9 Pictures of 2500 Indian Stamps!- Part 9 (Post.14,395)

Written by London Swaminathan

Post No. 14,395

Date uploaded in London –  15 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  NINE

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

MAHATMA GANDHI STAMPS, DELHI MONUMENTS, TEMPLES, AMRITSAR, NATARAJA, BUDDHA LEFT AND RIGHT, AIR PLANE, INDIAN FLAG, TAJ MAHAL

–Subham—

Tags- PART 9, INDIAN STAMP PICTURES, MAHATMA GANDHI STAMPS, DELHI MONUMENTS, TEMPLES, AMRITSAR, NATARAJA, BUDDHA LEFT AND RIGHT, AIR PLANE, INDIAN FLAG,

Animals and Plants that ‘came into’ my I Pad (Post No.14,394

Written by London Swaminathan

Post No. 14,394

Date uploaded in London –  15 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

More animals from Australia and Trees from London are captured by my I Pad:

Garden Lizard from Sydney Botanic Garden

Kangaroos and Wallabies from Australia.

Silk Cotton Trees in London University and Wembley (London)

Gian aloes

Koalas in Australia

Bats on the trees

Roadside trees in my street

Gi

Silk cotton tree,  SOAS, University of London

Pelicans in Australia

My neighbour – Tree

My next door in Wembley ,London

Giant Lizard that crossed me in Sydney Botanic Garden

Koalas on trees in Australia

Kangaroos in Parramatta, Sydney

Giant Sloth on tree

Pigeon with a crest, Sydney

london swaminathan with Emu birds

Wallabies??

Crows in Australia has whie necks

Bats

White necked Crows of Australia

Giant Aloe in Wembley, London.

Kangaroos are driven into the shed.

–Subham—

Tags- Garden Lizard, Kangaroos and Wallabies ,Silk Cotton Trees ,

Gian aloes, Koalas , Australia, Bats , London trees, crested pigeons, Pelicans, white necked crows

My Singapore Pictures from December 2024 (Post No.14,393)

Sri Veerama Kali Amman temple

Written by London Swaminathan

Post No. 14,393

Date uploaded in London –  15 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I have already written an article about my darshan at Sri Veerama Kali Amman temple at Singapore. Here are more pictures of the same.

On our way to Sydney, we stayed in Singapore for two nights in December 2024.

Though we had been to Singapore a few years bac, we needed rest during a long travel

Highlights:

Komala Vilas Lunch

Little India area walking

Sri Veerama Kali Amman temple, one of the oldest temples.

Temple Darshan

****
Lunch at famous Komala Vilas, opp. the temple

–subham—

Tags- Singapore, pictures, from London swaminathan, Sri Veerama Kali Amman temple, Komala vilas lunch

வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை நோய்கள்! (Post No.14,392)

Written by London Swaminathan

Post No. 14,392

Date uploaded in London –  15 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற கொள்கை வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை இருந்ததை இலக்கியங்களில் காண முடிகிறது .

ஒரு நாட்டிற்கான ஐந்து லட்சணங்களை வள்ளுவன் பாடுகிறான்

:பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து.  -குறள் 738.

பொருள்

நோயில்லாதிருத்தல்‌, செல்வம்‌, விளை பொருள்‌ வளம்‌, இன்பவாழ்வு, நல்ல காவல்‌ ஆகிய இந்த ஐந்தும்‌ நாட்டிற்கு அழகு என்று கூறுவர்‌.

பிணி என்றால் நோய், வியாதி  இது இல்லாமல் இருக்க மக்களும் அரசும் முயற்சி செய்யவேண்டும் .

****

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு.  குறள் 734

பொருள்

மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

****

வேதங்களில், மனிதர்கள் எல்லோரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை அடிக்கடி வருகிறது . உலகில் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் இதைக் காண முடியாது. இந்தியாவில் 120 ஆண்டுகள் அல்லது அதற்குமேலாக வாழ்ந்தோரின் வாழ்க்கை வரலாற்றினையும் நாம் அறிவோம்.

பிராமணர்கள் — முன் காலத்தில் மூன்று ஜாதியினரும் செய்த — கீழ்க்கண்ட பிரார்த்தனையில் இன்னும் தெளிவாகவே உள்ளது . இதை இப்போதும் பிராமணர்கள் மதிய வேளை சந்தியாவந்தனத்தில்,  விரல்களின் சிறு இடுக்கு வழியாக,  சூரியனைப் பார்த்துக்கொண்டு,  சொல்கின்றனர் :

 பஸ்யேம சரதஸ் சதம்

ஜீவேம சரதஸ் சதம்

நந்தாம சரதஸ் சதம்

மோதாம சரதஸ் சதம்

பவாம சரதஸ் சதம்

ஸ்ருணவாம சரதஸ் சதம்

ப்ரப்ரவாம சரதஸ் சதம்

அஜீதாஸ்யாம சரதஸ் சதம்

பொருள்

சூரிய தேவனே ! நூறாண்டுக் காலம் (உன்னை நாங்கள்) காண்போமாக

(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக

நூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக

நூறாண்டுக் காலம் மகிழ்வோமாக

நூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக

நூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக

நூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக

நூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக!

****

எப்போது ஒருவர் நோயில்லாத வாழ்க்கையை வேண்டுகின்றாரோ அப்போதே நோய்கள் இருந்ததையும் ஒப்புக்கொள்கிறார்கள் என்று அர்த்தம் ; தினமும் சிவன் கோவில்களில் சிவனுக்கு அபிஷேகம் செய்யும்போது சொல்லும் ருத்ரம்- சமகம் மந்திரத்திலும் பேஷஜம், பிஷக் (மருந்து, மருத்துவர்) நல்ல தூக்கம், நல்ல வாழ்வு ஆகியனவற்றை வேண்டுகின்றனர்.

****

வேத கால நோய்ப் பட்டியல்

மக்டொனால் மற்றும் கீத் என்ற இரண்டு ஆங்கிலேயர்கள் 

தொகுத்த ‘வேதிக் இண்டெக்ஸ் – VEDIC INDEX BY A. A. MACDONELL AND A. B. KEITH  பட்டியலில் நாற்பதுக்கும் மேலான நோய்களின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் உள்ளன ; வயிற்றுப் போக்கு, ஜுரம், தலைவலி, க்ஷயரோகம் குஷ்டம், மஞ்சள்  காமாலை, இருதய நோய்கள் , ரத்தப்போக்கு முதலியன அந்தப் பட்டியலில் காணப்படுகின்றன.  ஒவ்வொன்றினையும் அவர்கள் விளக்கியபோதும் பல சந்தேகக்குறிகளும் உள்ளன. வேதங்கள் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால்  இதுதான் என்று சொல்ல முடியாது .

