Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 18
I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
World Telugu Conference,
Vandemataram , Urdu poem, Earth Conference, Birds of India, Swamp Deer, Dr Hari Sing Gour, Arunagiri nathar, Paramahamsa Yogananda, Vir Chakra Medal, Industries emblem, Bird Sanctuary, Maharaja Agrasen, Film Festival, Coconut Research, Mahila Vidyapeeta, Blood Donation
–Subham—
Tags-Pictures of 2500 Indian Stamps ,Part 18, Vandemataram , Urdu poem, Earth Conference, Birds of India, Swamp Deer, Dr Hari Sing Gour, Arunagiri nathar, Paramahamsa Yogananda, Vir Chakra Medal, Industries emblem, Bird Sanctuary, Maharaja Agrasen, Film Festival, Coconut Research, Mahila Vidyapeeta, Blood Donation
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான மருத்துவ நூல்கள் சரக சம்ஹிதையும் சுஸ்ருத சம்ஹிதையும் ஆகும்; இவற்றில் சம்ஸ்க்ருத மொழியில் கண்டுள்ள மருத்துவ விஷயங்கள் அந்தக் காலத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை . அதற்கும் முன்னதாக அதர்வ வேதத்தில் பல மருத்துவச் செய்திகள் இருந்தபோதிலும் அவை ஒரு சில தகவலே ஆகும். மேலும் வேத கால இலக்கியங்கள் சமய நூல்கள்; மருத்துவ நூல்கள் அல்ல .
மூன்றாவது முக்கிய நூல் அஷ்டாங்க ஹ்ருதயம் ஆகும் . இது தவிர வாத்ஸ்யாயனர் எழுதிய காமசாஸ்திரத்திலும் மருத்துவச் செய்திகள் உள்ளன .
****
சீனாவில் அதிசயக் கண்டுபிடிப்பு
வடமேற்கு சீனாவில் குச என்னும் நகரில் ஒரு புத்த விஹாரத்தில் புதைக்கப்பட்டிருந்த சமஸ்க்ருத ஆயுர்வேத சுவடிகளை போயர் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார்; ஏழு பகுதிகளாகக் கிடைத்த இந்த சுவடிகளில் உள்ளிப் பூண்டின் மகத்துவம் முதலியன விவரிக்கப்பட்டுள்ளன . இவை குப்தர் கால லிபியில் எழுதப்பட்டுள்ளதால் குறைந்தது 1600ஆண்டுகள் பழமை ஆனவை; பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஹாமில்டன் போயர் Hamilton Bower இவைகளைக் கண்டுபிடித்தார் (The Bower Manuscript is a collection of seven fragmentary Sanskrit treatises found buried in a Buddhist memorial stupa near Kucha, northwestern China.)
மூன்று முக்கிய நூல்களில் என்ன உள்ளன என்பதைக் கண்டால் அவைகளின் வீச்சு , தாக்கம் நமக்குத் தெரியும்
சரக 1-30-31, சுஸ்ருத 1-1-7, அஷ்டாங்க ஹ்ருதய 1-1-5 நூல்களில் பொதுவான எட்டு அத்தியாங்கள் உள்ளன. அவையாவன-
1.உள்ளுக்குள் கொடுக்கப்படும் மருந்து – காய சிகித்சா
2.குழந்தை மருத்துவம் – பால சிகித்சா- கெளமார பிருதிய
3.மனம் தொடர்பான மருத்துவம் – பூத வித்யா அல்லது கிரஹ சிகித்சா
4.சிறிய அறுவைச் சிகிச்சைகள் – சாலக்ய தந்த்ர
5.அறுவைச் சிகிச்சை- சல்ய தந்த்ர
6.விஷமருத்துவம் – அகாத தந்த்ர
7.முதியோர் மருத்துவம்- ரசாயன தந்த்ர
8.பாலுணர்வுக்கு உதவும் காம ரஸ குளிகைகள்.
இதில் அறிவியல் அணுகுமுறையைக் காணலாம் குழந்தைப் பருவ , இளமைப்பருவ, முதியோர் பருவ நோய்களை அத்தியாயம் அத்தியாயமாக அணுகுகின்றனர்; மேலும் இளைஞர்களுக்குத் தேவையான குளிகை விஷயங்களும் பேசப்படுகின்றன.
