Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
19-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
மெடியோரா ( MATEORA)– கிரீஸின் மலை அடர்ந்த காடு!
ச. நாகராஜன்
கிரீஸ் தேசத்தின் வடக்கே தெஸாலி (THESSALY) சமவெளியில் பிரம்மாண்டமான 24 பாறைகள் தரையிலிருந்து செங்குத்தாக எழுந்து நிற்கும் காட்சி உலகினரை அதிசயிக்க வைக்கும் காட்சியாகும்.
மழையாலும் காற்றாலும் காலம் காலமாகத் தொடர்ந்து அழகுறச் செதுக்கப்பட்ட இவற்றை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
உயர்ந்து நிற்கும் இந்தப் பாறைகள் மெடியோரா பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன!
மெடியோரா என்ற இந்தப் பகுதியில் தான் துறவிகள் தங்கள் வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் இடைவிடாது செய்து வந்தனர். பாறைகளைக் குடைந்தும் செதுக்கியும் தங்கள் மடாலயங்களை அவர்கள் இந்தப் பகுதியில் அமைத்துக் கொண்டனர்.
1800 அடி உயரத்தில் பாறைகளில் உள்ள இந்த மடாலயங்கள் வரலாற்றுச் சிறப்பைக் கொண்டவை. முக்கிய திருவிழா நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து துறவிகளும் பக்தர்களும் ஒருங்கிணைந்து பிரார்த்தனை செய்வது இங்கு வழக்கமானது!
இது ஏதன்ஸ் நகரத்தின் வடமேற்கே 234 மைல் தூரத்தில் உள்ளது.
மலைப்பாறை உயரத்தில் உள்ள மடாலயத்திற்குச் செல்ல நம்ப முடியாத அளவிலான பெரிய ஏணி ஒன்று இருந்தது. தங்களுக்கு அயலாரால் ஆபத்து வரும் என்று பயந்த காலத்தில் இந்த ஏணி அப்புறப்படுத்தப்பட்டு விடும்!
இவ்வளவு உயரத்திற்கு யார் தான் வரமுடியும்?
பெரிய மெடிரான் என்று கிரேக்க மொழியில் அழைக்கப்பட்ட இதற்கு ‘வானத்தில் உயரத்தில் உள்ளது’ என்று அர்த்தமாகும்.
மணல்பாறைகளாலும் கருங்கற்களாலும் சேர்ந்து உருவான கடினமான இந்தப் பாறைகள் ஆறு கோடி வருடங்களுக்கு முன்னர் உருவாகி இருக்க வேண்டும் என்பது புவியியல் வல்லுநர்களின் கணிப்பு.
கிரேக்க வரலாற்று ஆசிரியரான ஹெரரெடோடஸ் கடல், நிலத்தில் புகுந்து அமைக்கப்பட்ட பகுதி தெஸ்ஸாலி என்று அங்கிருந்த பூர்வ குடியினர் நம்பியதாக தனது ஐந்தாம் நூற்றாண்டில் எழுதிய குறிப்புகளில் குறிப்பிடுகிறார்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ராபர்ட் கர்ஸான் என்ற ஐரோப்பிய பயணி இங்கு வந்து மடாலயங்களையும் வனப்பகுதியையும் பாறைகளையும் பார்த்து அசந்து போனார்.
பிரளயத்திலும், பூகம்பத்திலும் தப்பிப் பிழைத்து ஓரமாக வந்து ஒதுங்கிய பாறைகளோ இவைகள் என்று அவர் வியந்தார்.
1896ம் ஆண்டு இங்கு வந்த ஒரு ரஷ்ய யாத்ரீகர் உச்சியை அடைய கயிறில் ஏற முயன்றார். அங்கும் இங்கும் கயிறு ஆட ஒரு வழியாக உச்சியை அடைந்த கதையை மிக மோசமான அனுபவம் என்று வர்ணிக்கிறார்! “பயந்து நடுநடுங்கிப் போன நான் எனது கண்களை மூடிக் கொண்டேன்” என்று அவர் விவரித்தார்.
13 முதல் 16ம் நூற்றாண்டு முடிய 24 மடாலயங்கள் இங்கு அமைக்கப்பட்டன. இவற்றில் ஐந்து இன்றும் நன்கு இயங்குகின்றன!
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த அதிசய இடம் பற்றிக் கேள்விப்பட்ட உல்லாசப் பயணிகள் பெரும் எண்ணிக்கையில் வந்து குவிய ஆரம்பித்தனர்.
தனிமையை விரும்பி இங்கு வந்த துறவிகள் இதனால் நொந்து போய் இங்கிருந்து செல்ல ஆரம்பித்தனர்.