வேதங்கள் மருத்துவ நூல்கள் இல்லை ; அவை சமய நூல்கள். மேலும் அவை சொல்லும் வியாதி என்ன என்று சிகிச்சைக் குறிப்பிலிருந்தோ மருந்துக் குறிப்பிலிருந்தோ கூட கண்டு பிடிக்க முடிவதில்லை. க்ஷேத்திரியா KSHETRIA என்ற நோயினை அதர்வண வேதம் (AV) 2-8-5; 3-7-1 பல இடங்களில் குறிப்பிட்டாலும் அது என்ன என்று தெரியவில்லை !

யுக்மன் YUKMAN என்ற வியாதியையும் அதர்வண வேதம் குறிப்பிடுகிறது ; பிற்கால சம்ஸ்க்ருத நூல்களில் இந்த நோயினைக் காண  முடியவில்லை ; ஒருவேளை ஜுரம்/ காய்ச்சல்  என்ற பொதுச் சொல்லாக இருக்கலாம்

கீழ்க்கண்ட சொற்கள் என்ன வியாதியைக் குறிக்கின்றன என்று காணலாம் ,

பாமன் PAMAN- தோல் நோய்

பிரிஸ்த்யமயா PRISHYTYAMAYA – விலா எலும்பில் நோவு

பலாஷ் BALASH –  டி .பி.  க்ஷயரோகம், எலும்புருக்கி நோய்.

யக்ஷ்ம YAKSHMA – காய்ச்சல்

நூற்றுக்கணக்கான யக்ஷ்ம – காய்ச்சல் என்ற சொற்றோடர் யஜுர் வேத வாஜசநேயி சம்ஹிதையில் வருகிறது.

அயக்ஷ்ம AYAKSHMA = நோயற்ற வாழ்வு என்ற சொல் காடக சம்ஹிதையில் வருகிறது

இவை தவிர வயிற்று நோய் , கண் நோய் , இருமல், தலையில் நோய், இருதயத்தில் நோய்  ஆகியவற்றையும் வேதம் குறிப்பிடுகிறது .

ரோகம், ஆமய  என்ற நோய் பற்றிய வேத கால சொற்கள் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன  .

முப்பது நோய்கள்

வேத காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம், இராமாயண- மஹாபாரதம் பாணினியின் இலக்கண நூல் அஷ்டாத்யாயீ என்பனவற்றில் முப்பது நோய்கள்  காணப்படுகின்றன..

மிலிந்த பன்ன என்ற புத்தமத நூல் 98 வியாதிகள் ப ற்றி ப் பேசுகிறது ; அதிலும் கூட குறிப்பான விஷயங்கள் இல்லை; ஏனெனில் அதுவும் சமய நூல்தான்.

ஆனால் புத்தர் காலத்திலிருந்து கிடைக்கும் குறிப்புகளிலிருந்தும்  அதற்கு முந்தைய சரக, சுஸ்ருத சம்ஹிதைகள் மூலம் கிடைக்கும் குறிப்புகளிலிருந்தும் தெளிவான சித்திரம் கிடைக்கிறது.

****

ஆயுர்வேத நூல்களுக்கு முன்னர் காணப்பட்ட நோய்கள்,

மல மூத்திர வெளியேற்ற சிக்கல்கள் – அர்த்தசாஸ்திரம்

க்ஷய ரோகம் என்னும் காச நோய் எலும்புருக்கி நோய். – அர்த்தசாஸ்திரம்

பாலியல் நோய் — அர்த்தசாஸ்திரம்

குஷ்டம் – மஹாபாரதம்

வயிற்றுப போக்கும் – அர்த்தசாஸ்திரம் மஹாபாரதம்

ஆஸ்த்மா – மஹாபாரதம்

தோல் நோய் – மஹாபாரதம்

ஜலோதரம்/மகோதரம் – மஹாபாரதம்

வலிப்பு –  மஹாபாரதம்

ராமாயணம் பொதுப்படையாக வாத ரோகம், ரக்த ரோகம் VATA ROGA, RAKTA VIKARA  என்றே சொல்கிறது ; பாணினியின் 2700 ஆண்டுக்கு முந்தைய அஷ்டாத்யாயீ இலக்கண நூல் மூல நோய், இருமல், ஜுரம், குஷ்டம், ரத்தம் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது .

ஆயுர்வேதத்தில் ஆயிரம் நோய்கள்

முதல் முதலில் எழுதப்பட்ட மருத்துவ நூல்களில் நீண்ட நோய்ப் பட்டியல் உளது; ஆயிரம் வியாதிகளுக்கு மேல் உள்ளன.

15 மன நோய்கள்

அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைகள் இறப்பது மிகவும் சர்வ சாதாரணமாக இருந்தது; இதை சரக, சுஸ்ருத சம்ஹிதையில் காணலாம். இதனால் இறந்த  குழந்தைகளுக்குத் தகனமோ, இறுதிக் கிரியைகளோ தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் விளம்பின;  அதே போல 15 மன நோய்களையும் — உன்மத்தம்– அவை குறிப்பிடுகின்றன.

****

உதவிய நூல் – பழங்கால இந்தியாவில் மருந்துகள் – ஆசிரியர் கன்சீவ் லோஷன் – வாரணாசி- ஆண்டு 2003.

REFERENCE- MEDICINES OF EARLY INDIA, KANJIV LOCHAN, CHAUKHAMBHA SANSKRIT BHAWAN, VARANASI, 2003

—SUBHAM—

 TAGS – மன நோய்கள், ஆயுர்வேதத்தில், ஆயிரம் நோய்கள் , வேத காலம், வள்ளுவர் காலம்

பத்ராசல ராமதாஸர்! – 1 (Post No.14,391)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,391

Date uploaded in London – –15 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 13-4-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

பத்ராசல ராமதாஸர்! – 1 

ச. நாகராஜன் 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.

ராமதாஸர் என்ற பெயரில் மூன்று மகான்கள் உள்ளனர். ஒருவர் சமர்த்த ராமதாஸர்.. இன்னொரு மகான் பத்ராசல ராமதாஸர். அடுத்து சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த இன்னொரு மகான் கன்ஹன்காட் ராமதாஸர் ஆவார்.

சமர்த்த ராமதாஸரைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம் இன்று பத்ராசல ராமரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம்.

பத்ராசலம் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு ஊராகும்.இப்போது தெலிங்கானா மாநிலத்தில் உள்ளது. ஹைதராபாத்திலிருந்து இது 202 மைல் தூரத்தில் உள்ளது.

 பத்ராசல ராமதாஸர் என்று அறியப்படும் காஞ்செர்லா கோபண்ணா 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் ராம பக்தர் ஆவார். இவரது காலம் 1620 முதல் 1688 முடிய என வரலாறு தெரிவிக்கிறது. 

கோபண்ணா என்று அழைக்கப்பட்ட இவர் தெலுங்கு பிராமண குடும்பத்தில் லிங்கண்ணா  மற்றும் காமாம்பா ஆகியோருக்கு மகனாக பத்ராசலம் நகருக்கு அருகில் உள்ள நெலகொண்டபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.

