27500 மகள்களுக்கு ஒரு அப்பாவா? அடேயப்பா, யார் அது?
அவரது உண்மைப் பெயர் கே.பி.ராமசாமி. கோவையில் உள்ள கே ஆர் பி மில்ஸ் என்ற டெக்ஸ்டைல்ஸ் மில்லின் (KRP Mills) சொந்தக்காரர்.
இன்றைய நாளில் தினசரி செய்தித் தாள்கள் மற்றும் இணையதள வாயிலாக நாம் காண்பது 20000 பேர் வேலை இழப்பு, 10000 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்ற செய்திகளைத் தான்.
ஆனால் கேபி ராமசாமியோ யாரையும் வீட்டிற்கு அனுப்பவில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையையும் மேலே உயர்த்தி மாற்றி விடுகிறார்.
ஒரு சின்ன வேண்டுகோளில் இந்த பெரும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு நாள் ஒரு சிறுமி அவரிடம் வந்து, “அப்பா! நான் படிக்க விரும்புகிறேன். ஆனால் பணம் கட்ட வழியின்றி எனது பெற்றோர்கள் என்னைப் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் நான் படிக்க விரும்புகிறேன்” என்றாள்.
இதைக் கேட்ட கேபிஆரின் மனம் உருகியது.
அந்த சிறுமியின் வார்த்தைகள் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
மாதாமாதம் சம்பளத்தைத் தருவதை விட அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையே தர விரும்பினார் அவர்.
மில்லுக்குள்ளேயே ஒரு கல்வி அமைப்பை அவர் நிறுவினார்.
1) எட்டு மணி நேர வேலைக்குப் பின்னர் நான்கு மணி நேர படிப்பு.
2) வகுப்பறைகள், ஆசிரியர்கள், ஒரு பிரின்ஸிபால், ஒரு யோகா பயிற்சியும் கூட.
3) யாரும் எதற்கும் பணம் தர வேண்டாம். இதற்கான பணத்தை அவரே ஏற்றுக் கொண்டார்.
இதன் விளைவு என்ன?
24536 பெண்கள் தங்களது பத்தாவது, பன்னிரெண்டாவது யுஜி மற்றும் பிஜி டிகிரிகளைப் பெறப் படித்தார்கள்.
அதில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் இப்போது நர்ஸ்களாக, ஆசிரியைகளாக, போலீஸ் அதிகாரிகளாக இருக்கிறார்கள்.
தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்திலிருந்து 20 தங்க மெடல் பெற்றவர்கள் ஒரு வருடத்தில் மட்டும் உருவாகி விட்டார்கள்.
சரி, இவர்கள் எல்லாம் வேறு வேலை தேடிப் போய்விட்டார்கள் என்றால்…
இதை எண்ணிக் கவலைப்படவே இல்லை கேபிஆர்.
“அவர்கள் தங்கள் திறமையை வீணடித்துக் கொண்டு இங்கேயே இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அவர்கள் இங்கு இருப்பது ஏழ்மையினால் தான். தங்கள் விருப்பத்தினால் அல்ல. எனது வேலை அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது தான்!” என்றார் அவர்.
படிக்கிறார்கள். வெளியே செல்கிறார்கள். நல்ல ஒரு எதிர்காலத்தை அவர்கள் கொள்கிறார்கள். பிறகு..?
இன்னும் ஏராளமான பெண்களைத் தங்கள் கிராமங்களிலிருந்து மில்லுக்கு அனுப்புகிறார்கள்!
சமீபத்திய பட்டமளிப்பு விழா ஒன்றில் 350 பெண்கள் தங்கள் பட்டத்தைப் பெற்றனர்.
அனைவரையும் பார்த்து கேபிஆர் சொன்னார் : “உங்களால் அவர்களை நல்ல ஒரு வேலைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்றால் மற்ற பெண்கள் படிப்பதற்கு அது உதவியாக இருக்கும்.”
பல கோடி ரூபாய் வரும்படி வரும் வணிகத்தை நடத்தும் ஒரு பெரிய மில்லின் சொந்தக்காரர் இன்னும் கொஞ்சம் பிஸினஸ் தாருங்கள் என்று கேட்கவில்லை. மாறாக தனது மில் பணியாளர்களுக்காக தகுதியான நல்ல வேலையைக் கேட்கிறார்.
