ஜெய் ஜெய்பூர் – 2 (Post No.14,422)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,422

Date uploaded in London – –22 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-4-25 மாலைமலர் இதழில் பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது. 

ஜெய் ஜெய்பூர் – 2 

ச. நாகராஜன் 

நகார்கர் ஃபோர்ட் 

நகார்கர் கோட்டை ஆரவல்லி மலையில் அமைந்துள்ள இன்னொரு கோட்டையாகும். நகார்கர் என்றால் புலி என்று பொருள். இது முதலில் சுதர்ஷன்கார்க் என்று அழைக்கப்பட்டது. ஜெய்பூரின் வலிமை வாய்ந்த அரணாக இது திகழ்கிறது. அரசர்கள் ஒரு காலத்தில் நடந்த இந்த இடத்தில் பயணிகள் இன்று நடந்து உத்வேகம் பெறுகின்றனர்!

காலே ஹனுமான்ஜி ஆலயம்

இது ஜெய்பூர் ரயில் நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஹனுமார் சூரிய பகவானிடம் அனைத்துக் கலைகளையும் கற்ற பின் அவருக்கு குரு தக்ஷிணை தர விழைந்தார்.

சூரிய பகவான் ஹனுமானிடம் தனது புத்திரரான சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறி அதுவே அவர் தனக்குத் தரும் குரு தக்ஷிணையாகும் என்றார்.

 தானாக சனீஸ்வரன் தன்னிடம் வருவதில்லை என்றும் தான் அழைத்தாலும் அவர் வருவதில்லை என்றும் சூரிய பகவான்  குறிப்பிட்டு ஆகவே எப்படியாவது சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு ஹனுமானிடம் கூறினார்.

 ஹனுமார் சனீஸ்வரனைத் தேடிப் போனார். ஆனால் அவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்து அவரை சூரிய பகவானிடம் அழைத்துப் போகத் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஹனுமான் தனது தந்தையான சூரியனைக் குருவாகக் கொண்டு அவரிடம் வைத்திருக்கும் அசைக்க முடியாத பக்தியைக் கண்டு சனீஸ்வரன் வியந்தார்.

 சூரியனைப் பார்க்க வருவதாக ஒப்புக் கொண்ட சனீஸ்வரன் மனம் மிக மகிழ்ந்தார். . தன்னை வழிபடுவோர் ஹனுமானை வழிப்பட்டாலொழிய தனது அருளைப் பெற முடியாது என்று ஒரு நிபந்தனையைக் கூறிய அவர் தனது கறுப்பு நிறத்தையும் ஹனுமானுக்கு வழங்கினார்.

அந்த கறுப்பு நிறத்தைப் பெற்றுக் கொண்ட ஹனுமான் கறுப்பு நிறமானார்.

காலே ஹனுமான் என்றால் கறுப்பு ஹனுமான் என்று பொருள். ஆகவே இங்கு கோவில் கொண்டுள்ள ஹனுமானை காலே ஹனுமான் என்று அனைவரும் துதித்து வழிபடுகின்றனர்.

எப்போதும் பொதுவாக ஹனுமான் எல்லாக் கோவில்களிலும் ஆரஞ்சு வண்ணத்திலோ அல்லது சிவப்பு வண்ணத்திலோ தான் காட்சி அளிப்பார். இங்கு மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறார்.

 கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களும், கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்று நினைக்கும் பக்தர்களும் இந்தக் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். அனைத்து வியாதிகளையும் போக்குபவராக இந்த ஹனுமான் இருப்பதாக இவரை இங்கு வழிபடுபவர்கள் கூறுகின்றனர்.

 சனி தோஷம் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும் தொழிலில் மேன்மை பெறவும், மனோவியாதிகள் நீங்கி அமைதியான வாழ்க்கையைப் பெறவும் ஹனுமானை வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.

ஹனுமத் ஜெயந்தி தினத்தில் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர். விட்டது வியாதி; போனது தோஷம் என்பது இங்கு வந்து தொழும் பக்தர்களின் நம்பிக்கை வாக்கு!

 பிர்லா மந்திர்

பிர்லா மந்திர் என்று அழைக்கப்படும் லட்சுமிநாராயணன் கோவில் 1988ல்  பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட கோவிலாகும். வெண்மையான சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கொவிலில் லட்சுமி தேவியும் நாராயணரும் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனர்.

சாந்தம், அழகு, இறை வழிபாட்டின் பலன் – இவை அனைத்தையும் ஒருங்கே தருவது பிர்லா மந்திர்!

 ஜல் மஹால்

ஜல் மஹால் என்றால் நீர் அரண்மனை என்று பொருள். இது ஜெய்பூரில் மான் சாகர் ஏரியின் நடுவில் அமைந்துள்ள அழகிய ஒரு அரண்மனையாகும். இதை சவாய் பிரதாப் சிங்க் 1799ல் கட்டினார். ஐந்து அடுக்குகள் கொண்ட இந்த அரண்மனை முழுவதும் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டது, ஏரியில் நீர் முழுமையாக நிரம்பும் சமயத்தில் இதில் உள்ள நான்கு அடுக்குகள் நீரிலே மூழ்க ஐந்தாவது அடுக்கு மட்டும் காட்சி அளிக்கும்.

ஜல்மஹால், வானம் நீரைத் தொடும் இடம்; சரித்திரம் கவிதை பாடும் இடம்!

 சிசோடியா ராணி அரண்மையும் தோட்டமும்

கூட்டத்தைத் தவிர்த்து அமைதி நாடும் வரும் இடம் இது. ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இது.

மன்னர் சவாய் ஜெய் தனது உதய்பூர் இளவரசியான தனது இரண்டாவது மனைவிக்குப் பரிசாக 1728ம் ஆண்டு கட்டியது இது. இந்த ராணி சூரிய வமிசத்தின் வழி வந்த சிசோடியா பரம்பரையைச் சேர்ந்தவர். பசுமை வாய்ந்த மரங்களும் மலர்ச் செடிகளும் ஒருபுறம் இருக்க பல அடுக்குகள் கொண்ட அரண்மனையை இன்னொரு புறம் காணலாம்.

 டக் டக் ரைட் (டக் டக் சவாரி)

ஜெய்பூரில் எல்லா இடங்களுக்கும் செல்ல வசதியாக டக் டக் என்று அழைக்கப்பட்டும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் உள்ளன. இந்த டக் டக் சவாரி மூலம் இதன் டிரைவரே திட்டமீட்ட பாதை வழியே ஜெய்பூர் முழுவதையும் சுற்றிக் காட்டி விடுவார். ஒரு நாள் பயணம் இரு நாள் பயணம் என்று நமது வசதிக்குத் தக்கபடி இந்த சவாரியை நாம் அமைத்துக் கொள்ளலாம். இதில் பயணம் செய்வோர் அனைவரும் இதைப் பொதுவாக ரசிக்கவே செய்கின்றனர்.