மேற்கண்டவை பொதுவான அணுகுமுறை ஆகும்
****
குறிப்பாக எட்டு அத்தியாயங்களை சரக சம்ஹிதையில் காண்கிறோம்:
அத்தியாயம் 1 – சூத்ர ஸ்தான – பொதுவான மருத்துவ விதிகள்
2.நிதான ஸ்தான- நோயின் காரணம் (அ) தோற்றம் பற்றிய ஆய்வு
3.விமான ஸ்தான – நோயின் அறிகுறிகள் – சுவை – பத்தியம்
4.சரீர ஸ்தான- கருவுருதல், உடற்கூறுகள்
5.இந்திரிய ஸ்தான- நோயைக் கண்டுபிடித்தல்
6.சிகித்சா ஸ்தான- சிகிச்சை அளிக்கும் முறைகள்
7.கல்ப ஸ்தான – என்ன என்ன மருந்துகள் கொடுக்கலாம்.
8.சித்தி ஸ்தான- பேதி மருந்துகள்; அசுத்தங்களை உடலிலிருந்து அகற்றும் முறைகள்
****
சுஸ்ருத சம்ஹிதை அத்தியாயங்கள்
சூத்ர, நிதான, சரீர, சிகித்சா, கல்ப ஆகிய ஐந்து ஸ்தானங்களை வைத்துக்கொண்டு ஆறாவது அத்தியாமாக உத்தர ஸ்தானம் என்று ஒரு அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது; இதில் மூக்கு அறுவைச் சிகிச்சை, மனக்கோளாறுகள், குழந்தை நோய்கள், பொதுவான மருத்துவக் கொள்கைகள்/விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் திரிதோஷ – வாத ,பித்,த கப — அணுகுமுறை பொதுவாக இருக்கிறது இதை வள்ளுவர் குறளிலும் காண்கிறோம் .
****
சீனாவில் கண்ட சம்ஸ்க்ருத சுவடிகள்
போயர் கண்டுபிடித்த சுவடிகளில் நவநீதகம் , சித்த சங்கர்ஷ என்ற இரண்டு நூல்களின் துண்டுப் பகுதிகள் கிடைத்திருக்கின்றன . அதில் 13 விஷயங்கள் காணப்படுகின்றன-
1.சூர்ணங்கள் தயாரிப்பது எப்படி?
2.நெய்யை மருத்துவ முறையில் பக்குவப்படுத்தல்
3.மருத்துவ எண்ணெய்கள் / தைலங்கள்
4.எனிமா – மலக்குடலை தண்ணீர் செலுத்திக் கழுவும் முறை
5.ஊட்டச்சத்து / டானிக்
6.கஞ்சி வகைகள்
7.காம உணர்வுக்கான குளிகைகள்
8.கண் மை/ அஞ்சனம்
9.தலை முடிக்கு சாயம்
10.கடுக்காய் மருத்துவம்
11.தார் – கரிப்பிசின் பயன்கள்
12.சித்ர மூலம் குணங்கள்
13.குழந்தை மருத்துவம்
****
சுவையான விவரம்
அமிர்தத்தைத் திருடிய அசுரர் தலைகளை விஷ்ணு வெட்டி வீழ்த்தினார் என்றும் அந்தத் தலைகள் விழுந்த இடத்தில் உள்ளிப்பூண்டுகள் விளைந்ததால் அவைகளை பிராமணர்கள் சாப்பிடமாட்டார்கள் என்றும் ஒரு சுவடியில் உள்ளது ; அதில் உள்ளிப்பூண்டுகளை வீட்டில் தொங்கவிடும் விழா பற்றியும் இருக்கிறது!
–subham—
Tags- சீனாவில் ,சம்ஸ்க்ருத சுவடிகள் , நவநீதகம் , சித்த சங்கர்ஷ, மேஜர் ஜெனரல் ஹாமில்டன் போயர், மூன்று முக்கிய மருத்துவ நூல்கள், சரக சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை, அஷ்டாங்க ஹ்ருதயம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8.பாண
ஹர்ஷ மாமன்னனின் அரசவைப் புலவர் பாண .