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்று சும்மாவா சொன்னார்கள்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
part five
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
Veera Sivaji
Indus Script
Tyagaraja
Sarojini Devi
Purandradas
Foreigners – Roosevelt, Annie Besant, Henri Dunant
–Subham—
Tags– Swami Vivekananda, Veera Sivaji, Netaji, Pictures ,2500 Indian Stamps, Part 5, Foreigners, on stamps Roosevelt, Annie Besant, Henri Dunant
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
FAMAOUS Mahamakam tank at kumbakonam
சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் 2025 மார்ச் 16-ஆம் தேதி கும்பேஸ்வர கோவிலுக்குள் நுழைந்தோம் நல்ல சுவாமி தரிசனம் கிடைத்தது . சூரியன் மறைவதற்குள் மகாமக குளத்தைக் காரில் வலம் வந்து கோவிலுக்குள் பிரவேசித்தோம் சுவாமி சந்நிதியிலும் அம்பாள் சந்நிதியிலும் சாய ரக்ஷை மஹா தீபாராதனை நடந்தது; நல்ல தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் ஸ்ரீவத்சம் முதியோர் இல்ல கெஸ்ட் ஹவுசுக்குத் திரும்பிவந்து நல்ல இரவுச் சாப்பாட்டினை உண்டு மகிழ்ந்தோம்
(அங்கு பாஸ்போர்ட் பறிபோய் அதை மறுநாள் ஒரு குருக்கள் மூலம் மீட்ட கதையை ஏற்கனவே எழுதிவிட்டேன்)
இந்த முறையும் கோவில் நுழைவாயிலில் யானை நின்றது ; பலரும் ஆசீர்வாதம் பெற்றனர்; அதையும் படம் எடுத்தேன்
மகாமக குளம் , மற்றும் கோவில் பற்றி முன்னர் எழுதிய இணைப்புகள் கீழே உள்ளன .
விருந்தினர் அறைக்குச் செல்வதற்கு முன்னர் மீண்டும் ராமசாமி கோவிலுக்குச் சென்று ராம பிரானையும் தரிசித்தோம்; முடிந்த மட்டும் படங்கள் எடுத்தேன். .
****
மீண்டும் கும்பகோணம் ராமசாமி கோவில்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணம் ராம சுவாமி கோவில் பற்றி விரிவான படங்களுடன் பல கட்டுரைகள் எடுத்திவிட்டேன் (இணைப்புகளில் காண்க)
மீண்டும் புல்லட் பாயிண்டில்…….
அற்புதமான ராம பட்டாபிஷேகக் காட்சி கர்ப்பக்கிரகத்தில் உள்ளது; ராம, லட்சுமண, பரத ,சத்ருக்னர் முன்னிலையில் ஆஞ்சனேயர் வீணை வாசிக்கிறார்.
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது
தூண் எங்கும் ராமாயண, கிருஷ்ணாவதார, தசாவதார சிற்பங்கள்!
சுவரெங்கும் மூன்று வரிசையில் அற்புத வண்ணங்களில் சித்திர ராமாயண ஓவியங்கள் ; அனுமனை இவ்வளவு அழகாகக் காட்டும் ஓவியங்கள் வேறெங்கும் இராது .
பூட்டி வைக்கப்பட்ட அறையில் அழகான அனுமன் ஓவியம் உள்ளது; கம்பிக் கிராதி வழியாகக் காணலாம்
காணக் கண்கோடி வேண்டும்!
கோவில் அதிகாரிகளே அத்தனை சித்திரங்களையும் படம் எடுத்து நூலாக வெளியிட்டால் நன்றாக விற்பனை ஆகும் .
அனைவரும் பார்க்க வேண்டிய கோவில்.
*****
MY OLD ARTICLES ON THESE TWO TEMPLES
கும்பேஸ்வரர் கோவிலில் தரிசனம் (Post No.11,860)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 11,860
Date uploaded in London – – 1 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கும்பகோணத்தில் இறங்கிய 19-2-2023 அன்றே ஆறு கோவில்களைத் தரிசனம் செய்தோம் !!! அப்படி ஆசைப்பட்டதில் கொஞ்சம் இழப்பும் இல்லாமல் இல்லை. கடைசியாக கும்பேஸ்வரர் தரிசனத்தை வைத்துக்கொண்டதால் இரவு எட்டு மணி ஆகி விட்டது. நல்ல புகைப்படம் எடுக்க முடியவில்லை. மகாமக குளத்தையும் காரில் வலம் வந்தோமேயன்றி இறங்கிப் பார்க்க முடியவில்லை. இருந்த போதிலும் கும்பேஸ்வரர் நல்ல தரிசனம் கொடுத்தார்.
கோவிலில் கலை விழா நடந்து கொண்டிருந்தது. நிறைய டான்ஸ்; நிறைய கைதட்டு. கொஞ்சம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே கோவில் யானையின் சேட்டைகளையும் புகைப்படம் எடுத்தேன். சந்நிதிக்குள் நுழைந்தோம் .
என்னைப் போன்ற தஞ்சை மாவட்டத்தில் பிறந்த பார்ப்பனர் இடையே ஒரு பழமொழி உண்டு. அவனா, அவன் மாமாங்கத்துக்கு ஒரு முறை வந்தாலே அதிசயம் என்போம். அத்தி பூத்தாற்போல என்பதற்கு இணையான பழமொழி இது. அதாவது 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மஹா மகம்! திருவிழா போன்றது , அபூர்வமாக நிகழக்கூடியது என்பது இதன் பொருள்.