 ஜெய்பூர் என்பது இவ்வளவு தான் என்று யாரும் முடிவு கட்டி விடக் கூடாது. வீரம் வாய்ந்த ராஜபுதன அரசர்களின் பரம்பரைக்கே உரித்தான ஏராளமான அரண்மனைகள், அழகிய மாளிகைகள், பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், இறைவழிபாட்டுத் தலங்கள் என்று இன்னும் ஏராளமான இடங்கள் உள்ளன. ஆங்காங்கே உள்ள அருங்காட்சியகங்கள் பழமையான சிறப்பு வாய்ந்த வரலாறை நமக்கு விளக்கமாகத் தெரிவிக்கும். ஜெய் ஜெய்பூர்!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 15 (Post No.14,421)


Written by London Swaminathan

Post No. 14,421

Date uploaded in London –  21 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  15

I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

Great Writers , Maithili Sharan Gupta, Romesh Chander Dutt, Michel Madhusudan Dutt, Vithalbhai Patel, Indipex, Peacock, Elephant, Masks of India, Ravana, Nicholaus Copernicus, A O Hume, Max Muller, NCC, Kamala Nehru, Gandhi and Nehru, V D Paluskar, Dr Hansen, Syed Ahmed Khan, St Thomas Anniversary, Moon , Sun Masks, Jainarain Vyas, Ranjit Singh, Rajaji, Tipu Sultan, VVGiri

–Subham—

Tags–Part 15, Indian Stamps, Great Writers , Maithili Sharan Gupta, Romesh Chander Dutt, Michel Madhusudan Dutt, Vithalbhai Patel, Indipex, Peacock, Elephant, Masks of India, Ravana, Nicholaus Copernicus, A O Hume, Max Muller, NCC, Kamala Nehru, Gandhi and Nehru, V D Paluskar, Dr Hansen, Syed Ahmed Khan, St Thomas Anniversary, Moon , Sun Masks, Jainarain Vyas, Ranjit Singh, Rajaji, Tipu Sultan, VVGiri, Narasimha, Veeresalingam

சரக சம்ஹிதை நூலில் 149 நோய்கள்- Part 5 (Post No.14,420)

Written by London Swaminathan

Post No. 14,420

Date uploaded in London –  21 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART FIVE 

நோய்களின் பட்டியல், அவை நூலில் காணப்படும் அத்தியாயம், ஸ்லோகங்களின் எண் முதலியன :–

தமிழ், சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்

81. FAINTING FITS 1-24-35 SIX TYPES DESCRIBED மூர்ச்சா- வலிப்பு வந்து மயக்கம் போடுதல்

82. RETENTION OF URINE CAUSING DISTENSION OF THE LOWER ABDOMEN8-9-30 மூத்ரஜதர – மூத்திரம் தங்குவதால் கீழ்வயிற்றில் ஏற்படும் வீக்கம்

63.DYSURIA – SIX TYPES DESCRIBED-6-26-32 மூத்ரகிரிச்சர – சிறுநீர் கழிக்கும் பொது வலி, எரிச்சல்

84.URAEMIA- 8-9-34 மூத்ர க்ஷய – ரத்தத்தில் சிறுநீர்த் தங்கல் நோய், யூரியா உப்பு தங்குதல்

85.CHRONIC DIFFICULTY AND DELAY IN MICTURITION – 8-9-35 மூத்ரதித – சிறுநீர் கழிப்பதில் தாமதம் சிரமம்

86. BLOOD DISCHARGE WTH URINE – 8-9-34 மூத்ரோத்ஸங்க – சிறுநீரோடு ரத்தம் வருதல்

87. SINUS OF FISTULA 6-25-56 நாடிவர்ண –  வாய் பெளத்ரம் – மூக்கு வாய் பகுதியில் புண்

88. DISEASES OF NEW BORN BABIES – 4-8-45 FOUR  TYPES DESCRIBED நாடிரோக – பிறந்த குழந்தைகளுக்கு  வரும் நோய்கள்- நான்கு வகை –

89. DISEASES OF NASAL PASSAGES 6-26 நாசரோக – மூக்கு சம்பந்தமான நோய்கள்

நோஸ் என்னும் ஆங்கிலச் சொல் நாசா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்தது

90. HYPERSOMNIA 1-20-17 நித்ராதிக்ய – கும்பகர்ணன்  போல தூங்குவது ;அதிக தூக்கம் 

91. HEAT STROKE 1-20-14 உசா – வெய்யில் பொறுக்காமை/  சூடதிஉடல் உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படுதல்

92. HARE LIPS 1-20-11 உஷ்டபேத- உதடுதடித்தல்  , பிளவை

93. FALLEN ARCH OR FLAT  FOOT 1-20-11 பதபிராம்ச-  தட்டையான பாதம்,

94. HEMIPLAGIA 1-20-11 பக்ஷவாத /பக்கவாதம் , ஒரு பக்கத்தை மட்டும் செயல்படாமல் செய்யும் நோய் 

95. JAUNDICE 6-16-6  THREE TYPES

பாண்டு ரோக /மஞ்சள்  காமாலை – மூன்று வகை

96. DEFORMED FOOT 1-20-11 பங்குல்ய- சீரற்ற கால் , உருச்சிதைந்த பாதம்

97. BREATHING DIFFICULTY 1-20-11 பார்ஸ்வவிமிர்த – மூச்சுத் திணறல்

98. DIABETIC ERUPTION  1-17-82 பிடக –  சர்க்கரை நோயால் வரும் புண்கள், கொப்புளங்கள்

 SPLEEN=மண்ணீரல்

99. SPLENIC DISEASES 1-19-4  FIVE  TYPES DESCRIBED ப்ளிதரோக – மண்ணீரல் நோய்கள் – ஐந்து வகை;

ஸ்பிலீன் / மண்ணீரல் என்ற ஆங்கிலச் சொல் ப்ளித என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வானத்தை அறிந்தால் இந்தச் சொல் மறக்காது .

100. URINARY DISPRDERS 2-4-8  SIX TYPES DESCRIBED. பிரமேக – ஆறு வகைகள் – சிறுநீர் பாதை தொடர்பான கோளாறுகள்

TO BE CONTINUED…………………………………………………

TAGS- சரக சம்ஹிதை நூல்,  149 நோய்கள்,  Part 5

அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு -சரகர், உபநிஷத் கூற்று (Post No.14,419)

Written by London Swaminathan

Post No. 14,419

Date uploaded in London –  21 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Picture from New Scientist 

அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு -சரகர், பிருஹத் ஆரண்யக உபநிஷத்  கூற்று

சரக ஸம்ஹிதையும் பெருங்காட்டு ( பிருஹத் ஆரண்யக)  உபநிஷத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது ஆன்றோர் கணிப்பு; அப்போதே உடலையும் பிரபஞ்சத்தையும் ஒப்பிடும் அளவுக்கு இந்துக்களின் விஞ்ஞான நோக்கு இருந்தது. இதைப்  பிற்காலத்தில் கிரேக்கர்கள் நம்மிடமிருந்து கற்று மைக்ரோ காஸம் ,மேக்ரோ காஸம் Microcosm , Macrocosm   என்று பகர்ந்தார்கள்; கிரேக்கர்கள் எதையும் இயற்றுவதற்கு முன்னரே சம்ஸ்க்ருத நூல்கள் எழுதப்பட்டுவிட்டன.  

பிரபஞ்சத்தில் உள்ள சக்தியும், பொருளும் நமது உடலிலும் காணப்படுகிறது என்ற கூற்று தமிழிலும் சம்ஸ்க்ருதத்தி லும் நீண்ட நெடுங்காலமாக உள்ள கூற்று ஆகும் यत् पिण्डे तत् ब्रह्माण्डे’ “Your Body is a Miniature Universe” யத் பிண்டே தத் ப்ரஹ்மாண்டே என்பது சம்ஸ்க்ருத வாக்கியம் ஆகும். இதைத் தமிழில் பிண்டத்திலுள்ளது அண்டத்திலும் உளது என்று சொன்னார்கள்.