1517ல் தியோபனஸ் மற்றும் நெக்டோரியோஸ் என்ற இரு சகோதரர்களால் கட்டப்பட்ட வர்லாம் மடாலயம் மிகவும் பிரசித்தி பெற்ற மடாலயம் ஆகும். பாறையைக் குடைந்து 195 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏறி மடாலயத்தை அடையலாம்.
நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இதில் ஆனந்தமாக வழிபாடு நடத்த இன்றும் ஏராளமானோர் வருகின்றனர்.
அதி உயரத்தில் வித்தியாசமான இடத்தில் வழிபாடு நடத்தப்படும் மெடியோரா உலகின் அதிசயமான இடம் தான்!
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சரக சம்ஹிதை என்னும் மருத்துவ நூலில் காணப்படும் நோய்களையும் அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் கீழே கொடுத்துள்ளேன் ; இந்தியாவில் வானவியல் துவங்கி பிராணியியல்வரை ASTRONOMY TO ZOOLOGY ;A TO Z எல்லாம் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன ; அந்த மொழியின் நுணுக்கங்களை, நெளிவு சுளிவுகளை அறிந்தோர் எழுதிய நூல்களையும் ஸம்ஸ்க்ருதத்தையும் கற்பது மிகவும் அவசியம் ; மேலும் இந்தியாவின் பெரும்பகுதிகளில் அதே ஸம்ஸ்க்ருதச் சொற்களோ அல்லது அதைத் தழுவிய சொற்களோ புழக்கத்தில் உள்ளன ; ஸம்ஸ்க்ருதத்தை அறிந்தால் அவர்களுடனும் பேச, பழக முடியும்.
எடுத்துக்காட்டாக நேத்ரம், நயனம் என்றால் கண் , சிரஸ் என்றால் தலை, ரோக, வியாதி என்றால் நோய் என்ற சொற்களை நாம் அறிவோம் ; இவைகளைத் தெரிந்து கொண்டால் பல சம்ஸ்க்ருத சொற்களை அறியலாம் .
இதோ நோய்களின் பட்டியல், அவை நூலில் காணப்படும் அத்தியாயம், ஸ்லோகங்களின் எண் முதலியன :–
தமிழ், சம்ஸ்க்ருத ஆங்கில சொற்கள்
1.அதி ஜிஹ்வா 6-12-77 – ABCESS UNDER THE TONGUE, நாக்கின் கீழ் புண், ரத்தம் கசியும் கொப்புளம்.
காமாட்சி, மீனாட்சி விசாலாட்சி, நீலாயதாட்சி போன்ற அம்மன் பெயர்களில் அக்ஷி என்பது கண் என்பது பெரும்பாலோருக்குத் தெரியும் . இங்கு அக்ஷியில் பேதம்/ வேறுபாடு இருப்பதைக் காட்டுகிறது.
5.அக்ஷிரோக 6-26-130- OPTHALMITIS கண் நோய்கள்
96 வகை கண் நோய்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ரிக் வேதத்தில் வரும் ஶ்ரத்தா FAITH சூக்தமும் யஜுர்வேத வாஜசநேயி சம்ஹிதையில் வரும் சிவ சங்கல்ப சூக்தமும் வாழ்க்கையில் நம்பிக்கைFAITH என்பது எவ்வளவு முக்கியம் என்று காட்டுகின்றன.
நமக்கு நாமே மனதில் AUTO SUGGESTION/ ஆட்டோசஜ்ஜஷன் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டால், அது வெற்றியைத் தரும்
என் தலை முடி விழுந்துகொண்டே இருக்கிறதே ! ஐயோ நான் என்ன செய்வேன்? என்று பெண்கள் சொல்லக்கூடாது
அட! என் அழகான தலை முடி இதை விட நீண்டு அழகாக வளரும் என்று சொல்லிக்கொண்டே தலையில் தைலத்ததைத் தடவினால் அது நீண்டு வளரும்! இதை தனக்குத்தானே போதித்தல் AUTO SUGGESTION /ஆட்டோசஜ்ஜஷன் என்று மன இயல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிராமண சிறுவர்கள், கல்யாணம் ஆவதற்கு முன்னர் தினமும் சமிதாதானம் என்று சொல்லி தீயில் அரசங்குச்சியைப் போட்டு சொல்லும் மந்திரங்களில் இது வருகிறது ; நீ ஓஜஸ், தேஜஸ் வர்சஸ் உள்ளவன்; மேதாவி எனக்கும் அதைத் தருவாயாக என்று தினமும் சொல்லுவார்கள் சந்தியா வந்தனத்திலும் காயத்ரீ தேவியை இப்படிப் புகழ்ந்து இருதயத்துக்குள் ஆவாஹனம் செய்வார்கள் இதனால் அவர்களுக்கு முகத்தில் ஒளி /பிரகாசம்/ தேஜஸ் பெருகும்.