ஹர்ஷ சரித என்ற புஸ்தகத்தில் ஹர்ஷரின் வாழ்க்கையைத் தந்தார். காதம்பரி என்னும் காதல் காவியத்தையும் எழுதினார். சம்ஸ்க்ருதத்தில் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் வரிசையில் இவரே சிறப்பான இடத்தைப் பெற்றவர் .
காலம் – ஏழாம் நூற்றாண்டு.
****
9.பாரவி
பல்லவர் காலத்தில் வாழ்ந்த பெரிய ஸம்ஸ்க்ருதப் புலவர். கிராதார்ஜுனியம் என்னும் காவியத்தைப் படைத்தவர். பிற்காலப் புலவர்களின் பாராட்டினைப் பெற்றவர்; ஐஹோல் கல்வெட்டில் 634 CE காளிதாசனுடன் இவரையும் புகழ்ந்துள்ளனர் ; காலம் ஆறாம் நூற்றாண்டு.
****
10.பர்த்ருஹரி
சதகத்ரயம் என்ற முன்னூறு நீதிநெறிப்பாடல்களைப் பாடியவர் . நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்காரசாதகம் , ஆகிய மூன்று பிரிவுகளை உடையது இது. இவை மூன்றும் திருக்குறளுக்கு இணையான நீதி நூல் . காலம் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டு.
****
11.அனந்த
இவரது காலம் பத்தாம் நூற்றாண்டு. காஷ்மீரை ஆண்ட மன்னர்களில் ஒருவர். சார்ங்கத்தர பத்ததி என்ற நூலில் இவரது கவிதை இடம்பெற்றுள்ளது சாரங்கத்தரன் என்ற ஆசிரியர் 280 கவிஞர்களின் கவிதைகளை 1363-ல் தொகுத்தார் ; அந்த நூலில் ஹடயோகம் பற்றிய முக்கியக் குறிப்புகள் உள்ளன.
****
12.பட்ட நாராயண
மஹாபாரதப் போரை வருணிக்கும் வேணி சம்ஹார என்ற நாடகத்தை எழுதினார் . கூந்தலை முடித்த கதை என்பது இதன் பொருள் . திரவுபதியின் துகிலை உரித்து அவமானப்படுத்தியபோது அவள் கூந்தலை முடிப்பது பற்றி எடுத்த சபதத்தையும் பீமனின் சபதத்தையும் விவரிக்கும் நாடகம் இது. காலம் ஏழாம் நூற்றாண்டு.
****
13.பவபூதி
காளிதாஸருக்குப் பின்னர் வந்த முக்கிய சம்ஸ்க்ருத நாடகாசிரியர்; இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு.
இவர் எழுதிய உத்தர ராம சரிதம் , மாலதி மாதவம் என்ற இரண்டு நாடகங்களும் மிகச் சிறந்த படைப்புகள். இவர் நாடக ஆசிரியர் மட்டுமில்லை; பெரிய கவிஞரும் ஆவார்
****
14.போஜதேவன்
தாரா என்ற நகரிலிருந்து ஆண்ட மிகப் புகழ்பெற்ற மன்னன்.
இந்த மன்னன் எழுதாத விஷயமே இல்லை ; தாமஸ் ஆல்வா எடிசனைவிட அதிக கண்டுபிடிப்புகளையும் லியர்னாடோ டா வின்சியைவிட அதிக சப்ஜெக்டுகளையும் — விமான சாஸ்திரம் உட்பட– எழுதியவன். பெரும் கவிஞன் ; புலவர்களின் புரவலன் . எண்ணற்ற நூல்கள் இவன் பெயரில் உள்ளன .காளிதாசன் காலத்தில் வாழ்ந்த போஜனுக்கு நிகரனாவன் . கவிதை / யாப்பு இலக்கண நூலையும் எழுதினான் காலம் 11-ஆம் நூற்றாண்டு.
****
15.பில்ஹண/ன்
காஷ்மீர் புலவர்; செளர பஞ்சசிகா என்ற காதல் கவிதைத் தொகுப்பினையும் மேலைச் சாளுக்கிய மன்னரின் பிரதாபங்களைக் கூறும் விக்ரமாங்கதேவ சரித என்ற நூலையும் எழுதினார்.
