
Post No. 14,436
Date uploaded in London – –26 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நூல் அறிமுகம்
கந்தபுராணத்தில் சிவபரத்துவம் – தொகுதி 2
நூலாசிரியர் : சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம்

கந்தபுராண ஞானஸபை,, கள்ளக்குறிச்சியின் வெளியீடாக வந்துள்ள நூல் கந்தபுராணத்தில் சிவபரத்துவம் – தொகுதி 2
15 கட்டுரைகள் அடங்கியுள்ள இந்த நூலை எழுதியவர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள்.
ஶ்ரீமத் கச்சியப்ப சிவாசாரியார் பாடியருளிய கந்தபுராணம் முருகப்பெருமானது அவதாரச் சிறப்பையும், சிவபெருமானின் பரத்துவத்தையும் மேன்மையையும் தெள்ளிய தமிழ்ச் செய்யுள்களில் அருளும் நூலாகும்.
முதல் தொகுதியில் 23 கட்டுரைகள் தொகுத்துத் தரப்பட்டதை அடுத்து இரண்டாம் தொகுதியாக வெளிவரும் இந்த நூலில்,உள்ள அத்தியாயங்கள் கீழ் வருமாறு:
ஏறு கொண்ட கொடி ஈசன்
சிவ வரம் பெற்றோர் வெற்றிக்குரியவர் (உக்ரனின் சிவப்பற்றும் வெற்றியும்)
பாசம் நீக்கும் ஐந்தெழுத்து
ஆலமார் வனத்து எம்பிரான்
இரணியன் சிவபரத்துவம் உரைத்தல்.
சிவபக்தர்களை எமன் நெருங்கான்
சிவபக்தர்கள் உயிர் கயிலையே செல்லும்
சைவ சமயத்தின் வினைக் கொள்கை
வில்வார்ச்சனையால் பெற்ற பெருவாழ்வு (முசுகுந்த மன்னன் வரலாறு)
முருகப் பெருமான் செய்தருளிய சிவபூஜை
சிவாஸ்திரத்தின் மகிமை
பூரண முதல்வன்
ஈறொடு முதலும் இன்றி எழுந்தமலை (அண்ணாமலை)
கந்தபுராணத்தில் சிவபரத்துவ தொடர்கள்
கந்தபுராணத்தில் சிவபெருமானின் சிறப்புமிகு திருநாமங்கள்
கந்தபுராண ஞானஸபை ஆற்றிவரும் பணிகள் மற்றும் தொண்டுகள் பற்றிய ஒரு குறிப்பையும் நூலின் இறுதியில் காணலாம்.
கந்தபுராணத்தில் சிவபரத்துவத் தொடர்கள் அத்தியாயத்தில் 139 சிவபரத்துவத் தொடர்களைக் கண்டு பிரமிக்கலாம்.
கந்தபுராணத்தில் சிவபெருமானின் சிறப்புமிகு திருநாமங்கள் அத்தியாயத்தில் 55 சிவபிரானின் நாமங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.
கந்தபுராண செய்யுள்கள் ஆங்காங்கே மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளது.
கந்தபுராணத்தை நன்கு ஆராய்ந்து காலத்திற்கேற்றபடி இப்படி ஒரு நூலைத் தொகுத்து வழங்கியுள்ள சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள் நமது பாராட்டுக்கு உரியவர்.
இந்நூலுக்கு அருள்வாழ்த்துரையை பெருங்குளம், திருக்கயிலாய பரம்பரை, செங்கோல் ஆதீனம் 103வது குருமஹா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய ஸ்வாமிகள் அவர்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
நூலுக்கு வாழ்த்துரையை திருப்பனந்தாள் காசித் திருமடம் ஶ்ரீலஶ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் அவர்களும், மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சிவஶ்ரீ ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் அவர்களும் தந்து சிறப்பித்துள்ளனர்.
நூலின் விலை ரூ 150 பக்கங்கள் 148
கிடைக்குமிடம்: கந்தபுராண ஞானஸபை, கள்ளக்குறிச்சி, 606213
தொலைபேசி எண்: 97518 48933
**