Post No. 14,454
Date uploaded in London – 30 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தம்மபதம் என்பது பெளத்தர்கள் பின்பற்றும் வேத புஸ்தகம். இதிலிருந்து 31 பொன்மொழிகளை 2025 மே மாத காலண்டரில் கொடுத்துள்ளேன் ; இவை புத்த பெருமான் சொன்ன அருள் மொழிகள்.
பண்டிகை நாட்கள் : மே தினம்-1; சங்கர ராமானுஜர் ஜயந்தி-2; அக்கினி நக்ஷத்திர ஆரம்பம்-4; குரூப் பெயர்ச்சி-11; புத்த பூர்ணிமா /சித்திரா பெளர்ணமி-12; அக்கினி நக்ஷத்திர முடிவு-28.
அமாவாசை– மே 27; பெளர்ணமி– மே 12;
ஏகாதசி உணாவிரத நாட்கள்– மே 8, 23.
சுபமுகூர்த்த தினங்கள் – மே 16, 18, 23.
Auspicious Dates and Muhurat Timings in May 2025: (North Indian Panchang)
- May 15th: Auspicious Muhurat timings start at 02:09 PM and end at 03:15 PM.
- May 16th: Muhurat timings from 05:30 AM to 04:07 PM, with the Tithi being Chaturthi.
- May 17th: Muhurat timings from 05:44 PM to 05:29 AM on May 18th, Tithi Panchami.
- May 18th: Muhurat timings from 05:29 AM to 06:52 PM, Tithi Shashthi.
- May 22nd: Muhurat timings from 01:12 AM to 05:26 AM on May 23rd, Tithi Ekadashi.
- May 28th: Auspicious Muhurat timings start at 05:45 AM and end at 07:06 PM.
சில மாநிலங்களில் அனுசரிக்கப்படும்
நரசிம்ம ஜயந்தி- மே 11;
நாரத ஜயந்தி- மே 13;
ராணாபிரதாப் ஜயந்தி- மே 29;
சூர்தாஸ் ஜயந்தி – மே 2;
ரவீந்திரநாத் தாகூர் ஜயந்தி- மே 8, 9;
****
மே மாத காலண்டர் புத்தரின் பொன் மொழிகள்

மே 1 வியாழக் கிழமை
வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை (தம்மபதம் 5)
***
மே 2 வெள்ளிக்கிழமை
பயிற்சி பெற்ற யானைகளையே போருக்கு கொண்டு செல்வர். பயிற்சி பெற்ற யானையின் மீதே அரசனும் பவனி வருவார். அதுபோலவே பயிற்சி – புலனடக்கப் பயிற்சி –பெற்றவர்களே, கஷ்டம் வந்தாலும் சாந்தமாக வாழ்வர்-321
***
மே 3 சனிக்கிழமை
பயிற்சிபெற்ற கோவேறுக் கழுதைகளும், சிந்து மாகாணக் குதிரைகளும் பலமான யானைகளும் பயிற்சி பெற்றவுடனேயே நன்றாக இருக்கின்றன. அது போலவே புலனடக்கப் பயிற்சி பெறவனே சிறந்தவன்.-322
***
மே 4 ஞாயிற்றுக்கிழமை
மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; அவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்று சிந்திக்காதே; உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார். நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார் (50)
****
மே 5 திங்கட் கிழமை
ஒரு அழகான மலர் வாசனை இல்லாமலிருப்பது போலத்தான் ஒருவான் நெய்போலப் பேசிவிட்டு அதைப் பின்பற்றாமல் இருப்பதும் (தம்மபதம் 52)
****
மே 6 செவ்வாய்க்கிழமை
பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பவர்களும், பயப்படக் கூடாத விஷயங்களுக்கு அனாவசியமாகப் பயப்படுவோரும் தவறான கருத்துடைய மனிதர்களே. அவர்கள் கீழ்நோக்கிச் செல்பவரே—(தம்மபதம் 317)
***
மே 7 புதன் கிழமை
தர்ப்பைப் புல்லின் நுனியினால் உணவு எடுத்துக்கொண்டு மாதக் கணக்கில் உண்ணா நோன்பு இருக்கும் முட்டாள், சத்தியதர்மத்தைப் பின்பற்றும் ஒரு மனிதனின் 16-ல் ஒரு பகுதிக்கும் சமம் ஆகான் –70
***
மே 8 வியாழக் கிழமை
உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள். அவர்கள் தவறான பாதையில் சென்று வை தப்பிப்போனவர்களாவர் (தம்மபதம் 11)
***
மே 9 வெள்ளிக்கிழமை
காலம் தாழ்த்தாது உடனே நல்லது செய்யுங்கள்; கெட்டதிலிருந்து உங்கள் மனது தள்ளியே இருக்கட்டும். ஒரு மனிதன் நல்லது செய்வதை தாமதித்தால் அவன் மனது கெட்டது செய்வதில் இறங்கி ஆனந்தமாக்ச் செயல்படும் (தம்மம் 116.)
