ரமண மஹரிஷியின் முதல் மேலை நாட்டு பக்தர்! (Post.14,385)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,385

Date uploaded in London – –14 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஏப்ரல் 14 1950: ரமண மஹரிஷி சமாதி அடைந்த தினம். 

ரமண மஹரிஷியின் முதல் மேலை நாட்டு பக்தர்! 

ச. நாகராஜன்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகெங்கிலுமிருந்து ரமண மஹரிஷிக்கு உண்டு.

அவரது முதல் மேலை நாட்டு பக்தரின் பெயர் எஃப்.ஹெச். ஹம்ப்ரீஸ்

(F.H.Humphreys).  பகவானுடனான அவரது முதல் அனுபவமே ஆச்சரியகரமானது.

1911ம் ஆண்டு தனது 21ம் வயதில் அவர் இந்தியாவுக்கு வந்தார். போலீஸ் சேவையில் ஒரு வேலைக்காக அவர் வெல்லூர் வந்தார். 

தெலுங்கைக் கற்பிக்க தனக்கு ஒரு ஆசிரியரை அவர் நியமித்துக் கொண்டார். அவர் பெயர் நரசிம்மய்யா.

அவரிடம் ஹிந்து ஜோதிட சாஸ்திரத்தை விளக்கும் ஆங்கிலப் புத்தகம் எங்கேனும் கிடைக்குமா என்று ஹம்ப்ரீஸ் கேட்டார். விசித்திரமான இந்த வேண்டுகோளைக் கேட்ட நரசிம்மய்யா  மறு நாள் நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் தந்தார்.

அடுத்த நாள் .”உங்களுக்கு இங்கே மஹாத்மாக்கள் யாரையாவது தெரியுமா?” என்ற இன்னொரு விசித்திரமான கேள்வி நரசிம்மய்யாவை நோக்கி வந்தது.

“எனக்குத் தெரியாது” என்று சுருக்கமாகக் கூறி முடித்து விட்டார் நரசிம்மய்யா.

அடுத்த நாள் ஹம்ப்ரீஸ், “நேற்று உங்களிடம் மஹாத்மாக்கள் யாரையாவது தெரியுமா என்று கேட்டேன். தெரியாது என்று சொன்னீர்கள். ஆனால் இன்று காலை உங்கள் குருவை நான் எழுந்திருப்பதற்குச் சற்று முன்னால் பார்த்தேன். அவர் என் அருகில் உட்கார்ந்து ஏதோ சொன்னார். அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை.” என்ரார்.

நரசிம்மய்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவர் நம்பாமல் இருப்பதைப் புரிந்து கொண்ட ஹம்ப்ரீஸ் தொடர்ந்தார்:

“நான் வெல்லூரில் முதன்முதலில் பார்த்த ஆள் நான் முன்னமேயே பம்பாயில் பார்த்திருந்த நீங்கள் தான்.”

உடனே நரசிம்மய்யா, “நான் பம்பாய்க்கே சென்றதில்லையே” என்று தனது மறுப்பைத் தெரிவித்தார்.

உடனே ஹம்ப்ரீஸ் விவரித்தார்: “நான் பம்பாய்க்கு வந்தவுடனேயே ஜுரத்தால் பாதிக்கப்பட்டேன். உடல் நலம் தேற வெல்லூருக்கு வர மனம் கூறவே ஆஸ்ட்ரல் பாடி எனப்படும் சூக்ஷ்ம சரீரத்தில் வெல்லூருக்கு வந்தேன். அங்கே நரசிம்மய்யாவைப் பார்த்தேன்:

நரசிம்மய்யா உடனே, தனக்கு சூக்ஷ்ம சரீரம் என்றால் என்ன என்றே தெரியாது என்று கூறி விட்டார்.

என்றாலும் ஹம்ப்ரீஸ் சொன்னதில் ஏதாவது உண்மை இருக்குமா என்று சோதிக்க எண்ணிய நரசிம்மய்யா போட்டோக்கள் அடங்கிய ஒரு கட்டை ஹம்ப்ரீஸின் மேஜையின் மேல் வைத்து விட்டு இன்னொரு போலீஸ் ஆபீஸருக்குப் பாடம் சொல்லிதர கிளம்பி விட்டார்.