இதை சரக சம்ஹிதை பின்வருமாறு செப்புகிறது:

ஏவமயம் லோகசமிதஹ புருஷஹ 4-4-13 மனிதன் என்பவன் உலகத்தின் ஒட்டுமொத்த வடிவம் –என்பது இதன் பொருள்.

ஒருவனிடத்திலுள்ள குணங்கள் பிரபஞ்ச சக்திகளின் பிரதிபலிப்பே 4-5-5 என்று 3000  ஆண்டுப்  பழமையான சரக சம்ஹிதை புகல்கிறது.

கீழ்கண்ட அட்டவணையில் சரகர் கூறியதைக் காணலாம் –

தட்சப் பிரஜாபதி வடிவத்தில் பிரம்மன்  = ஆத்மாவைப் பிரதிபலிக்கும் மனித மனம்

இந்திரன் = அஹம்காரம்

ஆதித்யன் =  திரட்சி ; நாம் சேர்த்துவைத்தது

ருத்ரன் =  கோபம்

சோமன் = இன்பம்

வசூஸ் = மகிழ்ச்சி

அஸ்வினி தேவர்கள்= புறத் தோற்றம்; வசீகரம்

மருத் = உற்சாகம்

விச்வே தேவர்கள் – புலன்களும் புலன் உணர்வுகளும்

தமஸ் = அறியாமை

ஜோதி = அறிவு

உற்பத்தி / படைப்பு = கருவுறுதல்

கிருத யுகம் = குழந்தைப் பருவம்

த்வாபர யுகம் = நடுத்தர வயது

கலியுகம் = வயதான காலம்

பிரளயம் = மரணம்

****

உபநிஷத காலத்திலேயே கல்லூரி ‘சயன்ஸ்  லேப்’-பில் COLLEGE SCIENCE LABORATORY சோதனைகளைச் செய்வது போலத்தான் முனிவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்.

மாணவனை உப்பைக் கொண்டுவரச் சொல்லி அதை ஒரு கோப்பைத் தண்ணீரில் போடச் சொல்லி அது கரைந்து மறந்ததை வைத்தும்  , ஒரு  பெரிய ஆலமத்தின் விதையினைக் கொண்டுவரச் செய்து  அதிலிருந்து பிரம்மாண்டமான ஆலமரம் உருவானது எப்படி என்று கேட்டும் சிந்தனையைத் தூண்டினார்கள் .

பெருங் காட்டு / பிருஹத் ஆரண்யக உபநிஷத்துதான் பதினெட்டு உபநிஷதங்களில் பழமையானது . அதில் பிரபஞ்சம் என்பதற்குப் பதிலாக மரத்தினைக் காட்டி அதிலுள்ள உறுப்புகளை மனிதனுடன் ஒப்பிடுகிறார் ரிஷி முனிவர் . இந்த உபநிஷத்தில் வரும் யாக்ஞவல்கியர், மைத்ரேயி காத்யாயனி ஆகியோரின் கதைகளை நாம் அறிவோம்.

காட்டிலுள்ள மரத்தைப் போன்றவனே மனிதன் ;

மனிதனின் தலை முடிகளே இலைகள்;

அவனது தோலே மரத்தின்  பட்டை;

சர்மத்திலிருந்து ரத்தம் கசிவது போல மரப்பட்டையிலிருந்து கோந்து கசிகிறது .

தோலைத் துளைத்தால் பீச்சி அடிப்பது போல குபு குபு என்று வருகிறது .

உடலுக்குள் உள்ள சதை போல மரத்துக்குள்ளும் மரச் சோறு உண்டு .

அதன் நாரோ சதை போல வலுவுடையது ;

வைரம் பாய்ந்த மரத்தினைப் போல மனிதனுக்குள் எலும்பு இருக்கிறது .

எலும்பு மஞ்சையும் மரத்தினிலுள்ள மிருதுவான பகுதியைப் போன்றதே .

மரத்தை வெட்டினாலும் அது வளர்கிறது

வேரிலிருந்து விளைய முடிகிறது .

மனித உடல் கீழே சாய்ந்தபின்

எந்த வேரிலிருந்து அவன் மீண்டும் தோன்றுகிறான் ?

மனித விந்துவிலிருந்து என்று சொல்லாதீர்கள் ;

அது உயிருள்ளபோது மட்டுமே நிகழ முடியம் .

வேருடன் மரத்தினை வீழ்த்திவிட்டால் பின்னர் முளைப்பது எங்கே

மனிதன் வீழ்ந்தால் மீண்டும் தோன்றுவது எப்படி?

யக்ஞவல்க்ய  ரிஷியின் இந்த  உரை பிரம்மனே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதாகும். மறுபிறப்பு பற்றிய சிந்தனை என்றே நான் கருதுகிறேன்.

எது எப்படியாகிலும் நாம் காணவேண்டியது அக்காலத்தில் நிலவிய சிந்தனையைத்  தூண்டும் ஒப்பீடுகள் தான் !

–SUBHAM—

TAGS- அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு , சரகர், பிருஹத் ஆரண்யக உபநிஷத் .

यत् पिण्डे तत् ब्रह्माण्डे’ “Your Body is a Miniature Universe” : Upanishad and Charaka Samhita (Post No.14,418)

Written by London Swaminathan

Post No. 14,418

Date uploaded in London –  21 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

यत् पिण्डे तत् ब्रह्माण्डे’ Your Body is a Miniature Universe”  :  Upanishad and  Charaka Samhita

Yat pinde tat brahmande is an ancient Sanskrit saying . The translation of yat pinde tat brahmande can be interpreted as “All that is outside you, is within you,” or “Your body is a miniature universe.”

Pinda means “microcosm” and Brahmanda means “macrocosm”;

Oldest Upanishad Brhadaranyaka Upanishad (Big Forest Upanishad ) and the Charaka Samhita say what I found outside is in our body. Both these books are 3000 years old.

The body is viewed by Ayurveda not merely as a part of nature but made as it is  of the same stuff that goes in the making of everything else in nature- it is considered an epitome of nature , a microcosm . as the Charaka Samhita puts it:

The Purusha is an epitome of the world

Evamayam lokasamhitah purushah -4.4.13

The universal phenomena are said to correspond to similar phenomena in an individual. The list as prescribed by the Charaka Samhita  4-5-5 in this regard follows as :

Universal Phenomena – Corresponding Phenomena in an Individual

1-2 Potentiality of the Brahman 

symbolized by Daksha Prajapati . —-  1-2 Potentiality of the internal soul symbolised by the mind

3.Indra   —                           3.Ahamkara

4.Aditya        —                    4.Accumulation

5.Rudra  —-                         5.Anger

6.Soma                                  6.Pleasure

7.Vasus                                  7.Happiness

8.The Aswins                        8.Complexion

9.Marut                                 9.Enthusiasm

10.Vishvadeva                     10.All the senses and objects of senses

11.Tamas                               11.Ignorance

12.Jyoti                                 12.Knowledge

13.Beginning of Creation             13.Impregnation

14.Krita Yuga                       14.Childhood

15.Treta Yuga                       15.Youth

16.Dvapara Yuga                 16.Middle Age

17.Kali Yuga                          17.Old Age

18.Deluge                             18.Death

Source  book-Medicines of Early India by Kanjiv Lochan, 2003

****

BRIHADRANYAKA UPANISHAD

Here the Rsi / seer used Tree instead of Universe

Tree and Man

Robert Ernest Hume

As a tree of the forest

Just so surely is man

His hair are leaves

His skin the outer bark.