ஒரு மன்னரின் மகளான யாமினி பூர்ண திலகாவைக் காதலித்ததால் அந்த மன்னன் புலவரைச் சிறையில் அடைத்தான்; அவரது கதி என்ன என்று காஷ்மீர் சுவடிகள் கூறவில்லை; ஆனால் தென் இந்திய சுவடிகள் தமிழ்த் திரைப்படங்களைப் போல சுபமாக முடிக்கின்றன . ஸம்ஸ்ருத இலக்கணம் கற்கப்போன இடத்தில் காதல் வலையில் சிக்கிய இந்தப் புலவனின் காதல் கவிதைகள் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. காலம் 11-ஆம் நூற்றாண்டு.
****
16.தண்டி/ன்
காஞ்சிபுர பல்லவர் காலப் புலவன். ஸம்ஸ்க்ருதத்தில் உரைநடை நூலையும் படைத்தவன் ; கவிதை யாப்பு இலக்கணத்தைக் கூறும் காவ்ய தரிசன நூலின் ஆசிரியர் ; உரை நடையில் தச குமார சரிதம் என்ற காதல் கதைகளை எழுதினார் ; மனிதனின் குணாதிசயங்களையும் மாயாஜாலத்தையும் வருணிக்கும் கதைகள் அவை ; தச குமார சரிதத்தைத் தழுவி ஜியோவன்னி பொக்காஸியோ டெகாமரன் கதையை எழுதினார் என்பார்கள் காலம் ஏழாம் நூற்றாண்டு.
****
17.தாமோதர குப்த
காஷ்மீர் மன்னன் ஜெயாபிடனின் மந்திரி; வேசிகள் தாசிகள் கதைகளைக் கவிதை வடிவத்தில் கூறும் நாவலை -புதினத்தை எழுதினார்; நாவலின் பெயர் குட்டனிமதம் ; ஆயிரம் கவிதைகளுக்கு மேலுள்ள இந்த நூல் விலைமாதர்களைப் பற்றி எச்சரிக்கும் நீதி நூலாகவே கருதப்படுகிறது. காலம் 8-ஆம் நூற்றாண்டு.
கந்தபுராணத்தை நன்கு ஆராய்ந்து காலத்திற்கேற்றபடி இப்படி ஒரு நூலைத் தொகுத்து வழங்கியுள்ள சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள் நமது பாராட்டுக்கு உரியவர்.
இந்நூலுக்கு அருள்வாழ்த்துரையை கல்யாணபுரி என்கிற கூனம்பட்டி ஆதீனம் 57வது குருமஹா சந்நிதானம் அவர்களும், பெங்களூர் ஶ்ரீஶ்ரீ வேதாகம ஸம்ஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் அவிநாசி சிவஶ்ரீ எஸ். சுந்தரமூர்த்தி சிவாசாரியார் அவர்களும், திருப்பனந்தாள் காசித் திருமடம் ஶ்ரீலஶ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் அவர்களும் தந்து சிறப்பித்துள்ளனர்.
