
Post No. 14,466
Date uploaded in London – 3 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உடல்நலத்தைப் பேணுவது எப்படி? குருபாததாசர் அறிவுரை
குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-5
(குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 1 TO 4 மார்ச் மாதம் வெளியாகின ; நாலாவது கட்டுரை டாக்டர் யார்? புலவர் யார்? அறிஞன் யார்? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -4 (Post.14,293)
என்ற தலைப்பில் 12 March 2025 ஆம் தேதி இந்த பிளாக்கில் வந்தது. இனி மேலும் சில பகுதிகளைக் காண்போம்).
PART 5
உடல்நலத்தைப் பேணுவது எப்படி? குருபாததாசர் அறிவுரை

குமரேச சதகம் இயற்றிய குருபாததாசர் நல்ல ஆரோக்கிய வாழ்வுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார்; இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் செப்பியது இன்றும் பொருந்தக்கூடிய அறிவுரைகள்தான்!
19. உடல்நலம்
மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,
மறுவறு விரோசனந்தான்
வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்
வாரத் திரண்டுவிசையாம்
மூதறிவி னொடுதனது வயதினுக் கிளையவொரு
மொய்குழ லுடன்சையோகம்
முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
முதிரா வழுக்கையிள நீர்
சாதத்தில் எவளாவா னாலும்பு சித்தபின்
தாகந் தனக்குவாங்கல்
தயையாக உண்டபின் உலாவல்லிவை மேலவர்
சரீரசுகம் ஆமென்பர்காண்
மாதவகு மாரிசா ரங்கத்து தித்தகுற
வள்ளிக்கு கந்தசரசா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
என்ன சொல்கிறார் என்று விளக்குகிறேன்
1 . பெண்களுடன் , அதாவது மனைவியுடன் உடலுறவு கொள்வது மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே இருக்க வேண்டும்.
2. அப்படிப்பட்ட மனைவி கரிய கூந்தலுடன் வயதில் இளையவராக இருக்க வேண்டும்¬
இதில் கரிய கூந்தல் என்பதை அடிக்கோடிட வேண்டும். ஏனெனில் பல பெண்கள் நரைத்த முடியை மறைக்க சாயம் பூசுவது– அதாவது டை அடிப்பது இப்போது அதிகம் உளது . யுவதி போல தோன்றுவர்; அப்படி இல்லை என்பதே உண்மை.
3.வயிற்றிலுள்ள அசுத்தங்களை அகற்ற வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து சாப்பிட வேண்டும் ; இந்தக் காலத்தில் இது அறவே இல்லை.
4.வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்; இதுவும் நகர்ப்புறங்களில் அழிந்துவிட்டது .
சனி நீராடு என்று ஆத்திச் சூடியில் அவ்வையார் கூறினார் . இதற்கு அந்தக் காலத்தில் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக்குளி என்று பொருள் எழுதினார்கள் . இப்போது சனை: என்ற சம்ஸ்க்ருத பதத்தைப் பயன்படுத்தி மெதுவாக செல்லும் ஆற்றில் குளி என்றும் சன்னி/ ஜன்னி / குளிர்ச்சி என்று ஸம்ஸ்க்ருதச் சொல்லை பயன்படுத்தி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றும் புதிய விளக்கம் சொல்கிறார்கள் தமிழில் ச என்னும் எழுத்திலோ ஜ என்னும் எழுத்திலோ சொற் கள்வர முடியாது என்பது தொல்காப்பியவி தி.
குருபாததாசர் எழுதியது என்னெவென்றால் ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில் தலைக்கு குளிக்க வேண்டும் – தைலம் தேய்த்து- பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளிக்க வேண்டும் என்பதே .
கேரளத்தில் வசிப்போர் தினமுமே தேங்காய் எண்ணெய்யைத் தடவிக்கொண்டு குளிப்பதால் அவர்களின் முடிகருப்பு நிறத்தில் இருக்கிறது .
5.வெப்ப நாடான இந்தியாவில் வாழ்வோர் தினமும் கெட்டித் தயிர், மோர், உருக்கிய நெய், வழுக்கை உள்ள இளநீர், காய்ச்சிய பால் ஆகியவற்றையும் தினசரி உணவில் சேர்க்க வேண்டும். மேலை நாடுகளில் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள்; தண்ணீர் அல்லது அதுபோன்ற ஆரோக்கியமான திரவம் (பழ ரசம் போன்றவை) உடலுக்குள் சென்றாலும் சரிதான்.
6.அடுத்து அவர் சொல்லுவது எவ்வளவு தாகம் இருந்தாலும் உணவைச் சாப்பிட்டு முடித்த பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்பதாகும்; இதில் விஞ்ஞான் உண்மையும் இருக்கிறது மள மளவென்று தண்ணீரைக் குடித்து அரை வயிற்றை நிரப்பிவிட்டோமானால் உணவுப் பண்டங்கள் சாப்பிடுவது குறைந்து விடும்; ஆனால் சிறிது நேரத்தில் பசி எடுக்கத் துவங்கிவிடும் ஆகையால் சாப்பிட்டு முடித்தவுடன் நீரை அருந்துக!.
மோரின் சிறப்பு பற்றி முன்னரே கண்டோம் .
ஒரு கவி மோரின் பெருமையைப் புகழ்கையில் , அது இந்திரனுக்கும் கூட கிடைக்காது என்கிறார் .
அம்ருதம் துர்லபம் ந்ருணாம் தேவானாம் உதகம் ததா
பித்ரூணாம் துர்லபஹ புத்ரஹ தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்
பொருள்:-
மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பது அரிது.
தேவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது அரிது.
தந்தையருக்கு நல்ல மகன்கள் கிடைப்பது அரிது.
இந்திரனுக்கு மோர் கிடைப்பது அரிது.
உணவில் மோர் சேர்ப்பதன் அவசியத்தை கவிஞர் இப்படி வலியுறுத்துகிறார் போலும்.

7.கடைசியாக அவர் சொல்லுவது இன்று மிக மிக முக்கியமானதாகிவிட்டது மேலை நாடுகளில் Apple Watch ஆப்பிள் வாட்ச்சைக் கட்டிக்கொண்டு – தினமும் பத்தாயிரம் ஸ்டெப் 10,000 Steps per day நடக்கும் பைத்தியங்களைப் பார்க்கலாம் ; பைத்தியம் என்று சொல்லக்கூடாதுதான் . அதாவது அவர்கள் மன அமைதியுடன் நிதானமாக உலவப்போக வேண்டும் என்று குமரேச சதகம் சொல்லுவதே சரி. கடற்கரையில், பூங்காவில், புழுதி இல்லாத மைதானத்தில், உலாவுவது Jogging, Running ஜாக்கிங் போவதைவிட மேல்தான்; இதை 200 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பாடலில் குருபாததாசர் முத்ததாய்ப்பாக வைத்திருப்பது வாக்கிங் Walking பற்றிய சிறப்பினை உணர்த்துகிறது.
—Subham—
Tags- உடல்நலம் , குருபாததாசர், குமரேச சதகம், கட்டுரை 5