Post No. 14,427
Date uploaded in London – 23 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 7-LAST PART
121.சுரயவர்த்தா -8-9-79; தலையில் அடிக்கடி ஏற்படும் நரம்பு வலி
122.ஸ்வர க்ஷய 1-24-15 குரலை இழத்தல்
123.தாலுவித்ருத்தி 6-12-77 வாயின் மேற்புறத்தில் புண்
124.தமசு 1-20-11 பலத்தையும் சக்தியையும் இழத்தல் /ஆயாசம் /முழுச் சோர்வு
125.தமோதிதர்சன 1-24-15 அடிக்கடி வலிப்பு வந்து மயக்கம் போடுதல்
126.திமிர 1-20-11 ஓரளவுக்கு கண்பார்வையை இழத்தல்
127.த்ரிஷன 6-22-57 தாகம் எடுப்பது தொடர்பான நோய்கள்- ஐந்து வகைகள்
128.த்வகவிதாரண 1-20-14 உலர்ந்த சருமம், சொரசொரப்பான தோல்
129.உதரரோக 6-13-9 வயிற்று நோய்கள்
130.உதர்த்த1-20-17 தோல் அரிப்பு
131.ஊனபதங்குசனியக விகார 3-34 பெருமளவு நோய் பராவுதல்
132.உன்மத்த – பதினைந்து வகை -6-9 பைத்தியம், மனக்கோளாறுகள்
133.உப ஜிஹ்விக 6-12-77 சலவை , நாக்குப்புண்
134.உப குஷ 6-12-78 பாக்டீரியாக்களினால் ஈற்றில் புண் /ஈறு அழற்சி
135.ஊரு சத 1-20-11 தொடையில் ஏற்படும் நலிவு, பலவீனம்
136.ஊரு ஸ்தம்ப 6-27 தொடையில் ஏற்படும் பக்கவாதம்
137.உத் சந்த்ர 6-25-58 உடலுக்குள் உறுப்புகள் இடம்பெயர்தல்
138.வாத பலச 6-29-11 முடக்கு வாதம், வாத நோய்கள்
139.வாதஸ்தில 8-9-36 மல, மூத்திர உறுப்புகளில் தோன்றும் கட்டி
140.விதலிக 6-12-76 இருதயத்தைப் இழிவது போல கடும் வலி
141.விதாரிக 6-12-89 தொடை இடுக்கில்/ கவட்டைப் பகுதியில் கட்டி, வீக்கம்
142.விலோம 6-25-118 வழுக்கை, சொட்டைத் தலை , முடி இழக்கும் நோய்
143.விசர்ப்ப – ஏழு வகை -6-21-29 வீக்கம் பரவுதல்
144.விஷம ஜ்வர- 6 வகை- அடிக்கடி வரும் காய்ச்சல்
145.விஷு சிக 3-2-14 காலரா நோயால் வயிற்றுப போக்கு
146.வ்ரதன 6-12-94 நீடித்திருக்கும் வீக்கம்
147.வ்ரண 6-25 புண்கள்- 44 வகைகள் இருக்கின்றன
148.வ்ரிஷன க்ஷேப 1-20-11 விரை , விதைப்பை, விதைக்கொட்டையில் ஏற்படும் வலி, வீக்கம்
149.யோனிரோக- 17 வகை – 6-30 பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் நோய்கள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நோய்களை வகைப்படுத்தி அவைகளுக்கு மருந்து, சிகிச்சைகளையும் சம்ஸ்க்ருதத்தில் எழுதியது போல உலகில் வேறு எந்த மொழியிலும் மருத்துவ நூல்கள் எழுதப்படவில்லை.
சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவரும் விரிவான மருத்துவ நூல்களை அளித்துள்ளனர். அவை தவிர அஷ்டாங்க ஹ்ருதயம் நவநீதகம் போன்ற பிற்கால நூல்களும் நமக்கு நிறைய தகவல்களை அளிக்கின்றன. தமிழில் அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற பலருடைய பெயர்களில் பல நூல்கள் உள்ளன ; அவை காலத்தால் மிகவும் பிந்தியவை என்பதை அவற்றின் மொழியும், நடையும், சம்ஸ்கிருதத் சொற்களும் காட்டிவிடுகின்றன .
–SUBHAM—-
TAGS- சரக சம்ஹிதை, 149 நோய்கள், PART 7, last part