போட்டோக்களைப் பார்த்த ஹம்ப்ரீஸ் கணபதி சாஸ்திரிகளின் போட்டோவைப் பார்த்தவுடன், “இவர் தான்” என்று கூவினார்.

நரசிம்மய்யா திரும்பி வந்தவுடன், “இதோ, இவர் தானே உங்கள் குரு” என்றார்.

நரசிம்மய்யா அவர் தான் தனது குரு என்று ஒப்புக் கொண்டார்.

பிறகு மீண்டும் ஹம்ப்ரீஸின் உடல் நலம் பாதிக்கப்படவே அவர் ஊட்டிக்குச் சென்று விட்டார். பல மாதங்கள் கழித்துத் தான் அவர் மீண்டும் வெல்லூர் வந்தார்.

திரும்பி வந்தவுடன் இன்னொரு ஆச்சரியத்தை நரசிம்மய்யாவுக்கு அவர் அளித்தார்.

ஒரு மலைக்குகை படத்தையும் அதன் முன்னால் நீரோடை ஓடுவதையும் குகையின் வாயிலில் ஒரு மகான் நிற்பதையும் தான் கனவில் கண்டபடி வரைந்து அந்தப் படத்தை நரசிம்மய்யாவிடம் காண்பித்தார் ஹம்ப்ரீஸ்.

அது விரூபாக்ஷ குகை தான். குகையின் வாயிலில் நிற்பது பகவான் ரமணர் தான்!

நரசிம்மய்யா இப்போது ரமண மஹரிஷியைப் பற்றி ஹம்ப்ரீஸிடம் கூறினார்.

ஹம்ப்ரீஸுக்கு கணபதி சாஸ்திரிகளை அறிமுகப்படுத்தி வைத்தார் நரசிம்மய்யா.

அவர் பால் பெருமதிப்புக் கொண்டார் ஹம்ப்ரீஸ்.

1911 நவம்பரில் மூவரும் திருவண்ணாமலை சென்றனர்.

அங்கு ரமண மஹரிஷியைக் கண்டு ஆனந்தம் அடைந்தார் ஹம்ப்ரீஸ்.

 முதல் மேலை நாட்டு பக்தர் தரிசனம் பெற்ற பிறகு நூற்றுக் கணக்கான அயல்நாட்டார் திருவண்ணாமலை வந்து மஹரிஷியின் தரிசனம் பெற்றனர்.

ஒவ்வொருவரும் விதவிதமான அதிசய அனுபவங்களைப் பெற்றனர். 

அவை யாவும் ரமண இலக்கியமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் படித்து மகிழலாம்! 

***

ஞானமயம் ஒலிபரப்பில் தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்க படனம்

GNANAMAYAM BROADCAST SUMMARY FOR 13-4 -2025

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

13-4-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team- டாக்டர் செல்வி ஜாஹ்னவி , அவருடைய சகோதரி செல்வி ஜையிஷ்ணு  Dr(Miss) Jahnavi and her sister Miss Jayishnu

***

World Hindu News in Tamil  was presented by Vaishnavi Anand from London

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on  Two Shrines at SeyJnalur and Thiruaappadi.

***

Bengaluru S Nagarajan spoke on Bhadrachala Ramdas.

****

TAMIL NEW YEAR DAY SPECIAL  EVENT-

TRADITIONAL PANCHANGAM READING BY SRI PRABHU GURUKKAL.

****

Songs by Sathyarthi Chandrasekaran (Senior NRPSI Tamil Interpreter (12904); Japanese>English Translator;

Online Tutor (Tamil; Japanese; English; South-Indian Classical Music)

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்டாக்டர் செல்வி ஜாஹ்னவி , அவருடைய சகோதரி செல்வி ஜையிஷ்ணு  Dr(Miss) Jahnavi and her sister Miss Jayishnu

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் 

***

ஆலயம் அறிவோம் வழங்கியவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு – சேய்ஞலூர் மற்றும் திரு ஆப்பாடி ஆகிய இரு தலங்கள் 

*****

பெங்களூர் எஸ். நாகராஜன்

பத்ராசல ராமதாஸர் – பற்றி உரையாற்றினார்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்க படனம்  BY சிவஸ்ரீ M. ப்ரபு குருக்கள்

