Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பிராங்பர்ட் வழியாகச் சென்னையில் தரை இறங்கியவுடன் ஒரு நாள் ஓய்வு. மறுநாள், அதாவது மார்ச் 15 ஆம் நாள் (15-3-2025) , முதலில் காஞ்சி காமாட்சியைத் தரிசித்தோம்; பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்துக்குச் சென்றோம். கோவிலில் நல்ல கூட்டம்;காரணம் மாசி மகம் உற்சவம். பொறுமையாக வரிசையில் நின்று காமாட்சியைத் தரிசித்தோம். முன்னரே பலமுறை அம்மனைத் தரிசனம் செய்ததால் விரிவாக எழுதத் தேவையில்லை . பழைய கட்டுரைகளில் விவரங்கள் உள்ள. போகும் வழியில் உலகளந்த பெருமாள் கோவில் கச்சபேஸ்வரர் கோவில் ஆகியவற்றை படம் எடுத்தேன்.
மடத்திற்குள் எப்போதும் பூட்டிக்கிடக்கும் பெரியவரின் — காஞ்சீ மஹாசுவாமிகளின் (1894-1994) – பிருந்தாவனம் (சமாதி) – திறந்து இருந்தது; ஆனால் அவரது மற்றும் இளையவரது பிருந்தாவனங்களில் அபிஷேகம் நட ந்து கொண்டிருந்தது; சுமார் நூறு பேர் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும் தரிசனம் செய்தோம்; இளையவரது சமாதியில் யாரோ ஒரு சந்நியாசி நின்று கொண்டு அவ்வப்போது கூட்டத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கீழேயே பக்தர்களுடன் அமர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . பிருந்தாவனத்தில் நிற்க அனுமதித்து இருக்கக்கூடாது.
பின்னர் சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி பூஜை நடைபெறப்போகும் சந்திர மெளளிஸ்வர பூஜை மண்டபத்துக்கு வந்தோம்; சுவாமிகள் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் என்று அதிகாரிகள் சொன்னார்கள்; அந்த கொஞ்ச நேரம், 15 நிமிடங்களுக்கு வராததால் மதிய உணவினை ஒரு வெஜிட்டேரியன் உணவுவிடுதியில் முடித்துக் கொண்டு வைத்தீஸ்வரன்கோவிலை நோக்கி விரைந்தோம்
மடங்களில் பூஜை நேரங்களை எழுதிப்போடுவது நல்லது; ஸ்வாமிகள் வரும் நேரத்தினை முறையாக, சரியாக அறிவிப்பதும் காலத்துக்கு ஏற்ற உத்திகளாகும்; ஏனெனில் எங்களைப் போல பலரும் வெளியே சென்றதையும் பார்த்ததால் இதை எழுதுகிறேன். மடத்து அதிகாரிகள் இதைக் கவனிப்பார்களாக
மடத்தின் புஸ்தகக் கடைகளில் நிறைய புதிய புஸ்தகங்கள் வந்துள்ளன. மடத்தின் சுவர்களில் ஏராளமான நல்ல விஷயங்களை பொறித்துள்ளார்கள்; பயனுள்ள முயற்சி .
13 Mar 2023 — கோவிலுக்குள் மேலும் ஒரு அதிசயம்! காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி. காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர்.
2 Apr 2023 — காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிக்கை மணி மண்டபத்ததைத் தரிசிக்கும் பாக்கியம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில்தான் கிடைத்தது. எத்தனையோ முறை காஞ்சிபுரம் சென்றாலும் மணிமண் டபத்தைக் கடக்கும் நேரம் அது மூடப்பட்ட …
London Swaminathan’s New book -Greatest Tamil Book!
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in
Enjoy reading them.. Two Tamil books are printed in two separate volumes.