மருத்துவர்களிடையே மிகவும் பிரபலமானது பிளாசிபோ எபெக்ட் .PLACEBO EFFECT அதாவது போலி மாத்திரைகளையும் உண்மை மாத்திரைகளையும் நோயாளிகளுக்கு கொடுத்து அதன் பலனை அறிவார்கள்; யாருக்கு எதைக்கொடுத்தனர் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் தெரியாத வகையில் இதைச் செய்வார்கள்; பல ஆராய்ச்சிகளில் போலி மாத்திரை சாப்பிட்ட நோயாளிகளும் குணம் அடைந்துள்ளனர்; இதற்கு நம்பிக்கையே காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நம்பிக்கை விஷயத்தை நமது மருத்துவ நூல்களும் வேத இதிகாசங்களும் மீண்டும் மீண்டும் சொல்கின்றன . சுருங்கச் சொன்னால் மேலை நாட்டு மனோ தத்துவ நிபுணர்கள் புதுப்புது சொற்களை பயன்படுத்துகின்றனர் இவை எல்லாம் குரு குல வாச மந்திரங்களில் மாணவர்களுக்கே தெரிந்த விஷயங்கள்தான் !
CHILD PSYCHOLOGY, EDUCATIONAL PSYCHOLOGY, NEURO PSYCHOLOGY, CRIMINAL PSYCHOLOGY, PARA PSYCHOLOGY, ORGANISATIONAL PSYCHOLOGY, COMMERCIAL PSYCHOLOGY, சைல்ட் சைக்காலஜி எஜூ கேஷனல், ஆர்கனைசேஷனல், கமர்ஷியல், நியூரோ, பாரா, க்ரீமினல் சைக்காலஜி என்றெல்லாம் மன இயல் துறை கிளைவிட்டுப் போய்விட்டது! அவர்கள் INSIGHT THERAPY, இன்சைட் தெரபி, ஸெல்ப் பியூல்பில்லிங் பிராப்பசிSELF FULFILLING PROPHESIES
, ஹ்யுமன்ஸ்டிக் ட்ரீட்மெண்ட்HUMANISTIC TREATMENT , பிளாசிபோ எபெக்ட், ஆட்டோசஜ்ஜஷன் எம்பதி, சிம்பதி EMPATHY SYMPATHY என்றெல்லாம் புதுப்புது சொற்களை சொல்லி நமது மந்திரங்களில் சொல்லும் விஷயத்தையே சொல்கின்றனர்; அவர்கள் புதிதாக எதைச் சொன்னாலும் அவை இந்துக்களின் அன்றாட செயல்களில் வேண்டுதல்களில் இருப்பதைக் காணலாம்; வாழ்க்கை எனது சகடம்/ சக்கரம் பன்றது; வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் என்று சம்ஸ்க்ருத ஸ்லோகங்களும் தமிழ்ப் பாடல்களும் மீண்டும் மீண்டும் கூறுகின்றன. ஆனால் தோல்வியைக் கண்டு துவள்பவர்கள் வாழ்க்கையின் இறுதிக்கே செல்வதை பத்திரிக்கையில் படிக்கிறோம். தற்கால சைக்காலஜி பத்திரிகைகளில் இது ஒரு முக்கிய விஷயமாக அலசப்படுகிறது. ஆனால் மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிக்வேதம் இந்தத் தலைப்பினை எடுத்துக்கொண்டு நம்பிக்கையே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவும் என்று காட்டுகிறது.நம்பிக்கை என்று சொல்லும்போது கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல; தன் மீது தனக்கு நம்பிக்கை வேண்டும்; செய்யும் தொழிலில், பணியில் நம்பிக்கை வேண்டும்
இதை பாரதியார் ஒரே வரியில் சொல்லிவிட்டார் — நம்பினர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு என்று; பகவத் கீதையில் கிருஷ்ணனும் ஸ்ரத்தாவான் லபதே ஞானம் என்கிறார் .श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः। ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति ॥– B.G.4-39
எவரொருவர் ஆழமான நம்பிக்கையுடன் தங்கள் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்த பழகுகிறார்களோ அவர்கள் தெய்வீக அறிவை அடைகிறார்கள். இத்தகைய ஆழ்நிலை அறிவின் மூலம், அவர்கள் விரைவில் நிரந்தரமான உயர்ந்த அமைதியை அடைகிறார்கள்.
ஶ்ரத்தாவான் லபதே ஞானம் தத்பரஹ ஸந்யதேந்த்ரியஹ |
ஞானம் லப்த்வா பராம் ஶான்திமசிரேணாதகச்சதி ||4-39||
****
ச்ரத்தா ஸூக்தம் – ரிக் வேதம் 10.151
இப்போது ரிக் வேத சூக்தத்தைக் காண்போம் :
சிரத்தை என்றால் நம்பிக்கை. அது நம்மிடம் வருமாறு பிரார்த்திக்கிறது இந்த ஸூக்தம்.
