Post No. 14,488
Date uploaded in London – 8 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் நரகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன ; நிரையம் என்றால் நரகம்; இந்தச் சம்ஸ்கிருதத் சொல்லை அவைகள் பயன்படுத்துகின்றன. தாயின் மனம் நரகம் போல சித்திரவதை செய்கிறது என்று காதல் வயப்பட்ட பெண்கள் புலம்புகின்றனர்.
சங்க இலக்கியத்தில் நிரையம்/ நரகம் வரும் இடங்கள் :
அகநானூறு -95-12;
நற்றிணை -236-5; 329-1;
குறுந்தொகை -258-6; 292-6;
பதிற்றுப்பத்து -15-4; 15-31
( புதிய விளக்க உரைகள் இதை கொடிய என்று எழுதி மழுப்பிவிடுகின்றன. பழைய உரைகளிலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் நரகம்/ HELL என்றே காணப்படுகிறது).
ஆனந்தவிகடன் தமிழ் அகராதிப்படி நிரையம் என்பதற்கு நரகம் என்ற ஒரே அர்த்தம்தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அளறு என்பதற்கு சேறு , குழம்பு , நரகம் முதலிய பொருள்களும் உண்டு. வள்ளுவர் நரகம் என்ற பொருளில் மட்டும் பயன்படுத்தியுள்ளார்.
****
அளறு / நரகம் HELL என்பது திருக்குறளிலும் சங்கஇலக்கியத்திலும் வருகிறது
மதுரைக்காஞ்சி- 45
பரிபாடல் – 2-47; 6-18; 8-93; 10-73; 12-97
பதிற்றுப்பத்து- 27-13
****
நிரையம்
புத்தமத சம்ஸ்க்ருத நூல்களும் பாலி மொழி நூல்களும் இதை பயன்படுத்துகின்றன ; அவற்றின் பெயர்கள் –
1.மஹாவஸ்து – – சம்ஸ்க்ருதம் , பிராகிருதம், பாலி
2.அஸ்வகோஷர் எழுதிய புத்தசரிதம் – சம்ஸ்க்ருதம்
3.பலர் எழுதிய லலிதவிஸ்தாரம் – சம்ஸ்க்ருதம்
இவை அனைத்தும் சங்க இலக்கியத்தை விட அல்லது சமகாலத்திய நூல்கள். அதாவது 2000 ஆண்டுகள் பழமை உடைத்து.
மனு ஸ்ம்ருதி போன்ற நூல்கள் 21 நரகங்களின் பெயர்களை மட்டுமே சொல்லியது; அவற்றை விளக்கவில்லை. ஆனால் புத்த மத நூல்கள் அங்கே என்ன கொடிய தண்டனைகள் அளிக்கப்படுகின்றன என்று விளம்புகின்றன. இவை நமது புராணங்களில் உள்ள விஷயங்களே ; இவைகளைப் பார்க்கையில் வெள்ளைக்காரர்கள் புராணங்களுக்குக் கொடுத்த தேதி எல்லாம் தவறு; ஹிந்து புராணங்கள் இந்த புத்த மத நூல்களுக்கும் முந்தையவை என்பது விளங்கும். ஏனெனில் பெரும்பாலும் சம்ஸ்க்ருதப் பெயர்களையே இவை பயன்படுத்துகின்றன; அல்லது கொச்சையான சம்ஸ்க்ருதத்தில்– அதாவது பிராகிருதம் பாலி மொழிகளில் — இருக்கின்றன ; பிராகிருதம், பாலி என்பன சம்ஸ்க்ருத மொழியின் பேச்சு வழக்கு; அதாவது கொச்சை மொழி ; புத்தர் ,அசோகர் போன்றவர்கள் இந்த பாலி மொழியையும் சமணர்கள் பிராகிருத மொழியையும் பயன்படுத்தினர் .
ஆகவே நரகத்தை வைத்து ஆராய்ச்சி செய்தால் புராணங்களின் பழமை விளங்கும்.
***
புத்த மதத்தில் நரகங்கள் எண்ணிக்கை அதிகம்!
எட்டு பெரிய நரகங்களும் அவை ஒவ்வொன்றுக்கும் பதினாறு துணை/ குட்டி நரகங்களும் இருப்பதாக அவை வருணிக்கின்றன.
நரகத்தில் சித்திரவதை
தலை கீழாகத் தொங்கவிட்டு வெட்டுதல், தீயில் வாட்டுதல் ;
அக்கினி போல தகிக்கும் அனலில் வெந்து தாகத்துக்குத் தண்ணீரைத் தேடித் தேடி, இருட்டில் நிழல் என்று நுழைத்தால் , அங்கு கத்தி போலுள்ள இலைகளால் வெட்டப்படுத்தல்
அங்கம் அங்கமாக வெட்டப்படுத்தல்; கத்தியால் குத்தப்படுத்தல்;
புத்தமத நூல்கள் குளிர் நடுக்கும் நரகம், வெயில் தகிக்கும் நரகம் என்று இரண்டு வகைகளாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் எட்டு நரகங்கள் இருப்பதாக இயம்புகின்றன.
எட்டு பெரிய நரகம் பதினாறு துணை நரகம் பற்றி மஹாவஸ்து நூல் எடுத்துரைக்கிறது.
***
அஸ்வகோஷர் புத்த சரித நூலில் சொல்வதாவது ,
கர்மவினைக்கு ஏற்ப வண்டி மாடாகவோ, ரதத்தின் குதிரையாகவோ அல்லது யானையாகவோ பிறந்து குச்சியாலும் சாட்டையா லும் அ ங்குசத்தாலும் அடிபட்டு ரத்தக் காயங்களை அடைவர் ;
எரியும் நிலக்கரியில் வாட்டப்படுவர்; அல்லது இரும்புச் சட்டியில் வதக்கப்படுவார்கள்.
தபன், பிரதபன் நரகங்களில் வதைக்கப்படுவர்; சுடப்படுவர். சஞ்சிவ நரகத்தில் தலை கீழாகத் தொங்கவிட்டு வெட்டப்படுவார்கள்.
சில தீயவர்களை, நாய்கள் கடித்து விழுங்கும். அந்த நாய்களுக்கு இரும்புப் பற்கள் கத்தி வடிவத்தில் இருக்கும் .
சிறிய நரகங்களில் சாம்பலாலும் தீப்பொறிகளாலும் தீயோர்கள் சுடப்படுவார்கள். கால சூத்ர நரகத்தில் கம்பியினாலான சாட்டைகளால் அடிக்கப்படுவார்கள்.
இவைகளையெல்லாம் அவர் 2200 ஆண்டுப் பழமையான மஹாவஸ்து நூலிலிருந்து எடுத்துரைக்கிறார்.

Asvaghosa and His Times, Sarla Khosla, 1986 with my inputs.
—subham—
Tags- சங்க இலக்கியத்தில், நரகம், புத்த மதத்தில், கொடிய நரகம் , நிரையம், அளறு, அஸ்வகோஷர், லலிதவிஸ்தாரம், மஹாவஸ்து