தமிழ் மொழியின் மந்திர சக்தி -4 (Post No.14,523)

Written by London Swaminathan

Post No. 14,523

Date uploaded in London –  17 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-4

தமிழ் மொழிக்குள்ள மந்திர சக்தி பற்றி பரஞ்சோதி முனிவர் சொன்ன செய்தி திருவிளையாடல் புராணத்தில் உள்ளது ; ஒவ்வொன்றுக்கும் பின்னல் ஒரு கதையும் உளது.

தொண்டர் நாதனைத் தூது இடை விடுத்ததும் முதலை

உண்ட பாலனை அழைத்தது எலும்பு பெண் உருவாகக்

கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்

தண் தமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். —திருவிளையாடல் புராணம்

பரஞ்சோதி முனிவருக்குத் தமிழ் மொழி மீது தீராக்காதலுண்டு; இதனால் தமிழ் மொழிக்கு நிகரான மொழி வேறு உண்டா? என்று சவால் விடுக்கிறார் . தமிழின் மந்திர சக்தியைத் தேவாரமும் திருவாசகமும் காட்டியபடி அவர் பாடினார்

****

TIME TRAVEL, PARALLELUNIVERSE, SPACE TRAVEL , ALBERT EINSTEIN

சுந்தரர், சம்பந்தர் தொடர்பான இந்த இரண்டு சம்பவங்களிலும் டைம் டிராவல் எனப்படும் காலப்cபயணம் , பாரலல் யூனிவெர்ஸ் எனப்படும் இணை உலகம்  கருத்துக்கள் , விஞ்ஞான உண்மைகள் இருப்பதை முன்னரே விளக்கியுள்ளேன் . மேலும் நம்மாழ்வார் பாசுரத்தில்,  இறந்த பிராமணச் சிறுவர்களை மீட்க ஒரே நாளில் விண்வெளிப்பயணம் செய்த ஸ்பேஸ் டிராவல் பற்றியும் முன்னரே எழுதியுள்ளேன். இவை அனைத்தும் ஐன்ஸ்ட்டின் சொன்ன விசயங்களைப் பொய்யாக்கியதையும் கண்டோம்.

****

 “சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காகப் பரவை நாச்சியார்பால் தூது நடந்தான். முதலை வாய்ப்புகுந்த மகன் உயிர் பிழைத்து மீளவும் இத்தமிழே காரணமாக அமைந்தது. மயிலாப்பூரில் இறந்த பூம்பாவை என்ற பெண்ணின் எலும்பிலிருந்து, மீண்டும் ஒரு மகள் உயிர் பெற்று எழுவதற்குத் திருஞானசம்பந்தரின் தமிழே காரணமாயிற்று.     வேதங்கள் பூசித்து அடைத்திருந்த திருமறைக்காட்டுச் சிவாலயக் கோபுர வாயில் கதவைத் திருநாவுக்கரசரின் தமிழே திறக்கச் செய்தது. இத்தகு ஆற்றல் தமிழைத் தவிர பிற மொழிகளுக்கு உண்டா? (திருவிளையாடல் புராணம்) என்று பரஞ்சோதி முனிவர் கேட்கிறார்.

****

தமிழ் மொழிக்குள்ள மந்திர சக்தி

உலகத்தில் இரண்டு மொழிகளுக்குத்தான் மந்திர சக்தி உண்டு ; ஸம்ஸ்க்ருதமும் தமிழும் இறந்தவர்களையும் உயிர் பெறச் செய்த ஏராளமான சம்பவங்கள் இந்துசமய நூல்களில் இடம்பெற்றுள்ளன.  ஏழைப்  பெண்மணிக்கு இரங்கி ஆதிசங்கரர் கனகதாரா துதியைப் பாடியவுடன் தங்க நெல்லிக்காய் மழை பெய்ததையும் சம்ஸ்க்ருத மொழியில் கீர்த்தனைகளை இயற்றிய முத்துசாமி தீட்சிதர் வறட்சியைக் கண்டு மனம் இரங்கி அமிர்த வர்ஷனி ராகத்தில் பாடியவுடன் மழை கொட்டியதையும் எல்லோரும் அறிவர். இத்தகையை மந்திர சக்தி துதிகள் அதர்வண வேதத்திலும் ருக் வேதகித்தலும் நிறைய இருக்கின்றன. கிருஷ்ணருக்காக யமுனை நதி வழிவிட்டதுபோல வசிஷ்டருக்காக சிந்து நதி வழிவிட்ட பாடல் ரிக்வேதத்தில் உள்ளது .

****

  1

  ந மு வேங்கடசாமி நாட்டார் உரை தரும் செய்திகள் :

     முதலையுண்ட பாலனை அழைத்த வரலாறு : – தம்பிரான்

றோழ ராகிய நம்பியாரூரர் சேரமான் பெருமாளைக் காணணும்

விருப்பினால் திருவாரூரினின்றும் புறப்பட்டுச் சோணாடுகடந்து

கொங்கு நாட்டிலே திருப்புக்கொளியூர் அவிநாசியை அடைந்த

காலையில், ஓரில்லத்தில் மங்கலவொலியும், அதற்கெதி ரில்லத்தில்

அழுகையொலியும் நிகழக்கேட்டு, அதன் காரணத்தை விசாரித்தனர்.