வேள்வித்தீ சிரத்தையால் வளர்க்கப்படுகிறது. ஆஹுதி சிரத்தையால் அளிக்கப்படுகிறது. இறைவனின் தலையில் இருக்கின்ற சிரத்தையைப் பாடல்களால் போற்றுகிறோம். 1
ஓ சிரத்தையே, கொடுப்பவரின் விருப்பத்தை நிறைவேற்று. கொடுக்க நினைப்பவரின் விருப்பத்தை நிறைவேற்று. வேள்வி செய்பவர்களின் விருப்பங்களை நான் சொன்னதுபோல் செய்து நிறைவேற்று. 2
பயங்கரமான அசுரர்களுடன் நடந்த போரில் தேவர்கள் எப்படி சிரத்தையைக் கைக்கொண்டு போரிட்டார்களோ அதுபோல், வேள்வி செய்பவர்களின் ஆசைகளை எங்களிடம் தோன்றுகின்ற எண்ணங்கள் போல் 3 நிறைவேற்றுவாய்.
தேவர்கள், மனிதர்கள், வாயுகோபர்கள் (வாயுவால் காப்பாற்றப்படுபவர்கள்) எல்லாரும் சிரத்தையை வழிபடுகிறார்கள். இதய தாகத்தின் வாயிலாகவே சிரத்தை அடையப்படுகிறது. சிரத்தையால் செல்வம் பெறப்படுகிறது. 4
சிரத்தையைக் காலையில் வழிபடுவோம்.நண்பகலில் வழிபடுவோம். சூரியன் கீழே இறங்கி மறையும்போது வழிபடுவோம். சிரத்தையே எங்களுக்கு சிரத்தையைத் தருவாய். 5
பொருள்:- ஏனையோருக்கு சமாதி என்னும் உயர்நிலை நம்பிக்கை சக்தி, நினைவாற்றல், மனதைக் குவியவைக்கும் / ஒருமுகப்படுத்தும் திறமை, விவேகம் ஆகியவற்றால் கிடைக்கிறது .
இந்துக்கள் எந்த ஒரு சடங்கினையும் செய்வதற்கு முன்பாக இட து கையின் மேல் வலது கையை வைத்துக்கொண்டு சங்கல்பம் செய்வார்கள் ; இதன் பொருள் இப்பொழுது நான் இந்த நோக்கத்துக்காக இந்தச் சடங்கினைச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளேன் என்று சொல்லிவிட்டு கைகளைக் கூப்பிக்கொண்டு பணியைத் துவங்குவார்கள் இது பல்லாயிரம் ஆண்டுகளாக நடை முறையில் உள்ளது; பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் இன்றும் இதை நாள்தோறும் செய்கின்றனர் ஆகவே எந்த ஒரு பணியையும் மேற்கொள்வதற்கு முன்னர் குறிக்கோள் என்ன என்பதை அறிந்து நம்பிக்கையுனும் திட உறுதியுடனும் செய்ய வேண்டும் அப்படி சங்கல்பம் செய்கையில் மோதிர விரலில் தர்ப்பைப் புல்லால் ஆன பவித்ரம் என்னும் மோதிரத்தை அணிந்து கொள்ளுவார்கள் ஒரு பணி, பல மணி நேரம் நடந்தாலும் கூட அது மோதிரவிரலில் இருக்கும்; பணி முடிந்தவுடன் அதை அவிழ்த்துப் போடுவார்கள்; இது மனதை ஒரே பணியில் ஒருமுகப்படுத்தும் சைக்காலஜி தந்திரம் ஆகும்.
****
மந்திரமும் மொழிபெயர்ப்பும் ராமகிருஷ்ண மடத்தின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது; ஆங்கிலத்தில் படித்தால் சிலருக்கு நன்றாக விளங்கும் என்பதால் இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் வேறு வேறு வெப்சைட்டுகளிலிருந்து கொடுக்கிறேன்.
to be continued…………………………………..
—-SUBHAM—-
TAGS- வேதத்தில் சைக்காலஜி, மனோதத்துவ சாஸ்திரம் – PART 2 , ச்ரத்தா சூக்தம், சிவ சங்கல்ப சூக்தம்
26.இந்தப் பூவுலகில் யாராலும் வேதங்களின் காலத்தை சொல்லமுடியாது: மாக்ஸ்முல்லர்
27.மாக்ஸ்முல்லர், கால்டுவெல், ஜி.யு.போப் மீது இலங்கை அறிஞர் கடும் தாக்கு
28.வேதத்தின் மீது கைவைத்த 35 வெளிநாட்டு “அறிஞர்கள்”!