கிருஷ்ண தேவராயர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்து, பின்னர் கும்போணம்
(இப்படி உச்சரித்தால் அவன் தஞ்சாவூர்க்காரன் என்று பொருள் ; அல்லது எம்பளத்தைந்து 85, திருப்ளாத்துறை , திருக்ளாவூர் என்பதைவைத்தும் கண்டுபிடிக்கலாம்).
சென்று மஹாமக குளத்துக்குச் சென்றதை கல்வெட்டுகள் விரிவாகப் பேசுகின்றன (என் முந்தைய கட்டுரைகளில் கல்வெட்டு விவரம் காண்க )
தஞ்சாவூர்ப் புராணத்தை இன்னும் ஒன்று சொல்லி முடித்து விடுகிறேன் . ஒரு முறை நான் என் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு கத்தரிக்காய் ரசவாங்கி ரொம்பப் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் கத்தரிக்காய் பிட்டளைதான் செய்கிறார்கள் என்று பேச்சுவாக்கில் சொன்னேன். நீங்கள் தஞ்சாவூர்க்காரரா? என்றார்.. சிரித்துக்கொண்டே ஆமாம், அதற்கும் ரசவாங்கிக்கும் என்ன சம்பந்தம் ? திடீரென்று கோகுலகுஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சுப் போடுகிறீர்களே! என்று வினவினேன். ரசவாங்கி என்பது மராட்டிய ஐட்டம் item ; தஞ்சாவூர், சிவாஜி மன்னரின் பரம்பரையினர் (சரபோஜி)ஆட்சிக்குட்பட்டிருந்ததால் அந்த உணவு பிரபலமாகியது என்றார் . புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டேன்.
xxx
சென்ற முறை கும்பகோணம் சென்றது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர். தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி நடத்திய 1000 மைல் இலவச வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் சென்றதுதான். அதற்குப்பின்னர் கார் மட்டும் அவ்வழியே பறக்கும். இறங்கியது இல்லை .
கும்பேஸ்வர் என்னும் பெயரில் இங்கு வீற்றிருக்கும் சிவ பெருமான்மங்களாம்பிகை என்னும் தேவி சகிதம் இந்தக் கோவிலில் இருக்கிறார். ஊர்ப்பெயர் முதல் கடவுள் பெயர் வரை எல்லாம் அமிர்தம்சம்பந்தப்பட்டது. அப்பரும், சம்பந்தரும் தேவாரப்ப பதிகங்களில் பாடிப் பரவியுள்ளதால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கும்பேஸ்வரரின் புகழ் பரவி இருந்ததை அறிய முடிகிறது . குடந்தை, குடமூக்கு என்ற பெயர்களும் அமிர்த கலசத்துடன் தொடர்புடையதே. அமுத கலசத்திலிருந்து தோன்றிய இறைவன், அமுதக் குடம் சிந்திய திருத் தலம் என்ற பொருளில் அமுத கும்பேசர் என்றும் திருநாமம்.
இறைவி மங்களாம்பிகை, மந்திர பீடேஸ்வரி எனப்படுவதால் இந்தத்தலம் சாக்தர்களுக்கும் முக்கியமானது. மந்திர சக்தி நிறைந்த பீடத்தில் இறைவி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
xxx
தீர்த்தவாரி
இந்தக் கோவில் ஒற்றுமையின் சின்னமாகத் திகழ்கிறது. மஹாமகம் குளத் திருவிழா வடக்கேயுள்ள கும்பமேளாவுக்கு நிகரானது. அந்தக்காலத்தில் சுற்றுவட்டாரக் கோவில் மூர்த்திகள் அனைவரும் இங்கே தீர்த்தவாரிக்கு எழுந்தருளுகின்றனர். கும்பேஸ்வர சிவன் தான் தலைவர்.
அது மட்டுமல்ல கும்பகோணத்தைச் சுற்றியுள்ள 6 கோவில்களின் மூர்த்திகள் சப்தஸ்தான திருவிழாவிலும் பங்கு கொள்கின்றனர். (குடந்தையையும் சேர்த்து 7= சப்த)
xxxx
விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயன்
மஹாமக விழாவுக்கு விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயனே துங்கபத்ரா நதிக்கரையில் இருந்து வந்திருப்பானால் இது தென்னிநிதிய இந்துக்களை ஒற்றுமைப்படுத்தியதையும் அறியலாம் . அருகிலுள்ள சுவாமிமலை சுவாமிநாதனும், திருவலம் சுழி வெள்ளைப் பிள்ளையாரும் இக்கோவிலுக்கு மேலும் மஹிமை சேர்க்கின்றனர் .