ஆசிரியர்: “ஸிவாகம சிரோரத்னா”, “ஜ்யோதிஷ விஷாரதா”, “சிவாகம வாசஸ்பதி’ சிவஸ்ரீ M. ப்ரபு குருக்கள், M.A., B.Ed. அர்சகர், ஸ்ரீ கல்யாண ஸுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவில், சேலம், ஜ்யோதிஷ ஆசிரியர், வேத சிவாகம பாடலாலை, பிள்ளையார்பட்டி

*****

பாடல்கள்கீர்த்தனைகள்கிருதிகள்

பாடுவோர்- சத்யார்த்தி சந்திரசேகரன் ( ஜப்பானிய- தமிழ் – ஆங்கில  மொழிபெயர்ப்பாளர்ஆன் லைன் சங்கீத ஆசிரியர்)

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,13-4-2025, BROADCAST SUMMARY, PANCHANGA PATANAM

Pictures of 2500 Indian Stamps!- Part 7 (Post.14,384)

Pictures of 2500 Indian Stamps!- Part 7 (Post.14,384)

Written by London Swaminathan

Post No. 14,384

Date uploaded in London –  13 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  SEVEN

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

Gokhale, Rama Tirtha, Hockey, G Tagore, Ranjit Singh, Kambar, Basavesvara, Radhakrishnan, Narayanaguru 

 –Subham—

Tags- Gokhale, Rama Tirtha, Hockey, G Tagore, Ranjit Singh, Kambar, Basavesvara, Radhakrishnan, Narayanaguru 

University of Sydney Museum Pictures-2 (Post No.14,383)

Written by London Swaminathan

Post No. 14,383

Date uploaded in London –  13 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part Two

Roman Inscriptions; Peacock shows Hindu Influence

I have already written about my visit to the Sydney University Museum.

Micro models, Macro models of things, Roman period mummies, stuffed animals, Chinese sculptures, ceramics, Modern paintings ,machines and instruments are arranged in several floors. It was quite with a few visitors when we went there. I took lot of pictures; here I post them in two parts. It is called Chau Chak Wing Museum .

Part Two

–subham—

Tags- University of Sydney museum, Chau Chak Wing Museum , Part 2, Mummy room, Roman mummies, 

விவேகானந்தர் உரைகளை நமக்குத் தந்த ஜே. ஜே. குட்வின்! (Post.14,382)

Written by London Swaminathan

Post No. 14,382

Date uploaded in London –  13 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

J.J. Goodwin 1870 – 1898

சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளை நமக்கு ஆங்கிலத்தில் அளித்த ஜே. ஜே. குட்வின் என்பவரைப் பற்றி பலருக்கும் தெரியாது. அவர்தான் சுவாமிஜியின் ஆங்கில உரைகளை சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டுவந்து நமக்கு நூலாகத் தந்தார் அவரை சுவாமிஜியே தன்னுடைய பொன்னான வார்த்தைகளால் பாராட்டியுள்ளார் .

இதுபற்றி அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியான செய்தியைப் பின்னர்  மஞ்சரி மாத இதழ் வெளியிட்டது ; அத்தோடு ஆங்கில வெப்சைட்டுகளில் கண்ட விஷயங்களின் தொகுப்பு இது.

ஜே. ஜே. குட்வின் கடைசியில் தமிழ்நாட்டில்தான் இறந்தார். அவருடைய கல்லறை உதகமண்டலத்தில் இருக்கிறது . அங்கு ராம கிருஷ்ண மிஷன் இயக்கம் ஒரு சமாதியையும் எழுப்பி அவருக்கு அஞ்சலி  செலுத்தியது ;அதை சுவாமி ரெங்கநா தானந்தா திறந்துவைத்தார் .

விவேகானந்தர் ஆங்கிலத்தில் மிகவும் வேகாமாகப் பேசுவார்; மேலும் அவருடைய பெரும்பாலான உரைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிகழ்ந்தன.அவைகளை குட்வின் சுருக்கழுத்தில் எழுதிக்கொண்டுவந்து பின்னர் முழு நீள  சொற்பொழிவுகளாக நமக்குத் தந்தார்  .

சுவாமிஜி தனது உரைகளை எழுதிவைத்துப் படிப்பவர் அல்ல; மேலும் ஒவ்வொரு உரையிலும் புதிய கருத்துக்களைக் கூறி வந்தார். அவரது உரைகளை நகல் எடுக்க சில சுருக்கெழுத்தாளர்களை மேலை நாட்டு நண்பர்கள் நியமித்தனர்; ஆனால் அவர்களுடைய பணி திருப்தி தரவில்லை.