29.வேதத்தை “முழி பெயர்த்த” “அறிஞர்கள் !
–subham—
அட்டையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சில அறிஞர்களின் படங்கள் உள்ளன
தமிழ் , சம்ஸ்க்ருத
மொழிகளை வளர்த்த
ஜெர்மானிய அறிஞர்கள் – book title
முன்னுரை
தமிழ் மொழிக்கும் சம்ஸ்க்ருத மொழிக்கும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் அளப்பரிய சேவை செய்துள்ளனர். இந்த இரண்டு மொழிகளைத் தவிர கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் அவர்கள் சேவை ஆற்றினர் . சம்ஸ்க்ருத மொழியை எடுத்துக் கொண்டால் எல்லோருக்கும் மாக்ஸ்முல்லர் பெயர் மட்டுமே தெரியும்; ஏனைய அறிஞர்களைத் தெரியாது. தமிழ் என்று சொன்னால் சீகன்பால்கு என்ற ஜெர்மானிய அறிஞரையே அதிகம் தெரியும் . ஜெர்மானியர் செய்த மொழிபெயர்ப்புகளும், இலக்கணங்களும், அகராதிகளும் தமிழ் , சம்ஸ்க்ருத மொழிகளை வளப்படுத்தின என்று சொன்னால் மிகையாகாது.
என்னுடைய இந்த நூலில் நிறைய அறிஞர்களின் சுருக்கமான வாழக்கைக்குறிப்பும் உளது. தென்னிந்திய மொழிகளை வளப்படுத்திய ஜெர்மானியர்கள் , கிறிஸ்தவ மத்ததை பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர்கள்; அதற்காக அவர்கள் மொழிகளைக் கற்றார்கள். ஆனால் சம்ஸ்க்ருத மொழியை வளப்படுத்திய ஜெர்மானியர்கள் அப்படி அல்ல; அவர்களில் பலர் கிறிஸ்தவ மத குருமார்களின் வீடுகளில் பிறந்தாலும், சாகுந்தலம், ரிக்வேதம் முதலியவற்றின் அழகில் முழ்கி முத்துக்களை எடுக்க முற்பட்டனர் . பலர் உபனிஷதங்களை ஆழமாக ஆராய்ந்து எழுதினர் ; ஆயினும் அக்கால நம்பிக்கையான ஆரியர் குடியேற்றக் கொள்கையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டனர். ஆகையால் அவர்களுடைய முடிபுகளை, துணிபுகளை நாம் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை. மேலை உலகம் கிரேக்க மொழியை மட்டுமே அறிந்து உலகமே கிரேக்கர்களால் சிறப்புற்றது என்று எழுதிய காலையில், இந்த அறிஞர்கள் சாக்ரடீஸையும் விட மிகப்பெரிய அறிஞர்கள் இந்தியாவில் இருந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள்; இதனால் மேலை உலகத்தில் இந்துமதம் பற்றி இருந்த தவறான கருத்துக்கள் தவிடுபொடியாகின. அந்த அளவில் நாம் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். ஜெர்மானிய மொழியில் அவர்கள் எழுதிய அனைத்தும் இன்றும் கூட தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் முழுமையாக வெளிவரவில்லை; அவைகளை வெளிக்கொணர நம் நாட்டிலுள்ள பன்மொழி வித்தகர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
இந்த நூலினைப் படியுங்கள்; உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நூற்றி முப்பதுக்கும் மேலான என்னுடைய தமிழ், ஆங்கில நூல்கள் உங்கள் கைகளில் தவழட்டும் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART Ten
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சைக்காலஜி PSYCHOLOGY (GREEK) என்ற ஆங்கிலச் சொல்லை உள வியல், மன இயல், மனோதத்துவ சாஸ்திரம் என்று சொல்லலாம்.
இந்து மதத்தின் ஆணிவேரான நான்கு வேதங்களில் எவ்வளவோ அறிவியல் தகவல்கள், செய்திகள் இருப்பதை பல ஆராய்ச்சியாளர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர் ,
இதற்கு முன்னர், அரவிந்தர், ஆர்ய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி போன்றோர் இந்தக் கோணத்தில் சில வேத மந்திரங்களுக்கு விளக்கம் கூறியுள்ளனர்.