ஐந்து வயதினரா யிருந்த இரண்டு பார்ப்பனச்சிறார்கள், ஏரிக்குச்

சென்று விளையாடும் பொழுது ஒருவனை முதலை விழுங்கிவிட்ட

தென்றும், தப்பி வந்தானுக்கு இப்பொழுது உபநயனவிழா

நடக்கிறதென்றும், மகனை யிழந்ததோர் துயரத்தால் அழுகின்றன

ரென்றும் அறிந்துகொண்டு, அப்பொழுது தம் வரவினையறிந்து,

அழுகையை விடுத்துவந்து மெய்யன்புடன் வணங்கிய

பெற்றோர்களுக்கு, அச்சிறுவனை அழைத்துத் தருவதாகத் துணிந்து,

ஏரிக்கரையை யெய்திப் பதிகம்பாட, முதலை அச்சிறுவனைக்

கரையிலுமிழ்ந்து சென்றது என்பது.

“உரைப்பா ருரையுகந் துள்கவல் லார்தங்க ளுச்சியாய்

அரைக்கா டரவா வாதியு மந்தமு மாயினாய்

புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே

கரைக்கான் முதலையைப் பிள்ளைத ரச் சொல்லு கானையே”

என்பது அத்திருப்பதிகத் திருப்பாட்டு.

2

     என்பு பெண்ணுருவாக் கண்ட வரலாறு : – திருமயிலாப்பூரிலே

செல்வத்திற் சிறந்த சிவநேயர் என்னும் வணிகரொருவர், கபாலீசர்

திருவருளால் ஓர் புதல்வியைப் பெற்று, அந் நங்கையை ஆளுடைய

பிள்ளையார்க்கு உரிமையாக்கத் துணிந்து வளர்த்துவருங் காலத்தில்

அவர் சேடியருடன் மலர் கொய்யச் சென்று அரவுதீண்டி இறந்தனர். சிவநேயர் மிகுந்த துயரத்துடன் அவ்வம்மையின் உடலைத் தகனஞ்

செய்து, பிள்ளையாரிடம் ஒப்புவித்தற்பொருட்டாக அச்சாம்பரையும்

என்பையும் ஒரு குடத்திலிட்டுக் கன்னிமாடத் திருத்தி, அவ்வம்மை

உயிர்த்திருக்கும் பொழுதிற்போலச் சேடியர் உபசரித்து வருமாறு

செய்வித்தனர். அப்பொழுது திருஞானசம்பந்தப்பெருமான் அடியார்

கூட்டங்களுடன் பல திருப்பதிகளும் தரிசித்துக்கொண்டு

திருவொற்றியூரை அடைந்திருந்தனர். சிவநேயர் அதனைக்

கேய்வியுற்றுத் திரு மயிலையிலிருந்து திருவொற்றியூர் காறும்

பந்தரிம் டலங்கரித்து ஞான சம்பந்தரை இறைஞ்சி அழைத்துவந்து

நிகழ்ந்த செய்தியைத் தெரிவிக்க, சம்பந்தப் பெருமான்

அக்குடத்தினைக் கபாலீசர் திருமுன் வருவித்துப், பதிகம்பாடியருள,

அவ்வென்பானது அங்கே கூடியிருந்த எண்ணிறந்தோரும் கண்டு

அதிசயிக்கும்படி பெண்ணுருவெய்திப் பன்னிரண்டாண் டளவு நிரம்பி

வெளியே வர, ஆளுடைய பிள்ளையார் தம்மால் உயிர்ப்பிக்கப்பெற்ற

அவ்வம்மையை அங்கேயே இருக்கச் செய்து கபாலீசரை

வணங்கிக்கொண்டு எழுந்தருளினர் என்பது.

“மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்,

ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்

கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்”

என்னும் அத்திருப்பதிகத் திருப்பாட்டு.

3

     மறைக்கதவினைத் திறந்த வரலாறு : – திருஞானசம்பந்தரும்,

திருநாவுக்கரசரும் திருமறைக் காட்டுக்கு எழுந்தருளிய காலத்தில்,

ஞான சம்பந்தர் நாவுக்கரசரைப் பார்த்து, ‘நாம் வேதங்கள் பூசித்துத்

திருக் காப்பிட்ட நேர் வாயில்வழியே சென்று இறைவரை

வழிபடவேண்டும் ஆகலின், நீர் திருக்கதவம் காப்புநீங்கப்

பாடியருளும்’ என்று கூற அரசுகளும் பதிகம்பாடிக் கதவு திறக்கச்

செய்தனர் என்பது.

“அரக்களை விரலா லடர்த் திட்டநீர்

இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே

சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ

சரக்க விக்த வந்திறப் பிம்மினே”

என்பது அத்திருப்பதிகத் திருப்பாட்டு. இவ்வரலாறுகளின்

விரிவினைத் திருத்தொண்டர் புராணத்திற் காண்க. (58)

******

மதுரையில் நிகழந்த பல அற்புதங்களை பரஞ்சோதி முனிவர்  பாடியிருக்கிறார் . யாக குண்டத்திலிருந்து மீனாட்சி அம்மை தோன்றிய செய்தியை அடுத்துக் காண்போம்

To be continued………………..

Tags- தமிழ் மொழியின் மந்திர சக்தி ,திருவிளையாடல் புராணம் ,ஆராய்ச்சிக் கட்டுரை-4

Leave a comment

Leave a comment