சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 7 (last part) Post.14,458)

Written by London Swaminathan

Post No. 14,458

Date uploaded in London –  1 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சம்ஸ்க்ருதத்தில் 650-க்கும் மேலான நாடகங்கள் இருக்கின்றன என்று பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதியுள்ளார்.

“Europe first learned of the old Indian drama from Sir William Jones translation of Kalidasa’s Shakuntala, published in 1789. Something in the nature of a commotion was created among European intellectuals by the discovery and several editions of the book followed. Translations also appeared in German, French Danish and Italian. Goethe was powerfully impressed and he paid a magnificent tribute to Shakuntala.

The stream of Sanskrit drama continued to flow for centuries but after Murari , early in the ninth century, there is a marked decline in the quality. That decline, and a progressive decay, were visible in other forms of life’s activities. It has been suggested that this decline may be partly due to the lack of royal patronage during the Indo -Afghan and Mogul periods and the Islamic disapproval of the drama as an art form, chiefly because of its intimate association with the national religion. But there is little substance in the argument though political changes at the top had some indirect effect. The decline was obvious long before the political changes.

Yet , in spite of all this, it is astonishing the Sanskrit drama continued to be produced right through the mediaeval period and up to recent times. In 1892 appeared a Sanskrit adaptation of Shakespeare’s Midsummer Night’s Dream. Manuscripts of old plays are continuously being discovered. A list of these prepared by Professor Sylvain Levi contained 377 plays by 189 authors. A more recent list contains 650 plays.

—Jawaharlal Nehru in his book Discovery of India.

ஆக உலகிலேயே அ திக நாடகங்களை உடைய பழைய மொழி சம்ஸ்க்ருதம் தான். கிரேக்க மொழியில் புகழ்பெற்ற பழைய நாடகங்கள் இருந்தாலும் எண்ணிக்கையில் குறைவு!

65& 66வால்மீகியும் வியாசரும்

4000 ஆண்டுக்கு (Professor Wilson’s dating; he  translated Rig Veda before Max Muller) முன் வந்த ரிக் வேதத்தில் மட்டும் சுமார் 450 கவிஞர்கள் பாடிய 1028 துதிகள். அவைகளில் 10,552 பாடல்கள். 39, 831 பதங்கள். இதில் 4,32,000 அசைகள் (சில்லபிள்) இருப்பதாக சதபத பிராமணம் கூறும். ஆயினும் இப்போதைய கணக்கில் 3,95,563 அசைகளே காணப்படுகிறது. யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இதற்குப் பின் வந்தன.

உலகிலேயே நீண்ட நூல் என்று இந்தியாவுக்கு வந்த கிரேக்க எழுத்தாளர் குறிப்பிட்ட மஹா பாரதத்தில் நூறாயிரம் ஸ்லோகங்கள்— 2 லட்சம் வரிகள்— சுமார் 10 லட்சம் சொற்கள் உள்ளன. இது வியாசர் எழுதியது என்பதைச் சொல்லத் தேவை இல்லை 

 வால்மீகி ராமாயணத்தில் 24000 பாடல்கள் உள்ளன.

18 புராணங்களில் பல லட்சம் வரிகள் உள்ளன. புராணங்களில் எட்டு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன.

உலகில் எந்த நாட்டு சமய இலக்கியமும் இதன் அருகில் கூட வரமுடியாது.

கி.மு 800 என்று ஒரு கோடு கிழித்தால், பக்கத்தில் பைபிளின் பழைய ஏற்பாடும் கொஞ்சம் சீன மொழிப் பாடல்களும் மட்டும் குட்டையாக நிற்கும். கிரேக்கம், லத்தீன், தமிழ் எல்லாம் அப்பொழுது பிறக்கக் கூட இல்லை (நூல்கள் வடிவில்). பாரசீக மொழியில் உள்ள செண்ட் அவெஸ்தாவின் காலம் கி.மு 600.

கி.மு.800க்கு முன்னர் தோன்றிய சுருதி என்னும் வேதம் என்பதே பெரிய அளவு. அதற்குப் பின்வந்த ஸ்மிருதி எனப்படும் நீதி சாஸ்திரங்கள் வேறு.

பிரபல வரலாற்று ஆசிரியர் கே ஏ நீலகண்ட சாஸ்திரி கூறுவது: சீன மொழியில் 1700 சம்ஸ்கிருத நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டன. இவைகளில் 40 மில்லியன் சொற்கள் உள்ளன. இவை 2 முதல் 11 நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை.