மகா மக குளத்தின் ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லும். குள த்தைச் சுற்றியுள்ள மூர்த்திகளின் கதைகளை எழுதப்போனால் அது கும்பகோண என்சைக்ளோபீடியாவாகி விடும்.
12 ஆண்டுக்கு ஒருமுறை மாசி மாத மக நட்சத்திரத்தன்று காசியிலுருந்து கங்கை நதி , மஹா மக குளத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம் .
12 வருஷத்திற்கு ஒரு முறை, குரு சிம்மராசியில் பிரவேசிக்கும் காலம் , மஹா மகத் தீர்த்தத்தில் தென்னிந்திய மக்கள் அனைவரும் நீராடுவர்.
குடந்தைக் கோவிலின் ஐந்து தேர்கள், சுற்றியுள்ள கோவில்களின் பல்லக்குகள் எல்லாம் சீரழிந்து போயிருந்தன. அண்மைக்காலத்தில் இவை சோழர்கால சீரும் சிறப்பும் புடை சூழ பவனி வருகின்றன .
xxxx
கும்ப முனி, ஏம ரிஷி
நாங்கள் பிரதான சந்நிதிகளை விட்டு வெளியே வருகையில் தொலைலிருந்தே கும்ப முனி சந்நிதிக்கு கும்பிடு போட்டோம்.இந்தக் கோவில் , ஏம ரிஷி ,கும்ப முனி முதலியோரால் பூஜிக்கப்பட்ட தலம் .
கும்ப முனி , குட முனி என்பது அகத்தியரைக் குறிக்கும். அகத்தியர் சித்தியான தலங்களில் குடந்தையையும், திருவனந்தபுரத்தையும் சொல்லுவார்கள். இரண்டு அகத்தியர்களை இது குறிப்பதாகக் கொள்ளலாம் . ரிக்வேதம் சொல்லும் லோபாமுத்திரை- அகத்தியர் வேறு ; அவர் பரம்பரையில் வந்த அகத்தியர்கள் வேறு. தென் கிழக்காசியாவுக்குச் சென்று ஏழு, எட்டு நாடுக்ளில் இந்து சாம்ராஜ்யக் கொடியைப் பறக்கவிட்ட அகத்தியர் வேறு. குள்ளமாக இருக்கும் பேரை இன்றும் அகத்தியர் என்று அழைப்பதுண்டு (லண்டனில் கூட ஒரு குருக்களுக்கு நாங்கள் அகத்தியர் என்றே சொல்லுவோம் ; குருக்கள் மிகவும் குட்டையானவர்)
கும்பகோணத்தின் ஒரு புறம் காவிரி ஆறும் மற்றோர் புறம் அரிசிலாறும் ஓடுகின்றன .
Xxx
தருமபுர ஆதீனத் தேவரப்பதிப்பு மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளது :
இத்தலம் தேவாரங்களில் குட மூக்கு என வழங்கப்பெறும்.பஞ்சக்ரோச தலங்கள் சூழ்ந்தது .
28 Aug 2019 — Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com …
-subham—
Tags– கும்பேசர், கும்பமுனி, மகாமகம், குளம், விழா ஸப்தஸ்தானம், மாமாங்கம், கிருஷ்ணதேவராயர்,
கும்பகோணம் ராமசாமி கோவில்
கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,827)- Part 1
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 11,827
Date uploaded in London – – 22 MARCH 2023
கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,828)- Part 2
Post No. 11,828
Date uploaded in London – – 22 MARCH 2023 .
உலகம் முழுதும் ஹனுமான் (Post No.13, 667)
Post No. 13,667
Date uploaded in London – 14 September 2024 .
கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,827)- Part 1
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 11,827
Date uploaded in London – – 22 MARCH 2023
Contact – swami_48@yahoo.கம
கும்பகோணத்தில் அற்புத ராமாயண சிற்பங்கள், சிலைகள் (Post.11,828)- Part 2
Post No. 11,828
Date uploaded in London – – 22 MARCH 2023 .
உலகம் முழுதும் ஹனுமான் (Post No.13, 667)
Post No. 13,667
Date uploaded in London – 14 September 2024 .
—subham—
Tags-மீண்டும் , கும்பகோணம், கோவில்கள் , ராம சாமி கோவில், கும்பேஸ்வரர் கோவில் , மார்ச் 2025
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
15-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
பாகிஸ்தானிய பத்திரிகையாளரின் வியப்பு! கும்பமேளா மனித குலத்தின் மிகப்பெரியகூட்டம்!
ச. நாகராஜன்
காலித் உமர் என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்.
அவர் கும்பமேளாவைப் பற்றி, “ பூமி என்ற கிரகத்தில் ஹிந்துக்களின் விழாவில் மனிதகுலத்தின் மிகப் பெரிய கூட்டம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.
அதன் சாரம் இது:
“அது ஒரு தூய்மையான சந்தோஷம். பரவசம்.