 குதுப் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த தானீஷா அப்போது ஹைதராபாத்தை ஆண்டு வந்தான். அவனது அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த மாதண்ணா மற்றும் அக்கண்ணா ஆகியோர் கோபண்ணாவின் மாமன்மார்கள் ஆவர்.

 இளவயதில் கோபண்ணாவின் தாயும் தந்தையும் மறையவே அவர் ராம விக்ரஹத்திற்கு பூஜை செய்தவாறு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரைச் சந்தித்த ஒரு பெரியவர் அவரது ராம பக்தியைச் சோதிக்க எண்ணி அவர் ராம விக்ரஹம் வைத்திருந்த பெட்டியை ஒரு குளத்தில் எறிந்து விட்டார். விக்ரஹத்தைக் காணாத கோபண்ணா தவியாய்த் தவித்தார். ஏனிப்படித் தவிக்கிறாய் என்று பெரியவர் கேட்க தனது விக்ரஹம் காணாமல் போனதைக் கூறி அழுதார் கோபண்ணா. வேறு விக்ரஹம் ஒன்றை நான் தருகிறேன் என்றார் பெரியவர். ஆனால் கோபண்ணாவோ தான் வழிபடும் விக்ரஹமே தனக்கு வேண்டும் என்றார்.

உடனே அந்தப் பெரியவர் ராம நாமத்தை உச்சரித்து குளத்தில் இருந்த பேழையை வருவித்து அவரிடம் தந்தார்.

கபீர் தாஸர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மாபெரும் மகானான கபீர்தாஸர் அவர் தலை மீது தன் கையை வைத்து உபதேசமும் செய்தார்.

பின்னர் கோபண்ணாவுக்குத் திருமணம் நடந்தது. ஒரு குழந்தையும் பிறந்தது. ராமநவமி உற்சவம் நடைபெற்ற தினத்தன்று குழந்தையானது தவறி அங்கிருந்த கஞ்சித் தொட்டியில் விழுந்து மாண்டது.

அதிதிகளுக்கு சாப்பாடு போட வேண்டியிருந்த சமயம் என்பதால் குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தை கோபண்ணாவின் மனைவி கூறவில்லை. சாப்பாடு முடிந்தபின்னர் எங்கே குழந்தை என்று கோபண்ணா கேட்க நடந்ததைச் சொன்னாள் கோபண்ணாவின் மனைவி.

 ‘இதைக் கேட்ட கோபண்ணா, “ராமா! அடியாரைக் காப்பது உன் கடமை அல்லவா? இப்படி ஒரு துயரத்தைத் தரலாமா என்று கதறி அழுதார். அப்போது, “அப்பா! அம்மா! என்று மழலை மொழியில் அழைத்தவாறே குழந்தை வந்தது. அனைவரும் பிரமித்தனர்.

 ராமபக்தியில் திளைத்த கோபண்ணா ராம தரிசனத்திற்காக ஏங்கினார். தன் குருவான கபீர்தாஸரிடம் ராம தரிசனம் அருளுமாறு வேண்டினார். அவரோ சற்றுப் பொறு என்றார்.

“என்னால் பொறுக்க முடியாது” என்று கோபண்ணா அடம் பிடித்தார். சரி! நாளை உச்சிப் பொழுதில் ராமர் உனக்கு தரிசனம் தருவார் என்றார் கபீர்தாஸர்.

மறு நாள் வெகு விமரிசையாக பஜனை நடந்து கொண்டிருந்தது. உச்சிப் பொழுதும் வந்தது. அப்போது ஒரு எருமையானது சகதியிலிருந்து எழுந்து வந்தது போலச் சேறுடன் பஜனைக் கூடத்தில் நுழைந்து அங்கிருந்த பூ, பழம் மற்றும் பாத்திரங்களை எல்லாம் உருட்டியது. இதனால் வெகுண்ட கோபண்ணாவும் மற்றவர்களும் அதைத் தடியால் அடித்து விரட்டினர்.

கபீர்தாஸர் முன் தோன்றிய இறைவன், “ஹே! கபீர்! உன் பக்தன் என்னை அடித்து விட்டான்” என்று  கூறி தன் முதுகைக் காட்ட, கபீர்தாஸர், “இது நியாயம் இல்லை. எருமை மாடாக வருவதை அப்பாவி கோபண்ணா எப்படி அறிவார். அதை அறியத் தக்க ஞானத்தை நீங்கள் அல்லவோ அவருக்குத் தர வேண்டும்” என்றார்.

 “உரிய பக்குவ நிலையை கோபண்ணா அடைந்தவுடன் நானே காட்சி தருவேன்” என்று கூறி இறைவன் மறைந்தார்.

 ஹைதராபாத் மன்னனாக விளங்கிய தானீஷாவின் அரண்மனையில் உயர் பதவியில் இருந்த தனது மாமன்மார்கள் ஞாபகத்திற்கு வர கொபண்ணா நேராக மாமன்மார் வீட்டை அடைந்தார்.

 அங்கே தனது ஏழ்மை நிலையை அவர் எடுத்துச் சொன்னார்.

தர்பார் கூடியிருந்த சமயத்தில் தானீஷாவிடம் கோபண்ணாவைப் பற்றி மாமன்மார் சொல்ல அவருக்கு பத்ராசலம் தாலுகாவின் தாசில்தாராகப் பதவியை அளித்தான் தானீஷா.

  “ஒழுங்காக கிஸ்தியை வசூலிக்க வேண்டும்” என்று கண்டிப்புடன் கூறினான் தானீஷா.

வெறுங்காலுடன் ஹைதராபாத் சென்ற கோபண்ணா அரண்மனை மரியாதைகளுடன் பல்லக்கில் வருவதைக் கண்ட ஊர் மக்கள் வியந்தனர். தங்கள் கோபண்ணா தாசில்தாராக ஆனதை அவர்கள் வரவேற்றனர்.

வசூலிக்க வேண்டிய வரிப்பணத்தை எல்லாம் முறையாக வசூலித்து ஹைதாராபாத்திற்கு அனுப்பலானார் அவர்.

ஒரு நாள் பத்ராசலம் கோவில் சிதிலமடைந்திருந்ததைக் கண்டு வருத்தமடைந்த கோபண்ணா அதை சீர்திருத்தியதோடு பிரம்மாண்டமான ஆலயமாக புனர் நிர்மாணம் செய்தார்.

 கிடைத்த வரிப்பணத்தை எல்லாம் கோவில் கட்டச் செலவழித்த கோபண்ணா அதை தானீஷாவிற்கு அனுப்பவே இல்லை.

ஒரு வருட காலமாக வரிப்பணம் வராததைக் கண்ட தானீஷா கோபண்ணாவை உடனடியாக வந்து தன்னைப் பார்க்குமாறு உத்தரவிட்டான்.

