பரஞ்சோதி முனிவரின் சொற்சிலம்பம்-2 (Post No.14,513)

Written by London Swaminathan

Post No. 14,513

Date uploaded in London –  14 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரஞ்சோதி முனிவரின் சொற்சிலம்பம்-2

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-2

ஆறு என்ற சொல்லினை வைத்து விளையாடுகிறார்

அறு கால் பீடத்து உயர் மால் ஆழி கடைந்த அமுதை                                       அரங்கேற்று மா போல்

அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை                                               அரும் தமிழால் பாடி

அறுகால் பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில்                                                  அமரர் சூழும்

அறுகால் பீடத்து இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கு                                                ஏற்றி னானே.- திருவிளையாடல் புராணம் 

பொருள்

ஆதிசேஷனாகிய சயனத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலானவர் திருப்பாற்கடலைக் கடைந்து அதிலுள்ள அமிர்தத்தை அரங்கேற்றிய முறைமை போல் , பெண் வண்டுகள் இசை பாடும்படி யான சோலைகளையுடைய திருவாலவாயின் மான்மியத்தை அரிதாகிய தமிழினாற்பாடி , அருகினாற் பெருமையோங்கிய திருமுடியுடையராகிய சொக்கநாதசுவாமி சந்நிதியில் தேவர்கள் சூழ்ந்திருக்கும் அறுகால்  பீடத்திலிருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கேற்றினார் .

(இந்த உரை ந மு வேங்கடசாமி நாட்டாரால் வழங்கப்படவில்லை ஏன் என்று தெரியவில்லை )

இதை ஆறுகால் உடைய தேனீ அருகம் புல்,  மீனாட்சி கோவிலில் உள்ள ஆறுகால் மண்டபம் என்ற பொருளில் பரஞ்சோதி முனிவர் பயன்படுத்தியுள்ளார்

*****

பூகோள உருவகம்

அடுத்தபடியாக புவியியலைப் பயன்படுத்தி ஒரு செய்தி அளிக்கிறார் ;   இதன் மூலம் அக்காலத்தில் அட்லாஸ் ATLAS என்னும் வரைபடம் இருந்ததை அறிகிறோம். ஏனெனில் பின்னால் வரும் ஒரு செய்யுளிலும் இத்தகைய பூகோள உருவகம் வருகிறது 

மாய வன்வடி வாயது வைய மாலுந்திச்

சேய பங்கய மாயது தென்னனா டலர்மேற்

போய மென்பொகுட் டாயது பொதியமப் பொகுட்டின்

மேய நான்முக னகத்தியன் முத்தமிழ் வேதம்.

பொருள்

புவியானது திருமாலின் வடிவம் போன்றது;  (அப்புவியின்

ஒருகூறாகிய) பாண்டியன் நாடானது, அத்திருமாலின் சிவந்த உந்தித் தாமரை போன்றது; (அந்நாட்டின்) பொதியின் மலையானது. அத்தாமரை மலர்மேல் நீண்ட  மெல்லிய கொட்டை போன்றது; (அம்மலையின்கண்) அகத்திய முனிவன்,  அக்கொட்டையிலிருக்கும் நான்முகன் (போல்வான்); (அம் முனிவன் போற்றி வளர்த்த) மூன்று பிரிவினதாகிய தமிழானது, (அந்நான்முகன் அருளிய) வேதம் (போன்றது)

அகத்தியன் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து வீற்றிருந்து தமிழறிவுறுத்தியும், தொல்காப்பியன் முதலிய பன்னிருவர்க்குத் தமிழறிவுறுத்தியும், அகத்தியமென்னும் முத் தமிழிலக்கணத்தை அருளிச்செய்தும் பல்லாற்றானும் தமிழை வளம்படுத்திச் செந்தமிழ்க் குரவனாகத் திகழந்தமையின், தமிழை இவன் வெளியிட்டானாக உபசரித்துக் கூறுவர். அகத்தியற்கு முன்னும் தமிழ் உயரிய நிலையிலிருந்ததென்பதே ஆராய்ச்சியாற் பெறப்படும் உண்மை.

*****

சிவன்தான் தமிழையும் சம்ஸக்ருதத்தையும் உண்டாக்கினான் என்று பரஞ்சோதி முனிவர்சிவ ஞான முனிவர்பாரதியார் முதலியோர் பாடியிருப்பதை முதல் கட்டுரையில் கண்டோம்.

****

இன்னும் ஒரு உருவகம்

நாவலர்பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்

உரை

  திருநகரச் சிறப்பு

மங்க லம்புனை பாண்டிநா டாகிய மகட்குச்

சங்க லம்புகை தோளிணை தடமுலை யாதி

அங்க மாம்புறந் தழுவிய நகரெலா மனைய

நங்கை மாமுக மாகிய நகர்வளம் பகர்வாம்.

     (இ – ள்.) மங்கலம்புனை – பல நலன்களையும் பூண்ட,

பாண்டி நாடு ஆகிய மகட்கு – பாண்டிநாடு என்னும் மங்கைக்கு,

புறம் தழுவிய நகர் எலாம் – (அதன்) புறத்தே சூழ்ந்த நகரங்கள்

அனைத்தும்சங்கு அலம்பு கை – வளை ஒலிக்குங் கைகள்தோள்

இணை – இரண்டு தோள்கள்தடம்முலை – பெரிய கொங்கைகள்,

ஆதி அங்கம் ஆம் – முதலிய உறுப்புக்கள் ஆகும்அனைய

நங்கை – அங்ஙனமாய நங்கையின்மாமுகம் ஆகிய நகர்வளம் –

பெருமை பொருந்திய முகமாகிய மதுரை நகரின் சிறப்பினை,

பகர்வாம் – கூறுவாம் எ – று.

கொங்கை யேபரங் குன்றமுங் கொடுங்குன்றுங் கொப்பூழ்

அங்க மேதிருச் சுழியலவ் வயிறுகுற் றாலஞ்

செங்கை யேடக மேனியே பூவணந் திரடோள்

பொங்கர் வேய்வனந் திருமுக மதுரையாம் புரமே.

     (இ – ள்.) (அந்நங்கைக்கு) கொங்கை – கொங்கைகள்பரங்

குன்றமும் கொடுங்குன்றும் – திருப்பரங்குன்றமும் திருக்கொடுங்

குன்றமுமாகும்கொப்பூழ் அங்கம் – உந்தியாகிய உறுப்புதிருச்சுழி

யல் – திருச்சுழியலென்னுந் தலமாகும்அவ்வயிறு – ழேகிய வயிறு,

குற்றாலம் – திருக்குற்றாலமென்னுந் தலமாகும்செங்கை –

சிவந்தகைஏடகம் – திருவேடகமென்னுந் தலமாகும்மேனி –

உடல்பூவணம் – திருப்பூவண மென்னுந் தலமாகும்திரள்தோள் –

திண்ட தோள்கள்பொங்கர் வேய்வனம் – சோலைகள் சூழ்ந்த

வேணுவனமென்னுந் தலமாகும்திருமுகம் – அழகிய முகம்மதுரை

புரம்ஆம் – மதுரை யாகிய நகரம் ஆகும் எ – று.

     அந்நங்கைக்கு என்பது வருவிக்க. கொடுங்குன்று –

பிரான்மலை. வேய்வனம் – திருநெல்வேலி. 

–subham—-

Tags- பரஞ்சோதி முனிவர், சொற்சிலம்பம், உருவகம், பூகோளம், புவியியல், அட்லஸ், திருவிளையாடல் புராணம்ஆராய்ச்சிக் கட்டுரை-2

Leave a comment

Leave a comment