இறைவன் புண்ணியத்தில் ஜோஷியா குட்வின் 1895-ஆம் ஆண்டு  வந்து சேர்ந்தார் .அவர் இங்கிலாந்திலிருந்து வேலை தேடி அமெரிக்காவுக்குச் சென்றவர். இது தவிர அவர் பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை.

சாதாரண ஒரு மனிதராகத் தோன்றிய அவர் முதலில் சுவாமிஜியின் நண்பராகி, பின்னர் சீடராகி அவருடைய ஆருயிர் நண்பராகவும் மாறினார்; நல்ல திறமையும் ஒருமுகப்பட்ட மனமும் இருந்ததால்  சுவாமிஜியின் பிரசங்கங்களை அதே வேகத்தில் நமக்கு எழுதித்தந்தார் அமெரிக்காவில் சுவாமிஜியின் உரைகளைக் கேட்ட குட்வின் , சுவாமிஜியைப் பின்தொடர்ந்து இங்கிலாந்துக்கு வந்தார். பின்னர் இந்தியாவுக்கும் வந்து அதே பணியைச் செய்தார்

கொழும்பிலிருந்து அல்மோரா வரை என்ற சுவாமி விவேகானந்தரின் சொபொழிவு நூல்  அவரால் உருவாக்கப்பட்டதே

இந்தியாவுக்கு வந்த சிறிது காலத்துக்குப் பின்னர் மெட்றாஸ் மெயில் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர். பொறுப்பினை குட்வின் ஏற்றார்.

ஆயினும் சுவாமிஜி உயிர்வாழ்ந்த காலத்திலேயே குட்வின் உயிர் பிரிந்தது; 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2-ஆம் தேதி டைபாய்டு ஜுரம் கண்டு உதகமண்டலத்தில் இறந்தார். குட்வின் இறந்த செய்தியைக் கேட்டு சுவாமிஜி மிகவும் வருந்தினார்.

சுவாமி விவேகானந்தர் சொற்களில் குட்வினின் புகழை அறிவோம்

குட்வின்னுக்கு நான் பட்டுள்ள நன்றிக்கு கடன் என்னால் எக்காலத்திலும் திருப்பித் தரவொண்ணாதது. என் கருத்துக்களில் எதுவேனும் பயன்தரக்கூடியதாக  எவரேனும் நினைப்பார்களானால் அந்தக் கருத்துக்களின் ஒவ்வொரு சொல்லும்  குட்வினின் தன்னலமற்ற  சலியாத உழைப்பினால் வெளிப்பட்டவை  என்று அறிந்து கொள்ளவேண்டும்.  அவருடைய மறைவினால்  எக்கைப்  போன்ற உறுதிபடைத்த  நண்பரையும் தவறாத பக்தியுடைய சிஷ்யரையும்  களைப்பு இன்னதென்றே அறியாத தொண்டை ரையும்  நான் இழந்துவிட்டேன்.  பிறருக்காக வாழவதற்கென்ற பிறந்த மனிதருள் ஒருவரை இன்று  உலகம் இழந்துவிட்டது

Vivekananda – on the death of Mr J. J. Goodwin May 1898, wrote to Goodwin’s mother.

With infinite sorrow I learn the sad news of Mr. Goodwin’s departure from this life, the more so as it was terribly sudden and therefore prevented all possibilities of my being at his side at the time of death. The debt of gratitude I owe him can never be repaid, and those who think they have been helped by any thought of mine ought to know that almost every word of it was published through the untiring and most unselfish exertions of Mr. Goodwin. In him I have lost a friend true as steel, a disciple of never — failing devotion, a worker who knew not what tiring was, and the world is less rich by one of those few who are born, as it were, to live only for others.

 இத்தோடு சுவாமிஜி நிற்கவில்லை குட்வினின் தாயாருக்கு கவிதை வடிவில் இரங்கல் செய்தியையும் அனுப்பினார்.