கோபண்ணா தர வேண்டிய வரிப்பணம் ஆறு லட்சம் வராகன் என்ற பெரிய தொகை என்று கேட்ட மன்னன் அதைத் தரும் வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.

சிறைவாசம் அனுபவித்தாலும் அவ்வளவு பெரிய தொகையை எப்படித் திரட்ட முடியும்?

தானீஷா இன்னும் அதிக கோபம் கொண்டு முச்சந்தியில் நிறுத்தி அவருக்குச் சவுக்கடி கொடுங்கள். அப்போதாவது பணம் வருகிறதா என்று பார்ப்போம் என்று கூறினான்.

மக்கள் வருந்தினாலும் கூட தண்டனை நிறைவேறியது.

to be continued…………………………

My Pictures of Batu Caves Subrahmanya/ Murugan Shrine at Malaysia in March 2025

Written by London Swaminathan

Post No. 14,390

Date uploaded in London –  14 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

forty feet durga

london swaminathan in a cave

bhagavad gita show

huge garuda

durga temple

london swaminathan

I have already written an article about my darshan at the Batu Caves. Here are more pictures of the same.

Steep steps, Huge Garuda, Huge Hanuman, Forty feet Durga, Monkeys everywhere examining your bags! Colourful steps; huge , golden coloured Murugan/ Skanda wit Vel.

During Thaipusam lakhs of people visit.

–subham—

Tags- batu caves, pictures, from London swaminathan

8 Pictures of 2500 Indian Stamps!- Part 8 (Post.14,389)

8 Pictures of 2500 Indian Stamps!- Part 8 (Post.14,389)

Written by London Swaminathan

Post No. 14,389

Date uploaded in London –  14 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  EIGHT

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

MARI CURIE, MARTIN LUTHER KING, INDIAN BIRDS, POET GHALIB, JAKIR HUSSAIN, SHIPS, JHALIANWALA BAGH, MAXIM  GORKY, WORLD TAMIL CONFERENCE, BHAGAT SINGH, RANA PRATAP,

–Subham—

Tags- MARI CURIE, MARTIN LUTHER KING, INDIAN BIRDS, POET GHALIB, JAKIR HUSSAIN, SHIPS, JHALIANWALA BAGH, MAXIM  GORKY, BHAGAT SINGH, RANA PRATAP, WORLD TAMIL CONFERENCE

ரிக் வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார்? (Post No.14,388)

Written by London Swaminathan

Post No. 14,388

Date uploaded in London –  14 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரிக்  வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார்? என்று கேட்டால் பலருக்கும் சரியான விடை தெரியாது.

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்? என்றால் மஹாத்மா காந்தி என்று பலரும் உளறுவது போல மாக்ஸ்முல்லர் என்று பதில் சொல்லி தங்கள் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்பு போட்டுக் காட்டிக்கொள்வார்கள் அறியாத பேர்வழிகள் ; ; ஆயிரம் ஆயிரம் தேச பக்தர்கள் குண்டு அடி பட்டும், தூக்கில் தொங்கியும், சிறை சென்றும் வாங்கிக்கொடுத்தது நமது சுதந்திரம் !

ரிக்  வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார் என்றால் பேராசிரியர் எச் எச் வில்சன் Horace Hayman Wilson  ஆவார்

திருக்குறளுக்கு இன்றும் கூட பல திராவிட சுள்ளான்கள் உரை எழுதும் அவலத்தைத் தமிழுக்கு வந்த சாபக்கேட்டினைப் பார்க்கிறோம். பரிமேல் அழகர் சொன்ன உரையை வைத்துக்கொண்டு பல இடங்களில் திரித்து எழுதுவது திராவிடங்களின் வேலை; அது போல பேராசிரியர் வில்சன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்துக்கொண்டு மாற்றி எழுதியவர் வில்ஸனிடம் வேலை பார்த்த மாக்ஸ்முல்லர்!

இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ; வில்சன் இந்தியாவில் வேலை பார்த்துக்கொண்டு சம்ஸ்க்ருத, வேத பண்டிதர்களிடம் கற்றவர் ; மாக்ஸ்முல்லருக்கு இந்தியாவும் தெரியாது; வேத பண்டிதர் என்றால் என்ன என்றும் தெரியாது. இந்தியாவுக்கு வந்தால் தன்னை சம்ஸ்க்ருத பண்டிதர்கள் நார் நாராகக் கிழித்துவிடுவார்கள் என்று அஞ்சி இந்தியாவுக்கு வந்ததே இல்லை; ஒரு வேளை, அவர் சந்தித்த ஒரே இந்து விவேகானந்தர் தான் போலும் ; ஸ்வாமி விவேகானந்தர் வேதம் கற்றவர் அல்ல; வேத பண்டிதரும் அல்ல. மாக்ஸ்முல்லருக்கு சம்ஸ்க்ருதம் பேசத் தெரியாது என்பதால் அவரைக் கண்டவர்கள் ஆங்கிலத்திலேயே உரையாடியதையும் எழுதிவைத்துள்ளனர்.

மாக்ஸ்முல்லர் , யாரிடம் வேலை பார்த்தரோ அவரது புகழினைக் காண்போம். 

****

யார் இந்த வில்சன்?

Horace Hayman Wilson (26 September 1786 – 8 May 1860)

பேராசிரியர் எச் எச் வில்சன் கிழக்கிந்தியக் கம்பெனியின் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் ஒரு சாதாரண உதவியாளராக 1808- ஆம் ஆண்டில் கல்கத்தாவுக்கு வந்தார். அவருக்கு ரசாயன பாடத்தில்   தேர்ச்சி இருந்ததால் கல்கத்தா நாணயசாலையில் தரம் பிரிக்கும் பரிசோதகராக இருந்தார். ; இந்துக்களின் குணாதிசயங்களைக் கண்டு அதிசயித்துப்போன அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஸம்ஸ்க்ருதத்தைக் கற்றார். பின்னர் வேத பண்டிதர்களின் உதவியுடன் சாயன பாஷ்யத்தை அடிப்படையாக வைத்து ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் .

அவர் கால் நூற்றாண்டுக் காலத்துக்கு இந்தியாவில் இருந்து இந்து மதத்தை அறிந்தார்; நேரில் எல்லாவற்றையும் கண்டார். இந்தியாவுக்கே வராத, வேத பண்டிதர்களையே காணாத, வேதத்தையே காதில் முறையாகக் கேட்டறியாத  மாக்ஸ்முல்லரை ஒப்பிட இது உதவும்.

பேராசிரியர் எச் எச் வில்சன், ரிக்வேதம் மட்டுமின்றி விஷ்ணுபுராணம் , காளிதாசனின் மேகதூதம், சம்ஸ்க்ருத இலக்கணம் ஆகிய நூல்களையும் எழுதி இருக்கிறார். இவை தவிர ரசாயன நூல்களையும் எழுதியுள்ளார்.