ஒரு மிருகமும் பலி இடப்படவில்லை. ஒரு துளி ரத்தமும் சிந்தப்படவில்லை. வன்முறை இல்லை. ஒரு அரசியலும் இல்லை. ஒரு மதமாற்றமும் இல்லை. ஒரு பிரிவும் இல்லை; ஒரு பாகுபாடும் இல்லை. ஒரு விற்பனையும் இல்லை. ஒரு வியாபாரமும் இல்லை!
அது தான் ஹிந்து மதம்!
ஒரே ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மனித குலத்தில் இவ்வளவு பேர்கள் கூடியது இல்லை. அது மதம் சார்ந்ததாக இருக்கட்டும்; விளையாட்டாக இருக்கட்டும்; போராக இருக்கட்டும். ஒரு ஈமச் சடங்காக இருக்கட்டும் அல்லது ஒரு திருவிழாவாகத் தான் இருக்கட்டும்; இத்தனை பேர் உலகில் இதுவரை கூடியதே கிடையாது!
அது கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் அது மஹா கும்பமேளா ஆகிவிட்டது – 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் பெரிய திருவிழா!
உலகம் அதைப் பற்றிய புள்ளிவிவரங்களைக் கேட்டு வாயைப் பிளக்கிறது!
40 கோடி பேர்களுக்கும் மேல் 44 நாட்களில் கூடினர். முதல் நாளில் மட்டும் ஒன்றரை கோடி பேர்கள் புனித ஸ்நானம் செய்தனர்.
4000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இது நடந்தது. ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் கூடாரங்கள் இருந்தன. 3000 சமையலறைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒரு லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டன. பாதுகாப்பிற்காக நாற்பதினாயிரம் பாதுகாவலர்கள் பணியில் இருந்தனர். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நான்காயிரம் கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தன. வியக்க வைக்கும் ஒரு புள்ளி விவரம் இல்லையா இது?!
எனது வியப்பும் பிரமிப்பும் உலோகாயத விஷயத்திலோ, புள்ளி விவரத்திலோ அல்லது நிகழ்வின் பல்வேறு அம்சங்களிலோ அல்ல.
அது நமது கண்கள் காணும் காட்சி பற்றியதும் இல்லை. அது எண்ணிக்கை அல்லது அளவைப் பற்றியும் அல்ல.
மனிதகுலம் பிரபஞ்சத்தோடு எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி எண்ணியதால் ஏற்பட்ட மலைப்பு அது!
வானில் உள்ள கிரகங்களோடு எப்படி மனித குலம் தொடர்பு படுத்தப்படுகிறது என்பதையும் அதன் இயல்பான நகர்வுகளும் ஆன்மீக விளைவும் எப்படி மனித குலத்தின் விதியையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்க உதவுகிறது என்பதைப் பற்றியும் எண்ணித் தான் இந்த பிரமிப்பு!
இதில் அதிகாரம், அந்தஸ்து எதுவுமில்லை. அரசியல் பின்னணியும் இல்லை. அது தானாகவே ஏற்பட்ட நம்பிக்கை. அது ஒரு திட்டமிடப்பட்ட மதக் கூட்டம் இல்லை. அது பாரம்பரியத்தின் வழியே வந்த வழிபாடு!
ஹிந்து தர்மம் என்பது பிரபஞ்சத்துடன் மனித குலம் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான ஒரு அழகிய புரிதலாகும். அது நமது காலடியில் உள்ள தாவரங்களில் ஆரம்பித்து பால்வீதியில் உள்ள நட்சத்திரங்களுடான நமது இணைப்பைக் குறிக்கும் மிக அதி நவீன முன்னேறிய அறிவாகும்.
தியானம் செய்கின்ற சாதுக்களின் பிரக்ஞையும் கூட காலம் வெளி ஆகியவற்றைத் தாண்டிச் செல்ல வல்லதாயிருக்கிறது! என்னையும் பிரபஞ்சத்தையும் வேறாகச் சொல்லும் த்வைதம் என்னும் மாயையை அது உடைத்து ஒன்றாக்குகிறது
இன்றைய விண்வெளிப் பயணம் என்பது ஒரு கற்காலத் தொழில்நுட்பம் தான் என்றே நான் நினைக்கிறேன். நமது பௌதிக உடல்களில் நாம் இல்லை. தூய்மையான பிரக்ஞையாக, தெய்வீக ஒளியின் அங்கமாக, வடிவமற்ற காலம் கடந்த ஒரு நிலையை எட்டும்போது தூரம், காலம் ஆகியவற்றைத் தாண்டியவர்களாக ஆகி விடுகிறோம் நாம்!
இமயமலை சாதுக்களும் க்வாண்டம் மெகானிக்ஸும் இணைந்து ஒரு புனித ஸ்நானத்தை பிரம்மாண்டமான அறிவுக் கடலில் குளிக்கும் பிரமிப்பு அது!
