Post No. 14,434
Date uploaded in London – 25 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிராகிருத மொழி பற்றிய குறிப்பு
சம்ஸ்க்ருதம் என்பது இலக்கிய மொழி வழக்கு ; பிராகிருதம் என்பது பேச்சு வழக்கு ; காளிதாசனின் புகழ் மிகு சம்ஸ்க்ருத நாடகங்களில் பெண்களும் ஊழியர்களும் பிராகிருதத்தில் கதைப்பார்கள்; புலவர்களும் மன்னர்களும் புரோகிதர்களும் சம்ஸ்க்ருதத்தில் பேசுவார்கள். சம்ஸ்க்ருதம் அறிந்த எவரும் ப்ராக்ருதத்தைப் புரிந்து கொள்ளலாம் ; ஆர்ய என்பதை அஜ்ஜ என்பார்கள்; அது தமிழில் அய்யர் என்றாகிவிடும்! இதைப்புரிந்து கொள்ள திருவிளையாடல் என்னும் திரைப்படம் உதவும் ; சிவாஜி கணேசன் விறகுவெட்டியாகப் பேசுவது தமிழ் பிராகிருதம் ; அவரே புலவராகப் பாடுவதும் பேசுவதும் தமிழ் சம்ஸ்க்ருதம். தமிழ் நாவல்கள் , சினிமாப்பாட்டுகள் பிராகிருதம்; பாரதியார் கண்ணதாசன் கவிதைகள் தமிழ் சம்ஸ்க்ருதம் ; இதனால் ஹால போன்ற மன்னரின் காதா சப்த சதி இதில் உள்ளது ; ஆயினும் அறுபது கவிஞர்களுக்கு மேலேயும் நாம் இந்தக் கட்டுரைத்தொடரில் காணப்போகிறோம்.
18.தாமோதர மிஸ்ரா
ஹநுமான் நாடக என்னும் நூலை எழுதியவர். காலம் பத்தாம் நூற்றாண்டு. இந்த நாடகத்தில் 14 காட்சிகள் / அத்தியாயங்கள் உள்ளன ராமபிரான் பிறப்பிலிருந்து ராவணாவதம் வரையுள்ள இதில் ஆறாவது அங்கத்தில் அனுமான் தூதராக அறிமுகப்படுத்தப்படுகிறார் ; அதிகமான அங்கங்கள் இருப்பதால் இது மஹாநாடகமென்ற பிரிவில் உள்ளது
19.தனேஸ்வர
பிராகிருத சூரசுந்தரி நாவலை கவிதை வடிவத்தில் எழுதினார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவரது காலம் பதினோராம் நூற்றாண்டு.
19.தர்மகீர்த்தி
பெளத்த சமய தத்துவ வித்தகர் ; காலம் ஏழாம் நூற்றாண்டு
நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் பிராமாணவார்த்திகா என்ற பெரிய தத்துவ நூலை எழுதினார் இவர் தென்னிந்தியாவில் பிறந்த பிராமணர் என்றும் குமாரிலபட்டரின் உறவினர் என்றும் திபெத்திய படைப்புகள் கூறுகின்றன.
20.திவாகர
ஹர்ஷ மன்னர் அரசவைப் புலவர்களில் ஒருவர் . காலம் ஏழாம் நூற்றாண்டு. மாதங்க திவாகர சண்டாள/ தலித் குலத்தில் பிறந்தவர் ; ஹர்ஷரின் அரசவைப் புலவர்களில் ஒருவர் ; ஜாதி வேறுபாடுகள் அக்கால இந்தியாவில் இல்லை என்பதற்கு இவர் எடுத்துக் காட்டு.
21.ஹர்ஷ 606-647 CE
மன்னர்களில் புலமை பெற்ற ஆசிரியர்- எழுத்தாளர் இவர் ; புலவர்களை எல்லாம் ஆதரித்த மன்னரே ரத்னாவளி, ப்ரியதர்சிகா, நாகானந்தம் ஆகிய புகழ்பெற்ற நாடகங்களை எழுதினார்.
22.மஹேந்திர வர்மன் 600-630 CE
மிகப்பெரிய புலவன் ; மாமன்னன்; ஓவியன் ; கலைஞன் . நாடக ஆசிரியன் ;இவன் எழுதிய மத்தவிலாஸ பிரஹசணம் என்ற நாடகம் சம்ஸ்க்ருத மொழியில் எழுந்த நல்ல நகைச்சுவை நாடகம் ; புத்தமதம் மற்றும் காபலிக மதம் ஆகியன எப்படிச் சீரழிந்தன என்பதைக் காட்டும் நாடகம் இது ; ஓவியக்கலையில் வல்ல மன்னன் பல குடைவர்க் ரை கோவில்களையும் தோற்றுவித்தான் ; அப்பர் பெருமானால் மீண்டும் சைவ சமயத்துக்குத் திரும்பினான்; சிம்ம விஷ்ணுவின் மகன்.