From his skin blood

Sap from the bark flows forth.

From him when pierced there comes forth

A stream ,as from the tree when struck.

His pieces of flesh are under-layers of wood

The fibre is muscle-like, strong

The bones are the wood within

The marrow is resembling pith.

A tree, when it is felled , grows up

From the root, more new again;

A mortal, when cut down by death

From what root does he grow up?

Say not from semen

For what is produced from the living

As the tree, forsooth, springing from seed,

Clearly arises without having died.

If with its roots they should pull up

The tree, it would not come into being again

A mortal, when cut down by death

From what root does he grow up?

3-9-28  Translated by Robert Ernest Hume

****

Ten years ago, I wrote in this blog:

Plato used Hindu Microcosm and Macrocosm!

Research paper No 1944

Written by London swaminathan

Date: 20th June 2015

Uploaded in London at 21-50

‘Yat Pinde tad Brahmaande’

It is a well-known fact that Alexander the Great developed great interest in Hindu ascetics because of his mentor Aristotle who was trained in Plato’s Academy. Plato and his Guru Socrates were interested in Hindu Upanishads. Vegetarianism, Rebirth, Upanishadic question and answer method (which the westerners named as Socratic Method later) and several other Hindu principles entered the Greek world through these people. Since Hindus migrated to Greece and other European countries long before Socrates and Pythagoras, we find lot of Sanskrit and Tamil words in Greek language (I have already given the list of Tamil words in Greek in my earlier post).

Vedic dog story (Sarama=Hermes), Five elements (Pancha Bhuta, Earth is Mother (Gaia = Atharva Veda—Mata Bhumi Putoham) and hundreds of things were borrowed by the Greeks from India. Max Muller also acknowledged it. But not many people know the concept of microcosm and macrocosm also went to Greece from India.

Tamils say that “Andaththil Ullathu Pindathilum Ullathu” = What is found in the Universe is in your Body.  Yat Pinde Tad Brahmaande is the Sanskrit saying. Sufi Muslims, who are 50 percent Hindus in their approach to spiritualism, also had similar principle.

Microcosm and Macrocosm

Microcosm means ‘little world’. Greeks applied it to man. They considered man as a world in miniature like the Hindus. Macrocosm means the earth or the whole universe.

Sanskrit scholar Radha Vallabh Tripathi, in his article ‘Vedic World View and Modern Science’, says,

“The scientists who attempted to see the atom found a world within it that could not be described in ordinary language. They saw everything within the atom – the speed, energy, waves and matter all mixed. They found that if they could know the atom, they could know the whole truth of the cosmos. Yat pinde tad Brahmande  – that which is in microcosm is in the macrocosm – that is what the ancient seers of the Upanishads had said  — One is in all, All is in one. This is the essence of Quantum theory also. The entire universe is inter- connected, inter-related and inseparable. In the same way, connection between modern physics and Indian mysticism has also become inseparable.

The matter inside an atom cannot be said to be moving nor can it be said to be static. This is how the Upanishads describe the Ultimate reality. “It is neither gross, nor fine, neither short nor long, neither growing red like fire, nor fluid like water, neither shadow, nor darkness, neither air nor space, unattached, without taste, without smell,  without eyes, without ears, without voice, without mind,  without radiance, without breath, without mouth, without measure, having no within and no without. It eats nothing, nothing eats it (Brihad Aranyaka Upanishad III.8.8, translated by Dr S Radhakrishnan). This is the oldest of the Upanishads dated to 850 BCE.

It says,

“It is full, this is full, from fullness, fullness proceeds. If we take away the fullness of fullness, even fullness then remains (ibid.V.2.1)

It is unmoving; it is one and it is faster than mind. (Isopanishad)”.

The more we understand science the better we understand our Vedas. Light is the fastest thing in the universe according to physics. But Hindus believe that Mind is faster than anything else. Mind can travel to a star 500 million light years away in a fraction of a second. The power of thought is not fully understood by the western scientists yet.

Chandogya Upanishads:

1.   Om. There is in this city of Brahman an abode, the small lotus of the heart; within it is a small akasa. Now what exists within that small akasa, that is to be sought after, that is what one should desire to understand.

3.     “As far as, verily, this great akasa extends, so far extends the akasa within the heart. Both  heaven and earth are contained within it, both fire and air, both  sun and moon, both lightning and stars; and whatever belongs  to him (i.e. the embodied creature) in this world and whatever  does not, all that is contained within it (i.e. the akasa in the  heart).”

-Chandogya Upanishad, 8-1-1/3

“Indian thought conceived an intimate unity between the macrocosm of nature and microcosm of the human body, between the ‘Adibhautika’ and the ‘Adhyaatmika’ aspects of nature; the latter is an epitome of the former. The gods thus represent not only the forces of external nature mythically conceived, but also the sensory and thought forces within the man” – says Swami Ranganadananda (The Message of the Upanishads).

Vedanta upholds the unity of the macrocosm and the microcosm. Swami Vivekananda says,

“The whole of the universe is built upon the same plan as a part of it.  So, just as I have a mind, there is a cosmic mind. As in the individual, so in the universal. There is the universal gross body; behind that there is a universal fine body; behind that a universal mind; behind that universal intelligence. And all this is in nature, the manifestation of nature, not outside of it”.

In another talk, he says,

Truth may be one and yet many at the same time, that we may have different visions of the same truth from different stand points. Just as nature is unity in variety an infinite variation in the phenomenal – as in and through all these variations of the phenomenal runs the infinite, the Unchangeable, the Absolute Unity, so it is with every man; the microcosm is but a miniature repetition of the macrocosm; in spite of all these variations, in and through them all runs this eternal harmony, and we have to recognise this”.

Garuda Purana

In layman’s term we can compare the rivers on the earth to blood vessels in the human body, mountains to chest and plants to hairs etc.

Garuda Purana has a lengthy comparison:

Garuda Purana compares the 14 lokas – 7 worlds under and 7 worlds up – to parts of the body from foot to head; E.g.sole-Atalam, head- Satya lokam.

Then it compares it 7 Dwipas – from Jambu Dwipa to Pushkara Dwipa to other parts of body.

Then it compares the seven seas to seven liquids in body such as urine to salt sea, water to milky ocean, blood to curd sea etc. These seven seas are listed in all our Puranas/ mythologies.

It continues comparing the two chakras in the body Nada Chakra to sun and Bindu chakra as moon. Other seven planets are also compared with eyes ( Mars), Heart (Mercury), Mouth (Jupiter), Semen (Venus), Belly Button (Saturn), Face (Rahu) and Leg (Ketu).

We may not know the link between each part of the body and different things. But the interesting thing is that Hindus saw the entire universe in human body. The universe is divided into 14 worlds in Hindu mythology. Neither the Greeks nor any other culture has gone to this extent in the subject of microcosm and macrocosm. Since Upanishads were written before the Greeks started writing, it is certain that they borrowed this idea from us along with the principle of Panchabhuta/five elements.