அவர் கல்கத்தா சம்ஸ்க்ருத கல்லூரியிலும் பொறுப்புவகித்தார் இதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் உருவாக்கிய ஸம்ஸ்க்ருதத் துறையின் முதல் பேராசிரியர் பதவியில் 1832- ஆம் ஆண்டில் பேராசிரியர் எச் எச் வில்சன் அமர்த்தப்பட்டார். 

****

மத வெறிபிடித்தவன் துறை

ஆனால் வில்ஸனும் அவரைத் தொடர்ந்து மாக்ஸ்முல்லரும் பதவிவகித்த இந்த போடன் பேராசிரியர் பதவி இந்து மத விரோதியால் உருவாக்கப்பட்டதுஇந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்ற இந்தத் துறையை நிறுவுவதாக போடன் என்பவன் அறிவித்தான் .

The position of Boden Professor of Sanskrit at the University of Oxford was established in 1832 with money bequeathed to the university by Lieutenant Colonel Joseph Boden, a retired soldier in the service of the East India Company.

He wished the university to establish a Sanskrit professorship to assist in the conversion of the people of British India to Christianity, and his bequest was also used to fund scholarships in Sanskrit at Oxford.

.இப்படி ஒரு ஒரு அயோக்கியத் துறைக்குத் தலைமைப் பதவி வகித்தாலும் இந்துக்களைப் புகழந்தே வில்சன் பேசியுள்ளார் .

இங்கிலாந்துக்குத் திரும்பியவுடன் அவர் இந்துக்களைப் பற்றிச் சொன்னது பின்வருமாறு :

“கல்கத்தாவில் நாணயசாலையின் தொழிலாளர்களுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது ;அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள் தமது பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்; அந்த மகிழ்ச்சி பொங்கும் அறிவு பொழிந்த முகங்களை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அவர்கள் மது வகை எதையும் குடிப்பதில்லை. ஒழுங்கு முறையை மிகவும் அனுசரிக்கிறார்கள்; சொன்னதைச் செய்கிறார்கள்; அவர்களிடம் சூதுவாது கிடையாது; மற்ற நாடுகளில் காவல், பாதுகாப்பு ஆகிய எச்சரிக்கை நடவடிகைகள் தேவை ; காலத்தாவில் இது இல்லை ; இவர்களிடம் அடிமைப் புத்தி துளியும் இல்லை”.

(இதை பாஹியான், யுவாங் சுவாங் ஆகியோர் புகழுரையுடன் ஒப்பிடலாம் வீட்டுக்குப் பூட்டுப் போடாத ஆட்சி நடந்த நாடு இது ; ஆனால் ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி என்று பாரதியார் குறிப்பிட்டார்; அந்த ஆயிரம் ஆண்டுக்குப்பின்னர் இந்துக்களின் தரம் தாழ்ந்ததையும் நாம் அறிவோம் ;புதுச்சேரியில் பணிபுரிந்த ஆனந்தரங்கப்பிள்ளை எழுதிய  துபாஷி டயரி- நாட்குறிப்பில் இந்த வீழ்ச்சியைக் காணலாம்)

“  பண்புகளையும்  நேர்மையையும்  சொல்லிலும்  செயலிலும்  காட்டுகிறார்கள் ; இவர்களுக்கு உரிமைகளை அளித்து நட்பு பாராட்டினால் மிக்க தரமான நகைச்சுவையையும் அனுபவிக்க முடிகிறது  நம்மை உயர்தரமாகக் கிண்டல் செய்து நம்மை மகிழ்விக்கிறார்கள்”.

சம்ஸ்க்ருத பண்டிதர்கள் பற்றியும் பேராசிரியர் வில்சன் கூறுகிறார்:

“எனக்கு ஓய்வு கிடைத்த நேரங்களில் சம்ஸ்க்ருதம் படிக்கத் துவங்கினேன். பல வித்வான்கள் அறிமுகம் ஆனார்கள்; இவர்களிடம் பரி பூரண ஞானத்தையும், மதி நுட்பத்தையும் செயல்முனைப்பையும் , சத்தியம் பேசுவதையும், சுவையாக உரையாடுவதையும் காண முடிந்தது. இவர்களுடைய பேச்சில் இனிமையும் பெருமிதமும் துளிர்த்தது ; ஹிந்து வித்வான்களிடம் அதிசயத்தக்க எளிமை இருக்கிறது. தன்னடக்கம் இவர்களிடையே இயல்பாகவே இருக்கிறது ; ஆனால் ஐரோப்பியர்களின் தொடர்பால் சிலரிடம் ஆடம்பரம் குடிகொண்டு வருகிறது.

****

பேராசிரியர் வில்சன் வகித்த பதவிகள்

1811- 1833 வங்காள ஏசியாட்டிக் சொசைட்டியின் செயலாளர்;

1833- ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர்;

1836- லண்டன் இந்தியா ஹவுஸ் நூல், நிலைய தலைவர்

1837- ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் டைரக்டர்.

****

வில்சன் எழுதிய நூல்கள்

1813 The Mēgha Dūta; or, Cloud messenger by Kālidāsa (Revised Second Edition, 1843)

1819 A Dictionary, Sanscrit and English (Revised Second Edition, 1832)

1827 Select Specimens of the Theatre of the Hindus Volume 1, Volume 2 (Revised Second Edition, 1835 Volume 1, Volume 2)

1827 Documents Illustrative of the Burmese War

1828 Mackenzie Collection: A Descriptive Catalogue of the Oriental Manuscripts, co-authored with Colin Mackenzie

1828 Sketch of the Religious Sects of the Hindus, in Asiatic Researches, Volume XVI, Calcutta. (Expanded edition, 1846)

1840 The Vishnu Purána: a system of Hindu mythology and tradition

1841 Travels in the Himalyayan Provinces of Hindustan and the Panjab… Volume 1, Volume 2

1841 Ariana Antiqua: A descriptive account of the antiquities and coins of Afghanistan

1841 An Introduction to the Grammar of Sanskrit Language for the Use of Early Students

1845–48 The history of British India from 1805–1835 Volume 1, Volume 2, Volume 3

1850–88 Rig-veda Sanhitá : a collection of ancient Hindu hymns Volume 1, Volume 2, Volume 3, Volume 4, Volume 5, Volume 6

1852 Narrative of the Burmese war, in 1824–25

1855 A glossary of judicial and revenue terms and of useful words occurring in official documents relating to the administration of the government of British India

