Post No. 14,431
Date uploaded in London – 24 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான மருத்துவ நூல்கள் சரக சம்ஹிதையும் சுஸ்ருத சம்ஹிதையும் ஆகும்; இவற்றில் சம்ஸ்க்ருத மொழியில் கண்டுள்ள மருத்துவ விஷயங்கள் அந்தக் காலத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை . அதற்கும் முன்னதாக அதர்வ வேதத்தில் பல மருத்துவச் செய்திகள் இருந்தபோதிலும் அவை ஒரு சில தகவலே ஆகும். மேலும் வேத கால இலக்கியங்கள் சமய நூல்கள்; மருத்துவ நூல்கள் அல்ல .
மூன்றாவது முக்கிய நூல் அஷ்டாங்க ஹ்ருதயம் ஆகும் . இது தவிர வாத்ஸ்யாயனர் எழுதிய காமசாஸ்திரத்திலும் மருத்துவச் செய்திகள் உள்ளன .
****
சீனாவில் அதிசயக் கண்டுபிடிப்பு
வடமேற்கு சீனாவில் குச என்னும் நகரில் ஒரு புத்த விஹாரத்தில் புதைக்கப்பட்டிருந்த சமஸ்க்ருத ஆயுர்வேத சுவடிகளை போயர் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார்; ஏழு பகுதிகளாகக் கிடைத்த இந்த சுவடிகளில் உள்ளிப் பூண்டின் மகத்துவம் முதலியன விவரிக்கப்பட்டுள்ளன . இவை குப்தர் கால லிபியில் எழுதப்பட்டுள்ளதால் குறைந்தது 1600ஆண்டுகள் பழமை ஆனவை; பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஹாமில்டன் போயர் Hamilton Bower இவைகளைக் கண்டுபிடித்தார் (The Bower Manuscript is a collection of seven fragmentary Sanskrit treatises found buried in a Buddhist memorial stupa near Kucha, northwestern China.)
மூன்று முக்கிய நூல்களில் என்ன உள்ளன என்பதைக் கண்டால் அவைகளின் வீச்சு , தாக்கம் நமக்குத் தெரியும்
சரக 1-30-31, சுஸ்ருத 1-1-7, அஷ்டாங்க ஹ்ருதய 1-1-5 நூல்களில் பொதுவான எட்டு அத்தியாங்கள் உள்ளன. அவையாவன-
1.உள்ளுக்குள் கொடுக்கப்படும் மருந்து – காய சிகித்சா
2.குழந்தை மருத்துவம் – பால சிகித்சா- கெளமார பிருதிய
3.மனம் தொடர்பான மருத்துவம் – பூத வித்யா அல்லது கிரஹ சிகித்சா
4.சிறிய அறுவைச் சிகிச்சைகள் – சாலக்ய தந்த்ர
5.அறுவைச் சிகிச்சை- சல்ய தந்த்ர
6.விஷமருத்துவம் – அகாத தந்த்ர
7.முதியோர் மருத்துவம்- ரசாயன தந்த்ர
8.பாலுணர்வுக்கு உதவும் காம ரஸ குளிகைகள்.
இதில் அறிவியல் அணுகுமுறையைக் காணலாம் குழந்தைப் பருவ , இளமைப்பருவ, முதியோர் பருவ நோய்களை அத்தியாயம் அத்தியாயமாக அணுகுகின்றனர்; மேலும் இளைஞர்களுக்குத் தேவையான குளிகை விஷயங்களும் பேசப்படுகின்றன.
மேற்கண்டவை பொதுவான அணுகுமுறை ஆகும்
****
குறிப்பாக எட்டு அத்தியாயங்களை சரக சம்ஹிதையில் காண்கிறோம்:
அத்தியாயம் 1 – சூத்ர ஸ்தான – பொதுவான மருத்துவ விதிகள்
2.நிதான ஸ்தான- நோயின் காரணம் (அ) தோற்றம் பற்றிய ஆய்வு
3.விமான ஸ்தான – நோயின் அறிகுறிகள் – சுவை – பத்தியம்
4.சரீர ஸ்தான- கருவுருதல், உடற்கூறுகள்
5.இந்திரிய ஸ்தான- நோயைக் கண்டுபிடித்தல்
6.சிகித்சா ஸ்தான- சிகிச்சை அளிக்கும் முறைகள்
7.கல்ப ஸ்தான – என்ன என்ன மருந்துகள் கொடுக்கலாம்.
8.சித்தி ஸ்தான- பேதி மருந்துகள்; அசுத்தங்களை உடலிலிருந்து அகற்றும் முறைகள்
****
சுஸ்ருத சம்ஹிதை அத்தியாயங்கள்
சூத்ர, நிதான, சரீர, சிகித்சா, கல்ப ஆகிய ஐந்து ஸ்தானங்களை வைத்துக்கொண்டு ஆறாவது அத்தியாமாக உத்தர ஸ்தானம் என்று ஒரு அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது; இதில் மூக்கு அறுவைச் சிகிச்சை, மனக்கோளாறுகள், குழந்தை நோய்கள், பொதுவான மருத்துவக் கொள்கைகள்/விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் திரிதோஷ – வாத ,பித்,த கப — அணுகுமுறை பொதுவாக இருக்கிறது இதை வள்ளுவர் குறளிலும் காண்கிறோம் .
****
சீனாவில் கண்ட சம்ஸ்க்ருத சுவடிகள்
போயர் கண்டுபிடித்த சுவடிகளில் நவநீதகம் , சித்த சங்கர்ஷ என்ற இரண்டு நூல்களின் துண்டுப் பகுதிகள் கிடைத்திருக்கின்றன . அதில் 13 விஷயங்கள் காணப்படுகின்றன-
1.சூர்ணங்கள் தயாரிப்பது எப்படி?
2.நெய்யை மருத்துவ முறையில் பக்குவப்படுத்தல்
3.மருத்துவ எண்ணெய்கள் / தைலங்கள்
4.எனிமா – மலக்குடலை தண்ணீர் செலுத்திக் கழுவும் முறை
5.ஊட்டச்சத்து / டானிக்
6.கஞ்சி வகைகள்
7.காம உணர்வுக்கான குளிகைகள்
8.கண் மை/ அஞ்சனம்
9.தலை முடிக்கு சாயம்
10.கடுக்காய் மருத்துவம்
11.தார் – கரிப்பிசின் பயன்கள்
12.சித்ர மூலம் குணங்கள்
13.குழந்தை மருத்துவம்
****
சுவையான விவரம்
அமிர்தத்தைத் திருடிய அசுரர் தலைகளை விஷ்ணு வெட்டி வீழ்த்தினார் என்றும் அந்தத் தலைகள் விழுந்த இடத்தில் உள்ளிப்பூண்டுகள் விளைந்ததால் அவைகளை பிராமணர்கள் சாப்பிடமாட்டார்கள் என்றும் ஒரு சுவடியில் உள்ளது ; அதில் உள்ளிப்பூண்டுகளை வீட்டில் தொங்கவிடும் விழா பற்றியும் இருக்கிறது!
–subham—
Tags- சீனாவில் ,சம்ஸ்க்ருத சுவடிகள் , நவநீதகம் , சித்த சங்கர்ஷ, மேஜர் ஜெனரல் ஹாமில்டன் போயர், மூன்று முக்கிய மருத்துவ நூல்கள், சரக சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை, அஷ்டாங்க ஹ்ருதயம்