நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் book title
முன்னுரை
மகாராஷ்டிர கோவில்கள் , கர்நாடக கோவில்கள் , ஆந்திர கோவில்கள் பற்றி மூன்று புஸ்தகங்களை எழுதி வெளியிட்ட பின்னர் பல கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது ; சில கோவில்கள் ஏற்கனவே சென்ற கோவில்கள்; மீண்டும் சென்றேன்; புதியன கண்டேன்; ஏனையவை புதிய கோவில்கள் . இவைகளையெல்லாம் தொகுத்தால் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா ஆந்திரம்= தமிழ் நாடு (தென் இந்தியா) என்ற நான்கு நாடுகளை குறிப்பிட வேண்டியுள்ளது ; ஆஸ்திரேலிய கோவில்கள் மூன்றும் ஏற்கனவே ஆஸ்திரேலிய புஸ்தகத்தில் வந்தாலும் கோவில்கள் பற்றிய புஸ்தகத்தில் ஆலய விஷயம் இருக்க வேண்டும் என்று சேர்த்துள்ளேன்; மற்றவை புதியவை.
கடவுள் பெயரை எத்தனை முறை சொன்னாலும் கேட்டாலும் புண்ணியம்தான் . இதுவரை இந்தக் கோவில்களை பார்க்காதோருக்கு இது ஒரு கைடு/ வழிகாட்டி நூல் அல்லது ஆற்றுப்படை நூலாகும். மேலும். எந்தக் கோவிலுக்குப் போகும் முன்னரும் அதன் சிறப்புகளை அறிந்து சென்றால் குறுகிய நேரத்தில் நிறைய பலன்களைப் பெறலாம். இறைவன் புகழ் மட்டுமின்றி கட்டிடக் கலை, சிற்பக் கலை, கல்வெட்டு , இடர்ப்பாடுகள் என எத்தனையோ விஷயங்களை நினைவிற்கொண்டு எழுதினேன். ஆனால் இது முழுவதும் சொன்னதாகாது;. சொல்லாமல் விட்ட புராணக் கதைகள் , நம்பிக்கைகள் ஆகியனவும் இருக்கின்றன. அவற்றை அந்த ஊர் மக்களிடமிருந்து நீங்களே அறிவீர்கள் .
கோவில்களைத் தவிர பல ஆஸ்ராமங்களுக்கும், சித்தர் சமாதிகளுக்கும் சென்றுவந்தேன் ; ஆந்திரத்தில் சத்ய சாய்பாபாவைத் தரிசிக்க புட்டபார்த்திக்கு பல முறை சென்றேன்; மந்திராலயத்திலுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சமாதிக்கும் சென்றுவந்தேன். அந்த அனுபவங்களைத் தனியாக எழுதுவேன் .
படிப்பதோடு நில்லாமல் பயணம் செய்யுங்கள்; காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள். உடல் வலு ,மன வலு, பண பலம் எல்லாம் இருந்து, புயல்- மழை இல்லாமல் இருந்தால், உடனே புறப்படுங்கள் .நான் ஆஸ்திரேலியா வரை சென்று இடையே இந்தியா, சிங்கப்பூர் மலேஷியாவுக்கும் சென்றதால்- 45,000 கிலோமீட்டர் பயணம் செய்ததால்– உடல் எடையில் ஏழு கிலோ குறைந்தது! இது ஒரு போனஸ். உங்களுக்கும் நிறைய போனஸ் கிடைக்கட்டும் ; அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
ஏப்ரல் 2025
swami_48 @yahoo.com
swaminathan.santanam @ gmail.com
நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் book title
பொருளடக்கம்
1.பத்து மலை முருகனைப் பார்க்க மலேசியாவுக்கு வாருங்கள்!
2.சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவில் – கார்த்திகைத் திருவிழா
3.ஆஸ்திரேலியாவில் 50 இந்துக் கோவில்கள்
4.நான் பார்த்த ஆஸ்திரேலியக் கோவில்கள்
5.ஆஸ்திரேலியாவில் அழகான சிவன் கோவில்
6.ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்!
8.பஞ்சபூத தலங்களை நினைவில் வைக்க ஒரு பாடல்
9.கும்பேஸ்வரர் கோவிலில் மீண்டும் நல்ல தரிசனம்
10. கடவுள் இருக்கும் இடம் பாஸ்போர்ட் பை !
11.திருமீயச்சூர் கோவிலுக்கு மீண்டும் பயணம்!
12.காஞ்சீபுரத்தில் திவ்ய தரிசனம்
13.வைத்தீஸ்வரன்கோவிலில் அப்பனும் , சுவாமிமலையில் மகனும் தரிசனம்!
14.மஹாரண்யத்தில் முரளீதர சுவாமிகள் தரிசனம்
15.சென்னை நங்கநல்லூர் கோவில்கள்
16.கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் தரிசனம்!
17.பரிக்கல் நரசிம்மர் கோவில்- மீண்டும் விஜயம் !
18.காணக் கண் கோடி வேண்டும் கங்கைகொண்ட சோழபுரம் நடராஜர் புன்சிரிப்பு !
19..கடப்பாவில் முஸ்லீம்கள் வணங்கும் விஷ்ணு கோவில்
20.ராயசோட்டி வீரபத்ர சுவாமி கோவில்
21..யாகந்தி உமாமஹேஸ்வரர் கோவில்
22. ஆக்கிரமிக்கப்பட்ட ராமர் கோவில்:
23.காகிநாடா கோவில்கள்
24.நெல்லூர் கோவில்கள்
25.அந்தர்வேதி, அரசவல்லி, முரமல்ல கோவில்கள்
27.உண்டவல்லி குகைக் கோவில்
28.குடிமல்லம் சிவன் கோவிலில் அதிசய உருவம் !
42.ஹேமாவதியில் 4 நுளம்ப வம்ச கோவில்கள்
29.சோமபாலம்/ சோமபால்யம் கோவில்
30.கபிலேஸ்வரம் சிவன் கோவில்
31.பிக்கவோலு விநாயகர் கோவில்
32.பீமாவரம் கோவில்கள்
33.முதலில் வெளியான ஆந்திர கோவில் நூலின் பொருளடக்கம்
*******
அட்டைப் படத்தில் மலேஷியாவில் உள்ள பத்துமலை முருகன் (Batu Caves Temple) கோவில் படம் உள்ளது.
Buddhist Temple in Australia
Title – நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள்
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – April 2025
Subject – Religion
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
+ 44 07951 370 697
Published Works
Over 9500 articles in English and Tamil and over 140+2 Tamil and English Books.
Shiva Temple, Australia
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece
*****