அவர்கள் நடந்து வந்த பாதை; சொல்லும் கீதை! (Post No.14,469)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,469

Date uploaded in London – –4 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அவர்கள் நடந்து வந்த பாதை; சொல்லும் கீதை!

ச. நாகராஜன்

பெரும் ரிஷிகள், மகான்கள், தலைவர்கள், கவிஞர்கள், சாதனையாளர்கள் ஆகியோர் அனுபவித்து நடந்து வந்த பாதையைப் பார்க்க ஆவலாக இருக்கிறதா, அந்தப் பாதை சொல்லும் கீதை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

அவர்கள் பாதையில் நாமும் நடைபோட்டு நல்லனவற்றைப் பெறலாமே என்ற ஆசை நல்ல ஆசை தான்!

இதோ பார்க்கலாமே அவர்கள் வந்த பாதையையும் பாதை சொல்லும் கீதையையும்!!

வியாசர்

பரோபகாரம் புண்யம் பாபாய பரபீடனம்

(மற்றவருக்கு உதவி செய்வதே புண்ணீயம்

மற்றவருக்குத் தீங்கு செய்வதே பாவம்)

ஆதி சங்கரர்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூடமதே!

(கோவிந்தனைத் துதி கோவிந்தனைத் துதி கோவிந்தனைத் துதி மட நெஞ்சே!)

பதஞ்சலி முனிவர்

யோக: சித்த விருத்தி நிரோத:

(மனம் அலைபாய்வதை நிறுத்துவதே யோகம்)

அரிச்சந்திரன்

சத்யமேவ ஜயதே! (சத்தியமே வெற்றி பெறும்)

புத்தர்

மனதைச் சாந்தமுறச் செய்; ஆன்மா பேசும்!

திருஞானசம்பந்தர்

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம்  நமச்சி வாயவே

அப்பர்

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

மாணிக்கவாசகர்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

சுந்தரர்

மன்னே மாமணியே அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

திருமூலர்

ஒன்றே குலம் ஒருவனே தேவனும்

சேக்கிழார்

உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

கம்பர்

அலகிலா விளையாட்டுடையான்

அவன் தலைவன்

அன்னவர்க்கே சரண் நாங்களே

தாயுமானவர்

பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே

அருணகிரிநாதர்

மொழிக்குத் துணை முருகா என்னும் திருநாமம்

சிவவாக்கியர்

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

அபிராமி பட்டர்

நல்லன எல்லாம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

வள்ளலார்

சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்

சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்

திருமங்கை ஆழ்வார்

நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்!

ஆண்டாள்

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்

உனக்கே நாம் ஆட்செய்வோம்!

பகவான் ரமண மஹரிஷி

‘நான் யார்’ என்று விசாரம் செய்து அறி!

ஶ்ரீ ஷீர்டி சாயிபாபா

ச்ரத்தா சபூரி (சிரத்தையும் பொறுமையும்)

ஶ்ரீ சத்யசாயி பாபா

மை லைஃப் இஸ்  மை மெசேஸ் – MY LIFE IS MY MESSAGE! (என் வாழ்வே எனது உபதேசம்)

கணியன் பூங்குன்றனார்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

மஹாத்மா காந்தி

அஹிம்ஸா பரமோ தர்ம: (அஹிம்சையே உயர்ந்த தர்மம்)

ஸ்வாமி விவேகானந்தர்

எழுமின்! விழிமின்! குறிக்கோளை அடையும் வரை தளராது செல்மின்!

மகாகவி பாரதியார்

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திருநாடு

பங்கிம் சந்திரர்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம் சஸ்ய சியாமளாம் மாதரம்

வந்தே மாதரம்!

சாக்ரடீஸ்

உன்னையே நீ அறிவாய்!

ஐன்ஸ்டீன்

மனோ கற்பனையே அனைத்தும் தரும்

டென்சிங்

ஏறு ஏறு ஏறு உயரத்தில் ஏறு

ப்ரூஸ் லீ

பயிற்சி செய்! பயிற்சி செய்!! பயிற்சி செய்!!!

***

Leave a comment

Leave a comment