இங்கு மனம் தொடர்பான விஷயங்களைக் காண்போம்; மனஸ் என்பது தூய ஸம்ஸ்க்ருதச் சொல்; வள்ளுவர் முதல் இன்று வரை எல்லோரும் பயன்படுத்தும் சொல் ; இதிலிருந்து மைண்ட்MIND என்ற ஆங்கிலச் சொல் உருவானது ; இதற்கு நிகரான கிரேக்க சொல் சைக் என்பதாகும்; லோகோஸ் என்ற கிரேக்க சொல்லின் பொருள் – படிப்பு, விவரித்தல்STUDY, DISCOURSE என்பதாகும். அதிலிருந்து பிறந்த சொல்லே சைக்காலஜிPSYCHOLOGY (GREEK) (பி/ P என்பது சைலன்ட்; உச்சரிப்பு கிடையாது ).
வேத மந்திரங்களைக் கண்டுபிடித்து நமக்குச் சொன்ன ரிஷி, முனிவர்கள் ரகசிய விஷயங்களை இரு பொருள்பட பேசினார்கள், பாடினார்கள். மேம்போக்காகப் பார்த்தால் சடங்குகளை விவரிப்பதாகத் தோன்றும் ; உட்கருத்தோ பெரிய தத்துவங்களாக இருக்கும்.
வெள்ளைக்காரர்களும் அர்த்தம் புரியாமல் காற்று/ வாயு, அக்கினி/ தீ , வருணன்/ மழை, இந்திரன்/ இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளைக் கண்டு பயந்து ஆரியர்கள் பாடிய பாடல்கள் என்று முதலில் உளறினார்கள். பின்னர் உபநிஷத மந்திரங்களைப் பார்த்தவுடன் அவற்றுக்கு மூலமான வேத மந்திரங்களும் ஆழ்ந்த கருத்துள்ளவை என்பதை அறிந்தார்கள்.
ஈலா, சரஸ்வதி போன்ற சொற்கள் வெறும் தேவிகள் அல்ல ; அவை அறிவு, ஊற்றுணர்ச்சி முதலிய அறிவு விஷயங்கள் என்பதை அரவிந்தர் சுட்டிக்காட்டினார்.
எல்லோரும் பின்பற்றும் சாயன பாஷ்யத்தில் கூட ‘தி’ என்ற சொல்லை எண்ணம், பிரார்த்தனை, செயல், உணவு என்று பலவகையாக உரை செய்தார் . ஆனால் உண்மையில் இது எண்ணம் , புரிதல் என்ற பொருள் மட்டுமே உடைத்து .
அஸ்வ -குதிரை, க்ருதம்- நெய் பசு – மிருகம் என்பனவற்றை வெள்ளைக்காரர்களும் அப்படியே பொருள் கொண்டனர் ; ஆனால் இவை விசை , தூய்மை என்ற பல பொருளில் வருகின்றன.
இன்றும் கூட ஹார்ஸ் பவர் HORSE POWER என்ற சொல்லை விசைக்குப் பயன்படுத்துகிறோம்
திருமூலர் கூட பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு என்று பாடுகையில் யாரும் பசு மாட்டினை நினைப்பதில்லை. அது போல வேதத்திலும் பசு/ மிருகம், அஸ்வ/கு திரை என்பன மனோதத்துவ சொற்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன அரவிந்தர்தான் முதலில் இவ்வகையில் பொருள் கூறினார்.
உபநிஷத மந்திரங்கள் மனது, உள்ளம் , ஆத்மா ஆகியவற்றை ஆழமாக ஆராய்கின்றன பதஞ்சலி போன்றோர் யோக சாஸ்திரத்தில் மனஸ், சித்தம், புத்தி, அஹம்காரம்EGO என்ற சொற்களை பயன்படுத்துகையில் ஆழமான பொருள் தெரிகிறது.
ரிக் வேதத்தின் பகுதியாக வரும் மன ஆவர்த்தன சூக்தம், ஸ்ரத்தா சூக்தம், யஜுர் வேத பகுதியான சிவ சங்கல்ப சூக்தம் ஆகியவற்றில் மனோ தத்துவ விஷயங்களைக் காணலாம்.
தற்கொலையைத் தடுக்கும் மந்திரம்
மனம் அலைபாய்வது குறித்தும் அந்த மனத்தினை மீண்டும் இழுத்து குவிய வைப்பது குறித்தும் ரிக் வேத 10-58 மந்திரத்தில் காணலாம்.
நான் மனத்தினை இழுத்து வந்து கட்டுக்குள் வைக்கிறேன் என்று ஒவ்வொரு துதியும் முடிகிறது
பன்னிரெண்டு மந்திரங்களும் மனத்தை வசப்படுத்தும் மந்திரம் ஆகும்; அது மட்டுமல்ல சென்ற காலத்துக்கும் வருங்காலத்துக்கும் சென்ற மனத்தினை மீண்டும் வர செய்கிறோம் என்று ஒரு மந்திரம் முடிகிறது ; நாம் அனைவரும் கடந்த கால நிகழ்சசிகளை எண்ணியோ வருங்காலத்தை எண்ணிக் கவலைப்பட்டோ வாழ்க்கையை செலவிடுகிறோம் இதை அழகாக இந்த மந்திரம் உரத்த குரலில் சொல்லி ,கூவி மனதை ஒருமுகப்படுத்த வைக்கிறது.