இத்தகைய ஒரு பெரியாரின் உடலை உதகையில் எங்கு அடக்கம் செய்தார்கள் என்பதை மிகவும் சிரமப்பட்டு ராமகிருஷ்ணா மடத்தினர் கண்டுபிடித்து அவருக்கு ஒரு சமாதியையும் கட்டி நன்றிக்கடனைச் செலுத்தினார்கள் அந்த சமாதியை 23-4-1967 அன்று ராமகிருஷ்ண மடத்தின் காரியதரிசி சுவாமி ரெங்கநாதானந்தா தலைமை ஏற்று திறந்துவைத்தார்  குட்வின் நினைவினை போற்றும் வகையில் அவர்கள் செய்த பணியால்தான் நாம் இன்று ஒரு பெரியாரை நினைவு கூறமுடிகிறது.

Most of the important lectures delivered by the Swami in America, and in England, and all those given in India from Colombo to Almora, were taken down by Mr. Goodwin’s hand. And when he suddenly passed away from an attack of enteric fever in Ootacamond, the Swami, who chanced to be at the time in distant Almora, was visibly affected. When the sad news reached him he wrote a poem, “Requiescat in Pace“, that for its tenderness, its beauty and depth of feeling makes a sweet and touching appeal.

–SUBHAM—

TAGS-  விவேகானந்தர் உரை,  ஜே. ஜே. குட்வின் , உதகையில் சமாதி

இந்திய நாகரிகத்தில் வானவியல் கண்ட உச்சம்! (Post.14,381)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,381

Date uploaded in London – –13 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளிவந்த கட்டுரை! 

நட்சத்திர மர்மங்கள்! 

இந்திய நாகரிகத்தில் வானவியல் கண்ட உச்சம்! 

ச. நாகராஜன் 

MILKY WAY GALAXY 

உலகில் வானவியலின் உச்சத்தைக் கண்டது இந்திய நாகரிகமே. 

வானத்தை 360 டிகிரிகளாகப் பிரித்ததும், 12 ராசிகளை அதில் அமைத்ததும், 28  நட்சத்திரங்களை அமைத்ததும் இந்திய நாகரிகமே.

அபிஜித் என்ற நட்சத்திரம் காலப்போக்கில் அதன் சுழற்சியினால் இந்த வட்டத்தை விட்டு அகன்றதும் அசுவதி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் மட்டும் எந்தக் கணிப்பிற்கும் உதவும் விதத்தில் நிர்ணயிக்கப்பட்டது.

இதுவே உலகெங்கும் அனைத்து நாகரிகங்களாலும் இன்றளவும் பின்பற்றப்படுவது பிரமிப்பூட்டும் ஒரு விஷயமாகும்.

யஜூர்வேதத்தில் குறிப்பிடப்படும் யாக்ஞவல்க்ய மஹரிஷி சூரிய மண்டலத்தில் 95 வருட சுழற்சியைக் கண்டு அதை அமைத்ததோடு, அது சமச்சீரற்றதாக இருப்பதையும் கண்டார்.

பின்னால் வந்த லகாதர் இன்னும் கிரகங்களின் இயக்கத்தை விரிவாக எழுதினார்.

கல்பம் யுகம் ஆகியவை பற்றி இந்திய வானவியல் மிகத் துல்லியமாகத் தெரிவித்ததோடு அதற்கான வருடங்களையும் நிர்ணயித்துத் தந்தது.

பூமி தோன்றிய காலத்தை இந்திய வானவியல் நிபுணர்கள் நிர்ணயித்ததை கார்ல் சகன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வியப்புடன் நோக்கினர்.

உலகின் அனைத்து நாகரிகங்கள் கூறும் தோற்றத்தை விட இந்திய நாகரிகம் துல்லியமாகக் கூறிய பிரபஞ்ச தோற்றத்தைக் கண்டு வியந்த அவர் நேராக சிதம்பரத்திற்கு வந்து பிரபஞ்ச நடனம் ஆடும் நடராஜரைத் தரிசித்தார்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பேயே சித்தாந்த நூல்கள் தோன்றின. 18 சித்தாந்த நூல்கள் அனைத்து வானவியல் ரகசியங்களையும் வெளியிட்டன.

சூரிய சித்தாந்தம் கிரக இயக்கங்களைக் கூறியதோடு அவற்றை ஒன்றோடு ஒன்று பிணைக்கும் விவரத்தையும் தெரிவித்தது.

பின்னர் வந்த ஆர்யபட்டர் பூமி தன்னைத் தானே சுழல்கிறது என்ற விவரத்தைத் தந்தார்.