Here is one of my latest books
Foreword
This book Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit! contains over thirty articles on Tirukkural of Tiruvalluvar, the greatest poet of Tamil speaking world and the oldest language Sanskrit. These articles appeared in my two blogs over the period of 13 years. Apart from Tirukkural, there are articles touching Bharati, the greatest Tamil poet of modern age and Bhartruhari, author of Nitia Sataka.
Sanskrit and Prakrit have lot of interesting books such as NitiSataka of Bhartuhari and Gatha Sapta Sati. Since this is the third book dealing with Tamil and Sanskrit matters inside India, I have included the contents of my previous two books at the end. If you look at the contents of all the three books you will get a full picture of the marvellous productions in these two languages.
Outside India, we see Sanskrit Inscriptions in Turkey (Bogazkoi) dated around 1400 BCE and Dasaratha Letters in Egypt. And we have over 850 Sanskrit inscriptions in South East Asian countries. All these things are covered by me in my previous books. Those who are interested in these topics may go through the book list available with Pustaka.co.in
I thank all those who have supported me in my production of over 130 books in Tamil and English. Please go through this book and read the other two books to get a full picture.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் ஒரு சம்பவம் வருகிறது. இது நாஸ்தீகவாதிகளுக்கும் சமயச் சடங்குகளைக் கிண்டல் செய்வோருக்கும் நல்ல எச்சரிக்கை ஆகும்.
வேதங்களை முதல் மூன்று வருணத்தினர் மட்டுமே கற்கவேண்டும் என்பது பழங்கால விதி; (இது பற்றி யாரும் கவலைப் படவேண்டாம்; இப்போது பிராமணர்களும் கற்பதில்லை!)
நான்கு வேதங்களை வகையாகத் தொகுத்து நான்கு சீடர்களிடம் பரப்புரை செய்யும் பொறுப்பினை வழங்கிய வியாசரை வேத வியாசர் என்கிறோம். அதே வியாசர்தான் மஹாபாரதம் என்னும் உலகத்தின் மிக நீண்ட நூலை எழுதினார். அந்த மஹாபாரதத்துக்கு ஐந்தாவது வேதம் என்று பெயர் .
பிராமணர்களே ஆனாலும் கடுமையான விரத, ஒழுக்க விதிகளை பின்பற்றுவோர் மட்டுமே சுமார் இருபது ஆண்டுகளுக்கு வேதங்களைப் பயில முடியும். ஆ னால் மஹாபாரதம் என்னும் ஐந்தாவது வேதத்தை யாரும் எப்போதும் படிக்கலாம்; கற்கலாம். அதில் பதினெட்டு பருவங்களில் ஒன்றான சாந்தி பர்வம் சொல்லும் செய்தி இதோ:
கடவுளையும் வேதங்களையும் நம்பாதவர்களை நாஸ்தீகர் என்கிறோம். ந + அஸ்தி= இருப்பது உண்மை இல்லை என்று அவர்கள் சொல்லுவார்கள் ; அதாவது க டவுள் இருப்பது உண்மை இல்லை என்பது அவர்களின் வாதம். அவர்களுக்கு வாய்ச்சாலம் அதிகம்; இதனால்தான் மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் நாஸ்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் என்று விளாசுகிறார்
“ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும் “–
என்பது மாணிக்கவாசகர் பாடிய திருவாசகப் பாடல் ஆகும்
வால்மீகி ராமாயணம், பாலகாண்டம், ஆறாம் சர்கத்தில் அயோத்தி என்னும் நகரின் பெருமையினைச் சொல்லும் வால்மீகி முனிவர் அங்கு பொய்யர்களும் நாத்தீகர்களும் இல்லை என்கிறார்.
ந நாஸ்திகோ நாந்ருதகோ ந கஸ்சித பஹுஸ்ருத:
நாஸ்தீகன் இல்லை—கொஞ்சமாவது பொய் பேசும் வகை கூட இல்லை- படிக்காதவன் இல்லை- பொறாமை உள்ளவன், முட்டாள்கள் கிடையாது.