நமது காலத்திலேயே ரமண மகரிஷி சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகங்களை இயற்றியுள்ளார் ; இவ்வளவுக்கும் அவர் சம்ஸ்க்ருதத்தை முறையாகப் படித்தது இல்லை.

****

67.இருபதாயிரம் சுபாஷித பாடல்கள் !

பெங்குவின் வெளியிட்ட, ஜான்ப்ரோ எழுதிய ஸம்ஸ்க்ருதக் கவிதைகள் என்று நூல் கீழ்கண்ட புள்ளி விவரத்தைத் தருகிறது :

சுபாஷித ரத்ன கோச – தொகுத்தவர் வித்யாகார – ஸ்லோக எண்ணிக்கை 1738 – காலம் 11 ஆம் நூற்றாண்டு. 

சுபாஷிதாவலி – வல்லபதேவ- 3527- காலம் 12 ஆம் நூற்றாண்டு. 

சார்ங்கதர பத்ததி – சாரங்கதேவ –  4620- காலம் 14 ஆம் நூற்றாண்டு. 

John Brough, Poems from the Sanskrit Language, Penguin Publications,1968

***

இன்னும் ஒரு புள்ளிவிவரம்:–

சம்ஸ்கிருதத் தனிப்பாடல்கள் /சுபாஷித பாடல்கள்

சுபாஷித ரத்ன கோஷ –1739 பாடல்கள்–223 கவிஞர்கள்

பிரசன்ன சாகித்ய ரத்னாகர–1428 பாடல்கள்,

சதுக்தி கர்ணாம்ருத 2370 பாடல்கள்–485கவிஞர்கள்,

சூக்தி முக்தாவளி 2790 பாடல்கள், 240கவிஞர்கள்,

சரங்கதார பத்ததி 4689 பாடல்கள்–282கவிஞர்கள்

ப்ருஹத் பத்ததி 7586 பாடல்கள்,

வல்லப தேவ சுபாஷிதாவளி 3527 பாடல்கள் 360 கவிஞர்கள்

(இது தவிர சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் 16,000 தனிப் பாடல்கள் இருப்பதாக அறிவேன். ஒருவேளை மேற்கண்ட நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. தனிப் பாடல்கள் மட்டுமே இவ்வளவு !

இரண்டாம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிருதத்தில் எழுதிய 872 ஆசிரியர்களின் பெயர்களை பி.வி.கானே தொகுத்துக் கொடுத்தார். சங்கரர் பெயரில் மட்டும் 272 துதிகள் இருக்கின்றன!

ஸ்தல புராணங்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் யாரும் பட்டியல் இடவில்லை.கி.மு. 1400 முதல் சம்ஸ்கிருத சொற்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. குதிரைப் பயிற்சி தொடர்பான களிமண் பலகை– கியூனிபார்ம் எழுத்துக்– கல்வெட்டுகளில் சம்ஸ்கிருத எண்கள் உள்ளன. கி.மு. 1400ல் மிட்டன்னி ராஜாக்களின் உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.

****

68.அமரசிம்மன்

அமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் தலைப்பு வாரியாக பெயர்களை அடுக்குகிறார் அமரசிம்மன்.

தெய்வங்கள், தேவர்கள், மிருகங்கள் , கிரகங்கள் போன்ற தலைப்புகளில் பெயர்களை அடுக்குகிறார்  இந்த அகராதியில் யமனுக்கு 14 பெயர்கள் சிவனுக்கு 52 பெயர்களும், விஷ்ணுவுக்கு 46 பெயர்களும், பலராமனுக்கு 17 பெயர்களும்,அம்பாளுக்கு 21 பெயர்களும், லெட்சுமிக்கு 14 பெயர்களும், கணபதிக்கு 8 பெயர்களும்,

முருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்,இந்திரனுக்கு 35 பெயர்களும்,

அக்னிக்கு 34 பெயர்களும்,  வருணனுக்கு 5 பெயர்களும், வாயுவுக்கு 20 பெயர்களும், குபேரனுக்கு 17 பெயர்களும், மன்மதனுக்கு 19 பெயர்களும்,  ஜினதேவனுக்கு 18 பெயர்களும், புத்தபகவனுக்கு 7 பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தையும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”.. குருகுலத்தில் சம்ஸ்க்ருதம் பயிலச் சென்றோர் இதை மனப்பாடம் செய்துவைத்திருந்தனர். இதில் மூவாயிரம் வரிகள் உள்ளன ; மூன்று காண்டங்களாகவும் 26 வர்க்கங்களாகவும் பிரிக்கப்பட்ட இதிலுள்ள சொற்களின் எண்ணிக்கை 11,580.