ஹிந்துவாக இருப்பது என்பது உங்களின் இயற்கையை நிலையை உணரும் ஒரு நிலையாகும்.
இயற்கையே ஹிந்து!”
அற்புதமான ஒரு கட்டுரையை வழங்கிய காலித் உமர் என்ற இந்த பாகிஸ்தானிய பத்திரிகையாளரை உலகமே பாராட்டுவதில் வியப்பில்லையே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Fluorescent Minerals
Fluorescent minerals are naturally occurring minerals that emit visible light when exposed to ultraviolet (UV) radiation. This phenomenon is called fluorescence, and it’s a result of the mineral absorbing UV light and then re-emitting it as visible light of a different wavelength. While not all minerals fluoresce, many do, and the color and intensity of their glow can vary greatly depending on the specific mineral, the type of UV light, and the presence of impurities (activators) within the mineral structure.
if you go near them, hey will emit light
Metal Quiz
During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025), I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.
Here are the pictures
entrance to australian museum , sydney
london swaminathan above; quartz below
slave trade route
fossil map of australia
continental drift; dinosaur skeletons
fossils below
Geology Quiz
earh’s crust quiz
boomerangs
totem symbols
indigenous groups; aborigines of australia
–Subham—
Tags- Australian ,Titbits, Part 4, Museum, indigemous, totems, dinosaur skeletons, earth crust, boomerangs, fluorescent minerals
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
part four
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
–Subham—
Tags– Pictures ,2500 Indian Stamps, Part 4, map of india stamps
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART TWO (LAST PART)
காளிதாசன் செய்த அற்புதம்
சங்ககாலத்துக்கு முன்னர் வாழ்ந்த புலவன் காளிதாசன் என்று ஜி யு போப், டில்லி பல்கலைக்கழக சந்திரா ராஜன் முதலியோர் கூறியுள்ளனர் ; சங்கத் தமிழ் உவமைகளை எடுத்துக்காட்டி அவை காளிதாசனின் மொழிபெயர்ப்பு என்பதை நானும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் காட்டியுள்ளேன்.
அந்தக் காளிதாசன் எழுதிய ஏழு நூல்களை படிக்காதோர் தங்களை இந்தியன் என்று சொல்லிக்கொள்ள முடியாது; இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆயிரத்து ஐநூறு உவமைகளை அள்ளித் தெளித்துள்ளான். அவனது சாகுந்தல நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவுடன் ஷேக்ஸ்பியருக்கும் தாத்தா ஒருவர் உள்ளார் என்பதை உலகம் அறிந்தது. சகுந்தலா என்றால் பறவைப்பெண்; இதைப் பார்த்துதான் ஷேக்ஸ்பியரே டெம்ப்ஸ்ட் நாடகத்தில் (Miranda in The Tempest) மிராண்டாவைப் படைத்தாரோ என்று எண்ணத் தோன்றும்; காளிதாசனின் ஏனைய மாளவிகா அக்நிமித்ரம், விக்ரம ஊர்வசீயம் , உள்பட சம்ஸ்க்ருதத்தில் 600-க்கும் மேல் நாடகங்கள் உள்ளன காளிதாஸருக்கும் முந்திய பாஷா எழுதிய ஸ்வப்னவாசவதத்தமும் சிறப்பானது .
இவைதவிர சூத்ரகரின் மிருச்ச கடிகம், சாணக்கியர் பற்றிய நாடகங்கள் சுவையானவை .
காளிதாசனின் மேகாதூதம் உலகத்தின் முதல் பயண நூல்; அதுமட்டுமல்ல பருவக்காற்றின் போக்கினைக் காட்டும் பூகோள நூல். குமார சம்பவத்தில் முதல் பத்துப்பாடல்களில் உள்ள இமயமலை வருணனையை சங்கப்புலவர்க்ள அப்படியே பாடியுள்ளனர் . கபிலரின் குறிஞ்சிப்பாட்டு காளிதாசனின் தழுவல் என்கிறார் ஜி யு போப்.
ரகுவம்சம், ருது சம்ஹாரம் ஆகிய ஒவ்வொன்றும் நவரத்தின மாலைக்குச் சமம் .
நாட்டியம்
இந்தியாவிலுள்ள நாடகங்களுக்கு மூலம் ரிக்வேதத்திலுள்ள இருபது டயலாக் கவிதைகள் (Dialogue Poems in the Rig Veda) ஆகும் ஆனால் அவற்றில் முழு வசனமும் இல்லை. பரத முனி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய இரண்டாயிரம் ஆண்டுப்பழமையான பரதம்தான் நாடக நாட்டிய இலக்கணத்தைக் கூறும் உலகின் முதல் நூல்.
நாடகம் எழுதுவதில் ஸம்ஸ்க்ருதத்தை மிஞ்சிய கிரேக்கர்களும் கூட நாடக இலக்கணத்தை அறிவியல் முறையில் எழுதவில்லை.
