சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 4 (Post No.14,437)

Written by London Swaminathan

Post No. 14,437

Date uploaded in London –  26 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

35.கல்ஹணர்

காஷ்மீரின் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத கவிஞர் கல்ஹணர்; இவரை வெள்ளைக்கார்கள் மெத்தப் புகழ்வர். புராணங்களில் 140 தலைமுறை மன்னர்களின் பெயர்கள் இருந்தாலும் வருஷம் குறிப்பிடவில்லை. கல்ஹணர்தான் முதல் முதலில் வருஷத்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதினார் என வெளி நாட்டினர் விளம்புவர். ஆனால்  கல்ஹணரின் கலியுகக் கணக்கு இந்துக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது போல கி.மு 3102 துவங்குவது அல்ல, இவர் கி.மு 2600 வாக்கில் என்று செப்புவார். கல்ஹணர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.

காஷ்மீரின் வரலாற்றை கல்ஹணர் , 3400-க்கும் மேலான சம்ஸ்கிருத பாக்கள் மூலமாக எழுதினார். அப்புத்தகத்தின் பெயர் ராஜதரங்கிணி. அதில் பல அதிசயமான விஷயங்களும் சுவையான செய்திகளும் உள. திராவிட என்ற சொல்லை அவர் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார். இந்த நூல் சுமார் 1000 ஆண்டு பழமை உடைத்து.

36.மனோவினோத

பல கவிதைத் தொகுப்புகளில் மனோவினோத என்ற புலவரின் தனிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வரைபற்றிய வேறு விவரம் கிடைக்கவில்லை .மனோவினோத என்பது இருடைய புனைப்பெயர். இவர் வங்காளத்தைச் சேர்ந்த 12- ஆம் நூற்றாண்டு கவிஞர்.

37.முராரி

அனார்கராகவ என்ற நாடகத்தை எழுதியவர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பதாம் நூற்றாண்டு ஆசிரியர்.

38.விஷ்ணுசர்மன்

விஷ்ணு சர்மா எழுதிய நூலின் பெயர் பஞ்சதந்திரம்

அவர்  80 வயதுப் பிராமணன் . அவரது ஊர் மயிலாப்பூர் , தமிழ் நாட்டிலுள்ள மயிலாப்பூர்/ Madras! விஷ்ணு சர்மா சம்ஸ்க்ருதத்தில் எழுதியதால் இதை மகிழாரூப்யம் என்று எழுதியுள்ளார். எண்பதுக்கும் மேலான கதைகள் உள்ளன. அத்தனையிலும் மிருகங்கள், பறவைகள், மற்றும் அசட்டுப் பிராமணன்– கதா பாத்திரங்கள்.

அவர் எழுதிய ஒரிஜினல் இல்லை ; ஒருவேளை நாளந்தா நூலகத்தை முஸ்லீம்கள் எரித்தபோது கரியாகி இருக்கலாம்.

பாரசீக மொழியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்க்கப்பட்டது ; பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றியவுடன் அராபிய வணிகர்கள் மூலம் ஐரோப்பாவுக்குப் பரவியது.

ஐம்பதுக்கும் மேலான மொழிகளில் இது வெளியாகியுள்ளது

பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்துமதக் கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பெளத்தர்கள் காப்பி அடித்து அவை எல்லாம் புத்தரின் பூர்வ ஜென்மம் ;போதி சத்துவர் அவர்; என்று பொய்யுரை பரப்பினர். அவைகளை ஜாதகக்கதைகள் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிவைத்தனர்; அதில் மஹாபாரதம், ராமாயணமும் உள்ளன.

ஆங்கிலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தவர் இதை பிட்பாய் என்று எழுதியுள்ளார் யார் அந்த பிட்பாய் ?  இது வித்யாபதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் அல்லது வாஜ்பேயீ என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் என்று ஆராய்சசியாளர்கள் முடிவு செய்துள்ளனர். ( Vajpeyee = Vidyapathi=Bidpai=பைபிளை) ஆங்கிலத்தில் The Fables of Bidpai (or Pilpai in various European languages, Vidyapati or Vajpeyee in Sanskrit) என்று முதலி வெளியாகியது .