மஹாபாரத காலத்தில் நாஸ்தீகர்களுக்கு கடும் தண்டனையையும் கொடுத்தனர். அவர்கள் கைகளைக் கட்டி காட்டுக்கு அனுப்பினர்.
இதுபற்றி பீஷ்மர் சொல்லும் தகவல் முக்கியமானது; வேத நிந்தனை செய்த இந்திரன் ஒரு பிறப்பில் நரியாகப் பிறந்தான் என்கிறார். அவன் வேதங்களை குறைகூறியதோடு பிராமணர்களிடமும் எதிர்வாதம் புரிந்தான் என்று மஹாபாரதம் செப்பும்.
शृगाल (śṛgāla): This is a common and widely used Sanskrit word for “fox”.
மேலும் சொல்கிறார் –
Fox in 10 Downing Street, P M House in London.
வேதங்களை நிந்திப்பதால் எவருக்கும் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை ; ஆகையால் சாஸ்திரங்கள் சொல்லும் விதிகளை மீறுவோர் தமக்குத் தாமே அழிவினைத் தேடிக்கொள்கிறார்கள் .
அப்ராமண்யம் ச வேதானாம் சாஸ்த்ராணாம் வாபிலங்கனம்
அவ்யவஸ்தா ச ஸர்வத்ர தத் வை நாசமாத்மனஹ
****
வேதத்தின் முக்கியத்தை உணர்த்த வந்த வியாசர், சப்த ரிஷிகளும் மனுவும் வேதம் கறறார்கள் என்று மஹாபாரத சாந்தி பர்வத்தில் விளம்புகிறார் :
இந்த ஏழு ரிஷிகளையும் பிரம்மா படைத்தார் ; அவர்களை சித்ரசிகண்டீ என்றும் சாந்தி பர்வம் அழைக்கிறது
மரீசி, அங்கீரஸ், அத்ரி, புலஸ்திய, புலஹ, க்ரது, வசிஷ்ட என்ற ஏழு ரிஷிகள் ஆவர் வேறு ஒரு ஸ்லோகத்தில் மனுவினையும் சேர்த்து இந்த எட்டுப் பேர்கள் தான் பிரபஞ்சத்தை உருவாக்கினர் என்கிறது
இன்னும் ஒரு இடத்தில் அசித்த, தேவல, நாரத, பர்வத, ஆக்ஷன், பரசுராம, வசிஷ்ட ஜமதக்கினி, விச்வாமித்ர, பரத்வாஜ, ஹரிசமசுரு, குந்ததார ஆகிய முனிவர்களும் வேதங்களைக் கறறார்கள் என்று தெரிவிக்கிறது .
Source : Avenues in Sanskrit Literature Edite by R K Panda; Delhi; Year 2007
— SUBHAM—
Tags- இந்திரன் நரி, மாறியது, ஏன்? , நாஸ்தீகர், எச்சரிக்கை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிரான்சில் ‘டெட் லெட்டர் ஆபிஸ்’ Dead Letter Office (முகவரி சரியில்லாமல் வரும் கடிதங்களைப் பரிசீலனை செய்யும் அலுவலகம்) குமாஸ்தா ஒருவர் பல கடிதங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சொர்க்கத்திலிருக்கும் கடவுள் பெயருக்கு ஒரு உருக்கமான கடிதம் வந்திருந்தது அதில் ” கருணையுள்ள கடவுளே! எனக்கு விரைவில் ஐந்து பவுன்கள் பணம் அனுப்பி வையுங்கள்; இல்லாவிட்டால் என்னை வீட்டைவிட்டு வெளியே விரட்டி விடுவார்கள்” என்று ஒரு கிழட்டு அம்மாள் எழுதியிருந்தார்.