என்சைக்கிளோபீடியா
வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் சம்ஸ்க்ருதத்தில் தோன்றிய அருமையான ஜோதிட நூல். பிருஹத் சம்ஹிதா அருமையான என்சைக்ளோபீடியா. நவரத்ன மகிமை முதல் காக்கா ஜோதிடம் வரை பல அபூர்வ விஷயங்கள் உள.
மருத்துவ அதிசயங்கள்
சரகரும் சுஸ்ருதரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய மருத்துவ நூல்களுக்கு நிகரான நூல்கள் உலகில் வேறு எந்த பழைய மொழியிலும் இல்லை
தமிழ் மொழிக்கும் முன்னதாக இலக்கியம் படைத்த மொழிகள் கிரேக்கம், பாரசீகம், லத்தீன், எபிரேயம் சீனம் ஆகிய ஐந்துதான் ; இவை எல்லாம் தமிழ் மொழிக்கும் முன்னதாக நிறைய நூல்களை நமக்கு அளித்துள்ளன.ஆயினும் இவைகளுக்கு எல்லாம் மூத்த மொழியான ஸம்ஸ்க்ருதத்துக்குப் பக்கத்தில் கூட இந்த ஐந்து மொழிகளும் வர முடியாது !
கணிதம்- வான சாத்திரம்
ஆரிய பட்டர், பாஸ்கரர் போன்றா அறிஞர்களும் சமணமத அறிஞர்களும் எழுதிய நூல்கள் அல்ஜீப்ரா, டிரிக்னோமேற்றி போன்றவை இந்துக்களின் கண்டுபிடிப்பு என்பதைக் காட்டுகின்றனன. வேதகாலத்திலேயே யாக குண்டங்களை நிர்மாணிக்க அற்புதக் கணக்குகள் உள்ளன.
சட்டப் புஸ்தகம்
ஸ்ம்ருதி என்பன சட்டப் புஸ்தகங்கள்; மனுவின் பெயரில் பிருகு முனிவர் எழுதிய மனு தர்மசாஸ்திரம் ஹமுராபிக்கும் முந்திய நூல். ஏனெனில் இது சரஸ்வதி நதி பற்றிப் பேசுகிறது இதில் மனு பிராஸ்தாபித்த விஷயங்களின் வீச்சைக் கண்டு உலக அறிஞர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்[ லண்டனில் செயின்ட் பால் கதீட்ரலில் இந்த நூலைக் கையில் தாங்கிய வில்லியம் ஜோன்ஸ் சிலை உள்ளது அங்குதான் சார்ஸ்-டயானா கல்யாணம் நடந்தது இதுபோல இருபது ஸ்ம்ருதி நூல்கள் உள்ளன
பூகோளமும் வரலாறும்
18 புராணங்களிலும் இரண்டு இதிகாசங்களிலும் பூகோளமும் வரலாறும் உள்ளன. வெள்ளைக்கார்கள் அவற்றை ஒதுக்கிவிட்டு அலெக்ஸ்சாண்டர் காலம் முதல் நம் வரலாறு துவங்குவதாக எழுதிவிட்டனர்[ சிந்து சரஸ்வதி நதி தீர கரீகம் காண்டுபிடிக்கப்பட்ட வுடன் இந்தியர்களுக்கு இடைப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளில் வரலாறே இல்லை என்றும் வாதிக்கினறனர் உண்மையில் புராணங்கள் கூறும் அரசர்கள் சிந்துவெளி காலத்திலிருந்து வரும் தொடர்ச்சியைக் காட்டுகினறன . இந்தக் கோணத்தில் ஆராய வேண்டும்.
துருக்கியில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட தசரதன் பெயர், எகிப்தில் தசரதன் கடிதங்கள் இருப்பதால் வெள்ளைக்கார்கள் பேசா மடந்தை ஆகிவிட்டனர் இந்த தசரதன் ராமாயண தசரதன் இல்லை
கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணிதான் முதல் சரித்திர நூல் என்று சொன்ன வெள்ளைக்காரர்கள் அதில் முதல் நாலு அத்தியாயங்களில் கண்டது சரித்திரம் அல்ல என்கின்றனர் அதில் இராவணன் பெயர்கூட உள்ளது.
இறுதியாக நமக்கு கிடைத்த சம்ஸ்க்ருதம் நூல்களை விட அழிந்த சம்ஸ்க்ருத நூல்களே அதிகம். நாலந்தவைத் தீ வைத்தழித்த முஸ்லீம்கள் அழித்த நூல்களின் கணக்கை எவரும் அறியார் சீனாவில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் பல்லாயிரமென்று நீலகண்ட சாஸ்திரி போன்ற மாபெரும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்
சம்ஸ்க்ருதத்தில் உள்ள இருபதாயிரம் சுபாஷித ஸ்லோகங்களும்பல்லாயிரம் கல்வெட்டுகளும் தொகுதி தொகுதிகளாக நூலகங்களை அலங்கரிக்கினறன.