ஆங்கிலத்தில் அண்மைக்காலத்தில் மொழிபெயர்த்தவர்

ஆர்தர் W. ரைடர் / Arthur W. Ryder, மற்றும்  டில்லி பல்கலைக்கழகப் பேராசிரியை சந்திரா ராஜன்

லா பாந்தேன் 400ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துறவி பிப்லாய் Bidpai or Piplai எழுதியது என்கிறார். அதை ஐரோப்பியர்கள் பிட்பை என்றும் மொழிபெயர்த்தனர்

39.நாராயண

ஹிதோபதேசம் என்ற பெயரில் பிராணிகள் பற்றிய கதைகளைத் தொகுத்து எழுதியவர் . பால வம்ச தவள சந்திரன் காலத்தவர்; காலம் பத்தாம்  நூற்றாண்டு . இதில் ஏராளமான நீதி மொழிகள் உள்ளன. காலம் எட்டாம் அல்லது ஓன்பதாம் நூற்றாண்டு.

40.நயசந்திர சூரி

சமண மதத் துறவியான இவர் ஹம்மீர  மஹாகாவ்ய என்ற நூலை எழுதினார் . ரந்தம்போர் என்ற இடத்திலிருந்து ஆண்ட மன்னர் வரலாற்றினை இது கூறுகிறது அவனை 1301-ஆம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜி என்ற முஸ்லீம் தளபதி போரில் கொன்றான்.

41.நீலகண்ட தீட்சிதர்

மதுரையை ஆண்ட திருமலை நாயகரின் (1623–16 February 1659 CE) அமைச்சராக இருந்தவர்  நீலகண்ட தீக்ஷிதர் . இவர் அப்பைய தீக்ஷிதரின் தம்பியான ஆச்சான் தீக்ஷிதரின் பேரனாவார். இவரது தந்தையார் மிக பிரசித்தி பெற்ற அறிஞரும் கவிஞருமான நாராயணத்வாரி ஆவார்.  அவர் 62 வயதுக்கு மேல் வாழ்ந்தவர் கண்களை இழந்த நிலையில் அவர் பாடிய  அற்புத நூல்  ஆனந்தஸாகரஸ்தவம் .

இவரது பாடல்களில் சொல் நயம், பொருள் நயம், கற்பனை நயம், நையாண்டி, அறிவியல் நோக்கில் விளக்கம், ஆழ்ந்த தெய்வ பக்தி, தனது சொந்த அனுபவங்களின் தொகுப்பு, மகான்களின் பெருமை உள்ளிட்ட ஏராளமானவற்றை உணர்ந்து ரஸிக்கலாம். நீலகண்ட தீக்ஷிதர் இயற்றியதாக 18 நூல்கள் உள்ளன. மஹாகாவியம் என்ற வகையில் சிவலீலார்ணவாகங்காவதரணம், முகுந்தவிலாஸம் ஆகிய மூன்று நூல்களும், நாடகம் என்ற துறையில் நளசரித்ரமும் சம்பு நூல் வரிசையில் நீலகண்ட விஜய சம்பு என்ற நூலும், கவிதை நூல்களில் அன்யாபதேச சதகம்கலிவிடம்பனம், சபாரஞ்ஜன சதகம், சிவோக்தகர்ஷ மஞ்சரி,  சிவதத்வ ரஹஸ்யம், ஆனந்தஸாகரஸ்தவம், சண்டிரஹஸ்யம், ரகுவீரஸ்தவம், குருதத்வமாலிகா, வைராக்ய சதகம், சாந்தி விலாஸம் ஆகிய பத்து நூல்களும், சமய சம்பந்தமான நூல்களுள் சௌபாக்ய சந்த்ராதபா என்ற நூலும் பாஷ்ய நூல்களுள் கையடரின் மஹாபாஷ்யப்ரதீபத்திற்கான ப்ரகாஸா என்ற நூலும் ஆக இப்படி 18 நூல்கள் அவரால் இயற்றப்பட்டவை.