குமாஸ்தாவுக்கு இரக்கம் மேலிட்டது; நண்பர்களிடம் காட்டினான்; கிழவிக்கு உதவி செய்ய பணம் வசூலித்தான். பணம் சேர்ந்தது; அதை அப்படியே பாரீஸ் நகர கிறிஸ்தவ சர்ச் மூலம் கிழவியின் முகவரியைக் கண்டுபிடித்து அனுப்பிவைத்தான்.
கொஞ்ச நாள் கழித்து சொர்க்கத்திலுள்ள கடவுளுக்கு என்ற பெயரில் அதே கிழவியிடமிருந்து இன்னும் ஒரு கடிதம் வந்தது ; குமாஸ்தா ஆவலோடு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான்
அதில், “கருணையுள்ள கடவுளே ! நீங்கள் எனக்கு அனுப்பிய பணம் வந்து சேர்ந்தது; மிக்க நன்றி. ஆனால் ஒரு கோரிக்கை; இனிமேல் அனுப்பும் பணத்தை ‘சர்ச்’ மூலமாக அனுப்ப வேண்டாம். அவர்கள் கொஞ்சம் கமிஷன் எடுத்துக் கொண்டு மிச்ச பணத்தை மட்டுமே அனுப்பி இருந்தார்கள் !
****
ஜோமோ கென்யாட்டா
கென்யாவின் தலைவரானா ஜோமோ கென்யாட்டா ஒரு முறை இப்படிக் கூறினார் : “ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்கள் வந்த போது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது. எங்களிடம் நிலம் இருந்தது. சீக்கிரமே இது தலைகீழாக மாறிவிட்டது. எங்கள் கைகளில் பைபிளும் அவர்கள் கைகளில் எங்கள் நிலங்களும் உள்ளன.”
(Kenyan leader Jomo Kenyatta had ruefully observed, “When the Europeans landed in Africa they had Bible in their hands and we had our lands. Soon it got reversed and now we have the bible and they have our lands.”)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மார்ச் மாதம் (2025) சென்னை முதல் கும்பகோணம் வரை பயணம் செய்தபோது பார்த்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
PART -4
This is the Fourth Part of pictures i took during my visit to India in March 2025.
I used to take photos from my car or on the roadside. These were taken with my I Pad and Samsung Phone between Swamimalai and Chennai in Tamil Nadu.
Please see the previous three parts as well.
During School Examination time, not only students but also parents and teachers frequent the temple for good results. Here we see school teachers coming in school uniform.
ALSO LOOK AT THE BOOKS SOLD INSIDE THE KANCHI SHANKARACHARYA MUTT; THEY ARE VERY GOOD.
—Subham—
Tags- சென்னை – சுவாமிமலை, சாலையோர, காட்சிகள் , Part 4, boons on Kancchi Sankaracharya, Kanchi Mutt
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in
Enjoy reading them.
Here is one of my latest books
முன்னுரை
இந்தப் புஸ்தகத்தில் 38 சுவையான கட்டுரைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் .பொருளடக்கத்தைப் பாருங்கள் . உடனே பக்கத்தைப் புரட்டத் துவங்கி விடுவீர்கள்!
அவ்வையாரும் பாரதியாரும் பாடிய ஆத்திச்சூடிகளில் உள்ள மருத்துவ விஷயங்களை ஆராய்ச்சி செய்துவிட்டு, தமிழ் ஆசாரக்கோவை வரையும் மருத்துவ ஆராய்ச்சி நீடிக்கிறது. உலகையே வியக்கச் செய்த புத்தமத தத்துவ அறிஞரும் மந்திரவாதியுமான நாகார்ஜுனாவின் மந்திர தந்திர குளிகைளைப் படித்துவிட்டு, பாபா செய்த அற்புத ங்களுக்கான விளக்கத்தையும் படிக்கலாம்.
