Post No. 14,446
Date uploaded in London – 28 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part five/ பகுதி ஐந்து
45.ரூப கோஸ்வாமின்
சைதன்ய மஹாப்ரபுவின் சீடர் ; வங்காளத்தைச் சேர்ந்த இவர் உஜ்வலநீலாமணி என்ற நூலை எழுதினார். இது கவிதை இயல் Poetics நூல்; இவரது காலம் 16-ஆவது நூற்றாண்டு.
46.ஆதிசங்கரர்
இந்தியாவில் வியாசருக்கு அடுத்தபடியாக அதிகம் எழுதியவர் சங்கரர். இவர் உபநிஷத்துக்களுக்கும் பகவத் கீதைக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் எழுதிய உரைகள் உலகப் பிரசித்தமானவை; இவர் அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டியவர் ; இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு என்றும் கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முந்தியது என்றும் இருவேறு கருத்து உள்ளது. ஆதி சங்கரரின் கவிதைகளையும் ஸ்லோகங்களையும் இன்றும் மக்கள் தினமும் வீடுகளில் பயப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது . முக்கிய நூல்கள் : மனீஷா பஞ்சகம், விவேக சூடாமணி, பஜகோவிந்தம், ப்ரச்னோத்தர ரத்ன மாலிகா, கனகதாரா ஸ்தோத்திரம் உபநிஷத், கீதை ஸஹஸ்ரநாம உரைகள் , நூற்றுக்கணக்காக ஸ்லோகங்கள் ,துதிகள், தோத்திரங்கள்.
சம்ஸ்க்ருத மொழியை இன்றும் வீடுகளில் தவழவிட்ட பெருமை இவர் ஒருவரை மட்டுமே சாரும் ; அடுத்தபடியாக
ராமாயணத்தைத் தந்த வால்மீகியைக் குறிப்பிடலாம்; அவரது சுந்தர காண்டம், பண வரவுக்காக, பலராலும் வீடுகளில் சம்ஸ்க்ருதத்தில் பாராயணம் செய்யப்படுகிறது .
47.ராமானுஜர் 1017 to 1137 CE
விசிஷ்டாத்வைத தத்துவத்தை முன்வைத்த ராமானுஜரும் நிறைய சம்ஸ்க்ருத நூல்களை இயற்றியுள்ளார் . அவரது காலம் 1017 to 1137 CE அவர் நவமணிகளாக ஒன்பது நூல்களை எழுதினார் ; அவை விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நன்கு புரிந்து கொள்ள உதவும் நூல்கள்.1.வேதார்த்த ஸங்க்ரஹம் 2. ஸ்ரீபாஷ்யம் 3. வேதாந்த தீபம் 4.வேதாந்த ஸாரம் 5. பகவத் கீதா பாஷ்யம் 6.சரணாகதி கத்யம் 7. ஸ்ரீரங்க கத்யம் 8. ஸ்ரீ வைகுண்ட கத்யம் 9. நித்ய க்ரந்தம்.
48.சித்த
ஸ்வேதாம்பர சமண மதப்பிரிவைச் சேர்ந்த இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ; உபமிதி பாவப்பிரபஞ்சகதா என்ற நூலில் உருவகம் (allegorical) மூலம் விஷயங்களைக் கூறுகிறார். இவரது காலம் 906 CE.
49.சோமதேவ
கதாசரித்சாகரத்தின் ஆசிரியர் ; கவிதை வடிவில் முதல் கதை புஸ்தகத்தைத் தந்தவர். காஸ்மீரைச் சேர்த்த இவரது காலம் பதினோராம் நூற்றாண்டு .
50.சுபந்து
வாசவத்தத்தா என்ற காதல் கதையை உரைநடையில் எழுதிய இவர் முதலில் 13 ஸ்லோகங்களையும் எழுதியுள்ளார் காலம் ஆறாம் நூற்றாண்டு.
51.ஷீலா பட்டாரிகா
கவிதைத் தொகுப்புகளில் பெயர் உள்ள பெண் கவிஞர் இவர்; காலம் ஒன்பதாம் நூற்றாண்டு
52.சூத்ரக
சாதவாஹனா வம்ச மன்னர் ; இவர் எழுதிய ம்ருச்சககடிகம் என்ற நாடகம் மிகவும் புகழ்பெயது ஆங்கிலம், தமிழ் முதலிய மொழிகளில் வந்துள்ளது ; தமிழில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் மண்ணியல் சிறுதேர் என்ற பெயரில் மொழிபெயர்த்தார் ; அற்புதமான நாடகத்தை நகைச்சுவை ததும்பத் தந்த சூத்ரகரின் காலம் இரண்டாம் நூற்றாண்டு.
மிருச்சகடிகம் வாசவதத்தை , பாண , மற்றும் பத்மபிரபிரித்தகா போன்ற சமஸ்கிருத நாடகங்களை இயற்றினார்
53.நன்னையபட்டு
சம்ஸ்க்ருத மொழியில் இலக்கணத்தைத் தந்த மூன்று பெரியோர்களை முநித்ரயம் – மூன்று முனிவர்கள் – என்பார்கள் அதுபோல தெலுங்கு மொழியிலும் மூன்று முனிவர்கள் உனது அவர்களில் ஒருவர் நன்னய்ய பட்டு ; நன்னயா. திக்கனா, எர்ரனா என்பவர்கள் ‘கவித்திரையம்’ ஆவர்.
தெலுங்கு மொழி இலக்கணத்தையும் சம்ஸ்க்ருதத்தில் எழுதினார் ; அவளவு சம்ஸ்க்ருதப் பிரியர்; மேலும் அது நாடு முழுதும் பரவ சம்ஸ்க்ருத மொழி ஒன்றுதான் உதவும்; இன்று நாம் ஆங்கிலத்தில் எழுதினால் அது உலகின் பெரும்பாலான மக்களுக்குத் தெரிவது போல.
தெலுங்கு மொழிக்கான முதல் இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி ஆகும்.. இவர் இராஜமகேந்திர புரத்தைத் தலைநகராகக் கொண்டு வேங்கி நாட்டை ஆண்டு வந்த ராஜராஜ நரேந்திரனின் (கி.பி. 1020-1063) அரசவையில் புலவராகத் திகழ்ந்துள்ளார்.
54.சாவர்ணி –
இவரது கவிதைகள் கவிதைத் தொகுப்பு நூல்களில் உள்ளன; வேறு தகவல் கிடைக்கவில்லை.
55.மத்வர்
த்வைத தத்துவதை நிலை நாட்டியவர் ;பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். 32 அத்தியாயங்கள் கொண்ட மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்றொரு நூல், இவருடையது. மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது. ருக்வேதத்திலிருந்து 32 துதிகளுக்கு உரை எழுதினார். காலம் 1199–1278 CE.
To be continued…………………………….
Tags- ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், சூத்ரகர், பெண் கவிஞர், சம்ஸ்க்ருத மழை , அறுபது கவிஞர்கள் , பகுதி ஐந்து