அணிந்துரையை குளித்தலை சீகம்பட்டி சைவ.சு.இராமலிங்க ஐயா அவர்கள் அளித்துள்ளார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 16
I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
Family Planning 25 pence, Sarat Chandra Chatterjee, , Olympics, krishna menon, Shivaji, army tank, three mini sheets, Kamaraj, family planning triangle, parliament conference, republic anniversary, medal, muthuswami Dikshitar, Aryabhata satellite, veena, Gandhi big, kncb, child with cock, American revolution, ahalyabhai Holkar, Hindi conference
–Subham—
Tags-Pictures of 2500 Indian Stamps ,Part 17, Family Planning 25 pence, Sarat Chandra Chatterjee, , Olympics, krishna menon, Shivaji, army tank, three mini sheets, Kamaraj, family planning triangle, parliament conference, republic anniversary, medal, muthuswami Dikshitar, Aryabhata satellite, veena, Gandhi big, kncb, child with cock, American revolution, ahalyabhai Holkar, Hindi Conference
125.தமோதிதர்சன 1-24-15 அடிக்கடி வலிப்பு வந்து மயக்கம் போடுதல்
126.திமிர 1-20-11 ஓரளவுக்கு கண்பார்வையை இழத்தல்
127.த்ரிஷன 6-22-57 தாகம் எடுப்பது தொடர்பான நோய்கள்- ஐந்து வகைகள்
128.த்வகவிதாரண 1-20-14 உலர்ந்த சருமம், சொரசொரப்பான தோல்
129.உதரரோக 6-13-9 வயிற்று நோய்கள்
130.உதர்த்த1-20-17 தோல் அரிப்பு
131.ஊனபதங்குசனியக விகார 3-34 பெருமளவு நோய் பராவுதல்
132.உன்மத்த – பதினைந்து வகை -6-9 பைத்தியம், மனக்கோளாறுகள்
133.உப ஜிஹ்விக 6-12-77 சலவை , நாக்குப்புண்
134.உப குஷ 6-12-78 பாக்டீரியாக்களினால் ஈற்றில் புண் /ஈறு அழற்சி
135.ஊரு சத 1-20-11 தொடையில் ஏற்படும் நலிவு, பலவீனம்
136.ஊரு ஸ்தம்ப 6-27 தொடையில் ஏற்படும் பக்கவாதம்
137.உத் சந்த்ர 6-25-58 உடலுக்குள் உறுப்புகள் இடம்பெயர்தல்
138.வாத பலச 6-29-11 முடக்கு வாதம், வாத நோய்கள்
139.வாதஸ்தில 8-9-36 மல, மூத்திர உறுப்புகளில் தோன்றும் கட்டி
140.விதலிக 6-12-76 இருதயத்தைப் இழிவது போல கடும் வலி
141.விதாரிக 6-12-89 தொடை இடுக்கில்/ கவட்டைப் பகுதியில் கட்டி, வீக்கம்
142.விலோம 6-25-118 வழுக்கை, சொட்டைத் தலை , முடி இழக்கும் நோய்
143.விசர்ப்ப – ஏழு வகை -6-21-29 வீக்கம் பரவுதல்
144.விஷம ஜ்வர- 6 வகை- அடிக்கடி வரும் காய்ச்சல்
145.விஷு சிக 3-2-14 காலரா நோயால் வயிற்றுப போக்கு
146.வ்ரதன 6-12-94 நீடித்திருக்கும் வீக்கம்
147.வ்ரண 6-25 புண்கள்- 44 வகைகள் இருக்கின்றன
148.வ்ரிஷன க்ஷேப 1-20-11 விரை , விதைப்பை, விதைக்கொட்டையில் ஏற்படும் வலி, வீக்கம்
149.யோனிரோக- 17 வகை – 6-30 பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் நோய்கள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நோய்களை வகைப்படுத்தி அவைகளுக்கு மருந்து, சிகிச்சைகளையும் சம்ஸ்க்ருதத்தில் எழுதியது போல உலகில் வேறு எந்த மொழியிலும் மருத்துவ நூல்கள் எழுதப்படவில்லை.
சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவரும் விரிவான மருத்துவ நூல்களை அளித்துள்ளனர். அவை தவிர அஷ்டாங்க ஹ்ருதயம் நவநீதகம் போன்ற பிற்கால நூல்களும் நமக்கு நிறைய தகவல்களை அளிக்கின்றன. தமிழில் அகத்தியர், போகர், புலிப்பாணி போன்ற பலருடைய பெயர்களில் பல நூல்கள் உள்ளன ; அவை காலத்தால் மிகவும் பிந்தியவை என்பதை அவற்றின் மொழியும், நடையும், சம்ஸ்கிருதத் சொற்களும் காட்டிவிடுகின்றன .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாம் தமிழர்களாகப் பிறப்பதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ; காரணம் என்னவெனில் உலகத்தின் இரண்டு பெரிய மொழிகளில் உள்ள இலக்கியங்களை அவர்கள் சொந்த மொழியிலும் மொழிபெயர்ப்பிலும் படிக்க முடிகிறது திருவள்ளுவரையோ, புறநாநூற்றையோ, சிலப்பதிகாரத்தையோ பாரதி பாடல்களையோ ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ மொழிபெயர்த்தால் தமிழ்ச் சுவை இராது ; சம்ஸ்க்ருத்தில் உள்ள காளிதாசன் காவியங்களையும், வேதாந்த தேசிகர் ,முத்துசுவாமி தீட்சிதர் வரையுமுள்ள பேரறிஞர்கள் எழுதிய சம்ஸ்க்ருதப் பாடல்களையும் நாம் அப்படியே தமிழிலும் படிக்க முடிகிறது. குறிப்பாக லிப்கோ வெளியிட் ட காளிதாசனின் நூல்கள் , மற்றும் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் மொழிபெயர்த்த மிருச்சகடிகம் ( மண்ணியல் சிறுதேர் ) நூல் முதலியவற்றைப் படிப்போர் கொடுத்து வைத்தவர்களே ; பெரும் பாக்கியசாலிகள் .