மூன்று விபசாரிகளுடன் பழகிய புத்தர், ஏசு, ராம கிருஷ்ண பரமஹம்சர் பற்றிய கட்டுரை மனதை உருக்கக்கூடியது. வேசி மகளும் தெய்வ மகள் ஆக வாய்ப்பு உண்டு! இறுதியில் இந்துக்களின் கடல் அடி மலைகளை, யானைகளின் பெயர்களை ஆராய்ச்சி செய்து விட்டு மோடியின் பொன்மொழிச் சொற்பொழிவுடன் படித்து முடிக்கலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு அருமையான தேவாரப் பாடல் அப்பர் பாடிய ஆறாம் திருமுறையில் உள்ளது. அதை D K ஜெயராமனின் குரலில், மோகன ராகத்தில் ,கேட்கையில் மேலும் சிறப்படைகிறது. அவர் பாடிய ஊரின் பேரைக் கேட்டாலோ தீராத நோய் எல்லாம் தீர்ந்துவிடும்; வாராத செல்வம் எல்லாம் வந்து விடும் என்கிறார் அப்பர் பெருமான்.
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பொருள் :
ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,
கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,
தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,
வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனேஎன்று புலம்புகிறார்அப்பர்.
(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல் நாயகி)
XXX
இந்தியாவுக்கு எப்போது போனாலும் குல தெய்வமான வைத்தீஸ்வரனைத் தரிசிக்க மாயூரம் அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் செல்வோம்.. இந்த முறை 2025 மார்ச் மாத இந்திய விஜயத்தின்போது சுவாமி மலையும் தரிசனத்தில் இடம்பெற்றது .
என்னுடைய பெயருக்கு காரணமே சுவாமிமலை சுவாமிநாதன்தான்; அந்த சுவாமிமலையை எனது பயணத்திட்டத்தில் சேர்க்கவில்லை;. கும்பகோணம் ஸ்ரீவத்சம் கெ ஸ்ட் ஹவுசில் தங்கி, மதிய உணவு அருந்திய பின்னர் நண்பர் சீனிவாசனிடம் நீங்கள் இங்கேயே தங்குவதால் உங்களுக்குத்தான் ரூட் தெரியம்; மாலை 4 மணி முதல் இரவுச் சாப்பிடுவரை எங்கெங்கு போகலாம் என்று சொல்லுங்கள் என்றேன்.
முதலில் சுவாமிமலைக்குப் போவோம் என்று துவங்கினார்; உடனே எஸ் எஸ் YES, YES என்று சொன்னேன்.
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா என்ற சினிமா பாட்டுதான் நினைவுக்கு வந்தது இறைவனே இங்கே வா என்று சொல்லும் அசரீரிதான் வேறொரு ஒருவரின் வாய்ச் சொல் மூலம் வருகிறது போலும்!
****
புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில்
அப்பர் பாடிய பாடலில் வைத்தீஸ்வரன்கோவில் பற்றிய எல்லா அரிய செய்திகளும் வந்துவிட்டன. இங்குள்ள தனிச் சிறப்புகள் மூன்று :
முதல் சிறப்பு தன்வந்திரி சிலை இருப்பதாகும்; அது தீராத நோய்களைத் தீர்த்துவைக்கும் என்பதை மெய்ப்பிக்கிறது உலகில் முதல் முதலில் மருத்துவத்தைப் போதித்தவர் தன்வந்திரி.
இரண்டாவது தனிச் சிறப்பு இது செவாய் தோஷ பரிகாரத் தலம் ஆகும் அங்காரகன்/ செவ்வாய் சந்நிதியும் உளது
மூன்றாவது சிறப்பு — பாடல் பெற்ற முருகன்– செல்வமுத்து குமார சுவாமி இருப்பதாகும்.
இந்தக் காரணங்களால் நாங்கள் கணேசர் தொடங்கி, முருகன், சிவன், அம்பாள் அஃகாரகன், தன்வந்திரி என்று ஆறு அர்ச்சனைகள் செய்வது வழக்கம் இந்த முறையும் அப்படியே செய்தோம். மாலை நேரம் ஆனதால் அதிக கூட்டம் இருக்கவில்லை.
