அதிகம் டிவி பார்ப்பதினால் ஏற்படும் 15 தீய விளைவுகள்! (Post No.14,440)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,440

Date uploaded in London – –27 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹெல்த்கேர் இதழில் ஏப்ரல் 2025 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

நெடுநேரம் டிவி பார்ப்பவரா? அபாய எச்சரிக்கை இது!

அதிகம் டிவி பார்ப்பதினால் ஏற்படும் 15 தீய விளைவுகள்! 

ச. நாகராஜன் 

எப்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை – 15 தீங்குகள் இதனால் ஏற்படும்!

என்னென்ன தீய விளைவுகள் – இதோ பார்க்கலாம்!

1)      உடல் எடை கூடுதல் : தொலைக்காட்சியை ஒரு இடத்தில் இருந்து உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தால் உடல் எடை கூடும். குண்டானதற்கு விசேஷமாக ஒரு காரணத்தை நீங்கள் தேட வேண்டிய அவசியமே இல்லை.

2)    தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து  வெளிவரும் ஒளியானது மெலடோனின் என்ற ஒரு முக்கியமான ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. (Suppresses the production of the key hormone – Melatonin). இது பாலின முதிர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்.

3)    உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். குறைந்த அளவே மெலடோனின் இருந்தால் அது உடல் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும். மரபணுக்களில் சிதைவு ஏற்படும். அதனால் கேன்ஸர் அபாயம் ஏற்படும்.

4)    குறைந்த அளவே மெலடோனின் இருந்தால் பூப்பெய்துவதை காலத்திற்கு முன்னாலேயே ஏற்படுத்தும். உடல் உறுப்புகளை ஊக்குவிப்பதால் தூக்கம் வராது.

5)    உடல் கொழுப்பு அதிகமாவதால் ஆடிஸம் வரலாம். ஏனெனில் லெப்டின் மற்றும் க்ரெலின் கொழுப்பைக் கூட்டி பசி உணர்வைத் தூண்டும். (Hormones Leptin and Ghrelin produce fat and boost appetite.)

6)    கவனக்குறைவு எல்லாவற்றிலும் ஏற்படும். கவனத்தை ஊக்குவிக்கும் மூளை செல்கள் பாதிக்கப்படும்.

7)    படிப்பதில் கஷ்டம் ஏற்படும். இளமையிலேயே மந்தமான புத்தி ஏற்படும்.

8)    தொலைக்காட்சியைப் பார்த்தக் கொண்டே உணவை உண்பதால் அதிக கலோரிகள் உள்ள உணவு உள்ளே செல்வதால் டைப் 2 டயபடீஸ் ஏற்படும்.

9)    டி.வி. பெட்டியிலிருந்து வெளி வரும் அலைகள் தோலில் உள்ள

MAST CELLSகளைப் பாதிப்பதால் தோலின் எதிர்ப்பு சக்தி போய் வியாதிகள் உருவாகும்.

10. அதிக கொலஸ்ட்ரால் உருவாகும். ஏனெனில் உடலின் இயக்கத்தை மந்தப்படுத்துவதால் குழந்தைகளிடம் இது ஏற்படும்.

11. ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் இருக்கலாம்,  ஆனால், டிவி பார்ப்பதானது மெடபாலிஸம் எனப்படும் வளர்சிதைமாற்றத்தை வெகுவாக பாதிக்கும்.

12. அருகிலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படும்.

13. மிகுதியாகப் பார்ப்பது அல்ஜெமீர் வியாதியில் கொண்டுபோய் விட்டு விடும்.

14. நியூஜிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்ந்து டிவி பார்க்கும் குழந்தைகள் 26ம் வயதில் கல்வியில் மிகவும் பின் தங்கி குறைந்த மதிப்பெண்கள் பெறுவதைக் காட்டுகின்றன.

15. குறைந்த நேர கவனம் மட்டுமே கொள்ள முடிவதால் ATTENTION DEFICIT HYPERACTIVIRY DISCORDER எனப்படும் வியாதி உருவாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு.

ஆகவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை கண்டிப்பாக அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

டாக்டர் சிக்மன் (Dr. Aric Sigman – British Psychological Society) நீண்ட கால ஆய்வுகளை நடத்தி இந்த முடிவுகளை அறிவித்ததை மேற்கொண்டு செய்யப்பட்ட பல ஆய்வுகள் ஆமோதிக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கு முன்னர் 1995ல் ஒரு தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் ஏ.ஜே. வாக்கர் மற்றும் டாக்டர் சச்சின் ஷா ஆகிய இரண்டு புனே நகரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் டிவி பார்ப்பது பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

வன்முறைக் காட்சிகள், ஆபாசக் காட்சிகள் பார்ப்பதானது அமிலத்தன்மை கூடுதல், அஜீர்ணம், உயர் அழுத்தம், தீவிர தலைவலி

உள்ளிட்ட பல வியாதிகளை உருவாக்கும் என்பதை ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறும் வியாதிகளின் பட்டியல் : Acidity, Indigestion, Palpitartion, Dyspnoea, Hypertension, Ulcerative Colitis, Severe Headache, Eye Strain and even Schizophrenia and depressive psychoneurosis!

இதைத் தவிர பெண்கள் அதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க்கும்போது அவர்களுக்கு ஹார்மோன்களில் சமச்சிர்தன்மை போய் பல வித வியாதிகளையும் தரும்.

சீரியலே கதி என்று இருக்கும் பெண்மணிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக கர்ப்பிணிகள் எக்ஸ்ரே கதிர்களை அதிகமாக எப்போதும் தங்கள் மீது பாய்ச்சிக் கொண்டே இருப்பதால் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு சொல்லவொண்ணா தீங்குகளைத் தருவர்.

உடல்நலம் இப்படி பாதிக்கிறது என்றால் மனநலம் பாதிப்பது என்பது இன்னொரு பெரிய விஷயம்.

குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற தன்மை போகிறது. ஆண்களையும் பெண்களையும் இது உளவியல்,  மற்றும் உடலியல், ரீதியாகப் பாதிப்பதோடு ஒழுக்கத்திலும் பாரம்பரியப் பழக்கங்களை விட்டு விடுவதற்கான காரணமாகவும் அமைகிறது. 

ஆகவே பெற்றோர்கள் முதலில் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். பின்னர் குழந்தைகளுக்கு இது பற்றிய விழிப்புணர்ச்சியை ஊட்ட வேண்டும்.

***

Leave a comment

Leave a comment