கணேசர், கேசவர் ஆகியோரின் நூல்கள் இன்றளவும் நமக்கு வழிகாட்டி வருகின்றன.

பிரம்மகுப்தா, பாஸ்கரா ஆகியோரின் நூல்கள் அராபிய நாட்டின் வழியாக ஐரோப்பாவிற்குச் சென்றன.

வேதங்கள், ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் ஆகியவற்றிலும் பின்னர் வந்த காளிதாஸன் நூல்களிலும் ஏராளமான வானவியல் குறிப்புகள் உள்ளன.

ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் உள்ள நட்சத்திரங்களை பாமரரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கதை ரூபத்தில் அனைத்தும் தரப்பட்டன.

பாலகங்காதர திலகர், காளிநாத் முகர்ஜி உள்ளிட்ட அறிஞர்கள் மிகத் தெளிவாக வானத்தில் ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் சித்தரிக்கும் நட்சத்திரங்களைச் சுட்டிக் காட்டினர்.

இந்த பிரம்மாண்டமான கலைக்களஞ்சியம் எப்படிப்பட்டது என்பதை விளக்க கீழே இரு உதாரணங்களைப் பார்க்கலாம்.

பிரபஞ்சத்தின் தலை நகரம்

மில்கி வே எனப்படும் பால்வீதி மண்டலத்தில் உள்ள அக்கிலா எனப்படும் திருவோண நட்சத்திரம் மஹாவிஷ்ணுவை அதி தேவதையாகக் கொண்டது. மகர ராசியில் உள்ளது இந்த நட்சத்திரத் தொகுதி. அக்கிலா தொகுதியில் மேலே உள்ள மூன்று நட்சத்திரங்கள் கருடனின் தலைப்பகுதியை உருவாக்குகின்றன.

பால்வீதி மண்டலத்தில் உள்ள பத்து நட்சத்திரங்களான ஊர்ஸா மேஜர், பூட்டஸ், செர்பன்ஸ், ஓபியுகஸ், தேன் கூடு M 13, கரோனா பொராவிஸ், லிரா, சிக்னஸ், அக்கிலா, டெல்பினஸ் ஆகியவற்றை இணைத்தால் குடை விரித்த பாம்பான ஆதிசேஷனைப் பார்க்கலாம். இதுவே பிரபஞ்சத்தின் தலை நகரமாகும்.

அர்ஜுனனும் பீஷ்மரும்

அர்ஜுனனுக்கு பல்குனன் என்ற பெயர் உண்டு. பங்குனி மாதம் பல்குனி நட்சத்திரத்தில் உதித்ததால் அவனுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. (பூர்வ பல்குனி மற்றும் உத்தர பல்குனி என்பவை பூரம்  மற்றும் உத்தர நட்சத்திரங்களாகும்.)

மகாபாரத யுத்தம் நடந்த காலத்தில் சப்த ரிஷி மண்டலத்திற்கு சமீபத்தில் மக சட்சத்திரத்தில் வான ரேகை சென்றது. இந்த நட்சத்திர தொகுதிக்கு சிகண்டி மண்டலம் (மயில்) என்று பெயர்.

பூரம், உத்தர நட்சத்திரங்களுக்கு முன்னே வரும் இது தோன்றியவுடன் பீஷ்மர் தனது கொள்கையின் படி சிகண்டியை எதிர்க்காது போரை நிறுத்தி விடுகிறார். அர்ஜுனனின் அம்பால் அவர் வீழ்ந்து படுகிறார். அர்ஜுனன் விட்ட அம்பு நேரே பல்குன நட்சத்திரத்திற்கு நேர் எதிரே 180 டிகிரியில் உள்ள அவிட்ட நட்சத்திரத்தை – பீஷ்மரைக் குறி பார்த்து அடித்தன. பீஷ்மர் அடியுண்டு வீழ்ந்தார். இன்றும் கூட அர்ஜுனனின் பல்குன நட்சத்திரம் வானில் உதித்தால் பீஷ்மரின் அவிட்ட நட்சத்திரம் கீழே மறைவதைக் காணலாம்!

இப்படி நூற்றுக் கணக்கில் ஏராளமான வானவியல் குறிப்புகள் இதிஹாஸ, புராணங்களில் உள்ளன. அவற்றை ஆர்வமுள்ளோர் தொகுத்துப் பார்த்து இன்புறலாம்!

