
இவர்கள் வேத காலத்துக்குப் பின்னர் தோன்றியவர்கள்; நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிலிருந்து சில நூற்றா ண்டுகளுக்கு முன்னர் வரை சம்ஸ்க்ருத மொழியில் அமிர்த மழை பொழிந்தவர்கள் ஆவார்கள்.
இதோ அந்தப் பட்டியல்
1.காளிதாசன்
காளிதாசன் எழுதிய காவியங்கள்தான் மேலை உலகில் முதலில் பிரபலமாயின ; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கவிஞன், நாடக ஆசிரியன் , காவியம் படைத்தோன் காளிதாசன் ; இவனது கவிதைகள் குப்தர் கால கல்வெட்டிலும் உள்ளது
எழுதிய நூல்கள் ஏழு ; இதுதவிர நிறைய தனிப்பாடல்களும் உள.
சாகுந்தலம், விக்ரம ஊர்வசீயம், மாளவிகா அக்நிமித்திரம் ஆகிய நாடகங்களையும் ரகுவம்சம், குமார சம்பவம், மேகதூதம் , ருது சம்ஹாரம் ஆகிய காவியங்களையும் கவிதைகளையும் படைத்தான். 1500 உவமைகளை நமக்கு அளித்தான். அதில் இருநூறு உவமைகளை சங்கப் புலவர்கள் பயன்படுத்தினர் இவரது நூல்களைப் பார்த்து கபிலர் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்க நூலைப் படைத்ததாக ரெவரெண்ட் ஜி யு போப் முதலியோர் சொல்கின்றனர்.
****
2.பாஷா
காளிதாசனுக்கும் முந்திய நாடக ஆசிரியன் பாஷா ; இவனது பதிமூன்று நாடகங்கள் கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன அவற்றில் மிகவும் புகழ்பெற்றது ஸ்வப்னவாசவ தத்தம் என்னும் நாடகம் ஆகும்.
ராமாயணம் பற்றிய நாடகங்கள்
ப்ரதிமா நாடக, அபிஷேக நாடக,
மஹாபாரதம் பற்றிய நாடகங்கள்
தூத வாக்ய, மத்யம வ்யாயோக , கர்ணபார, தூத கடோத்கச , ஊருபங்க, பஞ்சராத்ர,
கிருஷ்ணர் பற்றிய நாடகம் – பாலசரித
பெருங்கதை /பிருஹத்கதா பற்றிய நாடகங்கள் -ஸ்வப்ன வாசவ தத்த, பிரதிக்ஞா யவ்கந்தராயண , அவிமாராக, சாருதத்த.
****

3.அபிநந்த – ராமசரித என்ற கவிதை நூலை யாத்தவர் ; பால வம்ச அரசவைப் புலவர்; காலம் – ஒன்பதாம் நூற்றாண்டு.
ஸந்த்யாகர் நந்தி என்றும் பெயர். சிலேடைகள் மிகுந்த ராமாயணத்தை இவர் இயற்றினார் ராமபால என்ற பால வம்ச மன்னர் பற்றி யும் எழுதினார்.
****
4.அமரு
அமருசதகம் என்ற பெயரில் நூறு காதல் கவிதைகளை எழுதினார் இவரது காலம் ஏழாம் நூற்றாண்டு.
****
5.அசக
கர்நாடகத்தைச் சேர்ந்த சமண மதப் புலவர் ;திகம்பர சமண ப் பிரிவைச் சேர்ந்த இவர் வர்த்தமான சரிதம் என்ற பெயரில் மஹாவீரர் வாழ்க்கையினை எழுதியுள்ளார் ; காலம்- ஒன்பதாம் நூற்றாண்டு.
****
6.அஸ்வகோஷர்
புத்த மத விஷயங்கள் பெரும்பாலும் பாலி மொழியில்தான் இருக்கின்றன ; இவர் காளிதாசனையும் வால்மீகியையும் காப்பி அடித்து புத்தசரிதம் என்ற நூலினைப் படைத்தார் ; அது புகழ்பெறவில்லை; மேலும் இப்போது நமக்கு கிடைத்த நூல் முழு நூலாகக் கிடைக்கவில்லை; வெள்ளைக்காரர்கள் அங்குமிங்கும் கிடைத்த விஷயங்களையும் மொழிபெயர்ப்புகளையும் ஓட்டுப்போட்டு நூலாகப் படைத்துள்ளனர் . காலம் -முதல் நூற்றாண்டு.
****
7.அதுல
மூஷிக வம்சம் என்ற கேரள அரசர்கள் பற்றி இவர் படைத்த நூலின் பெயர் – மூஷிக வம்ச. இவரது நூல் இல்லாவிடில் அந்த வம்சம் பற்றிய தகவலே இல்லாமல் போயிருக்கும். காலம் 11 ஆம் நூற்றாண்டு.
TO BE CONTINUED……………………………….
TAGS- சம்ஸ்க்ருத மழை, அறுபது கவிஞர்கள் , PART 1