42.ராஜசேகர

இவர் எழுதிய நூல்களில் மிகப்புகழ்பெற்றது காவ்ய மீமாம்ச ;இது கவிதை மற்றும் கவிஞனின் இலக்கணத்தை வரையரை செய்கிறது இவர் ஒரு கவிஞர், விமர்சகர், நாடக ஆசிரியரும் ஆவார் . இவர் எழுதிய ஏனைய நூல்கள் – கற்பூர மஞ்சரி வித்தசால பஞ்சிகா . இவரது காலம் பத்தாம் நூற்றாண்டு.

கூர்ஜர பிரதிகார வம்ச மன்னர்களின் அரசவைப்புலவர்.  மஹேந்திர பாலா, மஹிவம்ச மன்னர்களிடம் சேவை செய்தவர் .

43.ரவிகுப்தா

இவரது நூல்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஏனைய கவிதைத்தொகுப்பு நூல்களில் இவருடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன

44.அப்பைய தீட்சிதர்

வட ஆர்க்காடு மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் உள்ள அடையபலம் என்ற ஊரில் 1520ஆம் ஆண்டு பிறந்தார்.அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விநாயக சுப்ரமண்யன். தீக்ஷிதரின் தந்தையாரின் பெயர் ரங்கராஜாத்வாரி.   ராம கவி என்ற ஒரு வைஷ்ணவ ஆசாரியரிடமே அவர் தன் இளமைக் கல்வியைக் கற்றார். சிவ வைணவ பேதத்தை அகற்றி அத்வைத சித்தாந்தத்தைக் கடைப்பிடித்தவர். மிகச் சிறந்த பண்டிதரான அவர் 104 நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. உரைகளுக்கு உரை, மறுப்புரை என எழுதியவர்  பெரிதும் பாராட்டப்படும் நூல்கள் – பரிமளம் ,  சதுர்மத சாரம் ;அதில்  நயமஞ்சரி என்பது அத்வைதத்தையும், நயமணிமாலை என்பது  கண்டமதத்தையும் நய-மயூக மாலிகா ராமானுஜ சித்தாந்தத்தையும் நய முக்தாவளி என்பது மத்வருடைய சித்தாந்தந்த்தையும் விரித்துரைக்கிறது.

சித்தாந்தலேச  சங்கிரகம் மிகவும் பிரபலமான ஒரு நூல். அத்வைதம் பற்றிய அனைத்தையும் சொல்லும் நூல் இது.

ஆனந்த லஹரி சந்திரிகா என்ற அவரது நூல் பற்பல வித்தியாசமான தத்துவங்களை விளக்குகிறது.

வயதான காலத்தில் ஒரு நாள் அவர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் சென்று சந்நிதியில் நடராஜரோடு ஐக்கியமானார்.

அப்போது அவர் கூறிய ஸ்லோகம்பத்தியில் முடிந்தது . இதன் மீதி பாதியை அவரது சகோதரரின் பேரனான  நீலகண்ட தீக்ஷிதர் பின்னால் நிறைவு செய்தார்.    அப்பைய தீக்ஷிதர் 1593ஆம் ஆண்டு 73ஆம் வயதில் மறைந்தார்.

To be continued……………………………

Tags-

அப்பைய தீட்சிதர், ராஜசேகர, நீலகண்ட தீட்சிதர் ,நாராயண ,ஹிதோபதேசம், விஷ்ணுசர்மன், பஞ்சதந்திரம் ,கல்ஹணர்,சம்ஸ்க்ருத மழை,  அறுபது கவிஞர்கள் – PART 4

Leave a comment

Leave a comment