இங்கு குளத்தில் வெல்லம் கரைப்பதும், அம்பாள் சந்நிதிக்கு அருகில் உப்பு -மிளகு போட்டு மருந்து உருண்டை பெறுவதும் வழக்கம்.
****
சுவாமி மலையில் மகன்
சுவாமிமலை முருகனுக்கு வேறு எங்கும் இல்லாத சிறப்பு உண்டு. தந்தையான சிவபிரானுக்கே ஓம்காரத்தின் உட்பொருளை விளக்கிய பெருமை உடையவன்!
கோவிலுக்குள் மாலையில் சென்றோம் படிகள் ஏறித்தான் இறைவனைத் தரிசிக்க வேண்டும் ஆனாலும் பழனி மலை போல அதிகப் படிகள் கிடையாது; எவரும் ஏறிவிடலாம்.
உள்ளே நுழையும்போதே அசரீரி ஒலித்தது!
சார்! நூறு ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு போங்கள்; சுவாமிக்கு முன்னால் அரை மணி நேரம் கூட நிற்கலாம் என்றது அந்தக் குரல்; அவர் கட்டாயம் கோவில் ஊழியர் அல்ல ;எப்போதும் டிக்கெட் வாங்க மறுக்கும் அல்லது தயங்கும் நான் உடனே எனக்கும் மனைவிக்கும் சேர்த்து இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினேன். திவ்ய தரிசனம்தான்; சுவாமிநாதனுக்கு மிக அருகில் இருபது நிமிடம் நின்று நல்ல தரிசனம் கிடைத்தது
எங்கு போனாலும் நேரம் ,காலம், சூழ்நிலை ,அறிந்து சிறிது விசாரித்துச் சென்றால் முழுப்பலனையும் அடையலாம்; எல்லாவற்றுக்கும் மேலாக அவன் அருளாலேதான் அவன் தாள் வணங்க முடியும். சும்மாவா சொன்னார் மாணிக்கவாசகர்
சுவாமி மலைக்குப் போனது இது முதல் தடவை அல்ல; ஆயினும் இந்த தரிசனம் மனதில் நீங்காது நிற்கிறது .
முக்கியக் குறிப்புகள்
முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது.
கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோவி ல் என்றும் அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமான் இக்கோயிலில் ‘தகப்பன் சுவாமி’ எனப் புகழ் பெற்று விளங்குகிறார். இக்கோவி லின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது.
இங்குள்ள மூன்று கண் படைத்த நேத்திர விநாயகரும் புகழ்பெற்ற பிள்ளையார் ஆவார்
****
சுவாமிமலை திருப்புகழ்
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய …… குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய …… மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு …… மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட …… அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு …… சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு …… மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி …… லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல …… பெருமாளே.
****
Vaitheeswaran Koil Entrance
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப …… முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த …… பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி …… லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி …… தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க …… வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த …… குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் …… முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த …… பெருமாளே.
—SUBHAM—
TAGS- சுவாமி மலை , சுவாமிநாதன், முருகன், படைவீடு, ஓம்காரம், வைத்தீஸ்வரன்கோவில், அப்பர் தேவாரம், திருப்புகழ், புள்ளிருக்குவேளூர், அங்காரக க்ஷேத்திரம், தன்வந்திரி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
30-3-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞான மயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
சமர்த்த ராமதாஸர் – 2
ச. நாகராஜன்
ஒரு நாள் சிவாஜி மஹராஜ் தளர்ந்த உள்ளத்துடன் தனது படுக்கையில் இருந்த போது அவரிடம் அவரைப் பார்க்க சமர்த்த ராமதாஸர் வந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
துள்ளி எழுந்த சிவாஜி அவரிடம் ஓடி அவரைப் பணிந்தார். அவருடன் பல நாட்கள் தங்கி இருந்த ராமதாஸர், சிவாஜி தனது மகன் சம்பாஜியைப் பற்றி எண்ணி வருத்தப்படுவதை உணர்ந்து அவருக்கு ஆறுதல் அளித்தார்.