ஷேக்ஸ்பியர் எழுதியதை ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் ; அது போல சம்ஸ்க்ருத நூல்களையும் அந்த மொழியில் படிக்கவேண்டும் ; அது முடியாதவர்கள் அறுபது பெரியோர்களின் பெயர்களையாவது படிக்கலாம். அவர்களுடைய நூல்களை அடுக்குவதற்கு வீட்டில் ஒரு லைப்ரரியே தேவைப்படும் .
இவர்கள் வேத காலத்துக்குப் பின்னர் தோன்றியவர்கள்; நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிலிருந்து சில நூற்றா ண்டுகளுக்கு முன்னர் வரை சம்ஸ்க்ருத மொழியில் அமிர்த மழை பொழிந்தவர்கள் ஆவார்கள்.
இதோ அந்தப் பட்டியல்
1.காளிதாசன்
காளிதாசன் எழுதிய காவியங்கள்தான் மேலை உலகில் முதலில் பிரபலமாயின ; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கவிஞன், நாடக ஆசிரியன் , காவியம் படைத்தோன் காளிதாசன் ; இவனது கவிதைகள் குப்தர் கால கல்வெட்டிலும் உள்ளது
எழுதிய நூல்கள் ஏழு ; இதுதவிர நிறைய தனிப்பாடல்களும் உள.
சாகுந்தலம், விக்ரம ஊர்வசீயம், மாளவிகா அக்நிமித்திரம் ஆகிய நாடகங்களையும் ரகுவம்சம், குமார சம்பவம், மேகதூதம் , ருது சம்ஹாரம் ஆகிய காவியங்களையும் கவிதைகளையும் படைத்தான். 1500 உவமைகளை நமக்கு அளித்தான். அதில் இருநூறு உவமைகளை சங்கப் புலவர்கள் பயன்படுத்தினர் இவரது நூல்களைப் பார்த்து கபிலர் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்க நூலைப் படைத்ததாக ரெவரெண்ட் ஜி யு போப் முதலியோர் சொல்கின்றனர்.
****
2.பாஷா
காளிதாசனுக்கும் முந்திய நாடக ஆசிரியன் பாஷா ; இவனது பதிமூன்று நாடகங்கள் கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன அவற்றில் மிகவும் புகழ்பெற்றது ஸ்வப்னவாசவ தத்தம் என்னும் நாடகம் ஆகும்.
பெருங்கதை /பிருஹத்கதா பற்றிய நாடகங்கள் -ஸ்வப்ன வாசவ தத்த, பிரதிக்ஞா யவ்கந்தராயண , அவிமாராக, சாருதத்த.
****
3.அபிநந்த – ராமசரித என்ற கவிதை நூலை யாத்தவர் ; பால வம்ச அரசவைப் புலவர்; காலம் – ஒன்பதாம் நூற்றாண்டு.
ஸந்த்யாகர் நந்தி என்றும் பெயர். சிலேடைகள் மிகுந்த ராமாயணத்தை இவர் இயற்றினார் ராமபால என்ற பால வம்ச மன்னர் பற்றி யும் எழுதினார்.
****
4.அமரு
அமருசதகம் என்ற பெயரில் நூறு காதல் கவிதைகளை எழுதினார் இவரது காலம் ஏழாம் நூற்றாண்டு.