***
மே 10 சனிக்கிழமை
நல்லவனூகுத் தீங்கு செய்யும் முட்டாள், தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொண்டவன் ஆவான். பாவமற்ற தூய்மையான ஒருவனுக்குத் தீங்கு செய்தால் அந்தத் தீங்கு காறில் வீசி எறிந்த தூசி ஒருவன் முகத்திலேயே வந்து விக்ழுவது போல தீங்கு செய்தவனையே வந்து சேரும் (தம்மபதம் 125)
***
மே 11 ஞாயிற்றுக்கிழமை
ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும். – தம்மபதம் 1
***
மே 12 திங்கட் கிழமை
ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.– தம்மபதம் 2
***
மே 13 செவ்வாய்க்கிழமை
புத்திசாலி மனிதன் விழிப்புடன் இருந்து எண்ணங்களைக் கட்டுப்படுத்தினால் அவன் துன்பங்களை உதறிவிட்டு, மேலே உள்ள ஞானம் என்னும் அரண்மனைக்குச் செல்வான். அதன் பலகணியிலிருந்து துன்பப் படுவோரைக் காண்பான். இது குணம் என்னும் குன்று ஏறி நின்ற முனிவர்கள் மலை உச்சியிலிருந்து சமவெளியிலுள்ள அஞ்ஞானிகளைக் காண்பதற்குச் சமம்.–தம்மபதம் 28
***
மே 14 புதன் கிழமை
புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.- தம்மபதம் 30
***
மே 15 வியாழக் கிழமை
ஒருவன் தான் செய்த தீமையின் விளைவுகள் தெரியாத வரை அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான்; அது அவனுக்கு இன்பமாகத் தோன்றும். ஆனால் தீய செயல்களின் விளைவுகள் அவனுக்குத் திரும்பும்போது அவன் அதை அனுபவித்து அறிவான் (தம்மபதம்-119)
***
மே 16 வெள்ளிக்கிழமை
“கெட்டது செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். கெட்டது செய்தால் துன்பம் நம்மைச் சுட்டெரிக்கும். ஆகையால் நல்லதையே செய்யுங்கள். ஏனெனில் நல்லது செய்வோருக்கு என்றும் துன்பம் இல்லை” – 314
***
மே 17 சனிக்கிழமை
மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309
***
மே 18 ஞாயிற்றுக்கிழமை
பொய் பேசாதிருப்பவனை உலகமே நேசிக்கும் (தம்ம 217)
***
மே 19 திங்கட் கிழமை
ஒரு மனிதனின் தோற்றத்தையும் சொற்களையும் வைத்து அவனை கௌரமானவன் என்று நினைப்பதற்கில்லை; பொறாமை, பேராசை, அகந்தை ஆகிய மூன்று பாவங்களும் இல்லாதவன், விவேகமுள்ளவன், அன்பே உருவானவன் — ஒருவனே மதிக்கப்படத் தக்கவன் –தம்ம 262, 263
***
மே 20 செவ்வாய்க்கிழமை
நிலத்தில் விளையும் களை, பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள், மனிதனின் குணநலன்களைப் பாதிக்கின்றன.- தம்மபதம் 359
***
மே 21 புதன் கிழமை
ஆசைக்கு அடிமையானோர், ஆசை வெள்ளத்தில் சிக்குகின்றனர்; சிலந்தி தான் பின்னிய வலையிலேயே கட்டுப்பட்டிருப்பதைப்போல –தம்மபதம் 347