“இந்த ஸ்வராஜ்யமே இறைவன் திட்டமிட்டு உருவாக்கிய திருப்பணி தான். ஆகவே சம்பாஜியைப் பற்றிக் கவலைப்படாதே. இதை நன்கு ஆள தகுதி உள்ள ஒருவன் நிச்சயம் வருவான். அனைத்தையும் இறைவனிடம் விட்டு விடு” என்றார்.
இந்தச் சொற்களால் வருத்தம் நீங்கப் பெற்ற சிவாஜி அவரை விழுந்து வணங்கினார்.
“நான் உன் அருகிலேயே உள்ள பர்லி கோட்டையில் தான் தங்கி உள்ளேன்” என்றார் ராமதாஸர்.
அன்றிலிருந்து அந்தக் கோட்டைக்கு சஜ்ஜன் கர் என்று பெயர் சூட்டப்பட்டது. சஜ்ஜன் கர் என்றால் ஆண்ரோர்களின் உறைவிடம் என்று பொருளாகும்.
ஊர் ஊராகச் சென்ற ராமதாஸர் ஆங்காங்கே பதினோரு இடங்களில் அனுமாருக்காகக் கோவில்களை நிறுவினார்.
தல யாத்திரை சென்ற சமயத்தில் ஒரு நாள் அவரது தாயார் கண் பார்வை இழந்து வருந்துவதாகக் கேள்விப்பட்ட அவர் நேரடியாகத் தாயாரிடம் வந்தார். தனது தாயாரின் கண்களைத் தனது கரங்களால் தொட்டார்.
அவரது பார்வை மீண்டது.
அவரது கரத்தில் ஒரு சிறிய வில் இருக்கும். அருகிலிருக்கும் கற்களை எடுத்துத் தான் பார்க்கும் பொருள்களின் மீது வில்லால் கற்களை எறிவது அவர் பழக்கம்.
பெண்களை அவர் பெரிதும் மதித்துப் போற்றினார். அவரது சீடர்களாக 1100 பேர் சமர்த்த பிரிவில் இணைந்தனர். இவர்களில் 300 பேர்கள் பெண்களாவர்.
ராமதாஸரின் தர்ம பிரசாரத்தை இவர்கள் மேற்கொண்டு நாடு முழுவதும் அதைப் பரப்பலாயினர்.
சிவாஜியின் மகனான ராஜாராம் செஞ்சியின் மீது படைஎடுத்து ஔரங்கசீப்பின் ஆக்கிரமிப்பைத் தடுக்க முயன்றார். ராமதாஸர் தனது தெற்கு நோக்கிய விஜயத்தின் போது சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரரான வெங்கோஜி அவரது சீடரானார். தஞ்சாவூரில் ஒரு மடத்தை நிறுவிய ராமதாஸர் அங்கு தனது நேரடி சீடரான பீமஸ்வாமியை அதை நிர்வகித்து வருமாறு கூறி அருளினார்.
சீக்கியர்களின் குருவான ஹர்கோவிந்த சிங்கை ராமதாஸர் தனது ஶ்ரீ நகர் விஜயத்தின் போது சந்தித்தார். சந்திப்பின் போது ராமதாஸர் ஹர் கோவிந்த சிங்கிடம், “ நானக் வழியில் வந்த நீங்கள் உலகைத் துறந்தவர்கள் தாம். நீங்கள் அரசன் உடையை அணிந்து ஆயுதங்களைத் தரித்து உள்ளீர்கள். குதிரைப் படையைக் கொண்டு செல்கிறீர்கள். இது ஏன்? என்றார். உடனே ஹர்கோவிந்தசிங், “ நான் உள்ளே ஒரு துறவி. வெளியே ஒரு அரசன்” என்றார். “ஆயுதங்களைத் தரிப்பது ஏழைகளைப் பாதுகாக்கவும் கொடுங்கோலர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் தான்” என்றார். உடனே ராமதாஸர், “இந்த பதில் என் மனதைக் கவர்கிறர்து” என்றார்.