***

University of Sydney Museum Pictures-1 (Post No.14,380)

Written by London Swaminathan

Post No. 14,380

Date uploaded in London –  12 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

london swaminathan in the museum 

I have already written about my visit to the Sydney University Museum.

Micro models, Macro models of things, Roman period mummies, stuffed animals, Chinese sculptures, ceramics, Modern paintings ,machines and instruments are arranged in several floors. It was quite with a few visitors when we went there. I took lot of pictures; here I post them in two parts. It is called Chau Chak Wing Museum .

Part one

–subham—

Tags- University of Sydney museum, Chau Chak Wing Museum

 Pictures of 2500 Indian Stamps!- Part 6 (Post.14,379)

Written by London Swaminathan

Post No. 14,379

Date uploaded in London –  12 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  SIX

I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

The stamps posted here are MINT (not used); so  more valuable.

I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

NEHRU STAMPS,  children’s day, geological congress, Rajaram, world map, Aurobindo, Birds, world map, freedom fighters, Patel, Jai Jawan, Aravindar, Dayananda sarasvati, Abraham Lincoln 

–Subham—

Tags– Pictures ,2500 Indian Stamps, Part 6, Nehru , children’s day, geological congress, rajaram, world map, freedom fighters, Patel, Jai Jawan, Aravindar, Dayananda sarasvati, Abraham Lincoln, Tilak, Birds

மறுபிறப்பு உண்மையே! எட்கர் கேய்ஸ் ஆராய்ச்சியில் தெரிந்தது ! (Post.14,378)

Written by London Swaminathan

Post No. 14,378

Date uploaded in London –  12 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

EDGAR CAYCE, THE MIRACLE MAN OF VIRGINIA  BEACH

புத்தர் , மஹாவீரர் அகியோருக்கெல்லாம் மிகவும் முன்னாள் தோன்றியவை உபநிஷத்துக்கள்  குறிப்பாக சின்னப்ப பையன் நசிகேதனுக்கு யமன் அளித்த பதில் கடோபநிஷதத்தில் உள்ளது ; இறந்த பின்னர் ஆத்மா அழிவதில்லை; மறுபிறப்பு உண்டு என்று யமன் விளக்குகிறான் . எல்லா உபநிஷத்துக்களையும் ஜூஸ் பிழிந்து கொடுக்கும் பகவத் கீதை 2-22; 2-27  இன்னும் தெளிவாகவே கூறுகிறது.

எட்கர் கேய்ஸ்  என்பவர் 1877- ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எழுத்தறிவில்லாத குடியானவர் குடும்பத்தில் பிறந்தார் அவர்க்கு பிறவியிலேயே சில அபூர்வ சக்திகள் இருந்தன வருங்காலத்தை உரைத்தல், ஒருவரின் நோய் நொடியைக் கண்டுபிடித்தல், அந்த நோயினைத் தீர்த்தல் CLAIRVOYANCE முதலியன சில. அவர்க்கு இந்துமதம் பற்றியோ மறுபிறப்பு பற்றியோ ஒன்றும் தெரியாது. மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் ஆயினும் ஒருவரின் உடல் நிலை பற்றி ஆராய்கையில் தன்னை அறியாமலேயே அந்த நோயாளியின் பூர்வ ஜன்மத்தைப் பற்றிப் பேசாத தொடங்கினார் . இவை எல்லாம் பதிவாகி அக்கால பத்திரிக்கைகளிலும் வெளியாகின .

அக்கால பிரபல டாக்டர்களிடம் போயும் வியாதி தீராத நோயாளிகள் பலர் இருந்தனர்; அவர்கள் எட்கர்ட்டிடம் வந்தனர் ; அவர் நோயை சரியாகக் கண்டுபிடித்ததோடு அதற்கு கரணம் பூர்வ ஜென்மத்தில் செய்த வினைகள் என்று பேசத தொடங்கினார்.  முதலில் அவர் மல்லாந்து படுத்துக்கொண்டு ஆழ்ந்த மயக்க நிலைக்குச் HYPNOTIC TRANCE சென்றுவிடுவார்; பின்னர் நோயாளி பற்றிப் பேசுவார் இவரது அபூர்வசக்தியை அறிந்த ஆர்தர் லாமரஸ் Arthur Lammers, என்பவர் இவர் மோளம் ஜாதகங்களையும் அச்சத்தை கொடுக்காத துவங்கினார் . எட்கர் , மயக்க நிலையிலிருந்து திரும்பியவுடன் தான் சொன்ன மறு பிறப்பு பற்றிய விஷயங்களைக் கண்டு வியந்தார்.