Sufi Saints

Philosopher and ex President of India Dr S Radhakrisnan says (on Sufism),

“The one aim of all the orders was to lead men along the path whose goal is the realization of the unitive state. The theory is that man is the microcosm, in contrast to the universe the macrocosm, contains within himself the elements of the world of command (Alam-I-amr) and the world of creation (Alam—Khalq). The first is the world of spirit and the second of matter. The five spiritual elements in man are heart, soul, consciousness, the hidden, the deeply hidden. The five material elements are ego and the four elements – earth, water, fire and air (History of Philosophy: Eastern and Western, Edited by Sarvapalli Radhakrishnan)

—Subham—

Tags यत् पिण्डे तत् ब्रह्माण्डे’ , “Your Body is a Miniature Universe”  ,  Brihadaranyaka Upanishad and  Charaka Samhita, Microcosm, Macrocosm

GNANAMAYAM BROADCAST SUMMARY 20 4 2025

GNANAMAYAM BROADCAST SUMMARY 20 4 2025

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

20-4-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team: Miss Mridula from Bengaluru

***

World Hindu News in Tamil  was presented by Vaishnavi Anand from London and Gomathi Karthikeyan from Chennai.

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on  Tiruppurambayam Temple.

***

Professor S Suryanarayanan Former Principal, Saraswathy Narayanan College ,Madurai spoke on The Power of Prayer

****

SPECIAL  EVENT-

Talk by Tamil Scholar, Author, Award Winner Mrs T V Vijayalakshmi Sivasubrahmanyan, Chennai on Tirukkural.

She presented Tirukkural from a new angle comparing it with Tiruvasagam, Thevaram and Divyaprabandham

****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்: பெங்களூர் செல்வி மிருதுளா .

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு – திருப்புறம்பயம் கோவில்

****

பிரார்த்தனையின் மகத்தான சக்தி – ஒரு உண்மைச் சம்பவம்

பேசியவர் – பேராசிரியர் சூரிய நாராயணன்சென்னை

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முன்னாள் பிரின்சிபால்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி: திருமதி தி.வே.விஜயலட்சுமி சிவசுப்பிரமணியன் சிறப்புரை –

தமிழ் அறிஞர்முப்பது விருதுகள் பெற்றவர்பதினைந்து நூல்களின் ஆசிரியர்;

திருக்குறளில்  திருவடிகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,20-4-2025, BROADCAST, summary

பொன்முடியின் ஆபாச பேச்சு வழக்கு விவகாரம் (Post No.14,417)


Written by London Swaminathan

Post No. 14,417

Date uploaded in London –  21 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 20-4-2025

COLLECTED FROM POPULAR DAILY NEWSPAPERS AND EDITED FOR BROADCAST.

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 20-ஆம் தேதி 2025-ம் ஆண்டு

*****

முதலில் தமிழ் நாட்டுச் செய்திகள்

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து உயர் நீதி மன்றம் உத்தரவு

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

” ஆபாச பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் பேச்சு ஒளிபரப்பு செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நீதிபதி கூறியதாவது: பொன்முடியின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது. அமைச்சர் பதவி வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? அவரது பேச்சு பெண்களை மட்டும் அல்லாமல், சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதற்கு மாலை 4:45 மணிக்குள் டிஜிபி பதிலளிக்க வேண்டும்.

பொன்முடியின் பேச்சு வில்லில் இருந்து விடுபட்ட அம்பை போல் மக்களை சென்றடைந்துவிட்டது. மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நன்றாக தெரிந்தே பொன்முடி பேசி உள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் காணப்படுகிறது. வேறு யாராவது பேசியிருந்தால் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். யாரும் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஊழலை போல் வெறுப்பு பேச்சை சகித்து கொள்ள முடியாது. பா.ஜ.,வின் ராஜா, நடிகை கஸ்தூரி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒத்திவைப்பு

ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட பொன்முடி மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த சலுகையை தவறாக பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு உள்ளார். இந்த பேச்சுக்காக சலுகையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா இல்லையா என்பதை வீடியோ கான்பரன்ஸ் அல்லது அரசு வழக்கறிஞர் மூலம் டிஜிபி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மாலை 4:45 மணிக்கு ஒத்திவைத்தார்.

5 புகார்


இந்த வழக்கு மீண்டும் மாலை 4:45 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடி பேச்சு தொடர்பாக 5 புகார்கள் வந்துள்ளன. ஏப்., 12ல் புகார் மனு பெறப்பட்டது எனத் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: ஒரு புகாரில் மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 4, 5 வழக்குப்பதிவு செய்தால், விசாரணை நீர்த்து போய்விடும். புகார் இல்லாமல் போலீஸ் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அமைச்சராக இருப்பவர் கீழ்த்தரமாக பேசலாமா? இதுபோன்று மற்றவர்கள் பேசியிருந்தால் போலீஸ் அமைதியாக இருந்து இருக்குமா?

பொன்முடி பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என தெரிவித்த அவர், இந்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.,23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

****

விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் புகார்!

இந்துக்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிசத் தர்ம யாத்திரா பொறுப்பாளர் சிவலிங்கம், ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் : அதிமுக வளர்மதி

இந்து மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.வளர்மதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

****

வேலூரில் 150 ஹிந்துக்கள் வசிக்கும் நிலத்திற்கு உரிமை கோரும் வக்ப் வாரியம்: கிராம மக்கள் அதிர்ச்சி


வேலூர்: வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் வசித்து வரும் நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என நோட்டீஸ் வந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமம் உள்ளது. இங்கு 150 ஹிந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.


இவர்களது நிலத்தை, தங்கள் நிலம் என்று வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அங்குள்ள மசூதி மற்றும் தர்ஹாவின் பராமரிப்பாளர் சையத் சதாம் என்பவர், கிராம மக்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில், ஒட்டு மொத்த நிலமும் வக்ப் வாரியத்திற்கு சொந்தம். இதனால், அனைவரும் வாடகை கொடுக்க வேண்டும். அல்லது காலி செய்து வக்ப் வாரியத்திற்கு வாடகை கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆங்கில டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகி பிரவீன் என்பவர் கூறுகையில் இக்கிராம மக்கள் 3 – 4 தலைமுறையினராக வசிக்கின்றனர். நிலம் கிராம மக்களுக்கு சொந்தமானது என்பதற்கு அரசு வழங்கிய ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் திடீனெர சர்வே எண் 333/1 வக்ப் வாரிய சொத்து என அறிவிக்கின்றனர். கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். மக்ளுக்கு பட்டா கொடுக்க வேண்டும்.. இது சட்டவிரோதம். கலெக்டர் ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி நிர்வாகி பிரவீன் கூறினார்.

****

விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் திறப்பு – போலீஸ் குவிப்பு

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் உள்ள மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதில் நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்து கோவில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான கோவில். இந்த கோவில் அந்த ஊர் மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முயன்றனர். அப்போது மற்றொரு பிரிவினை சேர்ந்தவர்கள் அவர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்தனர்.
நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. அதுவரை கோயிலும் மூடப்பட்டு இருந்தது. இரு தரப்பினரும் சுமூகமாக சாமி தரிசனம் செய்யும் வகையில் வருவாய்த்துறை சார்பிலும், போலீசார் சார்பிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பாதுகாப்புடன் இன்று பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் அங்கு வந்து, பட்டியலின மக்களுக்காக இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தீர்கள்.. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மட்டும் ஏன் எங்களுக்கு வழங்க மறுக்கிறீர்கள் என்று கூறி கலாட்டாவில் ஈடுபட்டார். எனினும் அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

****

மருதமலையில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை

  மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார். திருச்செந்தூர் கோயிலில் கடற்கரை பாதுகாப்பு பணி 30 கோடியில் மேற்கொள்ளப்படும்.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்தார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.   இந்த சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது மருதமலையில் முருகனுக்கு 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்றார்.

மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கடற்கரை கடல் அரிப்பை தடுக்கும் பணி மொத்தம் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். கடந்த 3 ஆண்டுகளில் கோயில்களின் சார்பில் 4 கிராம் தங்க தாலி உட்பட சீர் வரிசைகள் வழங்கி ஆயிரத்து 800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாகவும், நடப்பாண்டும் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கையையொட்டி அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது இந்து சமயத்தினரின் மனங்களை புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மருத மலை அறிவிப்பு வந்தது குறிப்பிட தக்கது; தமிழ் இந்துக்களின் கொதிப்பைக் கண்டு அஞ்சிய திராவிடர்கள் அடுத்த ஆண்டு தேர்தலை ஒட்டி மந்திர தந்திரங்களில் இறங்கிவிட்டனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர் 

****

சபரிமலையில் புதிய பஸ்ம குளம்: 6 மாதத்தில் பணி முடிக்க திட்டம்

சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது.

கேரள மாநிலம், சபரிமலை சன்னிதானத்தின் பின்புறம் பாரம்பரியமான பஸ்ம குளம் உள்ளது. பக்தர்கள் இந்த குளத்தில் குளித்த பின்னர், ஸ்ரீ கோவிலில் அங்க பிரதட்சணம் செய்துவிட்டு, மீண்டும் குளத்தில் குளித்து திருநீறு அணிந்து செல்வர்.

தற்போது கூட்டம் மிகவும் அதிகரித்துள்ளதால், சீசன் காலங்களில் அங்கப்பிரதட்சணத்திற்கு அனுமதி கிடையாது

சபரிமலை மாஸ்டர் பிளான் படி, கோவிலின் கிழக்கு பக்கத்தில் பஸ்ம குளம் அமைக்க நேற்று பூமிபூஜை நடந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பணியை துவங்கி வைத்தனர்.

மொத்தம், 15.72 மீட்டர் அகலமும், 25 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பஸ்ம குளம், 13 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது.

ஐந்தடி தண்ணீர் இருக்கும். தண்ணீரை சுத்திகரிக்க, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு இயந்திரங்கள் குளத்தின் பக்கத்தில் அமைக்கப்படுகின்றன.

ஆறு மாதத்தில் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர் ஒருவரின் நன்கொடையில் குளம் அமைக்கப்படுவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.

*****

பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு

பொது நுழைவுத் தேர்வில், மாணவர்கள் அணிந்திருந்த பூணூல் அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பொது நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு சில மாணவர்கள் பூணூல் அணிந்து இருந்தனர். அவர்களிடம் பூணூலை அகற்ற கோரி, தேர்வு அதிகாரி வற்புறுத்தி உள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2 hour(s) ago

இது தொடர்பாக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதம் தொடர்பான அடையாளங்களை அகற்ற சொன்ன தேர்வு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கர்நாடக உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி. சுதாகர் கூறியதாவது: இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிதர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் இருந்தும் இதே போன்று புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரித்து வருகிறோம்.

எந்த நெறிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் கூட, பூணூலை அகற்ற ஒருபோதும் அறிவுறுத்தப்படவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம், என்றார்.

*****

ஹிந்துக்கள் ஆயுதம் வைத்திருங்கள்: பா.ஜ., தலைவர் பேச்சு

மேற்கு வங்கத்தில் வசிக்கும் ஹிந்துக்கள், தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம்,” என, அம்மாநில பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திலீப் கோஷ் அறிவித்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் முர்ஷிதாபாத் உட்பட சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில், ஹிந்துக்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

 முர்ஷிதாபாத் வன்முறை சம்பவத்தை கண்டித்து சமீபத்தில் சார்பில் வடக்கு 24 பர்கனாஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் திலீப் கோஷ் பேசியதாவது:

 ஹிந்துக்கள் தங்கள் வீடுகளில் டிவி,  பிரிட்ஜ் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். ஆனால், இதுவரை தங்கள் வீடுகளுக்கு என எந்த ஆயுதத்தையும் வாங்கியது இல்லை.

 தங்கள் பாதுகாப்புக்கு, போலீசை அழைப்பது வழக்கம். தற்போது, எந்த போலீசாரும் உங்களை காப்பாற்ற மாட்டார்கள். எனவே, தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. திலீப் கோஷின் பேச்சுக்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

****

யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்

 ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் சேர்க்கப்பட்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாக, அது தொடர்பான ஆவணங்களை அடையாளம் கண்டு, அதனை பாதுகாப்பதற்காக யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேடு உருவாக்கப்பட்டது.

கடந்தாண்டு ராம்சரித்மனஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக-லோகனா ஆகிய 3 இந்திய இலக்கிய படைப்புகள், யுனெஸ்கோவின் உலக ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டன.

இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில், ஹிந்துக்களின் புனித நூலக கருதப்படும் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சர்வதேச அங்கீகாரம் இந்திய படைப்புகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது..

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கு பெருமையான தருணம் இது. யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது, நமது உயரிய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும்.

பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தையும், உணர்வுகளையும் வளர்த்துள்ளன,’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 *****

 அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியதையொட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து யாத்ரீகர்கள் பதிவு செய்தனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த யாத்திரைக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதால் ஏராளமான யாத்ரீகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்தனர்.

******

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

ஏப்ரல் 27- ம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்

வணக்கம்.

—subham—

TAGS- ஞானமயம் , உலக இந்து செய்திமடல், 20-4-2025

ஆலயம் அறிவோம்! திருப்புறம்பயம் தலம் (Post 14,416)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14,416

Date uploaded in London –21 April 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

20-4-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை! 

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

மறம்பயம் மலைந்தவர் மதில் பரிசு அறுத்தனை

நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை

திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு

அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்

–    திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு வடமேற்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புறம்பயம் திருத்தலமாகும்.. சோழநாட்டு வடகரைத் தலங்களில் 46வது தலமாக இது அமைகிறது.

இறைவன் திருப்பெயர் : சாட்சி நாதேஸ்வரர், புன்னைவனநாதர், புறம்பயநாதர், கல்யாண நாதர்

சந்நிதி: கிழக்கு

இறைவி திருப்பெயர்: கரும்படுசொல்லம்மை, இக்ஷுவாணி

தல விருட்சம் : புன்னை மரமாகும்.

செட்டிப் பெண்ணுக்குச் சாட்சியாக மதுரைக்குச் சென்ற மிகப் பழைய வன்னி மரமும் உண்டு.

தீர்த்தம்: பிரம தீர்த்தம், சப்தசாகரகூபம், சூரிய புட்கரிணி, சந்திர புட்கரிணி

இங்கு வழிபட்டோர்: அகஸ்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்திரர், சம்பந்தர் உள்ளிட்ட ஏராளமான முனிவர்களும் மகான்களும்.

பாஹ்யாம்புபுரம் என்றும் கல்யாண நகரம் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் ஏராளம் உண்டு.