இதையே பாரதியாரும் பாடியுள்ளார்
சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
– மகாகவி பாரதியார்.
இது ரிக் வேத மனஸ் (10-58-11) பற்றிய கவிதையின் எதிரொலி ஆகும்.
யத்தே யமம் வைவஸ்வதம் மனோ ஜகாம தூரகம்
தத்த ஆ வர்த்த யாமஸீஹ க்ஷயாய ஜீவஸே
यत्ते॑ य॒मं वै॑वस्व॒तं मनो॑ ज॒गाम॑ दूर॒कम् । तत्त॒ आ व॑र्तयामसी॒ह क्षया॑य जी॒वसे॑ ॥ यत्ते यमं वैवस्वतं मनो जगाम दूरकम् । तत्त आ वर्तयामसीह क्षयाय जीवसे ॥ yat te yamaṃ vaivasvatam mano jagāma dūrakam | tat ta ā vartayāmasīha kṣayāya jīvase ||
குறிப்பாக முதல் மந்திரம் தற்கொலையைத் தடுக்கும் மந்திரம் என்று தெரிகிறது; யமனிடம் சென்றுள்ள மனதை — அதாவது தற்கொலை செய்ய முயன்றவரின் — மனதை திருப்பி இழுக்கும் மந்திரம் ஆகும்.
வாழ்க்கைப் போராட்டத்தினை எதிர்கொள்ள வேண்டும்; எதற்கும் அஞ்சக்கூடாது ; மனக்கோட்டைகளையும் கட்டவேண்டாம்; எதிர்காலம் பற்றி அஞ்சவும் வேண்டாம் என்பதை 12 மந்திரங்களும் மீண்டும் மீண்டும் கூறுகின்றன.
தற்காலத்தில் அதி பயங்கர சம்பளத்துடன் மேலை நாடுகள் சைக்கோதெரபிஸ்ட் PSYCHOTHERAPIST என்னும் மருத்துவர்களை நியமிக்கின்றன . தற்கொலை செய்யப்போவதை பார்த்த உறவினர்களோ நண்பர்களோ அவர்களை டாக்டரிடம் கூட்டிச் சென்றவுடன் அவர் உடனே சைக்கோதெரப்பிஸ்ட் திடம் அனுப்புவார்; அவர் தற்கொலை நோயாளியுடன் ஒரு மணி நேரம் பேசி மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்பார். அவருக்கு வருட சம்பளம் ஐம்பதாயிரம் பவுன்கள்! ரிக் வேத மந்திரத்தை இலவசமாகவே கேட்கலாம் ; படிக்கலாம் .
****
அடுத்தாற் போல ரிக் வேதத்தில் உள்ள நம்பிக்கை / ச்ரத்தா சூக்தத்தைக் காண்போம் .
தொடரும் ……..
–சுபம்–
Tags- தற்கொலை , மனம், அலைபாயும், வேதம் , சைக்காலஜி, மன , உள இயல் , மனோதத்துவ ,சாஸ்திரம் , பகுதி 1
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
13-4-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
பத்ராசல ராமதாஸர்! – 2
ச. நாகராஜன்
வருடங்கள் ஓடின. சிறைவாசம் பொறுக்கமுடியாத நிலையில், விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு வந்தார் கோபண்ணா.
“ஏ! சீதம்மா! நீயாவது என் நிலையை ராமருக்குச் சொல்லக் கூடாதா” என்று கூறி விட்டு விஷக் கோப்பையை தயார் செய்து வைத்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
சீதாதேவியின் மனம் உருகியது. ராமரை நோக்கிய சீதாதேவி, இப்படி ஒரு மெய்யன்பர் உருகித் தவிக்க ஏன் அவரைக் காக்காமல் இருக்கிறீர்கள். பன்னிரெண்டு வருட காலம் சிறைவாசம் என்பது ஒரு பெரிய தண்டனை அல்லவா? என்று கேட்க ராமர், “முன்னொரு ஜென்மத்தில் ஒரு கிளியைக் கூண்டில் அடைத்து வைத்து விட்டான் இவன். அதற்கான தண்டனையை அனுபவிக்கிறான் இப்போது. இன்றுடன் அந்த தண்டனை காலம் முடிகிறது.