1860 The Hindu History of Kashmir

1862–71 Posthumous Collected Edition: Works by the Late Horace Hayman Wilson Volume 1: Religion of the Hindus Vol 1, Volume 2: Religion of the Hindus Vol 2, Volume 3: Essays on Sanskrit Literature Vol 1, Volume 4: Essays on Sanskrit Literature Vol 2, Volume 5: Essays on Sanskrit Literature Vol 3, Volume 6: The Vishnu Purana Vol 1, Volume 7: The Vishnu Purana Vol 2, Volume 8: The Vishnu Purana Vol 3, Volume 9: The Vishnu Purana Vol 4, Volume 10: The Vishnu Purana Vol 5, Volume 11: Theatre of the Hindus Vol 1, Volume 12: Theatre of the Hindus Vol 2

Principles of Hindu and Mohammedan Law

Metaphysics of Puranas

எச்சரிக்கை

மாக்ஸ்முல்லர் ஆகட்டும் வில்சன் ஆகட்டும் ; இவர்கள் எல்லாம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புகிறேன் என்று கையெழுத்துப் போட்டு Boden Professor of Sanskrit போடன் பேராசிரியர் பதவியை ஏற்றவர்கள் இதை நிர்வகித்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமோ இன்று வரை ஐயோ பறையா  போன்ற சொற்களை தமிழ்ச் சொற்ளாக அகராதியில் சேர்த்து தமிழன் அசிங்கமானவன் என்று காட்டி வருகின்றன. பறையாஐயோ சொற்களை நீக்குக என்று குரல் கொடுப்பவன் நான் ஒருவன்தான் ! ஆகையால் இந்து விரோத துறைகளை இனம் கண்டு உலகிற்கு அறிவிப்பது நம் கடமை. இப்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகம் இதைவிட அதி  திகமான விஷமங்களில் ஈடுபட்டு வருகிறது .

— சுபம்—

Tags- மாக்ஸ்முல்லர் , பேராசிரியர் வில்சன், ரிக்  வேதம்  ,மொழிபெயர்த்தவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

திராவிட அமைச்சருக்கு எதிராக தமிழ்ப் பெண்கள் போராட்டம் (Post No.14,387)

Written by London Swaminathan

Post No. 14,387

Date uploaded in London –  14 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 13-4-2025

Collected from popular national dailies and edited for broadcasting.

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்து  வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்


இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 13-ஆம் தேதி 2025-ம் ஆண்டு

****

நேயர்கள் அனைவருக்கும்,

நாளை துவங்கவிருக்கும்

விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

******

முதலில் ராமர் கோவில் பற்றிய புதிய செய்தி

அயோத்தி கோவிலில் ராம் தர்பார் மே 23-ல் திறப்பு

அயோத்தி ராமர் கோவிலில் மே 23-ல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி 22-ல் ராமர் கோயில் பிரதமர் நரேந்திர மோடியால் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது.

எனினும் கோயிலின் முதல் தளத்தில் ராம் தர்பார் கட்டப்பட்டு வந்தது. இப்பணியும் முழுமையடைந்து மே 23-ல் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்தர் மிஸ்ரா நேற்று கூறும்போது, “இந்த மாத இறுதியில் ராம் தர்பாரில் ஸ்ரீராமர், சீதா, பரதன், லஷ்மணன், அனுமன் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இவை உள்பட கோயிலின் அனைத்து சிலைகளும் ராஜஸ்தானின் மக்ரானா சலவை கற்களால் ஜெய்ப்பூரில் செய்யப்பட்டு இம்மாத கடைசியில் வந்துசேர உள்ளன என்றார்.

இத்துடன் கோவில் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு, இறுதியில் வளாக சுற்றுச்சுவர் எழுப்பப்பட உள்ளது.

ராமர் கோவில் வளாகத்தில் சூர்யதேவ், பாக்வதி, அன்னபூர்ணா, சிவன், விநாயகர், அனுமன் ஆகிய கடவுள்களுக்கும் கோவி ல்கள் அமைகின்றன. மேலும் சப்தரிஷிகளான வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்ரர், அகஸ்திய முனி, சிஷாத்ராஜ், சபரி, அகல்யா ஆகியோருக்கும் ஏழு கோவி ல்கள் இடம் பெறுகின்றன.

தியாகராஜர், புரந்தரதாசர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு புனிதரின் சிலைகளும் அமைகின்றன.

அயோத்தியில் ராமர் மீது சூரிய ஒளி

ராம நவமியனறு, அயோத்தி ராமர் கோவிலில் உள்ள குழந்தை ராமர் சிலை மீது சூரியக் கதிர்கள் பட்டு திலகம் போல் ஒளிர்ந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள், ராம கீர்த்தனங்கள் நடத்தப்பட்டன.

நண்பகல் 12:00 மணிக்கு, குழந்தை ராமர் நெற்றியில் நேரடியாக திலக வடிவில் படர்ந்த சூரிய ஒளியை, பக்தி பரவசத்துடன் ஏராளமானோர் தரிசித்தனர். அப்போது குழந்தை ராமருக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டன. சூரிய ஒளி ராமரின் நெற்றியில் மூன்று நிமிடங்கள் நீடித்தது.

மாலையில் இரண்டு லட்சம் நெய் தீபங்கள் கோவில் வளாகத்தில் ஏற்றப்பட்டன.

லக்னோவில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி, மங்காமேஷ்வர், காளி பாரி மற்றும் சைலானி மாதா கோவில்களிலும் ராம நவமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலுக்கு சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், பாரம்பரிய கன்னிகா பூஜையை நிகழ்த்தினார். துர்காதேவியின் வடிவமாக அலங்கரிக்கப்பட்ட ஒன்பது சிறுமியருக்கு அவர் பாதபூஜை செய்தார்.

வாரணாசியில் உள்ள ராமர் கோவில்களில், அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சம்பல் மாவட்டம் சந்தவுசியில் உள்ள 51 அடி உயர ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மேற்கு வங்கத்தில் முதல் ராமர் கோவிலுக்கு பாரதீய ஜனதாக கட்சித் தலைவர் அடிக்கல் நாட்டினார்  வரலாறு காணாத அளவில் 2,500 ஊர்வலங்கள் நடந்தன. ஒரே ஒரு இடத்தில் மட்டும் கல்வீச்சு நடந்தது

*****

அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கண்டனம்

பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல்கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது என , பாரதீய ஜனதாக கட்சி தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், விழுப்புரத்தில் நடைபெற்ற தத்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி, விலைமாதர் வாடிக்கையாளர் இடையே நடந்த உரையாடலை. இந்து மதத்தின் சைவ, வைணவத்தின் புனிதச் சின்னங்களுடன் ஒப்பிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி பேசியதை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிக கேவலமாகப் பேசியுள்ளார் எனறும்,  இது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசிய பொன்முடி எந்தப் பதவி வகிக்கவும் தகுதி அற்றவர் ஆனால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல், திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மட்டும் நீக்கி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாக அவர் கூறினார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்க தகுதியற்ற ஒருவர், எப்படி அமைச்சர் பதவியில் இருக்க முடியும்? என்றும், எனவே பொன்முடியை வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இந்து அன்னையர் முன்னணியும் மாநிலம் எங்கும் ஏப்ரல் 15-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது .

விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிக கீழ்த்தரமான மொழியில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார். அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதாக கட்சி கோரியுள்ளது

******

புதுச்சேரி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

விலைமாதுவுடன் இந்து மதத்தை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய தி.மு.க அமைச்சர் பொன் முடியை கண்டித்து, புதுச்சேரியில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொன்முடியின் உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

*********

கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார்!

திமுக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி, பாரதீய ஜனதாக கட்சி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க செயலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்களிலும் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

****

மருதமலை கோவில் வேல் திருட்டு– வெங்கடேஷ் சர்மா கைது

மருதமலை முருகன் கோயிலில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி வேல் திருடுபோனது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சாமியார் வெங்கடேஷ் சர்மா கைது செய்யப்பட்டார்;

முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படும் மருதமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஏப்ரல் 2ஆம் தேதி  மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபத்தில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, வேல் திடீரென திருடுபோனது.

தியான மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்த போது சாமியார் வேடத்தில் வந்த ஒருவன் அந்த வேலை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

அப்போது   பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தது.

வெங்கடேஷ் சர்மா, அதனை சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்று வெள்ளி தட்டு, குவளை வாங்கியுள்ளார். இதன் பின்னர் திண்டுக்கல் பகுதியில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

****

தனது சொத்துக்களுக்கு யார் வாரிசு? – சர்ப்ரைஸ் அளித்த நித்தியானந்தா!

தன் பெயரில் எந்தவொரு சொத்துக்களும் இல்லை என  நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

ஆன்மிக ஏஐ நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,  தாம் எழுதிய ஆன்மிக நூல்களே தனது சொத்துக்கள் என தெரிவித்துள்ளார். தம்முடைய  காலத்திற்கு பிறகு அது (ஆன்மிக நூல்கல்)யாருக்கு செல்ல வேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டடதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு சொத்துக்கள் இல்லை என்றும், தம்முடைய காலத்திற்கு பிறகு அது யாருக்கு செல்லும் என்ற கவலை பக்தர்களுக்கு தேவை இல்லை என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார்.

*****

ஹிந்துகள் மீது திடீர் பாசம் : ஸ்ரீ ராமர் கோயிலில் கனடா பிரதமர் வழிபாடு!

தேர்தல் நெருங்கும் நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னி, டொராண்டோவில் உள்ள BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் நடந்த ராம நவமி விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

சொந்த கட்சியிலேயே அழுத்தம் அதிகரித்ததால், கடந்த ஜனவரி மாதம், ஜஸ்டின் ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகினார். இதனால், கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் 9 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு, லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியினரான சந்திரா ஆர்யா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது.

நேபியன் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான அவரது வேட்புமனுவையும் லிபரல் கட்சி ரத்து செய்தது.

மூன்று முறை லிபரல் எம்.பி.யாக இருந்த அவரைத் தடை செய்ததற்கான எந்த காரணத்தையும் லிபரல் கட்சி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

கனடாவில் வாழும் இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாலும், காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுப்பதாலும் தான், தலைமை பதவிக்கு லிபரல் கட்சி தடை செய்ததாகச் சந்திரா ஆர்யா தெரிவித்திருந்தார்.

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, கடந்த வாரம், கனடாவின் கிரேட்டர் டொரான்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவிலில் தாக்குதல் நடந்தது..

கனடாவில், லிபரல் கட்சி, காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது, இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்களிக்கத் தகுதியுடைய சுமார் 600,000 இந்துக்கள் கனடாவில் உள்ளனர். மெட்ரோ வான்கூவர், கால்கரி மற்றும் எட்மண்டன் போன்ற நகரங்களில் இந்து வாக்குகளே தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்கின்றன.

இந்துக்களைச் சமாதானப்படுத்த பிரதமர் கார்னி டொராண்டோவில் உள்ள BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் ராமநவமி வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

*****

அமைச்சர் சேகர் பாபுவின் மனைவிக்காக கோயில் ஆகம விதிகள் மீறல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் சேகர் பாபுவின் மனைவிக்காக ஆகம விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் லுக்கு, அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, தரிசனம் செய்தார். அப்போது அவரது வருகைக்காக வழக்கமாக நடை சாத்தப்படும் நேரத்தை விட, கூடுதலாக ஒரு மணிநேரம் கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அம்மனுக்கு நடத்தப்படும் உச்சி கால பூஜையும் தாமதமானதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் உச்சிகால பூஜைக்காக தாங்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

****

பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 24-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், அம்மன் திருவீதி உலாவும், 1-ம் தேதி இரவு கம்பம் சாட்டு விழாவும் நடந்தது.


பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் எரியூட்டப்பட்டு, 12அடி நீளம், எட்டு அடி அகலத்தில் கோயில் முன்பாக குண்டம் தயாரானது.


குண்டத்தைச் சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 4 மணியளவில் பக்தர்கள் கோஷம் முழங்க, கோயில் பூசாரி ராஜசேகர் மற்றும் கோயில் பூசாரிகள், கட்டளைதாரர்கள், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் குண்டம் இறங்கினர்.


இவர்களைத் தொடர்ந்து ஏற்கனவே புனிதநீராடி, கையில் வேப்பிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பி.அமுதா, ண்டுதோறும் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பங்கேற்று குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, அமுதா ஐஏஎஸ், குண்டம் இறங்கி பண்ணாரி அம்மனை வழிபட்டார்.

*****

பறவை காவடி எடுத்து 50 அடி உயரத்தில் பறந்து வந்த பக்தர்!

விருதுநகர் மாவட்டம்சிவகாசி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவில்  பக்தர் ஒருவர் 50 அடி உயரத்தில் பறவை காவடி எடுத்து பரவசத்தை ஏற்படுத்தினார்.

சிவகாசியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30ஆம் தேதி பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில், விழாவின் முக்கிய  நிகழ்ச்சியான கயர்குத்து திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி  ஏந்தி வந்து அம்மனை தரிசித்த நிலையில், ராட்சத கிரேன் மூலம் பக்தர் பறவை காவடி எடுத்து 50 அடி உயரத்தில் பறந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

*****

இலங்கைத் தமிழர்களுக்காக பத்தாயிரம் வீடுகள்.. சீதை கோவில்..

பாரதப் பிரதமர் அறிவிப்பு..!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி , இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, “இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழர்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள் மற்றும் புனித சீதை தேவி ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் போன்ற  திட்டங்களுக்கு இந்திய அரசு ஆதரவு வழங்கும் என அறிவித்துள்ளார்..

பிரதமரின் இந்த அறிவிப்பை இந்து முன்னணி பாராட்டியது..!!