****
5.அசக
கர்நாடகத்தைச் சேர்ந்த சமண மதப் புலவர் ;திகம்பர சமண ப் பிரிவைச் சேர்ந்த இவர் வர்த்தமான சரிதம் என்ற பெயரில் மஹாவீரர் வாழ்க்கையினை எழுதியுள்ளார் ; காலம்- ஒன்பதாம் நூற்றாண்டு.
****
6.அஸ்வகோஷர்
புத்த மத விஷயங்கள் பெரும்பாலும் பாலி மொழியில்தான் இருக்கின்றன ; இவர் காளிதாசனையும் வால்மீகியையும் காப்பி அடித்து புத்தசரிதம் என்ற நூலினைப் படைத்தார் ; அது புகழ்பெறவில்லை; மேலும் இப்போது நமக்கு கிடைத்த நூல் முழு நூலாகக் கிடைக்கவில்லை; வெள்ளைக்காரர்கள் அங்குமிங்கும் கிடைத்த விஷயங்களையும் மொழிபெயர்ப்புகளையும் ஓட்டுப்போட்டு நூலாகப் படைத்துள்ளனர் . காலம் -முதல் நூற்றாண்டு.
****
7.அதுல
மூஷிக வம்சம் என்ற கேரள அரசர்கள் பற்றி இவர் படைத்த நூலின் பெயர் – மூஷிக வம்ச. இவரது நூல் இல்லாவிடில் அந்த வம்சம் பற்றிய தகவலே இல்லாமல் போயிருக்கும். காலம் 11 ஆம் நூற்றாண்டு.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நூல் அறிமுகம்
கந்தபுராணக் கட்டுரைகள் – பகுதி 1 – பதிப்பாசிரியர்சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம்
ச.நாகராஜன்
கந்தபுராண ஞானஸபை,, கள்ளக்குறிச்சியின் வெளியீடாக வந்துள்ள நூல் கந்தபுராணக் கட்டுரைகள் – பகுதி 1
பத்து அறிஞர்களின் கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்த நூலின் பதிப்பாசிரியர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்கள்.
சைவ சமயத்தின் மூன்று பெரும் புராணங்களில் ஒன்றாக அமைவது கந்தபுராணம்.
“எந்தப் பொருளும் கந்தபுராணத்தில்” என்பது தமிழ்ப் பழமொழி.
ஞான உபதேசங்கள், தத்துவ ரகசியங்கள், வரலாறுகள், ஆன்மீக உண்மைகள், பக்தியின் மகிமை உள்ளிட்டவற்றைக் கந்தபுராணம் தருகிறது.
இது அனைவரிடமும் சென்று சேரவேண்டும் என்று பாடுபட்டு வருகிறது கந்தபுராண ஞானஸபை
அதில் ஒரு முயற்சியாக அறிஞர்களிடமிருந்து கந்தபுராண ஞானஸபை கந்தபுராணம் சம்பந்தமான கட்டுரைகளை வரவேற்று அதில் தேர்ந்தவற்றைப் முதலாம் பகுதியாக இப்போது வெளியிட்டுள்ளது.
இதில் உள்ள பத்து கட்டுரைகள் பின் வருமாறு:
முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம்
திருமதி V. இந்திரா
கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள்
ச.பாலமணிகண்டன்
கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்
மு. கிருஷ்ணசாமி
கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள்
பனசை மு. சுவாமிநாதன்
முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம்
S. மணிமேகலை
கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்
அ. ராதா
கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள்
ர. அருணாதேவி
கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்
ஈசான சிவ ஆனந்தமீனாக்ஷி
கந்தபுராணத்தில் சிவஸ்தலங்களின் மகிமை
திரு தி. மீனாட்சிசுந்தரம்
கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்
சிவ. கோமதி திருநாவுக்கரசு
திருமதி V. இந்திராவின் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் கட்டுரையில் பெருமானின் திருவடியிலிருந்து திருமுடி வரை அமைந்துள்ள உபநிடதங்கள், கலைகள், தேவர்கள் உள்ளிட்ட விஷயங்களைக் கண்டு வியக்கலாம்.