நோயாளியின் பூர்வ ஜென்ம தொழில் என்ன, அவருடைய பூர்வ ஜென்ம பெயர் என்ன அப்போது அவர் செய்த வினை எப்படி நோயாக இந்த ஜென்மத்தில் வந்தது என்ற விவரங்களை அளித்தார். அவருக்கு இந்துமத மறுபிறப்பு விஷயங்கள் பற்றி ஒன்றுமே தெரியாததால் அவரால் அதற்குமேல் விளக்கமும் சொல்ல முடியவில்லை

அவர் 1923 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரையுள்ள 22 ஆண்டுகளில் பார்த்த நோயாளிகளின் எண்ணிக்கை 30,000; இதில் மறுபிறப்பு பற்றி சொன்ன நோயாளிகளின் எண்ணிக்கை-2500. எட்கர் 67வயதில் 1945 ஆம் ஆண்டில் இறந்தார்

அவரை வர்ஜீனியா பீச் –சின் அற்புத மனிதர் THE MIRACLE MAN OF VIRGINIA  BEACH என்று மக்கள் அழைத்தனர். இப்போதும் வர்ஜீனியா பீச் என்னுமிடத்தில் அவரால் உண்டாக்கப்பட்ட காகித ஏடுகள் மற்றும் விஷயங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன .

****

மறுபிறப்பு பற்றிய பகவத் கீதை மேற்கோள்கள்

वासांसि जीर्णानि यथा विहाय

नवानि गृह्णाति नरोऽपराणि |

तथा शरीराणि विहाय जीर्णा

न्यन्यानि संयाति नवानि देही || 2-22||

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ‌பராணி |

ததா ஶரீராணி விஹாய ஜீர்ணான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ ||2-22||

ஒருவன் கந்தல் கீறலாய்ப்போன ஆடைகளை அகற்றிவிட்டு, புதிய ஆடைகளை அணிவது போல, மரணத்தின் போது, ​​ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது.

****

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च।

तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|

தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி ||2-27||

பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் பிறப்பதும் தவிர்க்க முடியாதது. இதற்காக நீ வருந்துதல் தகாது. 2-27

–SUBHAM—

TAGS- மறுபிறப்பு , உண்மை, எட்கர் கேய்ஸ்,  ஆராய்ச்சி, வர்ஜீனியா பீச், அற்புத மனிதர்

ஞானமயம் ஒலிபரப்பில் தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்க படனம்

GNANAMAYAM BROADCAST PROGRAMME FOR 13-4 -2025

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

13-4-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London and Gomathy Karthikeyan from Chennai

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Two Shrines at SeyJnalur and Thiruaappadi

***

Bengaluru S Nagarajan speaks on Bhadrachala Ramdas.

****

TAMIL NEW YEAR DAY SPECIALEVENT-

TRADITIONAL PANCHANGAM READING BY SRI RAMESH GURUKKAL.

****

Songs by Sathyarthi Chandrasekaran (Senior NRPSI Tamil Interpreter (12904); Japanese>English Translator;

Online Tutor (Tamil; Japanese; English; South-Indian Classical Music)

&  Other Singers.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர்

திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு – சேய்ஞலூர் மற்றும் திரு ஆப்பாடி ஆகிய இரு தலங்கள் 

*****

பெங்களூர் எஸ். நாகராஜன்

பத்ராசல ராமதாஸர் – பற்றி உரையாற்றுவார்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்க படனம்  BY

ஸ்ரீ ரமேஷ் குருக்கள்

*****

பாடல்கள், கீர்த்தனைகள், கிருதிகள்

பாடுவோர்- சத்யார்த்தி சந்திரசேகரன் ( ஜப்பானிய- தமிழ் – ஆங்கில  மொழிபெயர்ப்பாளர், ஆன் லைன் சங்கீத ஆசிரியர்) மற்றும் பலர்.

****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,13-4-2025, BROADCAST PROGRAMME