மதுரையைச் சேர்ந்த அரதனகுப்தன் என்ற ஒரு வணிகன் இந்த ஆலயத்தில் வன்னி மரத்தின் கீழ் பாம்பு கடித்து இறந்தான். இவனுடன் வந்த இளம் கன்னி ரத்தினாவளி இந்த ஆலய ஈசனிடம் அழுது புலம்பினாள். உடனே ஈசன் வணிகனை உயிர்ப்பித்து மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு ஆகியவற்றை சாக்ஷியாக வைத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மதுரைக்கு இருவரும் சென்ற போது வணிகனின் மூத்த மனைவி, ரத்தினாவளியை ஏற்காத நிலையில் திருமணம் நடந்ததை இறைவன் சாட்சிகளுடன் தோன்றி உண்மையை உரைத்தார்.

இன்றும் மதுரை மீனாட்சிகோவிலில் சாட்சியாக வந்த மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு ஆகியன உள்ளன. இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்திலும் சிலப்பதிகாரத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

இப்படி செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சி சொன்ன தலம் என்பதால் இறைவனுக்கு சாட்சிநாதேஸ்வரர் என்ற திருப்பெயர் அமைந்தது.

அம்பிகை தவிர ஏனைய நான்கு சாக்ஷி சொன்ன வடிவங்களும் இதற்கு அறிகுறியாக பெரிய பிரகாரத்தில் அக்னி மூலையில் சேர்ந்து உள்ளன.

சிவலிங்கம் மதுரைக்கு சாக்ஷி சொல்லச் சென்ற போது மூலஸ்தானத்திலிருந்து காட்சிக் கொடுத்துக் கொண்டிருந்து, பின்னர் அவர் திரும்பி வந்தவுடன் தனியே வேறு இடத்திற்கு வந்தவர்  பிரத்தியக்ஷநாதர் என்ற பெயரில் லிங்க வடிவமாக உள்ளார். இவரது ஆலயம் தனியாக கர்பக்ருஹத்திற்கு வடக்கே உள்ளது.

இந்த ஊரின் வரலாற்றைச் சொல்லும் வன்னிநாடகம் என்னும் ஒரு நூல் செய்யப்பட்டு அது ஆடப்பட்டு வருகிறது.

இந்தத் தலத்தில் சனகாதி முனிவர்களுக்கு சிவபிரான் தக்ஷிணாமூர்த்தி வடிவமாக எழுந்தருளி ஞானோபதேசம் செய்தார். இந்த மூர்த்தி பெரிய கோபுரத்துக்கு வெளியே சந்நிதிக்கும் வடக்கே இடது புறத்தில் தனியாக உள்ளது. இதையே மாணிக்கவாசகர் “புறம்பயந்தனில் அறம் பல அருளியும்” என்று குறிப்பிடுகிறார்.

இங்குள்ள பிள்ளையார் பிரளயங்காத்த பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இவர் உருவம் நத்தாங்கூடு, கிளிஞ்சல், மணல் ஆகியவற்றால் ஆக்கப்பட்டது.  ஒரு காலத்தில் கடல் வெள்ம் தோன்றி இந்த நகரை அழிக்க இருந்த தருணத்தில், கடல் வெள்ளத்திலிருந்து நத்தாங்கூடு முதலியவற்றை விநாயகராகப் பிடித்து வைத்துக் கடல் வெள்ளம் நகரை அழிக்காதவாறு காப்பாயாக என்று சிவபிரான் நியமிக்க அப்படியே பிள்ளையார் செய்து நகரைக் காத்ததால் அவர் இந்தப் பெயரைப் பெற்றார்.

மஹாமண்டபத்தில் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி இந்தப் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். விநாயக சதுர்த்தி தோறும், நூறு சேருக்குக் குறையாமல் தேன் அபிஷேகம் இவருக்குச் செய்யப்படுகிறது. எல்லாமே திருமேனியில் உறிஞ்சப்பட்டு வற்றி விடும்.

தீர்த்தங்கள்:

சப்தசாகர கூபம் என்னும் தீர்த்தம் ஏழு கடல்களும் பொங்கி எழுந்து உலகத்தை அழிக்க வந்தபோது அவற்றை அடங்கச் செய்தமையால் இந்தப் பெயரைப் பெற்றது.

பெரிய கோபுரத்திற்கு இடப்புறத்தில், நந்தவனத்துக்குள், பிரமதீர்த்தத்தின் தென்கரையில் இது உள்ளது. அமாவாசையன்று இதில் ஸ்நானம் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.

பிரம தீர்த்தம்: பெரிய கோபுரத்தின் இடப்புறத்தில் குள வடிவில் இது உள்ளது.

சூரிய புட்கரிணி: இந்தத் தலத்துக்கு ஈசானத்தில் குள வடிவில் இது உள்ளது.

சந்திர புட்கரிணி: மேற்கு வடக்கு மதிலின் புறத்தே ஓடை வடிவில் இது உள்ளது. சித்திரா பௌர்ணமி தோறும் இங்கு ஸ்நானம் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.

கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக குஹாம்பிகை சன்னதியும், அடுத்து கரும்படு சொல்லியம்மை சன்னதியும் உள்ளன.

இந்தத் தலத்தில் தான் துரோணாசாரியர் உபாஸித்து அஸ்வத்தாமனைப் பெற்றார்.

இமவான் வழிபட்டு மைநாகத்தைப் பெற்றார்.

இந்த ஊரைப் பற்றி ஏராளமான புலவர்கள் எழுதியுள்ள நூல்கள் உண்டு.

இத்திருத்தலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் ஒவ்வொரு பதிகம் பாடி அருளியுள்ளனர்.

இந்த ஊரிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள இன்னொரு தலம் பொன்பற்றி என்ற பெயரைப் பெற்ற தலமாகும். இங்கு தான் சுந்தரமூர்த்தி நாயனார் பொன் பெற்றார். சுக்ரீவனும், விஸ்வாமித்திரரும் வழிபட்ட தலமும் இதுவே.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சாட்சிநாதேஸ்வரரும், கரும்படுசொல்லம்மையும்,

அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  நன்றி. வணக்கம்.

**

ஜெய் ஜெய்பூர் – 1 (Post No.14,415)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,415

Date uploaded in London – –21 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-4-25 மாலைமலர் இதழில் பிரசுரமான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.

ஜெய் ஜெய்பூர் – 1 

ச. நாகராஜன்

இந்திய வீரத்தையும் பாரம்பரியத்தையும் அழகையும்கலைகளின் மேன்மையையும் பக்தியின் உச்சத்தையும் கண்டு உற்சாகம் பெற ஒரு இடத்தை இந்தியாவில் சொல்லுங்கள் என்றால் உடனே வரும் விடை ஜெய்பூர்.

கம்பீரமான இந்த ஊரில் உள்ள கவினுறு காட்சிகள் ஏராளம். முக்கியமானவற்றைப் பார்ப்போமா?

ஹவா மஹால்

ஜெய்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஹவா மஹால்.

தேனடையைப் போலக் காட்சி அளிக்கும் ஐந்து அடுக்கு அரண்மனையான இதை மஹாராஜ சவாய் ப்ரதாப் சிங் 1799ம் ஆண்டில் கட்டினார். சிவப்பு மற்றும் இளநீல கற்களைக் கொண்டு சிடி பாலஸ் அருகில் இது கட்டப்பட்டது.