கட்டுரையில் கந்தபுராணத்தில் உள்ல அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பேறுகள் மற்றும், காப்பிய வருணனைகள் உள்ளிட்டவற்றைப் படித்து மகிழலாம்.
மு. கிருஷ்ணசாமியின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம் கட்டுரையில் சூரனின் அகந்தையும் அவனது ஆணவ மறைப்பும் பற்றிப் படிப்பதோடு தைப்பூச சிறப்புகள் பற்றிக் காணலாம்.
பனசை மு. சுவாமிநாதனின் கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள் கட்டுரையில் கந்தபுராண உவமைகள் நயம் பற்றிப் படித்து மகிழலாம்.
S. மணிமேகலையின் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் கட்டுரையில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் மற்றும் தேவர்களுக்குக் காட்டும் பேருருவக் காட்சி பற்றிய அரும் செய்திகள் தரப்படுகின்றன.
அ.ராதாவின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம் கட்டுரையில் சிவபெருமானின் மேன்மை, சிவபெருமானின் கருணை, சிவபிரானை வழிபடும் முறைமை உள்ளிட்டவை தரப்படுகின்றன.
ர. அருணாதேவியின் கச்சியப்ப சிவாச்சாரியாரின் காவிய நயங்கள் கட்டுரையில் கந்தபுராணம் தோன்றிய வரலாறு, சுவாமிகள் வரலாறு, காவிய நயங்கள் உள்ளிட்ட விவரங்களைப் படித்து மகிழலாம்.
ஈசான சிவ ஆனந்தமீனாக்ஷியின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம்
கட்டுரையில் பார்வதியின் தோற்றம், பராசக்தியின் வடிவம், அருள் சக்தி, முருகன் வேல் பெறுதல் உள்ளிட்ட அரும் செய்திகள் தரப்படுகின்றன.
திரு தி. மீனாட்சிசுந்தரத்தின் கந்தபுராணத்தில் சிவஸ்தலங்களின் மகிமை கட்டுரையில் கேதார்நாத், காசி, ஶ்ரீ சைலம், ஶ்ரீ காளஹஸ்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவெண்ணைநல்லூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட தலங்களின் பெருமையும் அருமையும் விவரிக்கப்படுகின்றன.
இறுதியாக உள்ள சிவ. கோமதி திருநாவுக்கரசின் கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம் கட்டுரையானது மாயையைப் பற்றி நிற்கும் உயிர்கள் அடையும் தடுமாற்றமும் ஆணவமலத்தின் உருவான சூரபன்மனின் ஆணவக் கொட்டம் அடக்கப்பட்ட விதத்தையும் சித்தரிக்கிறது.
அனைத்துக் கட்டுரைகளும் ஆய்வின் அடிப்படையில் அமைந்திருப்பதால் கந்தபுராணத்தின் சீரிய சிறப்பும் அதில் உள்ள உள்ளார்ந்த ரகசியங்களும் முருகப் பெருமானின் வழிபாட்டின் மேன்மையையும் அது அருளும் பலன்களையும் கண்டு வியக்கிறோம்;பிரமிக்கிறோம்.
கட்டுரை ஆசிரியர்கள் அனைவரும் நமது பாராட்டுக்கு உரியவர்கள்; இதைத் தொகுத்து அரும்பணி ஆற்றியுள்ள பதிப்பாசிரியர் சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
117.SHOTHA 2-12-1 சோத – கால்களில் நீர் /திரவம் சேர்ந்து வீங்குதல்
118.SHVASA 6-17-46 ஸ்வாச – ஆஸ்த்மா – 5வகைகள் உண்டு
119. SHVETAMUTRAVARCHASTVA 1-20-17 ஸ்வேத மூத்திர வர்சஸ்த்வ- / வெள்ளை நிற சிறுநீர், நூல் திரிகள் போல தோற்றம்.ஸ்வேதா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து தான் ஸ் /வைட் WHITE / வெள்ளை என்ற ஆங்கிலச் சொல் வந்தது.
120.SROTOROA 3-5-8 FOURTEEN TYPES NAMED
ஸ்ரோத ரோக -உடலில் சுரக்கும் திரவங்கள் அவை செல்லும் குழாய்கள் தொடர்பான நோய்கள்.