****

திருப்பதி பாலாஜி கோவிலில் வசந்தோற்சவம்

திருப்பதி வெங்கடாசலபதி  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வசந்தோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வியாழக்கிழமை வசந்தோற்சவம் தொடங்குகியது.காலை 6.30 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதியுலா நடந்தது. அதன்பின்னர் வசந்தோற்சவ மண்டபத்திற்கு கொண்டு வந்தார்கள் .

இரண்டாம்  நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலையில் மாட வீதிகளில் வீதியுலா வந்தார்.

 கடைசி நாளான 12-ந் தேதி சனிக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமியுடன் சீதா ராம லட்சுமணன், ஆஞ்சநேயர், கிருஷ்ணசுவாமி உற்சவமூர்த்திகள் ருக்மணியுடன் வசந்தோற்சவத்தில் பங்கேற்று மாலையில் கோவிலுக்கு திரும்பினா ர்கள்.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்து வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

ஏப்ரல் 20- ம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்

வணக்கம்.

—subham—

Tags- ஞானமயம் , உலக இந்து செய்திமடல், 13-4-25

ஆலயம் அறிவோம் : சேய்ஞலூர், திரு ஆப்பாடி தலங்கள் (Post.14,386)

திரு ஆப்பாடி

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14,386

Date uploaded in London –14 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

13-4-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணமாகி வந்து

வேடு அடைந்த வேடனாகி விசயனொடு எய்தது என்னே

கோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள் செய்

சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே

–    திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சோழவளநாட்டில் மண்ணியாற்றின் கரையில் உள்ள சேய்ஞலூர் என்னும் திருத்தலமாகும்

கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் தலம். இப்போது இது சேங்கனூர் என்று அழைக்கப்படுகிறது.

இது முருகன் வழிபட்ட தலமாகும். சேய் + நல்லூர். அதாவது முருகன் வழிபட்ட தலம் என்று பொருள். முருகன் இந்தத் தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சூரசம்ஹாரத்திற்கு உறுதுணையாக இருக்க பாசுபதாஸ்திரம் பெற்றார்.

சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொண்ட ஐந்து ஊர்களில் இதுவும் ஒன்று.

இறைவன் திரு நாமம் : சத்யகிரீஸ்வரர்

இறைவி : சகிதேவியம்மை

திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது.

திரு ஆப்பாடி

சேய்ஞலூரிலிருந்து திரு ஆப்பாடி திருத்தலம் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

இறைவன் பெயர் – பாலுகந்த ஈஸ்வரர்

இறைவி பெயர் : பெரிய நாயகி

சண்டேஸ்வர நாயனார் பசுக்கள் மேய்த்த தலம் என்பதால் இது ஆப்பாடி என்று அழைக்கப்படுகிறது.

திருநாவுக்கரசர்,

“சண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே”

என்று பாடி சண்டேஸ்வர வரலாறை தனது பதிகத்தின் நான்காவது பாடலில் இப்படிச் சுட்டிக் காட்டுகிறார்:

அண்டம் ஆர் அமரர் கோமான் ஆதி எம் அண்ணல் பாதம்

கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தைக்

கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறியக் கண்டு

தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே.

ஒருகாலத்தில் அந்தணர் மரபில் எச்சதத்தன் – பவித்திரை என்ற தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அக்குழந்தைக்கு விசாரதர்மர் என்று பெற்றோர் பெயரைச் சூட்டினர்.

குழந்தைக்கு ஏழு வயதிலேயே உபநயனம் செய்விக்கப்பட்டது.

ஒரு நாள் பசுக்களை மேய்க்கும் இடையன் ஒருவன் தன் கையிலிருந்த கம்பால் தன்னை முட்ட வந்த பசுவை அடித்தான்.

இதைக் கண்டு வருந்திய விசாரதர்மன், “ஐயா! பசுக்கள் தங்கள் உடலில் தேவர்களையும் முனிவர்களையும் புண்ணிய தீர்த்தங்களையும் கொண்டுள்ளன. பஞ்சகவ்யங்களை ஈசனுக்கு அளிக்கும் பசுக்களை அடித்தல் தவறு” என்று கூறி பசுக்களை மேய்க்கும் பணியை தானே மேற்கொண்டான்.

சிவபக்தி மேலிட மண்ணியாற்றின் கரையில் ஒரு ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை அமைத்து பசுவின் பாலினால் அதற்கு அபிஷேகம் செய்வித்து விசாரதர்மன் வழிபடலானான்.

இதைக் கண்ட ஒருவன் ஊருக்குள் சென்று பசுவின் பாலை விசாரதர்மன் கொட்டி வீணாக்குகிறான் என்று கூறினான்.

உண்மையை அறிய விழைந்த தந்தையான எச்சதத்தன் மரத்தின் மீது ஏறி ஒளிந்திருந்து நடப்பதைப் பார்த்தார்.

விசாரதர்மன் லிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்வதைப் பார்த்து வெகுண்ட எச்சதத்தன் பாற்குடங்களை எட்டி உதைத்தார்.

இதனால் கோபமடைந்த விசாரதர்மன் அருகிலிருந்த கம்பு ஒன்றை எடுத்தான். அது உடனே மழுவாக மாறியது. அதனால் எட்டி உதைத்த தன் தந்தையின் இரு கால்களையும் வெட்டினான். அவர் உயிர் நீத்தார்.

விசாரதர்மரின் பூஜையால் மகிழ்ந்த சிவபிரான் உமாதேவியோடு காட்சி அளித்து அவரைத் தன்  கரங்களால் எடுத்து அணைத்து அவருக்கு சண்டீசன் என்னும் பதத்தை அளித்தார். சண்டீசம் என்பது ஒரு பதவி.

அன்றிலிருந்து அவர் சண்டேஸ்வர நாயனார் என்ற பெயரைப் பெற்றார்.

இங்குள்ள கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரபீடம் நந்தி பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் முன் மண்டபத்தை அடையலாம். இங்கு வடக்கே உள்ள அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.  உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் தல விருட்சமான ஆத்திமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கமும் உள்ளது.

இந்த ஆத்திரமரத்தின் நிழலில் தான் சண்டிகேஸ்வர நாயனார் லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். கருவறை கோஷ்டத்தில்  தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.மேற்கு பிரகாரத்திலும் பல சந்நிதிகள் உள்ளன.

வடக்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி சண்டேஸ்வரரின் சந்நிதி உள்ளது. இது தவிர கர்பக்ருஹத்தின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேஸ்வரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் இறைவனை வழிபடுகிறார். ஆக இப்படி இந்தக் கோவிலில் மட்டும் இரண்டு சண்டேஸ்வரர் திரு உருவங்கள் அமைந்திருப்பது தனிச் சிறப்பு அம்சமாகும்.

இங்கு மஹாசிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சத்யகிரீஸ்வரரும், சகிதேவியம்மையும், பாலுகந்த ஈஸ்வரரும்

பெரிய நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  நன்றி. வணக்கம்.

**