இதற்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே தமிழில் நிகண்டுகள் வந்தன . அதிலும் சம்ஸ்கிருத சொற்கள் மிகுதி!

***

69.சாணக்கியன்

சாணக்கியன் எழுதியதாக பல நீதி வாக்கிய நூல்கள் கிடைத்திருக்கின்றன. அவர் எழுதிய ர்த்த சாஸ்திரம் உலகின் முதல்பொருளாதார நூல் ஆகும் . அதில் அரசாட்சி, படை பலம், வரி விதிப்பு, ஊதியம். உளவுத்துறை, தண்டனைகள் என்று பல விஷயங்களை அலசி ஆராய்ந்து அரசனுக்கு அறிவுரை வழங்குகிறார் 2300ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி நூல் எழுத வேண்டுமானாலால் அந்த  சமுதாயம் அப்போதே மிகப்பெரிய நாகரிக நிலையை அடைந்திருக்க வேண்டும் உலகில் அக்காலத்தில் இதற்கு ஈடு இணையான நூல் வேறு எந்த மொழியிலும் இல்லை.

***

70.மூககவி

இவர் இயற்றிய கவிதையின் பெயர் மூக பஞ்சசதி; மூக பஞ்சசதீயின் முதல் பாகம் ஆர்யாசதகம். ஏனைய நான்கு பகுதிகள் – பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம் , கடாக் ஷசதகம் , மந்தஸ்மித சதகம். மொத்தம் 500 பாடல்கள்

ஸம்ஸ்க்ருத்த்தில் ஒரு ஸ்லோகம் உண்டு :

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்

யத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்தமாதவம்.

யாருடைய கிருபையானது ஊமையைப் பேச வைக்கிறதோ, முடவனை மலையைத் தாண்டச் செய்கிறதோ, அந்தப் பரமானந்த மாதவனை நான் வணங்குகிறேன்.

பல ஊமைகள் தெய்வ சந்நிதியில் வாக்கு வண்மை பெற்றதை மூககவி, குமரகுருபரர் போன்றோர் வாழ்க்கையில் அறிகிறோம் .

****

71.விசாகாதத்தர்

சாணக்கியரின் பெருமையை  நாடக ரூபத்தில் சொல்லும் நூல் முத்ரா ராக்ஷஸம் . இதை சம்ஸ்க்ருதத்தில் எழுதியவர் விசாகதத்தர். பிராமணர்களை அவமதித்த நந்த வம்சத்தை வேரோடு சாய்ப்பேன் ;அதுவரை குடுமியை முடியமாட்டேன் என்று வீர சபதம் செய்து அதை நிறைவேற்றியதால் சாணக்கியரின் பெருமை இன்றுவரை நீடிக்கிறது ;அவரது அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல் ஆகும்.

விசாகாதத்தர் பெண்களை புகழும் அழகு அந்தக் காலத்தில் பெண்கள் இருந்த உயர் நிலையைக் காட்டுகிறது மனைவியை அறிமுகப்படுத்தும் காட்சியில் “பெண்ணை நீயே வாழ்கைக்கு வழிகாட்டிகுடும்பம் நடத்தும் கலையின் தலைவி குடும்பத் தலைவிகுணவதிஇல்லத்தில் உறையும் தெய்வம்ஆன்மீக உண்மைகளை அறிய உதவும் உத்தமிஅறிவும் அனுபவமும் ஒருங்கே வாய்ந்த பெண் மணி” என்று புகழ்கிறார் .

முத்ரா ராக்ஷஸம் பற்றி பி ஆர் ராஜாராம் மொழிபெயர்த்த இருபது பக்க கட்டுரை  1964 -ஆம் ஆண்டு மஞ்சரி மாத இதழில் வந்திருக்கிறது . இது மராட்டிய பத்திரிக்கைக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு ;நல்ல வரை படங்களும் உள்ளன.

***

From Wikipedia

இந்நூல் 1950 ஆம் ஆண்டில் இ. கே. நடேசசர்மா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மறுபதிப்பு 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது[1].

பரிதிமாற் கலைஞர் எனும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், இந்நூலை முத்திராராட்சம் எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்,

***

72 % 73 சரகர் சுஸ்ருதரின் மருத்துவ சம்ஹிதைகள்

சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட சரக சம்ஹிதையும் சுஸ்ருத சம்ஹிதையும் உலகில் முதலில் எழுதப்பட்ட விரிவான மருத்துவ நூல்களாகும்

இவைகளில் டாக்டர்களுக்குப் பயன்படும் மருத்துவ, மூலிகைக் குறிப்புகளைத் தவிர பொதுவான ஆரோக்கிய விஷயங்களும் மருத்துக்கருக்கு இருக்கா வேண்டிய குணங்கள் பற்றியும் உள்ளன.