“தானீஷா சென்ற ஜென்மத்தில் காசியில் ஒரு அந்தணனாகப் பிறந்தவன். அபிஷேகம் செய்தால் இறைவன் தரிசனம் கிடைக்கும் என்று 999 குடங்கள் அபிஷேகம் செய்தான். பிறகு பொறுமையின்றி குடத்தை இறைவன் தலையின் மீதே போட்டு உடைத்தான். அதன் பயனாகவே அவன் இப்போது இப்படி பிறக்க நேரிட்டது. அவனுக்கும் தரிசனம் தர வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. இதோ லட்சுமணருடன் தானீஷாவிடம் செல்கிறேன்” என்றார் ராமர்.
ஹைதராபாத்தில் நடுநிசி நேரத்தில் தானீஷாவின் அரண்மனைக் கதவுகள் தானே திறக்க உள்ளே நுழைந்தனர் ராமரும் லட்சுமணரும்..
நல்ல ஒரு கனவைக் கண்டு விழித்த தானீஷா தன் எதிரே வந்து நின்றவர்களை யார் யார்? என்று வியப்பு மேலிடக் கேட்டான்.
“நாங்கள் கோபண்ணாவின் வேலையாட்கள் என் பெயர் ராமன். இவன் பெயர் லட்சுமணன். இதோ அவர் கொடுத்தனுப்பிய ஆறு லட்சம் வராகனைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று ராமர் கூறி தன் கையிலிருந்த மூட்டையை அவிழ்த்து நாணயங்களைக் கொட்டினார்.
கீழே கொட்டப்பட்டுக் கிடந்த தங்க நாணயங்களைப் பார்த்து பிரமித்தான் தானீஷா.
இதைப் பெற்றுக் கொண்டதற்கு ரசீதைத் தாருங்கள் என்றார் ராமர்.
அதைப் பெற்றுகொண்டு நேராக சிறையை நோக்கி லட்சுமணருடன் விரைந்தார்.
அங்கே விஷக் கிண்ணம் எதிரே இருக்க கோபண்ணா தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
ராமர் லட்சுமணனை நோக்கி, நீ உள்ளே சென்று அந்த கிண்ணத்தைக் கவிழ்த்து விடு என்று ஆணையிட்டார்.
லட்சுமணன் அனந்தனாக – பாம்பாக – மாறி உள்ளே சென்று கிண்ணத்தைக் கவிழ்க்க கோபண்ணா விழித்தார். ரசீதைப் பார்த்துத் திகைத்தார். எதிரே இருந்த ராமர் அவருக்குத் தரிசனம் தந்து அருளினார்.
நடந்ததை எல்லாம் எண்ணிப் பார்த்த தானீஷா வந்தது ராம லட்சுமணரே என்று உணர்ந்து பரிவாரங்களுடன் சிறையை நோக்கி விரைந்து வந்தான்.
அங்கே அவனுக்கும் ராமரின் தரிசனம் கிடைத்தது.
பத்ராசலம் சென்று வழிபடுக என்று ராமர் கூறி அருள, மனம் மகிழ்ந்த கோபண்ணா பத்ராசலம் நோக்கி விரைந்தார்.
அன்றிலிருந்து அவரது பெயர் பத்ராசல ராமதாஸர் என்று ஆயிற்று.
சங்கீதத்தில் வல்லவராக இருந்த அவர் ராமரின் புகழ் பாடி ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினார்.
மக்களிடையே ராம பக்தியைப் பரப்பினார்.
ஒரு நாள் தேர் ஒன்று வானிலிருந்து வந்து இறங்க அதில் ஏறினார் ராமதாஸர். தன் மனைவியைக் கூப்பிட அவரோ “ கொஞ்சம் வேலை இருக்கிறது, முடித்து விட்டு வருகிறேன்” என்று உள்ளிருந்தே பதிலை அளித்தார்.
தேர் வானில் பறக்கும் சமயம் , வெளியே வந்த அம்மையார் ராமதாஸரைக் காணாமல் தவித்தார்.
“நீ உன் மகனுக்குப் பணி செய்! அதற்காகவே நீ இங்கு தங்கி விட்டாய்” என்று வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.
பத்ராசல ராமதாஸரின் பாடல்கள் பாரதமெங்கும் இன்றும் ஒலித்துக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர்.
ஹைதராபாத் செல்வம் கொழிக்கும் சீமையாக விளங்குவதற்குக் காரணம் ராமர் அங்கு கொட்டிய ஆறு லட்சம் வராகன் பொன் நாணயங்களே என்று இன்றும் மக்கள் அனைவரும் பேசி வருகின்றனர்.
மஹா பக்த விஜயம் நூலில் தரப்பட்டுள்ளபடி இந்த திவ்ய சரித்திரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
அற்புதமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து ராம நாம கீர்த்தனைகளை இயற்றி அருளிய பத்ராசல ராமதாஸரைப் போற்றுவோமாக!