பிரமிட் போல கட்டப்பட்ட இதில் ஜாரோகாஸ் என்று அழைக்கப்படும் 953 விசேஷமான ஜன்னல்கள் பார்ப்போரைக் கவரும் வடிவமைப்பில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஜன்னல்கள் வழியே குளிர்ந்த காற்று பாய்ந்து மஹாலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

அரண்மனையில் வாழும் மகளிர் சாதாரணமாக நகர வாழ்க்கையைப் பார்க்க முடியாமல் தனியே அரண்மனைக்குள்ளேயே இருப்பது வழக்கம்.  அவர்கள் இதிலிருந்து மீண்டு, நகரத்தைப் பார்க்க வழிவகை செய்யும் முக்கிய நோக்கத்துடன் இது அமைக்கப்பட்டது.

அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்ட 50 அடி உயரம் கொண்ட இந்த மஹால் 87 டிகிரி சாய்ந்திருக்கும். இங்கு மாடிப்படிகள் கிடையாது. அரண்மனை நாரீமணிகள் நளினமாக நடந்து செல்ல வசதியாக இதில் சரிவுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்லியல் கண்காட்சி ஒன்றும் உள்ளது. ராயல் டோர் என்னும் பிரதான வாயில் வழியே உள்ளே செல்ல வேண்டும்.. இதன் உச்சியிலிருந்து பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு

ஆம்பர் ஃபோர்ட்

அமர் நகரில் ஒன்றரை சதுர மைல் பரப்பில் அமைந்துள்ள கோட்டை இது. பவானி என்னும் அம்மனின் பெயரால் இக்கோட்டைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. ராஜபுதன கட்டிடக் கலை அம்சங்களைக் காட்டும் இந்தக் கோட்டை மணல் கற்களாலும் சலவைக் கல்லாலும் கட்டப்பட்டதாகும்.

கோட்டையில் பல அரண்மனைகளும் ஒரு ஏரியும் உள்ளன.

ஜெய் மந்திர் எனப்படும் கண்ணாடி மாளிகை உட்பட பல மாளிகைகள் இங்கு உண்டு. இங்குள்ள ஒலி-ஒளி காட்சியை மறக்காமல் அனைவரும் பார்ப்பது வழக்கம்.

ஆம்பர் கோட்டையின் சுவர்களுக்கு மற்றும் பேசும் சக்தி இருந்தால் அவை ராஜபுதனத்து மன்னர்களின் காலத்தை வென்ற வீர சரித்திரங்களைக் கூறும் என்பது அறிஞர் வாக்கு.

ஜெய்கர் ஃபோர்ட்

ஜெய்பூரில் அமேர் பகுதியில் ஆரவல்லி மலைத் தொடரில் ஆம்பர் கோட்டைக்கு மேலே அமைந்துள்ள கோட்டை இது. இரண்டாம் சவாய் ஜெய்சிங் என்ற மன்னர் தனது வெற்றியைக் கொண்டாட 1310 அடி உயரமுள்ள மலையில் இந்தக் கோட்டையைக் கட்டினார். கோட்டையின் மேல் உள்ள ஜெய்வானா பீரங்கி உலகின் மிகப் பெரிய பீரங்கிகளில் ஒன்று. கோட்டையின் சுவர்கள் எதிரிகள் இடிக்க முடியாதபடி வலிமை வாய்ந்தவை. உள்ளே லலிதா கோவில் ஆரம் கோவில், ஆயுத சாலை மற்றும் அருங்காட்சியகம் உள்ளது. ஜெய்கர் கோட்டையையும் ஆம்பர் கோட்டையையும் பூமிக்கடியில் உள்ள ஒரு சுரங்கப் பாதை இணைக்கிறது.

ஒரு போதும் சரிந்து வீழாத கோட்டை இது;  இதன் வீர உணர்வு ஒருபோதும் குறைந்ததே இல்லை!

சிடி பாலஸ் (நகர அரண்மனை)

மகாராஜ சவாய் ஜெய்சிங் உருவாக்கிய இந்த அரண்மனை வாஸ்து சாஸ்திரப்படி உருவாக்கப்பட்டது. இங்கு முபாரக் மஹால், சந்திர மஹால், மகாராணியின் அரண்மனை ஆகியவற்றைப் பார்ப்பதோடு மகாராஜா சவாய் மான்சிங் அருங்காட்சியகத்தையும் பார்க்கலாம்.

ஜெய்பூரின் இதயம் துடிக்கும் இடம் இது தான்

என்கின்றனர் பயணிகள்!

ஜந்தர் மந்தர்

திறந்த வெளிக் கோளரங்கமான இதில் மிகப் பெரிய சூரிய கடிகாரம் உள்ளது. வானவியலில் ஆர்வமுள்ளோர் கோள்களைப் பற்றிய ஆய்விற்காக செய்யப்பட்ட பல இயந்திரங்களை இங்கு பார்க்கலாம். இது 1734ல் கட்டப்பட்டது.

எதிர்காலம் இறந்தகாலத்தைச் சந்திக்கும் அற்புத இடம் இதுவே என்கின்றனர் அறிஞர்கள்!

பாபு பஜார்

ராஜஸ்தான் என்றாலே கைவினைப் பொருள்களின் சிறப்பே ஞாபகத்திற்கு வரும். பிங்க் சிடி என்று ஜெய்பூருக்கு ஒரு பெயர் உண்டு. இளஞ்சிவப்பு வண்ணத்தில் அனைத்துக் கட்டிடங்களும் இங்கு கட்டப்பட்டிருப்பதால் இதற்கு பிங்க் சிடி என்ற பெயர் வந்தது. இங்கு கைவினைப் பொருள்கள் அனைத்தையும் குறைந்த விலையில் வாங்கலாம். ஒரு பை நிறைய பாபு பஜாரில் வாங்கும் பொருள்கள் ராஜஸ்தானைப் பற்றிய முழு விவரத்தையும் சொல்லும்!

 to be continued………………………

14 Pictures of 2500 Indian Stamps!- Part 14 (Post No.14,414)


Written by London Swaminathan

Post No. 14,414

Date uploaded in London –  20 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  14

I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

PART 14, INDIAN STAMPS, INDIAN PAINTINGS,  HAND SYMBOLS, NAVY SHIP, FLAGS, BANGLADESH LIBERATION DAY, BETRAND RUSSEL, VIKRAM SARABHAI, VEMANA, GANDHI, KUMARAN ASAN, TIGER, HOCKEY, CRICKET, SHOOTING, ARVI SATELLITE, C V RAMAN, LAL BAHADUR SASTRI, RADHAKRISHNAN, TAJ MAHAL, V O CHIDAMBARAM PILLAI, T.PRAKASAM, DAL LAKE, DAM, NETAJI, BOSE, FAMILY PLANNING, REFUGEE RELIEF, AJANTA, TAGORE, TORCH

–SUBHAM—

TAGS– PART 14, INDIAN STAMPS, INDIAN PAINTINGS,  HAND SYMBOLS, NAVY SHIP, FLAGS, BANGLADESH LIBERATION DAY, BETRAND RUSSEL, VIKRAM SARABHAI, VEMANA, GANDHI, KUMARAN ASAN, TIGER, HOCKEY, CRICKET, SHOOTING, ARVI SATELLITE, C V RAMAN, LAL BAHADUR SASTRI, RADHAKRISHNAN, TAJ MAHAL, V O CHIDAMBARAM PILLAI, T.PRAKASAM, DAL LAKE, DAM, NETAJI, BOSE, FAMILY PLANNING, REFUGEE RELIEF, TAGORE, PARAMAHAMSA, HIMALAYAS