74.ஷ்யாமிளகா

ஓரங்க நாடகம் பாதத்தாடித்தகா எழுதியவர் இவர். அங்கதம், கிண்டல் நிறைந்த நாடகம் காலம் ஐந்தாம் நூற்றாண்டு 

***

75.வல்லனா

பாலா வம்ச அரசர்களின் காலத்தில் வாழ்ந்த இவர் கவிதை எழுதியுள்ளார்; காலம் ஒன்பதாம்  நூற்றாண்டு  .

***

76.வத்ஸபட்டி

இவருடைய கவிதை மாண்டசோரி கல்வெட்டில் இருக்கிறது காலம் 436 CE.

***

77.வித்யா

இந்தப் பெண் கவிஞரின் பாடல்கள் கவிதைத் தொகுப்பு நூல்களில் மட்டும் காணப்படுகிறது . காலம் எட்டாம் .

****

78.விகடனிதாம்பா

கவிதை இயல் நூல் எழுதிய ராஜசேகரா வாலும் பாராட்டப்பட்ட புலவர். காலம் ஒன்பதாம்

****

79.யசோதர்மன்

கன்னோசியிலிருந்து ஆண்ட எடடாம் மன்னர். அவர் எழுதிய நாடகத்தின் பெயர் ராம அப்யுதயா.

***

80.யோகேஸ்வர

பாலா வம்ச ஆட்சிக்காலத்தில் கவிதை இயற்றிய புலவர். அபினந்தா என்பவர் இவரைப் பாராட்டியதால் இவரது பெருமை நன்கு தெரிகிறது.

**** 

81.கல்வெட்டுக் கவிதைகள்

மாண்டசோர் கல்வெட்டில், வத்ஸபட்டியின் நீண்ட கவிதை உள்ளது குமாரகுத்தார் காலத்திய கவிதை. லாட தேச நெசவாளர்களை புகழ்கிறது .

சங்கு நாராயண தூண் ஸ்துபிக் கல்வெட்டு , நேபாளம்

நேபாள நாட்டிலுள்ள இந்த நீண்ட கவிதைக் கல்வெட்டு மஹாராணி ராஜ்யவதியை லெட்சுமி தேவி என்று புகழ்கிறது ;காலம் 464 CE

ஜாவா கல்வெட்டுINDONESIA ; மேர்பாபு பாறைக் கல்வெட்டு

இது வசந்த காலத்தைப் புகழும் நான்கு வரி  பாடல் கல்வெட்டு.

***

82.அண்மைக்காலத்தில் சம்ஸ்க்ருத மழை பொழிந்த சதாசிவ பிரம்மேந்திராள் நாராயண தீர்த்தர்நாராயண பட்டதிரி போன்ற நூற்றுக் கணக்கான பெரியோர்கள் சம்ஸ்க்ருதம் வாழும் மொழி என்பதைக் காட்டியுள்ளார்கள் ; அவர்களுடைய பாடல்கள் இன்றும் பஜனைகளில் ஒலிக்கின்றன. பாகவத சப்தாஹம், கேரளத்தில் மிகவும் சர்வ சாதாரணம். அங்கு பாகவத முற்றோதல் சம்ஸ்க்ருதத்தில் நடைபெறுகிறது!

சுமார் இரண்டாயிரம் ஸம்ஸ்க்ருதக் கவிஞர்களின்  பெயர்களை நாம் அறிகிறோம். நான் சொன்ன சுமார் 80 கவிஞர்கள் ஒரு சாம்பிள்தான் ; உணவு விடுதியில் சாப்பிடப்போனால் ஸ்டார்ட்டர் என்று சில பண்டங்கள் வரும்; நான் சொன்னது ஸ்டார்ட்டர். மெயின் டிஷ் — முழு உணவு — வேண்டுவோர் கட்டாயம் சம்ஸ்க்ருதம் படிக்க வேண்டும் அல்லது தமிழில் வந்த மொழிபெயர்ப்புகளை வாங்கிப் பயன் அடையவேண்டும் . இந்துக்கள் ஸம்ஸ்க்ருதத்தைப் பயிலாவிடில் வெள்ளைக்காரன் பிதற்றியது எல்லாம் உண்மை என்றாகிவிடும்!

—subham—

Tags-  சாணக்கியன், அர்த்த சாஸ்திரம் ,அமரசிம்மன் ,மூக கவி, கல்வெட்டில் ஸம்ஸ்க்ருதக் கவிதைகள், சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 7

Leave a comment

Leave a comment