23. போதாயன
இவனது காலத்தில் போதாயனஎன்ற ஆசிரியர் பகவத்தாதஜுகம் என்ற இன்னும் ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதியதை மன்னரே மாமண்டூர் கல்வெட்டில் கூறியுள்ளார்
During his period “Bhagwatajjukam”, another satire (prahasan), was written by Bodhayan. King Mahendravarman mentioned this on a stone inscription in Mamandur along with his own Mattavilas Prahasan
1400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் சம்ஸ்க்ருத மொழி எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு இது ஒரு சான்று. காஞ்சிபுரத்தில் இருந்த பல்கலைக் கழகம் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் ஒருங்கே வளர்த்தன . அப்பர் பெருமான் பாடல்களில் தமிழின் வளர்ச்சியைக் காணலாம். அவர் சங்க கால பிராமண நக்கீரன்- பிராமணப் புலவன் தருமி ஆகியோருக்கு இடையே நடந்த மோதலையும் பாடலில் குறிப்பிடுகிறார். சேர நாட்டைச் சேர்ந்த ஆதிசங்கரர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதியதை கணக்கிட முடியாது.
24.கோவிந்தா
ஸ்வயம்பூசந்தஸ் என்ற நூலில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவை அபிப்பிராம்ச என்னும் கிளை மொழியில் உள்ளது காலம் எட்டாம் நூற்றாண்டு
25.ஹால
சாதவாகன மன்னனர்; காதல் கவிதைகளை பிராகிருதம் மொழியில் தொகுத்தார். காதா சப்த சதி என்னும் பெயரில் எழுநூறு கவிதைகள் உள்ளன. காலம் இரண்டாம் நூற்றாண்டு
26.ஹரிபட்ட
புத்தமத துறவி; ; காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ; காலம் 12ஆம் நூற்றாண்டு; ஆர்யசுராவின் ஜாதகமாலை போல இவர் முப்பத்து நான்கு கதைகளை ஜாதகமாலை என்ற பெயரில் பாடல் வடிவில் கூறியுள்ளார்
27.ஜகந்நாத
ஷாஜஹான் ஆண்ட காலத்தில் வாழ்ந்த இவர் பாமினி விலாச, ரசகங்காதாரே முதலிய பல நூல்களை எழுதினார் ; காலம் 17ஆம் நூற்றாண்டு.
28.ஜயதேவ
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த இவர் எழுதிய கீத கோவிந்தம் என்ற நூலின் அஷ்டபதி பாடல்களை இன்றும் பஜனைகளில் கேட்கலாம். நாயகன்- நாயகி பாவத்தில் கிருஷ்ணனைப் புகழும் பாடல்கள் அவை. புத்தரை பத்தாவது அவாதாரங்களில் ஒன்றாகப் புகழ்ந்து புத்த மதத்தைக் கபளீகரம் செய்த பெருமை உடையவர் ; காலம் 12 ஆம் நூற்றாண்டு
29.கலசக
காஷ்மீர் மன்னர்- புலவர் – காலம் பத்தாம் நூற்றாண்டு
30.குதுகால
லீலாவதி என்ற பிராகிருத நூலை எழுதியவர் ; காலம் எட்டாம் நூற்றாண்டு
31.க்ஷேமந்திர
காஷ்மீர் புலவர்; பல்மொழி வித்தகர் காலம் 11ஆம் நூற்றாண்டு.
காஷ்மீர் மாநிலப் புலவர்களில் மிகவும் பிரபலமானவர் க்ஷேமேந்திரா; இவர் புலவர் மட்டுமல்ல; நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் கூட . இவரை வால்டேருக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்துள்ளார் கல்ஹணரின் ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆர் எஸ் பண்டிட். க்ஷேமேந்திரா , குணாத்யர் எழுதிய பிருஹத் கதாவை சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்தார் தன்னை வியாஸதாஸர் என்று அழைத்துக்கொண்டார் மஹாபாரதத்தை கவிதை வடிவில் பாரத மஞ்சரி என்ற பெயரில் எழுதினார் . ஏனைய நூல்கள் – நார்மமாலா, கவி கண்டாபுரண , சமய மாத்ரிகா . ஒரு வேசியின் துணிகரச் செயல்களைக் கூறும் கவிதை சமய மாத்ருகா நூலாகும்.
32.க்ஷேமீஸ்வர
கூர்ஜர பிரதிகார மன்னர் மஹீபால காலப் புலவர் ; சந்திரகெளசிக, நைஷதந்த போன்ற நாடகங்களின் ஆசிரியர்; காலம் பத்தாம் நூற்றாண்டு
33.குமாரதாஸ
ஜானகிஹரண என்ற காவியத்தைப் படைத்தவர் ; காலம் ஏழாம் நூற்றாண்டு
34.மாக
மிகவும் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவர் ; சிசுபாலவதம் என்ற காவியத்தை எழுதியவர்; காலம் ஆறாம் நூற்றாண்டு
To be continued…………………………..
Tags- மாக, க்ஷேமந்திர, நாடக ஆசிரியர்கள், சம்ஸ்க்ருத மழை, பகுதி 3, கவிஞர்கள் ஜயதேவ , கீத கோவிந்தம் , மஹேந்திர பல்லவன், கால, ஹர்ஷ, பிராகிருதம்