***
மே 22 வியாழக் கிழமை
ஒரு மரத்தை வெட்டினாலும் அதன் வேர்கள் சேதமாகாவிட்டால் அது தழைத்தோங்கும்; அதுபோல ஆசை வேர்கள் அறுபடாதவரை, துன்பம் தழைத்தோங்கும்- தம்மபதம் 338
***
மே 23 வெள்ளிக்கிழமை
ஒருவனை ஆசைகள் சூழுமானால், அவன் “பிரானா” கொடி வளருவதைப்போல, துன்பங்களால் சூழப்படுவாந்- தம்மபதம் 335
***
மே 24 சனிக்கிழமை
உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337
***
மே 25 ஞாயிற்றுக்கிழமை
பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- தம்மபதம், 389
***
மே 26 திங்கட் கிழமை
நீண்ட முடி (குடுமி) வைப்பதாலோ, பிறப்பினாலோ ஒருவன் பிராமணன் ஆவதில்லை; சத்தியமும், புனிதமான தூய்மையும் கொண்டவனே பிராமணன்; அவன் மகிழ்ச்சிக்கடலில் இருப்பான்.- தம்மபதம், 393
***
மே 27 செவ்வாய்க்கிழமை
காலையில் சூரியனும், மாலையில் சந்திரனும் பிரகாசிக்கின்றன; க்ஷத்ரியன், ஆயுதம்தரிப்பதால் பிரகசிக்கிறான்; பிராமணன் தவ வலிமையால் பிரகாசிக்கிறான். புத்தனோ இரவிலும் பகலிலும் பிரகாசிக்கிறான். விழிப்புணர்வுடையவன் பிரகாசிப்பான் – தம்மபதம், 387
***
மே 28 புதன் கிழமை
ஒரு பிராமணனும், சந்யாசியும் பூர்வ ஜன்ம பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்–தம்ம பத பாடல் 294
***
மே 29 வியாழக் கிழமை
ஏ பிராமணனே! ஆசையை விடுத்து, சம்சார சாகரத்தைக் கடந்து செல்; நிர்வாண நிலையை அடைவாய் – தம்மபதம் 383
***
மே 30 வெள்ளிக்கிழமை
“ஒரு மனிதன் அறியாமையாலோ, மூடத்தனத்தாலோ பேசாமல் இருந்தால் அவன சிந்தனைச் சிற்பி அல்ல. ஒரு முனிவர் சிந்தனையாளர் ஆவார். ஒரு தராசுத் தட்டில் நல்லதையும் கெட்டதையும் தனித்தனியே வைத்து சீர்தூக்கிப் பார்ப்பவன் முனிவன், சிந்தனையாளன் ஆவான்.—269
***
மே 31 சனிக்கிழமை
உண்மையே பேசு, கோபப் படாதே, கேட்பவருக்கு உன்னிடம் உள்ளதைக் கொடு; இந்த மூன்றும் உன்னைக் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் (224)
***
Bonus Quotes
ஆசை போனால், இன்பம் வரும்; தங்க நாணய மழையே பெய்தாலும் ஆசை அடங்காது. இன்பத்தின் எல்லையில் துன்பம் நிற்கிறது. கடவுள் கொடுக்கும் இன்பங்களை ஞானியானவன் நாட மாட்டான் (தம்ம-187)
***
கருமிகள் சுவர்க்கத்துக்குள் புக முடியாது; முட்டாள்கள் தானத்தைப் புகழ மாட்டார்கள்; புத்திசாலிகளே தானம் செய்து, அதன் மூலம் இன்பம் அடைவர் (தம்ம.177)
–Subham—
Tags- மே 2025 காலண்டர், புத்தர் , பொன் மொழிகள், தம்மபதம்