இவைகளில் உள்ள உண்மைகளை அறியவாவது நாம் சம்ஸ்க்ருதம் கற்கவேண்டும்; வேதங்களில் உள்ள உண்மைகளை விளக்க மீண்டும் ஒரு ஆதி சங்காரரையும் வியாஸரையும் நாம் உருவாக்க வேண்டும். ஆதி சங்கரர் போல உரைகளை எழுதியோர் உலகில் எப்பகுதியிலும் இல்லை. அவர் எழுதிய பாஷ்யங்களை- உரைகளை தொகுத்தாலேயே நூற்றுக்கணக்கான தொகுதிகள் வரும்; வேதாந்த தேசிகர் போன்றோர் எழுதிய ஸ்லோகங்கள் பல்லாயிரம் உள்ளன!
இது ஒரு குட்டி சர்வேதான்!
–SUBAHAM—
TAGS- சம்ஸ்க்ருத மொழி, உலகிற்கு அளித்த, நன்கொடை, ஒரு சின்ன ‘சர்வே’, PART 2
கந்தபுராண ஞானசபையின் பல வெளியீடுகளில் ஒன்றாக மலர்ந்துள்ளது ‘கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள்’ என்ற நூல்.
இந்த நூலின் ஆசிரியர் சிவஶ்ரீ தில்லை S. கார்த்திகேயசிவம் அவர்கள்.
“தெய்வ விரதங்களால் மன ஒருமைப்பாடும், வைராக்யமும், ஆற்றலும் கிடைக்கின்றது; விரதத்தின் பொழுது ஐம்பொறி அடக்கமும், உணவு கட்டுப்பாடும் தேவையானது”” என்ற பெரும் உண்மையைத் தெரிவிக்கும் நூலாசிரியர் இந்த நூலில் மூன்று விரதங்களைப் பற்றி எடுத்துக் கூறுகிறார்.
சுக்கிரவார விரதம், கிருத்திகை விரதம், கந்த சஷ்டி விரதம் ஆகிய மூன்று விரதங்கள் கந்தபுராணத்தில் உள்ளவையாகும்.
நவ வித பக்தியை விளக்கும் முதல் அத்தியாயம் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களையும் கௌரி அம்பிகைக்குரிய மூன்று விரதங்களையும் விநாயகருக்குரிய மூன்று விரதங்களையும் முருகப்பெருமானுக்குரிய மூன்று விரதங்களையும் பைரவருக்குரிய மூன்று விரதங்களையும் வீரபத்திரருக்குரிய ஒரு விரதத்தையும் சுட்டிக் காட்டுகிறது.
அடுத்து அடுத்த மூன்று அத்தியாயங்கள் விரதங்களை நன்கு விளக்குகிறது.
சுக்கிரவார விரதம் மூன்று நாட்கள் நியமம் கொண்டதாகும். இதை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து செய்தால், இழந்த பதவி, பொருள், ஆட்சி, அதிகாரம் எதுவாக இருந்தாலும் அது மீண்டும் கிடைக்கும்.
அடுத்து கிருத்திகை விரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பது விரிவாக விளக்கப்படுகிறது.
இதைக் கடைப்பிடிப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவோர் மூவுலகிலும் வேண்டிய பலனை அடைவார்கள்.
அடுத்து கந்த சஷ்டி விரதத்தை முறையாக எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.
இதை மேற்கொள்வோர் அவரவர் இழந்த பொருள், அதிகாரம், பதவி, தலைமை ஆகியவற்றை மீண்டும் அடைவது உறுதி,
முசுகுந்த மன்னன் முருகப் பெருமானின் விரதங்களை மேற்கொண்டு அடைந்த பலன்களை அடுத்த அத்தியாயத்தில் காண்கிறோம்.
இந்த மூன்று விரதங்களைப் பற்றி சாதாரணமாக நமக்குத் தோன்றும் கேள்விகள் பல.
அவற்றை அடுத்த அத்தியாயம் வினா விடை வடிவில் தருகிறது.
ஸ்கந்த புராணத்தில் சிவரஹஸ்ய காண்டத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டத்தில் உள்ள முருகப்பெருமானின் விரத மஹிமையை நூலின் இறுதி அத்தியாயம் கூறுகிறது.
76 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ 100/
நூல் கிடைக்குமிடம்: கந்தபுராண ஞானஸபை
கள்ளக்குறிச்சி 606213 தொலைபேசி: 9751848933
கந்தபுராணத்தில் உள்ள முருகப்பெருமானின் மூன்று விரதங்களை அழகுறத் தொகுத்து விளக்கியுள்ள சிவஶ்ரீ தில்லை S. கார்த்திகேயசிவம் அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் என்பதில் ஐயமில்லை.