தனது இறுதி காலத்தில் ராம நாமத்தை ஜெபித்தவாறே அவர் ஒரு வித உணவையும் எடுக்காமல் ராமனோடு ஒன்று கலந்தார். அவர் சமாதி நிலையை அடைந்த தருணத்தில் அவரது உடலிலிருந்து ஒரு பெரும் ஒளி வெளியில் கிளம்பியதை அனைவரும் பார்த்தனர்.
அவர் இறுதியாக தன் சீடர்களிடம் உபதேச உரை ஆற்றுகையில், “ஒரு போதும் உடல் தேவைகளைப் பற்றி அதிகம் நினைக்காதீர்கள். சத்சங்கத்தைக் கொள்ளுங்கள். ராமரை உங்கள் இதயத்தில் நிலை நிறுத்துங்கள். காம க்ரோத லோப மத மாத்ஸரியத்தை நீக்குங்கள். அனைவரின் மீதும் அன்பு கொள்ளுங்கள்’ என்றார்.
ராமதாஸரது இலக்கியம் பரந்துபட்ட ஒன்றாகும்.
அவரது இலக்கியமானது அவர் வடக்கிலும் தெற்கிலும் நிறுவிய அவரது மடங்களை ஏற்ற சீடர்களால் பரப்பபட்டு வந்தது.
தாஸ போதம் என்ற அவரது நூல் மிகவும் பிரபலமான நூலாகும்.
மானஸ ஸ்லோகம் என்ற அவரது மனதை நோக்கிக் கூறும் ஸ்லோகம் அனைவராலும் கூறப்பட்டு வரும் ஒரு ஸ்லோகமாகும்.
ராமர் ராவணனை வெற்றி கொண்டதை மட்டும் விவரிக்கும் அவரது ராமாயணம் பிரபலமான ஒன்று.
அவரது ஹனுமன் ஸ்தோத்திரம் இன்றும் கூட மஹராஷ்டிர பள்ளிக்கூடங்களில் மாணவர்களால் சொல்லப்பட்டு வருகிறது.
கருணாசதகம் உள்ளிட்ட பல நூல்கள் அவரால் இயற்றப்பட்டுள்ளன.
அனைத்திலும் வல்லவராக இருந்த காரணத்தினால் அவர் சமர்த்த ராமதாஸர் என்று அழைக்கப்பட்டார். அவரது சம்பிரதாயத்தை ஏற்றுக் கொண்டோர் சமர்த்த பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர்.
ராமதாஸரால் ஊக்கம் பெற்றோர் இன்று வரை ஏராளமானோர் உள்ளனர்; இனியும் இருப்பார்கள்.
ஸ்வாதந்திர வீர் வினாயக் தாமோதர் சவர்க்கார் அவரது தாஸபோதத்தால் உத்வேகம் பெற்றார். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை உருவாக்கிய கேசவ் பலிராம் ஹெட்கேவார் ராமதாஸரின் பெரும் பக்தர். ராமதாஸரது பல உரைகளை அவர் தனது டயரியில் எழுதி வைத்துக் கொள்வது வழக்கம். அவரால் உத்வேகம் பெற்றே அவர் ஆர் எஸ் எஸ்ஸை நிறுவினார்.
அவரது உபதேச உரைகள் எந்தக் காலத்திற்கும் பொருந்துபவை; அனைவருக்கும் வழிகாட்டுபவையாகும்.
ஶ்ரீ ராம ஜெயராம ஜெயஜெய ராம ஓம் என்று தியானிப்பதோடு சமர்த்த ராமதாஸரின் அடி போற்றுவோம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன். நன்றி வணக்கம்.